About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/06/26

இந்த  சிறுமியின் இழப்பு  ஒரு சோகம்தான்.
ஆஆனால்,  அதை விட பெரிய சோகம்,  சேலம் மாவட்டடத்தில்  இருந்த யானைக்  கூட்டத்தை  மக்கள்  துரத்திய  துரத்தில், அவைகள் எங்கு போவது எப்படி  போவது என்ற தடுமாற்றத்தில்  ,ஒரு யானை கூட்டத்தை  விட்டு  பிரிந்து விட்டது.
அதை விட பெரிய சோகம் ஒரு குட்டி யானை உயிர் இழந்தது.
நான் bus ல் வரும் பொது 4 ம தேதி  அந்த  யானைக் கூட்டம் தருமபுரி அருகே இருந்தன. ஒரே கூட்டம். அட, அதை  விட கொடுமை  [  இந்த செல் போனில் கேமரா  வந்ததும் போதும் ] ஆளுக்கு ஆள் போட்டோ எடுத்துக்  கொண்டிருந்ததுதான். பாவம்  அந்த  யானைகள்  மிரண்டு  போயிருந்தன.
என் வருத்தம் இதுதான். ஏன்  யாருக்குமே  அந்த யானைகள்  பசியோடிருக்கும்  என்றோ  அவைகளுக்கு  உணவு  கொடுக்க  வேண்டுமென்றோ தோன்றவேயில்லை. அந்த போட்டோவை என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு பந்தாவுக்கு  அலையும்  இவர்கள்  அந்த  யானைகளின்  மன நிலையை ஒரு நிமிடம் கூட சிந்தித்து  பார்க்காததேன் ?
பயத்திலும் பசியிலும் அந்த  யானைகளின் தவிப்பை  T V யில் பார்த்த பொது  மனம் மிக வேதனைப் பட்டது.  அதை விட அந்த யானைக் குட்டி இறந்து விட்டது என்ற செய்தி துக்கத்தை அதிக படுத்தியது.
இதற்காகத்தான், இந்து மதத்தில் ஒவ்வொரு  கடவுளுக்கும்  ஒவ்வொரு  விலங்கை  specify  செய்தனர். முருகனுக்கு மயில், யமனுக்கு  எருமை, ராமருக்கு அணில் ,சிவனுக்கு  காளை , விநாயகர்  யானை  என்று  வைத்து தொடர்பு படுத்தி  ,அவைகளுக்கு  மனிதர்கள்  தொந்திரவு  கொடுக்காமல்  இருக்க  வழி செய்தனர்  .
  
    ஆனால்  இப்போதுதான்  மனிதர்கள்  தலை கீழாக  மாறிக் கொண்டிருக்கிறார்களே.  கலிகாலம்.   அவ்வளவுதான்  சொல்லலாம்.
கார்த்திக்+அம்மா        

