About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/12/30

ஒற்றை பிராமணன் :
இன்று சங்கரா டி .வி யில் ஒரு ஜோதிட நிகழ்ச்சி பார்த்தேன்.ஒரு பிரபல ஜோதிடர்.
அவரிடம் பூனை குறுக்கே போதல் போன்ற சகுனங்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ''ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த ஒருவர் ஒற்றையாக எதிரில் வந்தால் போகும் காரியம் வெற்றி பெறாது என்ற சகுனத்திற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்.
Disclaimer :
நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் இல்லை.
பெரிய ஜோதிடரும் இல்லை.
ஒரு L K G அளவில்  தெரியும்.அந்த அளவில் இந்த
ஒற்றை பிராமணன் என்பது குருவை குறிப்பது.ஒரு ஜாதகத்தில் எந்த கட்டமாக இருந்தாலும் சரி.
குரு  தனித்து ( வேறு எந்த கிரகத்துடனும் சேராமல் )நின்றால் நல்ல பலன் இல்லை .
அதைத்தான் ஒற்றை பிராமணன் ஆகாது என்றார்கள்.
நம்  மக்கள்தான் super brain ஆயிற்றே.
கதை செய்து கயிறு திரித்து விட்டார்கள்.
பாவம் அவர்கள் .தனியே வந்தால் எதிரில் வருபவர்களை கண்டு தயங்குவார்கள்.
ஆனால் காலம் மாறி விட்டது.இப்போதைய தலைமுறைக்கு இந்த சகுனங்கள் என்ற ஒன்று பற்றி தெரியுமா என்பதே சந்தேகம்தான்
மறக்க விடாமல் கொள்ளியை எரிய விடுவோம் என்பது சரியா?
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2015/12/24

First Rank :
ஒரு விளம்பரம்.( பட விளம்பரமா? )
அதில் ஒரு சிறுவனின் அப்பா
'' உன்னை எப்படியும் First Rank வாங்க வைத்து விடுவார்கள் '' என்று சொல்கிறார்.
அதற்கு அந்த பையன் '' எல்லோரிடமும் இப்படித்தானே சொல்வார்கள். ஆனால் First Rank ஒன்றுதானே இருக்கிறது ''
என்று சொல்வான்....
இது மிக மிக தவறான கருத்து
+2 வில் 12 லட்சம் மாணவர்கள் எழுதினாலும் 1200 மதிப்பெண்கள் அவரவர் தனி சொத்து. அதில் அவர் எவ்வளவு பெறுகிறார் என்பதுதான் நடைமுறை. ஒரு மாணவன் 800 மதிப்பெண்கள் பெற்றாலும் மீதி 400 மதிப்பெண்களை யாருக்கும் கொடுக்க முடியாது.எதுவும் செய்ய முடியாது.
......    .....
அப்படிஎன்றால் 1000 பேர் 1200 மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்று  கொள்வோம்.
அந்த 1000 பேருக்கும் First Rankகொடுக்கப் படும். அடுத்த மதிப்பெண் பெரும் மாணவனுக்கு 1001 வது Rank கொடுக்கப் படும்.
சம்பந்தப் பட்டவர்கள் திருத்திக் கொள்வார்களா?
கார்த்திக் அம்மா

2015/12/17

ஜல்லிக்கட்டு:
மறுபடியும் என் கதையை சொன்னால்தான் விளக்கம் சரியாக இருக்கும்.
நான் பள்ளி மாணவி அப்போது.
அப்போதெல்லாம் வீடுகளில் பசு இருக்கும். அது பால் தரும் காலம் வரை வீட்டில் இருக்கும். அதன்பின் விளைநிலத்தில் (தோட்டம் )  (agri land ) கொண்டு விட்டு விட்டு பால்தர தயாராக இருக்கும்,( புதிதாக கன்று ஈன்ற பசு  )மாட்டை ஊரில் இருக்கும் வீட்டிற்கு கொண்டுவந்து விடுவார்கள்.
அப்படித்தான் ஒரு  (பசு லட்சுமி கொச்சுமி என்றெல்லாம் கொஞ்சிக் கொண்டிருந்த மாடு ) தோட்டத்திற்கு போய் விட்டது.விடுமுறையில் வயலுக்கு சென்ற நான் அந்த மாட்டை மேய்ச்சலுக்கு பிடித்து சென்றேன் எங்கள் வயலுக்குள்ளேதான் .சிறிது தூரம் சென்றபின் அந்த மாட்டை திருப்பிக் கொண்டு வர முயன்றபோது ,தன பசியாலோ என்னவோ டக்கென்று என்னை கீழே தள்ளி விட்டு முட்ட ஆரம்பித்து விட்டது. (நன்றி கெட்ட மாடு. ) ஒரு நிமிடம் பயந்து விட்டாலும் அடுத்த நொடி சுதாரித்துக் கொண்டு அதன் மூக்கனாங்கயிற்றை எட்டிப் பிடித்து அதனை  அடக்கி அதன் கட்டுத் துறைக்கு கொண்டு வந்து விட்டேன். அம்மாவிடம் கூட சொல்லவில்லை.சொன்னால் அந்த மாடு மேல் கோபம் வந்து விடுமே என்ற எண்ணம்தான்.
இந்த கதை எதற்கு என்றால் ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டிற்காக ஏற்படுத்தப் பட்டதல்ல. 
அந்த மாடுகளையும் காளைகளையும் அதை பயன்படுத்துபவரால் கண்ட்ரோல் செய்ய கொடுக்கும் ஒரு பயிற்சிதான்.
 இப்போதும் மாடுகள் ,காளைகள் நமக்கு  தேவைப் படும் ,சேவைக்கு வேண்டிய மிருகங்கள். அது எப்படி வனவிலங்கு ஆகும்?
சிந்திப்பார்களா சம்பந்தப்பட்டோர் ???????



