About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/04/26

Epic

karthik
you may be a short story to others
BUT
you are my HISTORY
You may be an episode to others
BUT
you are my EPIC
an epic longer than Odyssey and Mahabharatha
A vedham
more precious than all four vedhas
A  manthra more powerful than all manthras
YOU are my god

ஹம்பி

கார்த்தி
ஒரு வரலாறு பைத்தியம்.
ஹம்பி எனும் விஜயநகர் அவனுக்கு மிகவும் பிடித்த இடம்.
ஒரு 1000 புகைப்படங்கள் இருக்கும்.
கங்கை கொண்ட சோழபுரம் ,தாராசுரம் இன்னும் பல  ஊர்களின் அரிய கோணத்தில் எடுக்கப் பட்ட புகை படங்கள் வரலாற்று ஆராய்ச்சிக்கு உதவும்.


பஜார்,குதிரை லாயம் ,8 வாயில்கள் என ஒரு சுரங்கம் இருக்கிறது.
கார்த்திக் அம்மா

2018/04/24

கார்த்திக் .புகைப்பட கலைஞன்

கார்த்திக் .புகைப்பட கலைஞன்
கார்த்திக் ஒரு ஆல்ரவுண்டர் .எந்த கலையானாலும் அதை அறிந்து கொள்ளவும் அதில் திறமையாக சாதித்துக் காட்டவும் செய்வான்,
இந்த புகைப்படங்கள் 2002,03 ல் ஒரு சாதாரண கை  கேமராவால் எடுக்கப் பட்டவை.இப்போது கிடைக்கும் அட்வான்ஸ்ட் கேமராக்கள் இருந்திருந்தால் இன்னும் எப்படி எல்லாமோ சாதித்திருப்பான்.

மேலே இருக்கும் புகைப்படம் விமானத்தில் இருந்து எடுக்கப் பட்டது.
எத்தனையோ சாதனைகள் செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த இந்த தங்க மகன் தன்  23 வயதில் தன்  அன்பு தாயான என்னை விட்டு பிரிந்த கொடுமையை என் சொல்வேன்??????
கார்த்திக் அம்மா

2018/04/18

2000 ரூபாய்

2000 ரூபாய்
நம் போன்ற சாதாரண மக்கள் எப்போதும் ஒரு பயத்துடனும் திகிலோடும் தான் இருக்க வேண்டுமா ?
பெட்ரோல் , டீசல் விலை கண்ணை கட்டுகிறது.
ஒரு ஊருக்கு போனோமா  வந்தோமா என்றில்லை.
எந்த நேரத்தில் யார் சாலை மறியல் செய்வார்கள் என்று தெரியாது.
ஒரு இயல்பு வாழ்க்கை என்பது இல்லாமல் நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம்
.நம்மை சிலர் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
 நம் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை வாழ்பவர்கள் நம்மை புழுவை பார்ப்பது போல் கேவலமாக பார்க்கிறார்கள்..நடத்துகிறார்கள்.
ஏதோ அவர்களுக்கு சொந்தமான உலகில் போனால் போகிறதென்று நம்மை வாழ அனுமதித்தது போல் இருக்கிறது அவர்கள் செயகைகள்.
ACT TO REPEAL சட்டம் வேண்டும்.
5 வருடம் அசைக்கவோ ஆட்டவோ முடியாது என்ற திமிர் அரசியல்வாதிகளுக்கு .
அவர்களை பலவகையில் சரிகட்டி அதிகாரிகள் செய்யும் அக்கிரமம் அதை விட.
உங்கள் பணம் எங்கள் கையில்.
கொடுத்தால் கொடுப்போம்.
மீண்டும் வரிசை.
ஒரு நாளைக்கு இவ்வளவுதான் உன் ரேஷன் .சத்தம் போடாமல் வாங்கிக் கொண்டு ஓடி போய்விடு.
இதுதான் யதார்த்தம்.
ஆங்கிலேயர் காலத்தில் கூட இத்தனை அடக்கு முறை இல்லை.
'' ''சுதந்திர இந்தியாவின் அடிமைகள்.''  ''
கொத்தடிமைகள்.
வாழ்க ஜனநாயகம்.

2018/04/15

சித்திரையா or தையா

சித்திரையா or தையா
நாட்டில் இது ஒரு பெரிய பிரச்சினை ...
அந்த காலத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தார்கள்.
மின்சாரம் இல்லை.fridge  இல்லை.
a .c  இல்லை.
கார் இல்லை.
நடந்து செல்ல வேண்டும்.
கோடையில் வெய்யிலின் கொடுமையை சமாளிக்க பயணங்கள் தவிர்க்கப் பட்டது .
அமாவாசையை முன்னாள் வைத்துக் கொண்டு பயணம் செய்யக் கூடாது என்பார்கள்.
eg குரங்கணி .அமாவாசை அருகில் இருந்ததால் நிலா வெளிச்சம் இல்லாததால் இரவில் மீட்பு பணிகள் செய்ய முடியாமல் போனது.
இது போல் கஷ்டங்கள் இருந்ததால் சூரியன் இருக்கும் இடத்தை பொருத்து மாதங்களை கணித்தனர்.
அதனால் வருடப் பிறப்பு முக்கியத்துவம் பெற்றது.
ஆனால் ....
இந்த காலம் மிகவும் மாறி போய் விட்டது.இப்போது சித்திரை மாதம் வெய்யில் என்றால் a .c க்குள் அடங்கிக் கொள்கிறோம்.
கடை,ஆபீஸ் ,என எல்லா இடமும் a .c .
விவசாயிகள் மட்டும்தான் இதை கணக்கில் எடுக்க வேண்டும்.
நேற்று என்ன செய்தார்கள்?
t .v பார்த்தார்கள்.
அவ்வளவுதான்.
அதனால் சித்திரையா அல்லது தையா என்று போட்டி போட்டு கொண்டு மக்களை குழப்ப வேண்டாம்.
கார்த்திக் அம்மா
KALA KARTHIK

2018/04/01

Karthik.My Karthik

Karthik at London airport
In a marriage.
MY SON.
என் மகன்
என் அழகு மகன்
அம்மா
கார்த்திக் அம்மா
kalakarthik