 
 Who S Responsible Mahis Death

குர்கான்: கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் 70 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுமி மஹி வியாழக்கிழமை அதிகாலையிலேயே இறந்துவிட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மஹி கடந்த புதன்கிழமை தனது 4வது பிறந்தநாளைக் கொண்டாடினாள். அன்று இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிராபாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். குறுகிய அந்த குழிக்குள் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள்.
இது செய்தி.
இரவு 11  மணிக்கு  ஒரு  குழந்தை வெளியில்  விளையாடுமா ? அந்த நேரத்தில் அந்த தாயும்  தந்தையும்  வேலைக்கு  சென்றிருக்க  வாய்ப்பில்லை. அந்த காலத்தில் 6 மணிக்கு மேல் குழந்தைகளை  வெளியேவே அனுப்ப மாட்டார்கள்.
இப்போது   கால நேரம் இல்லைஎன்றாகி  விட்டது. அந்த சிறுமி  விழுந்தது பெற்றோருக்கு தெர்யா வந்து அதன் பின் அவர்கள்  தீ அணைப்புக்கு சொன்னார்களாம்  அவர்கள் ஒரு மணி நேரம் கழித்துதான்  வந்தார்களாம். நள்ளிரவில் அவர்களும் அங்கு வந்து சேர வேண்டுமல்லவா .
இவர்கள் பக்கம் தப்பிருப்பதை ஒத்துக் கொள்ளவே  மாட்டார்கள். எதற்கெடு , அரசாங்கம், அரசாங்கம் என்று கூப்பாடு.
இதில் T .V channels  தன பங்கிற்கு  ஓலம் இடும்.
மக்கள்  திருந்தவே  மாட்டார்கள்.
168 Gas சிலிண்டெர்கள் ஒரு வீட்டிற்கு ஒரு  வருடத்திற்கு  கொடுக்கப் பட்டிருக்கிறது. ஐய்யா  நான்  ஒரு [ ஆம் ஆத்மி ] சாதாரண குடிமகன் நானெல்லாம் 21 நாட்கள்  கழித்துதான் பதிவே செய்ய முடியும் அதற்கப்புறம்  காஆஆத்திருக்க  வேண்டும். வந்து விட்டால்  வைரப் புதையல்  கிடைத்தது போல் சந்தோஷப் பட்டு கொள்ள  வேண்டும்.இந்தியா  என்ற  ஒரு நாடு ஒரு சில  100  பேர்களுக்கு என்று மட்டுமே ஆகி விட்டது. நம்மையெல்லாம்  ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு  அந்த முக்கியஸ்தர்கள்  மட்டுமே  நாட்டை  பங்கு போட்டு கொள்ளும் காலம் சீக்கிரம்  வந்து விடும் என்று தோன்றுகிறது.
கார்த்திக்+அம்மா 

2012/06/19

இன்று இரண்டு பதிவுகள்.
1.தாய்மை :
இந்த செய்திகள்  எனக்கு மிகவும்  மகிழ்ச்சி  அளித்தது.
தேவயாணி  சொல்லியது.  எனக்கு  என் குழந்தைகள்தான்   முக்கியம். நடிப்பு  அதற்கப்புறம்தான்.
the great ஐஸ்வர்யா ,
'' நான் சினிமாவை  மறந்து விட்டேன். என் தாய்மை எனக்கு  மிகவும் சந்தோஷத்தை  கொடுக்கிறது ''
அதே போல் குஷ்பூ , இவர்களை மிகவும்  பாராட்டுகிறேன்.மிக அருமையான முடிவு.
தாய்மையை  போல் இன்பம் தருவது வேறு எதுவும் இல்லை. அதுவும்  அந்த குழந்தை பருவம்.
நானும் கார்த்தி  பிறந்தபோது  என் Assistant  Professor  [இங்கிலீஷ் ]  வேலையை  விட்டவள்.  இன்று அந்த வேலையிலேயே   இருந்திருந்தால்  2020 யில் [  university  சர்வீஸ்  62 வயது ]  நான் ஒய்வு  பெறும்போது என்ன சம்பளம்  வாங்கியிருப்பேன்.
ஆனால் இன்று வரை ஒரு நிமிடம் கூட  நான்  அதைப் பற்றி  வருத்தப் பட்டதில்லை.
ஏனென்றால்  கார்த்தியும்  நானும்  அப்படி ஒரு சொர்க்கத்தை  அனுபவித்தோம்.
கார்த்தியின்  குழந்தை பருவம்  ,எவ்வளவு சந்தோசம்...எத்தனை கோடி வேண்டுமானாலும்  கொடுக்கலாம்.
இன்றும்  அந்த நினைவுகளில்தான்  நான் சுவாசித்துக்  கொண்டிருக்கிறேன்.

2 ம்   பதிவு  A .P .J  அப்துல் கலாம்  பற்றி.

