About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/03/31

இது கார்த்தி August  01/ 2004 ல்
வலைப் பூ ஆசிரியராக இருந்து எழுதியது.
அதை அப்படியே copy  செய்கிறேன்.
****    *****

விஜயநகரத்து இளவரசர் 'நியோ 'வருகிறார் பராக்!பராக்!!

இவ்வாரம் ஆசிரியராக வரவிருப்பவரை நான் சந்தித்தது 'பொன்னியின் செல்வன் ' யாகூ குழுமத்தில் வரலாற்றின் மீது ஆர்வமுள்ள அவர் கொஞ்சம் வித்தியாசமாக 'விஜயநகர் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.இருக்கிறார்.ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு (2003 ) முன்பே வலை பதிய ஆரம்பித்திருந்தாலும் , சமீபத்தில்தான் தூசி தட்டி எழுத ஆரம்பித்திருக்கிறார்....(இது கார்த்தியை பற்றி வலைப்பூ அளித்த அறிமுக உரை.)
***
இனி வருவது கார்த்தியின் அட்டகாசம் :
....'நான் நல்லவன்.வல்லவன்.நாலும்  தெரிஞ்சவன் .
ஏழைகளின் பாவங்களை தாங்கும் சுமைதாங்கி ', இப்படி எல்லாம் 
சொல்லணும்தான் ஆசை. ஆனா என்னை பத்தி தெரிஞ்சவங்க கொஞ்சம் பேர் இங்க இருக்காங்க.  அதனால வேற வழி  இல்லாம உண்மையை சொல்றேன்.என்னோட  philosophy ரொம்ப  சிம்பிள் .நாம  நம்மள  பாத்துப்போம் . ஒலகம்  அது தன்ன தானே பாத்துக்கும்.' --இதுதான்   நான்  ...
ஆயுத எழுத்து அர்ஜுனுக்கும்  எனக்கும் உள்ள வித்தியாசம் - அவனுக்கு girl friend  இருக்கு. எனக்கு இல்ல ( இது வரை ) அப்புறம், அவன் எ$$மெரிக்கா போவான்.  நான் பெங்களூர் வந்து குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

நான் கொஞ்சம் வராற்று பைத்தியம்.ஸ்கூல்ல , காலேஜுல  கல்கி , சாண்டில்யன்  நாவல்கள்  எல்லாம் படிச்சதினால வந்தது.( நான் படிச்ச தமிழ் நாவல்கள் , வரலாற்று நாவல்கள்  மட்டும்தான்.)  இப்போதைய  பொழுது போக்கு , வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு போய் photo பிடிப்பது. (கல்லையும் மண்ணையும் போட்டோ எடுத்துகிட்டு திரியறான்னு  வீட்ல திட்றாங்க )
{இது நான் ,கார்த்திக் அம்மா ,அவனை செல்லமாக சொன்னது }
அப்போ அப்போ வரலாற்று புத்தகங்களை படிப்பேன். (நாவல்கள் இல்ல.History of Tanjore Nayaks , Vijayanagar Inscriptions மாதிரி.
இது இல்லாம மைக்கேல் கிரைட்டன் ,ப்ரெடரிக் பார்சித் நாவல்கள், ஷெர்லாக் ஹோம்ஸ் ,அயன் ரேண்டின் 'objectivism தத்துவம்  பிடிக்கும் .
Neo 
( இதுவும் வலைப்பூவின் வாசகம்.....இவருடைய புனைப் பெயரும் வித்தியாசமானதே! 'நியோ' - முதலாவது மேட்ரிக்ஸ் படத்தில் அசத்திய நாயகனுடைய பெயர் இவரும்  இங்கே  அசத்துவார் என்று நம்புகிறேன். இவ்வாரம் உங்களுடன் ' நியோ ' என்கிற கார்த்திகேயன் .