2015/12/11

PWD officers .IAS officers:
இது தற்பெருமை அல்ல.என் சுய புராணமும் அல்ல. இது பற்றி முன்பே எழுதியுள்ளேன்.
1990  என நினைக்கிறேன்.நான் ஆசிரியையாக பணியாற்றிய போது நடந்த நிகழ்வு :
+2 தேர்வு.
தனித் தேர்வர்கள் 120 பேர் .அவர்களுக்கு ஹால் டிக்கட் வரவில்லை.
இது எதுவும் எனக்கு தெரியாது. வழக்கம் போல் பள்ளிக்கு வந்த என்னை தலைமை ஆசிரியர் அழைத்து கையில் ஒரு file  கொடுத்து நீங்கள்தான் in charge .இந்த தேர்வை நடத்துங்கள் என்றார்.
அதில் என்ன பிரச்சினை ,ஆபத்தா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.அந்த இடத்திற்கு சென்றபோது 120 பேரும் ஒரே கூச்சல்.'' எங்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கவில்லை.''
எப்படி தேர்வு  எழுத அனுமதிப்பது?
அனுமதிக்காமலும் இருக்க முடியாது.
இதையெல்லாம் என் சீனியர்சுடன் விவாதித்திருக்கிறார் என் தலைமை ஆசிரியர்.(நான்தான் most junior ).
அவர்களெல்லாம் பிளான் செய்து என் தலையில் கட்டியுள்ளனர்.
இந்த சதி எதுவும் தெரியாமல் நான் அங்கு சென்றேன்.
அந்த இடத்திற்கு சென்றபோது 120 பேரும் ஒரே கூச்சல்.'
நான் ஒரு நிமிடத்தில் முடிவெடுத்தேன்.
''  எல்லோரும் எதோ ஒரு பெஞ்சில் உட்காருங்கள்.உங்களுக்கு கேள்வித்தாளு ம் ,விடைத்தாளும்  வழங்கப்படும். '' என்றேன்.
அத்தனை பேரும் இரண்டே நிமிடத்தில் கிடைத்த இடத்தில் அமர்ந்தனர்.
 கேள்வித்தாளு ம் ,விடைத்தாளும் வழங்கப்பட்டது.
( கண்ணீருடன் நின்று கொண்டிருந்த அவர்கள் 
தேர்வு எழுத முடியாது என்று அறிவிக்கப் பட்டிருந்த அவர்கள் )
என்ன ஒரு நிம்மதி .:
அப்புறம் அவர்கள் அனைவரிடத்தும் ஒரு undertaking எழுதி வாங்கிக் கொண்டேன்.
இரண்டாம் நாளும் இது தொடர்ந்தது..
மூன்றாம் நாள் ஹால் டிக்கெட் வந்து  விட்டது.
THE GREATEST JOINT DIRECTOR  வேக வேகமாக வந்தார். புஸ் புஸ் என்ற கோப மூச்சு.இவ்வளவு இளையவளான இவளை எப்படி இந்த பொறுப்பிற்கு ????
அதில் நான் இவ்வளவு சரியாக செயல்பட்டேன் என்பது இன்னும் கூடுதல் எரிச்சல்.
ஆனால் 
என்னை எதுவும் செய்ய முடியவில்லை.
இவ்வளவு கதை எதற்கு என்றால் 
அன்று நான் எடுத்த துணிச்சலான முடிவு 120 பேரின் எதிர்காலத்தை நற்காலமாக மாற்றியது.
இன்று இந்த officers யாருக்கும் பயப்படாமல் தண்ணிரை உரிய நேரத்தில் திறந்து விட்டிருந்தால் சென்னைக்கு இந்த கொடூர சோகம் நிகழ்ந்திருக்காது .
அரசு அதிகாரிகளை என்ன செய்து விட முடியும்?
அட அப்படியே வீட்டிற்குதான் அனுப்பட்டுமே.
பிழைக்க வழியே இல்லையா?
இத்தனை மக்களை காப்பாற்றினோம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்.
கார்த்திக் அம்மா

  