என்  மானசிக  காதலர்  அவர். இந்திரா காந்திக்கு  SCIENTIFIC  ADVISOR  ஆக இருந்த போதிலிருந்து   [1982  ] அவர் மேல்  பைத்தியம். என் கணவரிடம்  சொல்வேன் '' உங்களுக்கு முன் அவரை பார்த்திருந்தால்  அவரைத்தான்  கல்யாணம் செய்து கொண்டிருப்பேன் '' என்று. மனிதன் ஒரு முறைப்பு பார்வை பார்ப்பார். என் மாணவர்கள்  என் பிறந்த நாளன்று  அவருடைய photo வை கொடுத்து  ''miss your  lovers photo '' என்று சொல்லி  கொடுப்பார்கள்.  வேறு எந்த  பொருளாக  இருந்தாலும்  birthday gift  ஆக  நான்  வாங்க மாட்டேன் ...இதை  கண்டிப்பாக  மறுக்க  மாட்டேன்  என்றும் என்  மாணவர்களுக்கு  தெரியும்  .அவ்வளவு  பைத்தியம் .
In the English paper  +2  ,for practical  [in the  years 1965 to 1999 ]   students  have to fill  up  Railway  reservation  form .And it  will be like this :
1.A .P .J .Abdhul Kalam ..Scientist  age 56
2.S .Karthikeyan ..research assistant .age 16
3.K .S .Senthilkumar ..research  assistant .age 14

மாணவர்களுக்கு தெரியும்  .நம்  ஆங்கில  ஆசிரியை  ஒரு  வித்தியாசமான  character  என்று.
கார்த்திக்கிற்கு  அவர் 2002 ல் ஆசிரியராக  பாடம்  நடத்திய  போது  இவ்வளவுதான்  சந்தோசம்  என்றே சொல்ல  முடியாது. மதிய  உணவிற்கு  late  ஆக  வந்தால்  ,'' ஏன் கண்ணம்மா  late '' என்று கேட்டால்  ''அவர்தான்மா  class  எடுத்துக்  கொண்டே  இருந்தார் ''  என்று பதில்   சொல்வான்.  அவர்  என்றால்  அது  கலாம்தான்.
அவரிடம்  ஒரு peon  வேலையாவது  கேட்டு பெற்று  அவரிடம்தான்  வேலை  செய்ய வேண்டும்   என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
பேரதிர்ச்சியாக  அவர்  ஜனாதிபதியாகி  விட்டார்.  எல்லோரும் சந்தோஷப் பட்ட போது   நான்,  கார்த்தி,  செந்தில்  மூன்று  பெரும்  பெரிய  சோகத்தில்  ஆழ்ந்தோம். செந்தில் ''அவர்தான்  என் project  guide  '' என்ற  கனவில் இருந்தான் .எங்கள் Godfather  எங்களை விட்டு  பிரிந்த  சோகம்  எங்களுக்கு.
....  ... இந்த  பதிவை  எழுத  வேண்டும்  என்று  நிறைய நாட்கள்  நினைத்ததுண்டு.  இப்போது அவர்  போட்டியில்  இருந்து  விலகிய பின் எழுதினால்  தவறில்லை.  இல்லையென்றால்  அவருடைய  பதவியின்  மூலம்  ஏதாவது  ஆதாயம்  தேடத்தான்  இந்த  பதிவு  என்று  யாரேனும்  நினைக்க  கூடும்.   அவர்  போட்டியில்  இருந்து  விலகியதுதான்  எனக்கு பிடித்தது. இந்த  அரசியல் வாதிகள்  சகவாசமே  வேண்டாம்.
கார்த்தி  அவருடைய  மாணவனாக  இருந்த போது  அவரைப்  போலவே  தலை  சீவ மாட்டான்.  socks  போடாமல்  shoe  போடுவான்  .dress iron  செய்து போட மாட்டான். அப்படியே  அவர் போல்  .
அவனை விபத்தில் இழந்த போது  , அவரிடம்  சென்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது.  2002  APRIL மாதத்தில்  அவரை சந்திக்க வேண்டுமென்று  அவரிடம்  கார்த்தி சொன்ன  போது  எப்போது வேண்டுமானாலும்  அம்மாவை அழைத்து  வா  என்று சொல்லியிருந்தார். இப்போது  அவருக்கு கண்டிப்பாக  நினைவு இருக்க முடியாது.  ஏனென்றால்  ஆசிரியர்களாகிய  நாங்கள்  1000 கணக்கான  மாணவர்களை  பார்ப்பதால்  எல்லோரையும்  நினைவில்  கொள்வது  சாத்தியமில்ல. என்றாவது  ஒரு நாள் அவரை சந்தித்து  கார்த்தியை பற்றி  சொல்ல வேண்டும்.
கார்த்திக்+அம்மா 

