About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/02/26

இன்றைய நீயா  நானா :.........
இன்ஜினியரிங்  படிப்பு பற்றி விவாதம் நடந்தது.
ஒரு ஏரோனாட்டிக்ஸ் மாணவர் பேசினார்.
தான் ஒரு ப்ராஜெக்ட் செய்ய விரும்பியதாகவும்  அதன் கடுமை கருதி அது மறுக்கப் பட்டதாகவும் சொன்னார்.
அதேதான் நடந்தது
கார்த்திக்கிற்கும் .....
 செந்திலுக்கும் ....
கார்த்திக் செய்ய விரும்பிய ப்ரொஜெக்ட் மறுக்கப் பட்டது.
இன்று அது உலக அளவில் கொடி கட்டி பறக்கிறது.....
விரக்தியுடன் ஒரு சாதாரண ப்ரொஜெக்ட்  செய்தான்.
.....   .....
செந்தில் ஏரோநாட்டிக்ஸ் மாணவன்.
அவன் தன ப்ரொஜெக்ட்பற்றி சொன்ன போது அவன் வகுப்பில் அனைவரும் சிரித்தனராம்.
இப்போது வெளி நாட்டில் வேலை செய்யும் அவன் நண்பன் சொன்னானாம்.
அன்று நீ சொன்ன போது சிரித்தோம்.
இன்று அதுதான் பெரிய விஷயம்.
நானும் செந்திலும் அந்த மாடல் செய்வதற்கு எத்தனை பேரிடம் உதவி கேட்டோம் .
பலருக்கு அந்த கான்செப்ட் புரியவேயில்லை. உதவி செய்ய விரும்பியவர்களுக்கு அதற்கு உண்டான மெஷின் இல்லை.
விரக்தியுடன் ஒரு சாதாரண ப்ரொஜெக்ட்  செய்தான்.
எல்லா கல்லூரிகளையும் சொல்லவில்லை.
ஆனால் பல கல்லூரிகளில் ஏதோ  வந்தோமா  போனோமா என்றுதான்.
ஒரு சில ஆசிரியர்களே உண்மையாக செய்கின்றனர்.
செந்திலுக்கு வீட்டிலேயே ஏரோனாட்டிக்ஸ் பாடத்திற்கு டியூஷன் ஏற்பாடு செய்தேன்.
ஆசிரியரை குறை சொல்ல முடியாது.பாவம்.
ஒரு 20 பக்கத்திற்கு notes  கொண்டு வந்திருந்தார்.
ஆனால் சொல்லி கொடுக்க முடியவில்லை. நானும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.
முயற்சி பெரிது.
திறமை ,அனுபவம் போதவில்லை.
மாற்றம் தேவை.
ஒரு மாணவன் சொன்னான்.'' ''நான் 82 % வாங்கி பாஸ் செய்தேன்.ஆனால் எனக்குsubject  எதுவும் தெரியாது.'' ''...
மதிப்பிடும் முறை மாற வேண்டும்.
மனப்பாடம் செய்து எழுதி பட்டம் பெறுபவர் பலர்.
....கொசுறு:::
அதென்னங்க  ..பையன்கள் மட்டுமே பெயில் (fail ) ஆகிறாங்க .
பெண் பிள்ளைகள் பாஸ் செய்து பட்டம் வாங்கி விடுகிறார்கள்??????????????
மர்மம்.மர்மம்.
கார்த்திக் அம்மா
காலாகார்த்திக் 

2017/02/21

சேலம் மாவட்டத்திற்கு வந்த பெருமை.:
டாடா சன்ஸ் நடராசன்
கிரிக்கெட் வீரர்   நடராசன்
மாநில முதல்வர் பழனிசாமி
லிஸ்ட் பெருசு.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே சேலம் பல சிறப்பு பெற்றது.
கலைஞர் திரை வாழ்வை ஆரம்பித்த ஊரும் இதுவே.
.......
இப்போது ஊர் மாறி சென்னை வாசியாக மாறி 17 வருடங்கள் ஆகி விட்டாலும் ஊர் பாசம் இல்லாமல் போகுமா?
கார்த்திக் ,செந்தில் பிறந்ததும் சேலம் தான்.அதனால் சற்று கூடுதல் பாசம்.
கார்த்திக் அம்மா .
காலாகார்த்திக்

2017/02/17

சொல்வதெல்லாம் உண்மை :
நேற்று 16.02. நிகழ்சசியில் பேசிய மஞ்சுளா என்ற பெண் ஒரு கருத்தை சொல்லியது. சிறு வயதுதான்.ஆனாலும் நான் சொல்ல நினைத்த கருத்து.டைவர்ஸ் ,விவாகரத்து கொடுக்கும் பழக்கம் மாற வேண்டும்.கணவன் மனைவி இருவரில் யார் கள்ள  காதல் போன்ற தவறு செய்கிறார்களோ அவருக்கு ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும்.
விவாகரத்து வாங்கிக் கொண்டு அடுத்த காதலுக்கு {கள்ள )போவதை தடை செய்ய வேண்டும்.
நியாயமான வாதம்தான்.....
......லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்னார்.எங்கேய பார்த்தாலும் செல் போன் கேமரா ....
இது ஒரு பெரிய கொடுமை.
கடைக்கு போனால் ஏதோ ஒரு கிரிமினல் போட்டோ எடுக்கிறது.
பஸ்ஸில் போனாலும்....
கோவிலுக்கு போனாலும்...இதை தடை செய்ய ஒரு சட்டம் வராதா ?????????????
கார்த்திக் அம்மா

2017/02/14

எடப்பாடி:
எனக்கு திருமணமாகி 1981ல் தனிக் குடித்தனம் வைத்த ஊர் .சேலம் மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர்.கிராமமும் இல்லை.பெரிய ஊரும் இல்லை.
neither a village nor a town.
ஆனால் இன்று அந்த ஊர் பெரும் பெயர் பெற்றுள்ளது.
காலத்தின் கோலம்.
கலா கார்த்திக்
கார்த்திக் அம்மா

2017/02/12

எனக்கு இனி என்ன கவலை???????????????
அப்பாடா.....
தமிழ் நாட்டு மக்களை காப்பாற்ற
தமிழக மக்களுக்கு நல்லது செய்ய எத்தனை பேர் துடிக்கிறார்கள் .....
கொடுத்து வைத்தவர்கள் நாம் ......
சத்தியமாக முதல்வர் பதவிக்கு ஆசைப் படவேயில்லை.....
மக்களுக்கு நல்லது செய்யத்தான்...
நம்புங்கள் மக்களே....
இவர்கள் யாருக்கும் பதவி ஆசையெல்லாம் இல்லை...
இல்லவே இல்லை.
கார்த்திக் அம்மா
கலா கார்த்திக்