2015/12/07

We Chennaiites  AMPHIBIANS:
நாங்கள் சென்னை வாசிகளாகிய நாங்கள் AMPHIBIANS: ஆகி விட்டோம்.
நீரிலும் நிலத்திலும் வாழும் தவளை ,முதலை போல்
நாங்களும் நீரிலும் வாழ்வோம்.
நிலத்திலும் வாழ்வோம்.
.....
கிண்டல் செய்யும் நேரமா இது என்ற கேள்வி வேண்டாம்.
The best joke in the world is to tell the truth என்று   சொல்வது உண்டு.
உண்மை சுடுகிறது.
.... ...   ...
சென்னையின் பெயர் மாற்றம்:
சென்னையின்  புது பெயர் :
CHENNAI SEA.
..... .....
மனமார்ந்த நன்றிகள் :எத்தனை எத்தனை நல்ல உள்ளங்கள் இரவு பகலாக உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கின்றனர்.
எந்த விளம்பரமும் இல்லாமல்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.
HATS OFF TO YOU MY BRETHREN
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2015/11/25

நடிகர்கள் மிரட்டல் :
என்ன.....ஆளாளுக்கு கிளம்பியிருக்கிங்க ????????????
முன்பு ஒருவர் தன் படம் வெளிவர பிரச்சினை என்றவுடன் நாட்டை விட்டு ஓடுவேன் என்று மிரட்டினார்.
இப்போது அமீர் மிரட்டுகிறார்.
போங்களேன்.
நாட்டிற்கு என்ன செய்தீர்கள்????????????
உங்கள் பணம் ,வருமானம் ,கல்லா பெட்டி :
இது கோடி கோடியாக கொட்ட வேண்டும்.
அது தவிர வேறு என்ன சாதித்தீர்கள்?
ஏன்
மக்களிடம் மத ஒற்றுமை பற்றி பேசுங்களேன்.
நீங்கள் சொன்னால் உயிரை விட தயாராக இருக்கும் ரசிகர்கள் என்ற முட்டாள்கள் நீங்கள் சொன்னால் மத வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் இருப்பார்களே?
போனால் போங்கள்.
நாட்டை காக்க நம் படை வீரர்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடுவார்கள்.
இப்போது சென்னை வெள்ளத்தில் மிதந்த போது சைலேந்திர பாபு  (அவரே) தண்ணிரில் இறங்கி எத்தனை மக்களை கரை சேர்த்தார்.
விளம்பரப் படுத்திக் கொள்ளவேயில்லையே.
இது போல் நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
எங்களுக்கு அவர்கள் போதும்.
அவர்களை நாங்கள் மதிக்கிறோம்.
ரசிக்கிறோம்
போற்றுகிறோம்.
நீங்கள் கிளம்பலாம்.
*****  ***
அவதூறு வழக்கு:
தும்மினால்
நின்றால்
நடந்தால்
வழக்கு.
எதை சொன்னாலும் தப்பு.
எதை எழுதினாலும் தப்பு.
என்னை பற்றி ஒருவர் பேசினாலோ, எழுதினாலோ
ஒன்று சட்டை செய்ய மாட்டேன்.
அல்லது பதிலுக்கு நானும் எழுதி தக்க விடை கொடுப்பேன்.
ஒரு பத்திரிகையில் வந்த செய்திகள் பொய்யென்று நிரூபியுங்களேன்.
இது ஒரு நல்ல அரசருக்கு அழகல்ல .
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2015/11/24

மழையே :
போதும் .போதும். சற்று ஓய்வெடுத்துக் கொள்.
எம் மக்கள் படும் பாடு சொல்லி முடியாது.
ஒரு 100 மில்லி பாலுக்கு அழும் குழந்தைகள் ,தளர்ந்து விட்ட பெரியவர்கள் ......போதும்.
அவர்கள் படும் பாடு.
  சற்று ஓய்வெடுத்துக் கொள்.
அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை நிறைய உள்ளது.
ஆனால் உதவப் போய் நான் அவர்களுக்கு உபத்திரவமாகிவிடக் கூடாது என்பதால்
''எல்லோரும் நலம் வாழ பிரார்த்திக்கும் ''
மழையே :
போதும் .போதும். சற்று ஓய்வெடுத்துக் கொள்.
வேண்டுதலுடன்
கார்த்திக் அம்மா

2015/11/13

பிறந்த நாள்
14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.
14.11.1981
நான் உயிர் கொண்ட நாள்.
என் உயிரை நான் கண்ட நாள்.
என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.
என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.
வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா
kalakarthik