2012/06/15

remember me

once i happened to view a scene from an english movie.
the scene is this.
''a lover is fighting with his enemy while his ladylove comes there.seeing her he pushes her into the elevator and closes the door.his ladylove refuses to leave him.she struggles to come out of the lift.but it starts going down.
that time he says 'PLEASE REMEMBER ME'
HIS EXPRESSION WAS SIMPLY SUBERB.
he wants his lady love to live.but he wants to live in her memory for ever.
Don't u think i too might have the same wish?
will u remember me?
forget august 26
remember NOVEMBER 14.
THIS SAELM SINGAM WAS BORN TO LIVE FOR EVER.
so no such date as august 26 came in the calender.
i will live for ever. i have made enough arrangements for that.
with luv and luv only,
karthik[KUCHI].DEMI
i wish to be called as karthik and not as kuchi.
contact me with my new mail i.d
ponniyinselvi_kartik@yahoo.co.in 
இந்த  பதிவு  2006ல்  நான்  எழுதியது.. அப்போது  இந்த  பதிவுகள்  அனைத்தும்  கார்த்தி  எழுதுவது  போலவே  இருக்க  வேண்டும்  என்றுதான்  அவன்  வலைப்பதிவை  தொடர்ந்தேன்.
ஆனால் இப்போது
அவனைப்  பற்றி  எழுதும்  blog ஆகி  விட்டது.

2012/06/07

 அப்பப்பா ,நானும் பார்த்திருக்கிறேன் ,எத்தனையோ பேர் எப்படி எப்படியோ  சிரித்திருக்கிறார்கள் .  ஆனால்  இன்றைய  ''நீங்களும்  வெல்லலாம்  ஒரு கோடி  ''  ஒரு பெண்  சிரித்தது  பாருங்கள். சிரிக்கிறது.சிரிக்கிறது.சூர்யாவும்  என்ன என்னவோ  சொல்லிப் பார்த்தார்.பைத்தியம்  போலும் இருந்தது.பாவமாகவும் இருந்தது.
நிறைய  கேள்விகளுக்கு பதில் தெரிந்த அந்த மீனவ  பெண்ணுக்கு  ''நண்டின்  வீடு வளை ''  என்று மட்டும்  சொல்லத் தெரியவில்லை.
  இன்னொரு  பெண்  கூடை ''முடைதல் ''  என்ற  வார்த்தையை  கேள்விப்பட்டதே இல்லை என்று தன  தமிழ்  நாட்டு பிறப்பை  பெருமைப் படுத்திக்  கொண்டிருந்தார்.

ஏண்டாப்பா வேலையை  விட்டு வீட்டில் உட்கார்ந்தோம்  என்று வருத்தப்பட வைப்பது   இந்த  டி வி  பார்க்கும் கொடுமைதான்.