இது அடுத்த நாள் பதிவு.
வணக்கம் !வெல்கம்!வந்தனம்!ஸ்வாகதம் !லலிதா ஜுவல்லரி வழங்கும் ...'
சே ! முதல்ல இப்படி ஓவரா டி .வி  பாக்கறத நிறுத்தனும்.
வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்.
நான் வலை பதிய ஆரம்பிச்சே கொஞ்ச நாள்தான் ஆகுது.அதுக்குள்ளே இப்படி ஒரு பொறுப்பான வேலை !சரி, வலைப்பூவிற்கு போறாத காலம்  நாம என்ன செய்ய முடியும்!
இந்த வாரம் என்கிட்டே இருந்து என்ன எதிர்பார்க்கலாம்? எனக்கே தெரியாது !
எதுவும் எதிர்பார்க்காதீங்க ! மனம்  போன போக்கில போகப் போறேன்..ஒரு  வெட்டிப் பையனோட மனம் எந்த போக்கில போகப் போகுதுன்னு பார்ப்போம்.
'நியோ ' கார்த்திகேயன் - பேரு நல்லா இருக்கு. ஒரு வகையில  பொருத்தமாகவும் இருக்கு. நியோ மாதிரியே 3,4 மணி வரைக்கும் கம்ப்யூட்டர்ல ஏதாவது பண்ணிட்டு  காலையில 11-12 மணிக்கு ஆபீஸ் வந்து மேனேஜர்  கிட்ட திட்டு வாங்கற சீன்ல மட்டும் 
நியோ 
posted by Editor at 02.28 PM 
******
Aug 02/2004

இனிய நண்பர்கள் தினம்! 

இன்னைக்கு எனக்கும்  எனக்கும் நடந்த ஒரு உரையாடல்.
நான்-1:இனிய நண்பர்கள் தினம்!
நான்-2:இன்னைக்கு  எண்டா இத சொல்ற?
நான்-1:இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்ல?
நான்-2:இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்லையே!
நான்-1:அதான் நானும் சொன்னேன்.!இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்ல .அதுக்காக நண்பர்கள மறந்து ட முடியுமா?
நான்-2:இப்ப முடிவா என்ன சொல்ல வர்ற ?
நான்-1:ஆரம்பத்துல இருந்தே சொல்றேன்.நேத்து இந்த மாதிரி 10,15 s .m .s ,ஈ -மெயில். கடுப்பாயிட்டேன்.அப்புறம் ஒரு நண்பன் பண்ணினான்.'happy friendship  day ' ன்னான் .'அப்படின்னா என்னடா?ன்னேன் 
''அதெல்லாம் தெரியாது.இன்னிக்கு friedship day .எல்லா friends ம்  வாழ்த்து சொல்லிக்கிறாங்க .நானும் சொன்னேன்.:''சரி ஒழிஞ்சு போ !''
****
அடுத்து என் தம்பி அம்மா கிட்ட பாக்கெட் மணி  கேட்டுட்டு  இருந்தான். ''எதுக்குடா? 
இன்னைக்கு பிரண்டஸ் டே ! அதுக்காக friends எல்லாம் கேக் வெட்ட போறம் '