2015/11/10

குற்றம் கடிதல்.....என் கதை......
இப்போதுதான் குற்றம் கடிதல் படம் கலைஞர் டி .வி யில் பார்த்தேன்.
நானும் ஒரு +2 ஆசிரியை.
1990 களில்  நடந்தது. ஒரு மாணவன் தன் கையை பிளேடால் கீறி அந்த ரத்தத்தில் i love  you  என்று எழுதிக் கொண்டிருந்தான்.(தன காதலிக்கு )
பார்த்த வுடன் நான் செய்த முதல் காரியம் அவனை கண்ணா பின்னாவென்று அடித்ததுதான்.
இதில் எனது ஈகோ ,திமிர், என்று எதுவும் இல்லை.
அவனின் ரத்தம்.
பிளேடால் கீறினால் செப்டிக் ஆகி விடும் என்ற தவிப்பு.
இந்த வயதில் காதலா  என்ற கோபம்
வகுப்பை கவனிக்கவில்லை என்ற ஆத்திரம் என்ற என்ன காரணங்களோ
எதுவோ தெரியாது.
I beat him .அடித்தேன்.
.....   .....
இது போல் பல பிரச்சினைகளில் மாட்டி இருக்கிறேன்.இந்த ஆசிரியைக்கு வந்தது போல் மீடியா ,பத்திரிகைகள், ராஜ் டி .வி  எல்லாம் பள்ளிக்கு வந்தது என்று கேள்விப் பட்டேன்.
ஆனால் என் பக்கம் நியாயம் என்று புரிந்ததாலோ என்னவோ ,  விசாரிக்கவும் இல்லை.வில்லங்கப் படுத்தவும் இல்லை.
HIGHLIGHT :
அந்த மாணவன் பின்னாளில் செந்திலிடம் சொன்னானாம் :
அன்று மட்டும் அம்மா என்னை அடித்திருக்காவிட்டால் நானும் படித்திருக்க மாட்டேன். இன்று இந்த நல்ல வேலைக்கு வந்து நல்ல நிலையில் இருந்திருக்கவும் மாட்டேன் 
 நல்ல ஆசிரியர்கள் மாணவர்களின் நன்மைக்காகத்தான் எதையும் செய்வார்கள்.
அடிப்பது சரியென்று நான் சொல்லவில்லை.
BUT THAT IS THE INSTANT REACTION .
கார்த்திக் அம்மா 
கலாகார்த்திக் 

2015/11/07

கார்கள்,கார்கள் !!!!!
இந்த மாதம் கார்த்தி வீட்டிற்கு (சென்னை to பெங்களூரு ) செல்லும் போது ஓசூர் அருகே ஒரு துணிக் கடையை கடந்த போது நான் கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது,.
யுண்டாய் +FORD கார் கம்பெனிகளை கடக்கும் போது வெய்யிலில் வற்றல் காய வைத்தது போல் கார்கள் நிறுத்தப் பட்டிருக்கும்.
அத காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த துணிக்கடையின் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் எண்ணிக்கை அது போலத்தான் இருந்தது.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. 
சந்தோஷம்தான்.
கார்த்திக் அம்மா 
கலாகார்த்திக் 
 

2015/10/30

30 லட்சம்  ...அதிர்ச்சி
நிறைய விளம்பரங்கள்.
10 லட்சம் குறைக்கிறோம்.
10000 ரூபாய்க்கு கொடுத்த சதுர அடி மனை விலை இப்போது 6000 ,7000 மட்டுமே என்ற கூவல் அதிகமாகிறது.
மனது திடிரென ஒரு கணக்கு போட்டது. ஒரு சதுர அடிக்கு 3000 குறைக்கிறார்கள் என்றால் இது வரை விற்ற அந்த வீடுகளின் மேல் அந்த 3000 லாபம்தானே.
அப்படிஎன்றால் 1000 சதுர அடி வீட்டை வாங்கியவர் 30 லட்சம் அதிகமாக கொடுத்துள்ளனர்தானே.
எப்படியும் இப்போதும் எந்த பில்டரும் நஷ்டத்திற்கு விற்க போவதில்லை.
அப்படியானால் ஒரு வீட்டின் மேல் மிக மிக அதிகப்படியான லாபம்தானே இந்த 30 லட்சம்.
மக்களாகிய நாம் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறோம்?????????????
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2015/10/11

ஆச்சி மனோரமா :
வருத்தம் .மிக சிறந்த நடிகை. வாழ்வில் பல துயர் கண்ட போதும்  வெற்றி கண்ட பெண்மணி.
என் வணக்கங்கள் .
...... ......
நான் சென்னையில் இருந்தால் வந்திருப்பேன் . நான் பெங்களுருவில் இருக்கிறேன் என்ற ஒரு குரல் கேட்டது.
எனக்கு பல சந்தேகங்கள் வந்தன.
பெங்களுருவிற்கும் சென்னைக்கும் 4000 கி.மி தூரமா?
விசா வாங்க வேண்டுமா?
பாஸ்போர்ட் வேண்டுமா?
ஏதாவது ஸ்ட்ரைக்கா?
......
அப்பப்பா என்ன ஒரு மனிதாபிமானம்????????????

