About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2008/10/30

The Best Joke of the Year

அத்வானி ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியது:
" " நான் மத சார்பற்றவன்" "
ஐயோ, ஐயோ, என்ன சொல்வது????????

2008/10/07

அன்புள்ள வலை நண்பர்களுக்கு,
அவசியம் இந்த பதிவை படித்து விட்டு முடிந்தவரை பிறருக்கும் அனுப்புங்கள்.
இது என் சொந்த கதை, ஆனால் , நாளை உங்கள் கதையாக மாறவேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு.
நான் 1983 ல் ஒரு நிலம் வாங்கினேன். அந்த நிலத்தை " கிரயம்" [registration] செய்து பத்திரத்தை [documents], பத்திரமாக [ஜாக்கிரதையாக ] கொண்டுவந்து விட்டில் வைத்துக் கொண்டுவிட்டேன். இப்போது, சுமார் 25 வருடங்களுக்கு பிறகு, அந்த நிலத்திற்கு வேலி போட செல்லும் போது, சர்வேயர் வைத்து நிலம் அளக்க வேண்டும் என்று பக்கத்து நிலத்துக்கு உரியவர் [ இத்தனைக்கும் நெருங்கிய சொந்தம் ] சொன்னதால், வி.ஏ.ஒ. ஆபிஸ் போனால், அந்த வி.ஏ.ஒ. ஒரு காலண நோட்டைsome good old ,tattered record எடுத்து நான்கு பக்கங்கள் திருப்பி பார்த்து விட்டு, '' நிலம் உங்கள் பேரிலேயே இல்லை. '' என்று திருவாய் மலர்ந்தார். அதிர்ந்து போன நான், என் கிரய பத்திரம் இது என எடுத்து காட்டினாலும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. ''எங்கள் ரெகார்டில் இப்படித்தான் இருக்கிறது '' என்று அடித்து கூறி விட்டார்.
பிறகு ஈ.சிE.C [ENCUMBERANCE CERTIFICATE ]என்ற ஒன்றையும்Rs 4000 செலவு செய்து அதிலும் என் பெயர்தான் இருக்கிறது என்று வாதாடியும் அவர் காட்டிய தெனாவெட்டு !!
என்னை கேட்ட கேள்விகள் ???? ஒரு மடத்தனமான கேள்வியை கேட்டுவிட்டு ''உங்களுக்கு இது கூட புரியவில்லையா ?'' '' என்று நக்கல் வேறு. நீங்கள் உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் ,எந்த கலெக்டரிடம் போய் சொன்னாலும் கடைசியாக என்னிடம்தான் வரவேண்டும் . நான்தான் ரெகார்டில் பெயர் மாற்றித் தர முடியும் '' என்று சவால் விட்டுள்ளார். அவர்களாகவே ஏதோ ஒரு பெயரை எழுதி கொள்வார்களாம். அதுதான் சட்டப் படியும் செல்லுமாம். ''''உண்மை.''

இந்த சமயத்தில்தான், விசுவின் அரட்டை அரங்கம் பார்க்க நேர்ந்தது .அதில் ஒருவர் இதே கதையை சொல்லி, '' இவர்களிடம் சட்டம் பேசினால் காரியம் நடக்கவே நடக்காது. செய்ய வேண்டிய ''பரிகாரங்களை '' [கொடுக்க வேண்டிய லஞ்சத்தை கொடுத்து ] பட்டா எண் [பட்டா நம்பர் ] பெற்றுக் கொள்ளுங்கள் .அப்போதுதான் நிலம் உங்களுக்கு சொந்தம் என்று சொன்னார்.
இந்த பதிவின் நோக்கமே இதுதான். கஷ்டப் பட்டு லோன் வாங்கி ஈ.எம்.ஐ. கணக்கு செய்து, வட்டி கட்டி நாம் வாங்கும் நிலத்திற்கு, இவ்வளவு பிரச்சினைகள் உள்ளன. இளைய சமுதாயமே, உங்களுடைய கணினி அறிவு எல்லாம் அந்த எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்த v.a.o. விடம் செல்லாது. எனவே எடுக்க வேண்டிய , கொடுக்க வேண்டிய எல்லாம் முறைப் படி செய்து உங்கள் சொத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
பி.கு.
இந்த லஞ்சம் கொடுப்பது , வாங்குவது என்ற விசயத்திற்கு நான் மிகப் பெரிய எதிரி. இன்னும் லஞ்சம் கொடுக்கவும் இல்லை. பட்டா நம்பர் என் பெயரில் மாறவும் இல்லை ..... so my dearest friends, please take all precautionary measures to ensure that the land is yours. Regarding flats, 'what must be done?' ...better get to know everything before you buy anything, be it land or flat. I guess there is little problem with flats and especially, with the reputed builders we have no problems at all.
Wishing you all the best

2008/10/03

IDBI--Ad

I am sure everyone would have enjoyed this advertisement.
இரு சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பந்து ஒரு புதருக்குள் விழுகிறது. எடுக்க போனால், ஒரு யானை. பையன் பயந்து பின்வாங்குகிறான். யானை அந்த பந்தை அவனிடம் தள்ளிவிட்டு காட்டுக்குள் போய்விடுகிறது. அப்பாடா, என்று ஆட்டத்தை தொடரலாம் எனும்போது மீண்டும் யானை.
இப்போது தன் செல்ல குட்டியுடன்......அவரும் பந்து விளையாடுவாராம்,,,, இவர்கள் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். குட்டி யானையார் பின்காலால் வேறு பந்தை உதைப்பாராம்...ஆஹா ...என்ன ஒரு அருமையான விளம்பரம்.....அந்த தாய் யானை தன் குட்டி அந்த விளையாட்டை அனுபவிக்க எண்ணுவது ...அருமையான தாய்மை. இப்படியெல்லாம் விளம்பரங்கள் கொடுக்கலாமே .. அதை விட்டு, கையகல துணியுடன் , அரை நிர்வாண பெண்களை ஆட விட்டு.......
இனியாவது இது போன்று மனதை மெல்லிதாக தாலாட்டி செல்லும் விளம்பரங்களை தாருங்கள்
இனிமையிலும் இனிமையான
கார்த்திக்