ஏன்டா ,தினமும் அதே வெட்டிப் பசங்க கூட தான  சுத்தற.இன்னைக்கு மட்டும் ஸ்பெஷல் வந்தது.?
சே !ஐம்பது ரூபா குடுக்கறதுக்கு  இவ்வளவு லெக்சரா?'
**** ***
அதான் யோசிச்சிட்டு இருந்தேன் .இந்த நண்பர்கள் தினம்.காதலர் தினம்.அன்னையர் தினம். தந்தையர் தினம்.பெண்கள் தினம்.ஆண்கள் தினம். இதெல்லாம் ரொம்ப அவசியமா? குறிப்பா அன்னையர் தினம் ...தினமும் அம்மா கிட்ட சண்டை போட வேண்டியது.அன்னையர் தினத்தன்னிக்கு மட்டும்,''மம்மி வி ஆல் லவ் யூ 'ன்னு  கார்டு வாங்கி குடுத்துட்டா சரியா போச்சா ?'' தினமும் இருக்க வேண்டிய அன்பு வருஷத்துக்கு ஒரு நாள் மட்டும் வந்துட்டு மத்த நாள் எல்லாம் காணாம போறதுல அர்த்தம் இல்ல. பல பேர் வாழ்த்து சொல்லணும் சொல்றாங்க .
நான்-2: எல்லாரையும் அப்படி சொல்லிட முடியாதுடா.அதுவும் இல்லாம ,உன் கூட ஸ்கூல்ல ,காலேஜ்ல எல்லாம் படிச்சவங்கள எல்லாம் நீ தினமுமா ஞாபகம் வெச்சுகிட்டு இருக்க?அவங்கள வருஷத்துக்கு ஒரு தடவையாவது நினச்சு பாக்க இது ஒரு reminder ஆ இருக்கு இல்ல!
நான்-1:ஆ.ஸ்கூல் நண்பர்கள்,காலேஜ் நண்பர்கள் !"ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..!
நான்-2:டேய் ! கண்ட்ரோல் !! பேச்ச மாத்தாதே!
நான்-1:சரி.இந்த மாதிரி ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை ஞாபகத்துக்கு வர்றவங்க ஓ .கே ! மே  தினம், போங்கள் இதெல்லாம் ஓ .கே .மத்தபடி இந்த காதலர் தினம் அன்னையர் தினம் பெண்கள் தினம் எல்லாம் தேவை இல்லாத வெட்டி வேலை.அதுக்கு ஒரு கிரீட்டிங் கார்டு,கிப்டுன்னு   தேவை இல்லாத தண்டம்.அம்மா,அப்பா,நண்பர்கள், காதல் கிட்ட எல்லாம் அன்பை சொல்லி புரிய வைக்க வேண்டியது இல்லை.
நான்-2;உன்கிட்ட என்னால பேசி புரிய வைக்க முடியாது.நம்ம வலைப்பூ நண்பர்கள் கிட்டவே  நியாயம் கேட்போம்.
எங்களுக்கு [கார்த்தி+கார்த்தி] ஒரே குழப்பமா இருக்கு.நீங்க என்ன நினைக்கிறீங்க? இதெல்லாம் தேவையா? இல்ல வெட்டி வேலையா?
Posted by Editor 
August 03/2004
சிக்கன் சாலையை கடந்தது ஏன் ?-  4
இத்தனை நாள் இது எப்படி தோணாம போச்சுன்னு தெரியேலை. காலங் காலமா நாம நம்ம சினிமாவையும் நடிகர்களையும்தான் ஓட்டிட்டு இருப்போம் ? இந்த சிக்கன் சாலையை ஏன்ல  மட்டும் அவங்களை விட்டுவிட்டு யாரோ சாண்டில்யன், தினத்தந்தி ,ஹிந்துன்னு யார் யாரையோ ஓட்டிட்டு இருக்கோம்.சரி,,நம்ம பாரம்பரியத்தை காப்பாத்துவோம்!பழையன:1 2 3 
நாட்டாமை:
பஞ்சாயத்து சீன் 
நாட்டாமை சரத்குமார் தீவிரமாக  யோசித்துக் கொண்டிருக்கிறார்.
கிராமத்தான்:1 சரி,சரி, எல்லாம் இப்படியே பாத்துட்டே இருந்தா எப்படி .சட்டுபுட்டுன்னு பேசி ஒரு முடிவுக்கு வாங்க. 
கிராமத்தான்-2:இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு.நம்ம சின்னப்பம்பட்டி சின்னாயியோட கோழி சாலையை கடக்கறப்போ , புளியம்பட்டி ஜமீன்தார் மகன் அத புடிச்சிட்டு போய் குழம்பு வச்சு சாப்புட்டுட்டார். அந்த பொண்ணு  இப்ப நியாயம் கேக்குது. என்ன புள்ள நான் சொல்றது சரிதான ?
பெண்:( கண்ணீரும் கம்பலையுமாய் ): உண்மைதானுங்கோ 
ஜமீந்தார் மகன்:என்னமோ ஒரு கோழி போனதுக்கு இப்படி புலம்பறியே!இந்த கோழிய விட்டா ஊர்ல வேற கோழியே இல்லையா?
( நாட்டாமை பொங்கி எழுகிறார்)
நாட்டாமை:என்றா பேசற?கோழின்னா அவ்வளவு இளக்காரமா போச்சா?உன்ன ஒன்னும் கோழிய சாப்பிட  வேணாம்னு சொல்லல. காசு குடுத்து வாங்கி சாபிடுன்னுதான்  சொல்றேன்.உன்ன ஒன்னும் சாலைய கடக்கிற கோழிய புடிக்க வேணாம்னு சூழல. எனக்கும் கொஞ்சம் மிச்சம் வெச்சுட்டு சாப்பிடுன்னுதான் சொல்றேன்..இதுதாண்டா இந்த நாட்டாமையோட தீர்பு ..(தீர்பு ...) (தீர்பு ...)