2015/10/09

எத்தனை இந்திராணி முகர்ஜிக்கள் 
.....////ஈரோடு அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் மணக்காட்டூரை சேர்ந்தவர் சதீஷ் என்ற ஈஸ்வரன் (வயது 29).  தோல் தொழிற்சாலையில்  கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்
.
ஈஸ்வரனின் மனைவி ரஞ்சிதா (வயது 25)  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு நித்திஷ் (வயது 5), அன்பரசு (வயது 2) என இரு குழந்தைகள் இருந்தனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் ரஞ்சிதா தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில், ரஞ்சிதா கடந்த (5-8-15) ஆகஸ்ட் மாதம் 5ஆம் தியதி  இரண்டு குழந்தைகளுக்கும் சாப்பாடு கொடுத்து தூங்க வைத்திருக்கிறார். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் எழும்பவில்லை. இதனால், ரஞ்சிதா குழந்தைகளை தூக்கி கொண்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
.
பரிசோதித்த மருத்துவர், குழந்தைகள் இறந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தைகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதில் தன் மனைவி ரஞ்சிதாவு தொடர்பு இருப்பதாக ஈஸ்வரன் காவல்துறையில் புகார் செய்தார்.  இந்நிலையில், தடய அறிவியல் துறையினரின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் காவல்துறையினர் ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தானும் தன் தாயும் சேர்ந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.

காவல்துறையினர் செய்த கூடுதல் விசாரணையில், ரஞ்சிதாவிற்கு வேறொருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால் கொலை செய்ததாகவும் தெரிகிறது.  தாயே தன் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.//...//

இது போல் வாரம் ஒரு செய்தியாவது படிக்க நேரிடுகிறது. அல்லது தொலைக்காட்சி  உண்மை நிகழ்ச்சிகளில் கேட்க நேரிடுகிறது.அப்படியிருக்க இந்த இந்திராணி விஷயம் மட்டும் அவ்வளவு பெரிது படுத்தப் பட்ட காரணம் என்ன?
கலாகார்த்திக் 

2015/10/07

புலியும் இளைஞர்களும் : :
01.10. அன்று பெங்களுருவிற்கு போகும்போது வழியில் (காலை 8 மணி ) பல சினிமா அரங்குகளை பார்க்க நேர்ந்தது.
புலி படம் ரிலீஸ் :
வருத்தமான விஷயம்.
அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த கூட்டம் முழுவதும் இளைஞர்களே.
எல்லோரும் 30 வயதிற்கு கீழ்தான்.
25 வயதுகாரர்களே அதிகம்.
எதற்கு????????????
யாரோ ஒருவன் வெற்றியை தன வெற்றியாக
தன் சாதனையாக காட்டி அணிந்து கொள்ளும் முகமூடி அது என தோன்றியது.
என்னால் எதுவும் சாதிக்க முடியவில்லை ,,இல்லை அதற்கு நான் முயற்சியே செய்ய மாட்டேன்.
இப்படி ஒரு போலி வெற்றியாக கொண்டாடி என் இயலாமையை நிலைப் படுத்துவேன் என்ற வரிகளை த்தான் அவர்கள் முகத்தில் நான் படித்தேன்.
பாவமாக இருந்தது.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2015/09/21

அதிர்ச்சியாக இருக்கிறது.
.....//.....துபாய் மன்னரின் மூத்த மகன் ஷேக் ரஷீது பின் முகமது (33) சனிக்கிழமை காலமானார்.
மாரடைப்பு காரணமாக, அவர் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரக செய்தி நிறுவனமான "வாம்' தெரிவித்தது.
இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஷேக் ரஷீது பின் முகமதை விடுத்து, இளைய மகன் ஷேக் ஹம்தானுக்கு தான் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது.
உயிரிழந்த ஷேக் ரஷீது பின் முகமது, விளையாட்டு வீரராகவும், குதிரைப் பந்தய வீரராகவும் திகழ்ந்தார்.
அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, துபாயில் 3 நாள்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.....//....//
இந்த செய்தியை படித்த போது  அதிர்ச்சியாக இருந்தது.
என்ன நடக்கிறது உலகில்?
கல்லையும் கரைக்கும் வயது என்பார்கள்.
33 வயதில் தலைவலி கூட வராது ..ஒரு காலத்தில்.
இப்போது தொலைகாட்சிகளில்  உடல்நலம் பற்றிய நேரலை நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் பலர் 35 வயதுக்குள் இருக்கின்றனர்.
BP ,முதுகு வலி, இப்படி எத்தனை நோய்களை சொல்கின்றனர்.?
இவர்கள் 50 வயதில் என்ன செய்வார்கள்? கவலையாக இருக்கிறது.
என்னதான் மருத்துவம் வளர்ந்தாலும் ???
 கவலையுடன் 
கார்த்திக் அம்மா

