About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2024/04/10

Karthik Karthik

 Karthik

SELF INSPIRED

Self motivated

A hero of Self Dependence 

A one man army

A Man of Different Ideology

Taking any problem, any curse, any difficulty any suffering 

as a challenge and that too with a Smile

Even Atlas would have mourned the burden of Mother earth

but my son proves greater to Atlas

because my son never of compained any  burden as burden

Always he used to say 

''Is this all a big burden, a big problem???????

இதெல்லாம்  ஒரு பெரிய பிரச்சினையா ? அம்மா 

''you dont worry about anything. I will manage any problem easily''

But how sad he would have felt in his heart of hearts.

My DEAREST CHILD

my God

my friend

my EVERYTHING

WITHOUT YOU  i live a hell of life.

words cannot express the trauma i undergo.

2024/03/16

குரு பெயர்ச்சி

 குரு பெயர்ச்சி உண்மைகள் :

மே 1ல் குறு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு போகிறார் என்பதை எல்லோரும் கத்தி தீர்த்து விட்டனர்.

ஆஹா உனக்கு ஜென்மத்தில் குரு ,, உனக்கு 6ல் குரு  என்று பயமுறுத்த ஆரம்பித்து விடுவார்கள்.

ஒரே மாதிரி ''போன வருடம் கஷ்டப் பட்டிருப்பீர்கள். இந்த வருடம் நீங்கதான் ராஜா'' என்பார்கள்.

உண்மை என்ன ?

மொத்தம் 12 ராசிகள்.ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள்.

ஒரு நட்சத்திரத்திற்கு 4 கால்கள்( 4 பாதங்கள் ).

உதாரணமாக மேஷ ராசியில் 

அஸ்வினி (4 பாதங்கள்)

பரணி    4

கார்த்திகை 1 பாதம் .

குரு  ஒரு ராசியில் 12 மாதங்கள் இருப்பார்.

அப்படி என்றால் 12/9  (360/9 நாட்கள் ) என ஒரு நட்சத்திர காலில் 40 நாட்கள் இருப்பார்.

அப்படி என்றால் அஸ்வினி முதல் பாதத்தில் 40 நாட்கள் பலன் தருவார்.அப்போது ஒரு வகையான பலன் நடக்கும்.

அடுத்த 40 நாட்கள் பலன்கள் மாறுபடும்.

அதனால் 

ஐயய்யோ ,  எனக்கு ஜென்ம குரு ,,   எனக்கு 8ல் குரு என்று பயப்பட வேண்டாம்.

நல்லதே நடக்கும்.

2024/03/04

தேர்தல் குஷி

தேர்தல் குஷி  :

ஆஹா .ஆரம்பித்து விட்டது தேர்தல் கோலாகலம்.

நேற்றே எங்கள் தெருவில் சாலை முழுதும் மின் விளக்குகள் ஜொலி ஜொலிக்க ஆட்டம் ,பாட்டு, என்று களை கட்டி விட்டது.வோட்டு போட்டு முடியும் வரை மக்களுக்கு கொண்டாட்டம்தான்.கூட்டத்திற்கு போக 500 -1000 வரை தருகிறார்களாம் .

+பிரியாணி +குவார்ட்டர்  (எல்லோருக்கும் ...ஆண்  .பெண் ) அனைவருக்கும் உண்டாம்.

ஏழை மக்கள் என்னும் இனம் தான் மிக பெரும் பயனடைகிறது .

தேர்தல் முடிவதற்குள் அவர்கள் நிலை உயர்ந்து விடும்.

அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையா ? 

ரோடு ,மணல், கட்டிடம் .கஷ்டப்படாத காசு.

இதில் புலம்ப வேண்டியது யார் என்றால் ..சிறுக சிறுக மிச்சம் பிடித்து அதில் பெரிய தொகையை வருமான வரியாக கட்டும் என் போன்ற சீனியர் குடிமக்கள்தான்.

ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மனைவி (வீடுகளில் வேலை செய்பவர்) சொல்கிறார்/120 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு போக ''''என்னால் பஸ்ஸில் போக முடியாது.இடுப்பு வலிக்கும்.அதனால் என் சொந்த ஆட்டோவில்தான் போக போகிறேன்.''''

என்னுடைய வரிப்பணம் .

உனக்கு 6000+1000+பண்டிகை பரிசு பணம் .அதனால் நீ ரோல்ஸ் ராய் கார் கூட எடுத்து போலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ...எதிர்காலம் என்ன என்று அறியாமல்.அழிந்து வரும் இளைய சமுதாயம்.

அவ்வளவுதான்.

இப்போதைக்கு புலம்பலுக்கு இடைவெளி 

கார்த்திக் அம்மா

2024/02/02

 சுதந்திரம் வாங்கினோம் .விடியவே இல்லை .என்று யாரோ சொன்னார்கள் .

2024/01/01

விஜயகாந்த்

extremely amazing .ஆச்சரியம் .

இத்தனை மக்களா ?

ஒருவருடைய துக்கத்துக்கு இத்தனை பேர் வருவார்களா ?

ஜாதி, மதம் ,மொழி, கட்சி ,வயது என எல்லா வேற்றுமைகளும் கடந்து ஒரு மனிதன் இத்தனை பேரின் அன்பை சம்பாதித்திருப்பது மிக மிக பெரிய விஷயம்.

அவருக்கு என் மரியாதை கலந்த வணக்கங்கள்