மணிரத்தினம் பாதாம்- மதவாதம்-தீவிரவாதம் பாதாம்:
(எல்லாம் low pitch ல )
ட்ராபிக் போலீஸ் :ஏன் ?
அரவிந்த் சாமி:கோழி...சாலை...கடக்கணும்...
ட்ராபிக் போலீஸ்: முடியாது 
அரவிந்த் சாமி:ஏன் ?
 ட்ராபிக் போலீஸ்:சிக்னல் .உனக்கு இதெல்லாம் புரியாது.
pitch கொஞ்சம் அதிகரிக்க 
 அரவிந்த் சாமி:ஏன் ?எதுக்காக இதெல்லாம் எப்ப நிறுத்துவீங்க.உங்க லஞ்ச வெறி எப்போ அடங்கும?இந்த சின்ன கோழிய பாருங்க.இதுக்கு என்ன தெரியும்?இது கைல லஞ்சத்த கொடுக்குறீங்களே.இது என்ன நியாயம்?
ட்ராபிக் போலீஸ்:மாத்திட்ட.ஒரு  ட்ராபிக் போலிஸ நல்ல போலீஸா  மாத்திட்ட. போ. கோழிய கூட்டிட்டு போ.
3:அலை பாயுதே:
கோழி :  கார்த்திக்  நீ நான் வெஜிடேரியனா ? கசாப்பு கடையில வேலை பாக்கிரவனா?ஏன்னா  கசாப்பு கடையில வேலை பாகிரவங்கதான் இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு கோழி பின்னால சுத்திட்டி இருப்பாங்க 
மாதவன்:கோழி, நீ சாலைய கடப்பன்னு நான் நினைக்கல.உன்ன சிக்கன் 65 பண்ணினா டேஸ்ட்டா இருக்கும்னு நான் நினைக்கல. ஆனால் இதெல்லாம் நடந்துமோன்னு  பயமா இருக்கு.
( தொடர்ந்தாலும் தொடரலாம் ..அழுகின தக்காளி எதுவும் வந்து விழாமல் இருந்தால்)
-நியோ 
இதன் தொடர்ச்சி நாளை. கார்த்திக் அம்மா 

2013/03/26

சிறிய வயதில் செய்த தவறாம். அதற்கு பிறகு 20 வருடங்களாக  எந்த தவறும் செய்யவில்லையாம்.அதனால் அவருக்கு தண்டனை தராமல் விடுவித்துவிட வேண்டுமாம்.
அப்படி பார்த்தால் நளினி ,கசாப் ,டெல்லியில் பெண்ணை கற்பழித்த 17 வயது '' சிறுவனும்!!! '' சிறிய வயதுதான். எல்லோரையும் மன்னித்து விடலாம்.
எல்லோரும் சிறு வயதில் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யுங்கள் .அப்புறம் ,  மிக முக்கியமான விஷயம் சினிமா நடிகராக ஆகி விடுங்கள். ஏனென்றால் சினிமா நட்சத்திரங்கள் என்றால் தெய்வப் பிறவிகள்.அவர்கள்  எல்லா சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.
இதில் பெரிய்ய்ய்ய கொடுமை என்னவென்றால் ,தமிழ்நாட்டு பிரச்சினைகளுகேல்லாம் வாயே திறக்காத ஒரு பெரிய நட்சத்திரம் பொன்மொழிகளாக உதிர்த்துள்ளதுதான்.
வாழ்க சஞ்சய் தத் .

2013/03/20

எந்த channel திருப்பினாலும் மனுஷ்ய புத்திரனே ஏ ஏ ,மனுஷ்ய புத்திரனே ஏ ஏ ,பேசிக் கொண்டிருக்கிறார் .