2015/09/20

தற்கொலைக்கு முன் கடிதம் :
இந்த இளம்பெண் DSP  யின் முடிவில் பல சந்தேகங்கள் உள்ளன.
******
நான் சொல்ல வருவதே வேறு.
****** மொழி ....language
இந்த கடிதம் தங்க்ளிஷில் எழுதப் பட்டிருக்கிறது.
en arumai inthiyave
naan nanraka padikkiren
eppothu sinimaavukku pokalam
இன்றைய இளைஞர்களில் 70 % இப்படித்தான் எழுதுகின்றனர்.
உண்மை என்னவென்றால்
...இவர்களுக்கு தமிழும் சரியாக எழுத வராது.
And they cannot write in English.
இரண்டு மொழியுமே அரைகுறை.
நாம் ஏதாவது திருத்தினாலும்   பார்த்து ஒரு முறைப்பு.
நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது?..என்ற ரீதியில் ஒரு அலட்சிய பார்வை.
இந்த நிலை மாறலாமே?
அன்புடன் கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2015/09/11

வடை+பஜ்ஜி
****
இந்தியா  120 கோடி மக்களுக்கு  சொந்தம் என்று நினைத்திருந்தேன்.
அப்புறம் இப்போதுதான் தெரிந்தது.
வங்காள கடலில் இருக்கும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்தியாவை விலைக்கு வாங்கிவிட்ட ஒரு சிலர் அங்கு இந்தியாவை தங்கள் பெயரில் பதிவு செய்து பட்டா மாற்றமும் செய்து விட்டார்களாம்.???????????????
எனக்கு வடை பஜ்ஜி என்றால் கொள்ளை இஷ்டம் .
ஆனால் இந்தியாவை வாங்கி விட்டவர்களுக்கு வடை பஜ்ஜியே பிடிக்காதாம். அதனால் அந்த கடைகளை மூடச் சொல்லி விட்டார்களாம்.
......
யார் வீட்டிலும் வடை +பஜ்ஜி சுடக் கூடாது என்று உத்தரவும் வந்து விட்டதாம்.
......
இந்தியா சுதந்திர, ஜனநாயக நாடு என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக் 

2015/08/21

பௌர்ணமி .

மீள் பதிவு:
இன்னும் மனம் 2005 லேயே இருக்கிறது.
தேறும் வழி தெரியவில்லை.
மகன் ஏக்கம் உயிரை கொல்கிறது  Still living in 2005.
Today is 21st aug.
I+KARTHIK+SENTHIL WERE IN KARUR.
******    *****88
.//  //இன்று  பௌர்ணமி .
2005 Aug  20 ம் தேதி அன்றும் பௌர்ணமி.அன்று நான், கார்த்தி, செந்தில் மூவரும் Bangalore லிருந்து கரூர் நகருக்கு புறப்பட்டோம். கார்த்தியின்  நண்பருக்கு திருமணம். திங்கள்  அன்று திருமணம்..சனிக்கிழமை கிளம்பினோம்.இரவு 7 மணி.செந்தில் காரை ஓட்டி  வர நான் முன் சீட்டில் ..கார்த்தி பின் சீட்டில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.சாப்பிட்டு முடித்து கை கழுவ  கார் கதவை திறக்க நான் ''ஜாக்கிரதை கண்ணம்மா '' என்கிறேன்.'' ''ஆமாமாம்.பார்த்து ,பறந்து விடப் போகிறாய் ''  என்று (கார்த்தி ஒல்லியாய் இருப்பதை கேலி செய்து ) செந்தில் சொல்ல  பேச்சும்  சிரிப்புமாக வந்து கொண்டிருந்தோம்.அப்போது செந்தில் ''அம்மா இங்கு பாருங்கள். '' என்று முழு ,பிரகாசமான நிலவை காட்டினான். நான் ''இது என்ன பெரிய நிலா,  இதை விட அற்புதமான நிலா   பின் சீட்டில் இருக்கிறது.  என் கார்த்தி மகன் முகம்தான் என் பிரிய நிலா. அழகு நிலா '' என்று சொல்ல பின் சீட்டில் இருந்த கார்த்தி இரண்டு சீட்டிற்கு  நடுவில் தன முகத்தை நீட்ட அவனை கொஞ்சி உச்சி முகர்ந்து என் இரு கைகளில் அவன் முகத்தை ஏந்த , செந்தில் '' போதும் ,போதும் அம்மாவும்  மகனும் கொஞ்சியது '' என்று செல்லமாக கோபிக்க .சேலம்  சென்று என் அம்மா வீட்டில் தங்கி ,எல்லோருடனும்  அவ்வளவு சந்தோஷமாக  இருந்து விட்டு கரூர் சென்றோம்.
அந்த 3 நாட்களும் எவ்வளவு சந்தோஷமான  நாட்கள்.
சினிமாவில் வருமே .ஒரு பெரிய குடும்பம் .சந்தோஷமான,  பாசமான  குடும்பம் பாட்டு  பாடி ஆடி முடிக்கும் போது  வில்லன்கள் வந்து அவர்களை நாசப் படுத்துவார்களே.
அதே போல்தான்  என் வாழ்விலும்  நடந்து விட்டது.
கடைசி, கடைசி என்று கார்த்தி தன் உறவினர்கள்,  நண்பர்கள் என அனைவருடனும் சந்தோஷமாக இருந்தான்.கரூரிலிருந்து  திரும்பும் போதும் சேலம் சென்று தன்  பாட்டி  தாத்தா  மாமன்கள்  என எல்லோரையும் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்து விட்டு bangalore  சென்றோம்.
என் வாழ்வின் கடைசி சந்தோஷமான நாட்கள்.
இன்றும் முழு நிலவை பார்க்க தைரியம் இல்லாமல் பைத்தியமாக இருக்கிறேன்.
கார்த்திக் +அம்மா
KALAKARTHIK