யார்  ஆரம்பித்தார்கள்  ...இந்த கீச்சு  குரல்  விஷயத்தை ...விளம்பரங்களில்  வரும் பெண் குரல்கள்   ஒரே கீச்சு  கிச்சுதான் ,  தாங்கவே  முடியவில்லை.
....  ......
டோனி பற்றி ஒரு விஷயம்  .விளையாடும்  களத்தில்  எச்சில்  துப்பிக்  கொண்டே இருந்தார்.  பார்க்கவே  சங்கடமாக  இருந்தது.
.... ...   .....மீண்டும்  டி .வி  விஷயம்
சமையல்  நிகழ்ச்சிகளை  பாருங்களேன் .நன்றாக  படித்தவர்கள்,  சாதனை  செய்தவர்கள்  அமைதியாக  பொறுமையாக  பேசுகிறார்கள்.
ஆனால்  இந்த  இல்லத்தரசிகள்  வந்தால்  ஒரே அழும்புதான். பாதி  ஆங்கிலம் ,கடித்து குதறுகிறார்கள்.   அதுதான்  போகட்டும்.எதோ  பத்து  P .h d
 ஒன்றாக  படித்தவர்கள்  போல் இதில்  வைட்டமின்  a ,b ,h ,m ...x ,y  இருக்கிறது  என்று அளக்கிறார்கள்  பாருங்கள் ,,அப்பப்பா  B .P  எகிறுகிறது .
  அதிலும்  அந்த  RAJ  டி வி யில் வரும்  அன்னையார்,சொல்வார்  பாருங்கள்
.....one table spoon  of   கடுகு , [ ஏனம்மா, உனக்கு தமிழ்  தெரியாது என்றால் English  channels போய்  program  கொடுத்து உங்கள்  ஆங்கில  வள்ளன்மையை  நிலை  நாட்டுவதுதானே.

அடுத்தது  Z  டி .வி யில் வரும்  ''சொல்வதெல்லாம் உண்மை ''.எல்லாம்  4 கல்யாணம்  ,7 கள்ள  உறவு ,  பாவம்  நிர்மலா பெரியசாமி,   நாம் தமிழ் நாட்டில்தான்  இருக்கிறோமா  என்று  ஆதங்கப்படுகிறார்..
என்னவாயிற்று  நம்  பண்பாடு  என்று கேட்கிறார்.
நான் ஒன்று சொல்கிறேன்
நான் படித்தது  ஆங்கில இலக்கியம் .
ஆனால்  என் அம்மா  தமிழ் M .A  படிப்பதற்கு  நான்  நிறைய உதவி செய்த  வகையில்  தமிழ்  இலக்கியமும்  நன்றாக தெரியும்.
ஆங்கில இலக்கியத்தில்  காமம்  பற்றி 10% கூட  இருக்காது.american literature   வேறு.அதில்  படிக்க  முடியாத  பல இருக்கும்.
அதே  போல் தமிழ்  இலக்கியத்தில்  காமத்துப்  பால் இருக்கும்.
அப்போதிருந்தே   கந்தர்வ  [ களவு ] திருமணம், கல்யாணத்திற்கு முன்பே உறவு  என்பதெல்லாம்  இருக்கும்.
அதனால்  கற்பு  ,கண்ணியம் என்பதெல்லாம்  குறைவே.
கார்த்திக்+அம்மா 
மறுபடியும் மறுபடியும்    பழைய நினைவுகளே..ஜூன்  மாதம்  3ம  தேதி சென்னையிலிருந்து  நானும்  செந்திலும் பெங்களூருக்கு  கிளம்பி  சென்றோம்.என் இனிய, இனிய மகனின் அன்பிலும், ஆதரவிலும்  நிம்மதியான  வாழ்க்கை  வாழ போகிறோம்  என்று சந்தோஷமாக  சென்றேன்.அதிர்ஷ்டம்  தலை விரித்தாடியது. போன வேகத்தில் சென்னை திரும்பி விட்டேன். மகனை பறி  கொடுத்து.விதி. விதி. கொடுமையான விதி.
கலா கார்த்திக் .