2013/03/16

திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்ற முன்னோட்டம் ஒரு தொலைக்காட்சியில் வருகிறது.
அதில் அவர் சொல்கிறார்
'' '' அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பது 
'' நாலடி, ஈரடி திருக்குறள் உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் .அதை நம் மக்கள் உடலில் விழும் அடி போல் என்று மாற்றி விட்டார்கள் ''
அவருக்கு உண்மை தெரியவில்லையா
அல்லது நகைச்சுவைக்காக  சொல்கிறாரா
இறைவன் திருவடி (அடி ) உதவுவது போல் என்பதுதான் உண்மை.
மனிதனை நம்புவதை விட இறைவனை நம்பு 
(இறைவன் என்பவன் உள்ளானா  இல்லையா என்பது அடுத்த விஷயம்.)
ஆனால் கடவுள் (உன்னில் கடவுள் ) என்பதே உண்மை.எனவே மற்றவரை நம்புவதை விட உன்னை நம்பு என்று நம் முன்னோர்கள் சொல்வதாக நான் பொருள் கொண்டேன். வாழ்க்கையிலும் இதை அனுபவ பூரணமாக உணர்ந்துள்ளேன்.துயரத்தில் மூழ்கி கிடந்த போது  உதவ யாரும் முன்வரவில்லை.கார்த்தி சொல்லிக் கொடுத்த'' '' நம் பாரத்தை நாமே சுமந்து கொள்வோம் '' '' என்ற வார்த்தைகளின்படி நானே என் துயரில் முழுகி  கொண்டேன்.எனக்கு நானே ,என்ற வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறேன்.
கார்த்திக்+அம்மா 

2013/03/14

*
தன் கொடுங்கோலாட்சியை  ஆரம்பித்துவிட்டார்  சூரியனார் .இனி 6 மாதம் கருவாடுதான்.சென்னை மாநகராட்சி குடிதண்ணீர் குழாய்கள் வழியாக  இலவச சுடுதண்ணீர் அனுப்பும்.Geyser  போட  வேண்டாம்.
AC இருக்கிறது என்று யாரும் அலட்டாதீர்கள் .அதற்கு தேவையான மின்சாரம் inverter மூலம் கூட கிடைக்காது.Get  ready .
**
யாராவது எழுதுவார்களா என்று பார்த்தேன்.எதற்கு வம்பு என்ற பயமோ?
நீ.வெ .ஒரு கோடி
நிகழ்ச்சி பற்றிதான்.
வில்லனாகவே பார்த்துவிட்ட பிரகாஷ் ராஜ்..... .இன்னும் அந்த நடிகரை மறந்து புதியவராக பார்க்க வேண்டும்.பார்க்கலாம், ஜெயிப்பாரா என்று.
சூர்யாவிற்கு அவரது நல்லவர் என்ற image நிறைய கை கொடுத்தது.
***
என்ன நடுவில் நடுவில் english வார்த்தைகள் அதிகம் என்று பார்க்கிறீர்களா .விஷயம் இருக்கிறது.
ஒரு கடையில்
'' இயேசுவை நம்புகிறவனோ  வாழ்க்கையில் ஜெயிக்கிறான் '' என்ற வாசகம் இருந்தது.என் டீச்சர் புத்தி அடங்குமா? அந்த கடை பெண்மணியிடம் ''இயேசுவை நம்புகிறவனே '' என்று இருக்க வேண்டும் என்றேன்.அவர் அதை படித்துவிட்டு ,அந்த வாசகத்தை விளக்கி'' இயேசுவை நம்புகிறவர் நலம் பெறுவார்'' என்றார்.
ஆமாம் .ஆனால்  ''நம்புகிறவனோ ' என்றால் அது ஐயப்பாடு * ஆகிவிடும் என்றேன் .அப்புறம்தான் அவருக்கு புரிந்தது. நான் இலக்கிய பிழை பற்றி சொல்கிறேன் என்று.அவருடைய மறுமொழிதான் high light .
''இப்போதெல்லாம் யாருக்கு madam தமிழ்  தெரிகிறது? எல்லோருக்கும் இங்கிலீஷ் தான் தெரியும் '' என்றார்.
நம் மக்கள் பேசும் இங்கிலீஷ் !!எத்தனை தவறுகளுடன் ?
வீசா -விசா
அனியன் -ஆனியன்
ரிசீட் -ரெசிப்ட்
சொல்லிக் கொண்டே போகலாம் .
ஒருவர் சொல்கிறார் '' புறநானூறு  song  '' என்று.
அது 'poem '
நான் ஒன்றும் ஆங்கில மேதாவி அல்ல.ஆனால்  நான் ஆங்கிலம் தெரிந்தவள் என்று அலட்டிக் கொள்வதும் இல்லை.
தமிழும் சரியாக பேசாமல், ஆங்கிலமும் சரியாக பேசாமல் ..கொடுமை.
*ஐயப்பாடு  --போன்ற வார்த்தைகள் எத்தனை பேருக்கு புரியுமோ?அதனால் இனி ஆங்கிலம் கலந்த நடையில்தான் எழுத வேண்டும்.
என் bolg ஐயும் 4 பேர் படிக்க வேண்டாமா?
கார்த்திக்+அம்மா 

2013/03/12

Italy:
Refusing to send the sailors.
This too should be Italy?Another good chance for the parliamentarians to stall a day.
They will shout that this too is the cunning act of  Mrs.Sonia.
Parliamentarians, have a great day.