2015/08/16

disclaimer :
i may be right or wrong :
பொன் குஞ்சு :
அதிசயம்
என் வீட்டருகே இருக்கும் மரத்தில் ஒரு காகம் கூடு கட்டி முட்டை வைத்திருந்தது.
அதை கவனித்துக் கொண்டிருந்தேன்.
முட்டையை உடைத்து குஞ்சு வெளியே வந்து கொண்டிருந்தது.
ஆச்சரியத்தின்  எல்லைக்கே சென்று விட்டேன். 
அந்த குட்டி காகம் அப்படி ஒரு தங்க (golden ) நிறத்தில் வெளி வந்தது.
அதனால்தான் காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு என்று சொன்னார்களோ?????????
நேற்று இரவிலிருந்து மழை.
தாய் காகம் கூட்டில் அமர்ந்து சிறகால் குட்டியை காத்து வருகிறது.
தாய்க்கு ஏதாவது ஆகி விடுமோ என்று கவலையாக இருக்கிறது.
உணவு வைத்தாலும் சாப்பிடுமா என்று தெரியவில்லை.
ஒரு குடையை கூட்டின் மேல் வைக்கலாமா என்ற யோசனையும் வந்தது.எப்படி என்று தெரியவில்லை.
காகம் அசையாமல் உட்கார்ந்து இருக்கிறது.
கவலையாக இருக்கிறது.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2015/07/28

கார்த்தியின் ஆசிரியர்
என் 30 வருட காதலர்.
செந்திலின் ஆஸ்தான project guide = = அப்துல் கலாம் .
பின் வருவது :
அவருக்கு 16.08.2014 ல் அவருக்கு நான் அனுப்பிய மெய்ல் :