2013/03/08

இன்று உலக மகளிர் தினம்.நானும் கூட 1974ல் மகளிர் தின பரிசாக என் தாயின் initial  சேர்த்து என் பேரின் முதல் எழுத்துகளை அமைத்துக் கொண்டேன்.
ஆனால்,
இன்று யோசித்தால் ,தொலைக் காட்சிகள் ,மற்ற மிகைப் படுத்தல்கள் பார்க்கும் போது  ஒரு நல்ல விஷயத்தை காமெடி ஆக்குகிறோமோ என்று தோன்றுகிறது.
அது எதற்கு T .V யில் வரும் பெண்கள் அந்த காட்டு கூச்சல் கத்துகிறார்கள்?அவர்கள் பேசுவதை பார்த்தால் ஏதோ  பெண்கள் எல்லாம் வெளிச்சத்தையே காணாத ஒரு இருட்டறையில் அடைத்து வைத்துள்ளது போல் தோன்றுகிறது.
இன்றைய பெண்களை விட ,புராண காலத்திலிருந்து பெண்கள் முழு சுதந்திரத்துடனேயே இருந்துள்ளனர்.
அவர்கள் கணவரை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தது.பூஜை ,புனஸ்காரங்களில் அவர்கள் சம முக்கியத்துவம் பெற்றனர்.
தசரதனுக்கு தேர் ஓட்டுகிறாள்  அவன் மனைவி.(தேர் ஓட்டுவது ,அதிலும் போரில் தேர் ஓட்டுவது சாதாரணமான விஷயம் அல்ல.)ஒரு பெண் போரில் கலந்து கொள்கிறாள்.எத்தனை எத்தனை 100 ,100 ஆண்டுகளுக்கு முன்பு.அப்போது பெண்ணடிமைத்தனம் என்ற கேள்வி எங்கே?

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி. தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனரும் அவர்தான். 1936ம் ஆண்டு "மிஸ்கமலா" என்ற படத்தை இயக்கினார். முதல் பெண் தயாரிப்பாளர், முதன் முதலில் தியேட்டர் கட்டிய பெண். இப்படி பல முகங்கள் அவருக்கு உண்டு. 
இது  இன்று நான் படித்த செய்தி 
சுதந்திரத்திற்கு முன் நடந்த விஷயம்.நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது.
என் அம்மாவுடன் பிறந்த சகோதரிகள் நால்வர்.ஒரே குடும்பத்தில் பிறந்து,ஒரே சூழ்நிலையில் வளர்ந்தவர்கள்.ஆனால்  என் அம்மா மட்டும்தான் படித்தார்.ஒரு சகோதரி அந்த காலத்திலேயே ''காதல் ''.படிப்பு கட் .அடுத்த சகோதரிக்கு படிப்பு ஏறவில்லை .என் தாயின் ஆர்வம், விடாமுயற்சி ,கடின உழைப்பு அவர் வாழ்வின் வெற்றிப் படிக்கட்டுகளில் தாவித் தாவி ஏறினார் .
என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒருவர் சாதிப்பதற்கு, இனமோ,மதமோ,மற்ற எதுவுமே தடைக் கல் இல்லை .
தயவு செய்து பெண்ணுரிமை  பெண்ணுரிமை என்றார் கூச்சலிடாதீர்கள்   
கார்த்திக்+அம்மா  

2013/03/07

GAIL and TN farmers:
There are so many doubts .I don't understand so many things.
First
Is the land taken by GAIL without the consent of the farmers?
Has it not signed any agreement with the farmers?
Were the farmers so ignorant about this project ?
Don't the land owners have any right over the land ,can't they say NO?
Or, that they have sold the land at a low cast and realizing this fact at a later stage after signing the agreement and now protesting?
AND the BIGGEST doubt is ( as far as my geographical knowledge goes )the route via Karnataka will be shorter than going through Tamilnadu.
If so why this route?
Tamilnadu people allow every project to be carried on and only at the finishing stage WE start protesting like the Koodankulam project.
Can anyone clear my doubts?
karthik+amma