o apj
மதிப்பிற்குரிய ஐயா ,
என் பெயர் கலாகார்த்திக்.இந்த மடலை முழுவதும் படியுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் அன்னை இந்திரா காந்திக்கு அறிவியல் ஆலோசகராக இருந்த காலத்தில் இருந்தே நான் உங்கள் பைத்தியம்.அமெரிக்கா தங்களை அழைத்த போது போக மறுத்து இந்தியாவிற்கு பணி  செய்த உங்கள் உறுதியைக் கண்டு தங்கள் மேல் கொண்ட காதல் வெறியாகிப் போனது..எனக்கு 1980ம் ஆண்டு திருமணம் நடந்தது.
என் கணவரிடம் சொல்வேன்.
''உங்களுக்கு முன்பு நான் A P J வை பற்றி தெரிந்திருந்தால் அவரைத்தான் திருமணம் செய்து கொண்டிருப்பேன் '' என்று.
நான் +2 ஆங்கில ஆசிரியையாக பணியாற்றினேன்.அப்போது Railway reservation form நிரப்ப வேண்டிய பாடம் நடத்த வேண்டும்.
என் படிவம் இப்படித்தான் இருக்கும்.
1.A P J அப்துல்கலாம் .அறிவியலாளர் வயது 50
2.S .கார்த்திகேயன் .asst வயது 16
3.S .செந்தில்குமார் asst  வயது 14.
என் பிறந்த நாளன்று மாணவர்களிடமிருந்து எந்த பரிசையும் ஏற்கமாட்டேன் என்று மாணவர்களுக்கு தெரியும்.
ஆனால் நான் மறுக்க முடியாத பரிசு ஒன்று உண்டு என்பதும் அவர்களுக்கு  தெரியும்..அதுதான் தங்கள் புகைப் படம்.
''மிஸ் .உங்கள் lover உடைய புகைப்படம்'' என்று சொல்லி தருவார்கள்.
எனக்கு இரு மகன்கள். அவர்களும் என்னைப் போல் உங்கள் பைத்தியம்தான்.மூத்த மகன் ச .கார்த்திகேயன்.
அண்ணா பல்கலை கிண்டி கல்லூரியில் 1998 ம் ஆண்டு சேர்ந்தான். 1999ல் நடந்த அறிவியல் மாநாட்டிற்கு தாங்கள் வந்த போது தங்கள் பெயரை பதிவு செய்யும் போது அவன் விரல்கள் கணினியில் நடனமாடிய வேகத்தைக் கண்டு தாங்கள் அதிசயித்து பாராட்டியது அவனுக்கு கிடைத்த 100 கோடி ரூபாய் பரிசு.தன்னுடைய பைத்தியத்திற்கு நாம் இப்படி ஒரு பாராட்டை தருகிறோம் என்பது தங்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.
அவன் 2002ல் 4ம் வருடம் படிக்கும் போது தாங்கள் அவனுக்கு பாடம் நடத்தினீர்கள்.என்ன ஒரு சந்தோசம்.
''ஏனப்பா லேட் '' என்று கேட்டால்
'அவர்தான்மா வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்'' என்பான்.
எங்களுக்கு அவர் என்றால் அது நீங்கள் மட்டுமே.அவனிடம் சொல்வேன் ''அவரிடம் ஒரு ப்யூன் வேலையாவது வாங்கி அவரிடம்தான் வேலை செய்ய வேண்டும்' என்று.ஆனால் அதிர்ஷ்டம் இல்லையே.தாங்கள் ஜனாதிபதியாகி விட்டீர்கள்.எல்லோரும் சந்தோஷப் பட்ட போது நாங்கள் மூவரும் (நான்,கார்த்தி,என் இளைய மகன் செந்தில்குமார்) மட்டும் வேதனையில் நின்றோம். ஒரு Godfather ஐ இழந்த வலி.
என் இளைய மகன் செந்தில் Aeronautics படிப்பு எடுத்ததும் உங்களால்தான்.தன project guide  நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று வெறியாக இருந்தான்.நீங்கள் டெல்லி சென்று விட்டீர்கள்.
'' '' ''இனி வருவதுதான் சோகத்திலும் சோகம்.என் அன்பு மகன் கார்த்தி 2005ம் ஆண்டு ஒரு விபத்தில் இந்த உலகை விட்டு  மறைந்து விட்டான்.'' '' ''
உங்களுக்கு இப்படி ஒரு ரசிகன் இருந்தது தங்களுக்கு தெரிய வேண்டுன் என்றுதான் இந்த மடலை நான் எழுதுகிறேன். வேறு எந்த சுயநலமும் இல்லை.2002ல் இதை எழுதியிருந்தால் எல்லோரும் போட்ட கோஷத்தில் சேர்ந்த 50 கோடி பேரில் நாங்களும் ஒருவராயிருந்திருப்போம்.
இல்லை.நாங்கள் உங்கள் பக்தர்கள்.
இல்லாமல் போய்விட்ட என் கார்த்தி மகனின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும். நீங்கள் அவனைப் பற்றி படித்து அவனை புரிந்து கொண்டீர்கள் என்றால்.
9 வருடங்கள் ஆகி விட்டன.அவன் என்னை விட்டு மறைந்து. இன்றும் அவன் பிரிவை தாங்க இயலாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு பேதை தாய்.
கலாகார்த்திக் 
இதற்கு அவரிடம் இருந்து பதிலும் வந்தது.
அவரைப் பற்றி பிறகு இன்னும் எழுதுகிறேன்.
இன்றைய சோகத்திற்கு என்ன விடை?
பி.கு.
இன்று ஒரு 12 வயது சிறுவன் என் வீட்டிற்கு வந்தான். அவனிடம் செந்தில் கேட்டான்.
"இன்று பள்ளி இல்லையா ?''
அந்த சிறுவன் சொன்னான் 
' ' யாரோ ஒருscientist  இறந்து விட்டாராம் ''
செந்திலின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
கார்த்திக் அம்மா 
கலாகார்த்திக்  

2015/07/20

tasmac டாஸ்மாக்  மூடலாமா?
எல்லோரும் டாஸ்மாக்கை மூடுங்கள் என்று குரல் கொடுக்கின்றனர். முதல்வரும் அது பற்றி யோசிப்பதாக செய்திகள் வந்தன . ஆனால் அதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக தெரிவதால் அந்த யோசனை கைவிடப் பட்டது என்றும் செய்திகள் வெளியாகின.
நானுமே டாஸ்மாக்கை மூடவதை வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
ஆ ,ஆ
என்று அலற வேண்டாம் .கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
சரியோ , தவறோ
80% மக்கள் குடிக்கு அடிமையாகி விட்டனர்.
காலை 6 மணிக்கே டாஸ்மாக் கடை வாசலில் தவம் இருக்கும் பலரை நான் பார்த்துள்ளேன்.
திடிரென நின்று விட்டால் பாதி பேர் பைத்தியமாகி விடுவர். அல்லது கஞ்சா ,இன்னும் என்னவோ   அதற்கெல்லாம் அடிமையாகி விடுவர். நாடே குழப்பமாகி விடும்.
.......      ........     ......
என்னுடைய யோசனை 
(யார் கேட்க போகிறார்கள்? ஆனாலும் ஊதும் சங்கை ஊதி வைப்போம்.)
ஒரு ''குடிமகனுக்கு ஒரு நாளுக்கு 50 எம் .எல் (m .l )மட்டும்தான்  தர முடியும்.அதுவும் ரேஷன் கார்டு போல் ஏதாவது ஒன்றை கொடுத்து அதில் பதிந்து ஒரு வரையறைக்கு கொண்டு வரலாம் .அப்புறம் சிறிது சிறிதாக கடைகளை மூடலாம்.
தெரிஞ்சத சொன்னனுங்க .தப்புங்களா ?
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2015/07/17

காணி நிலம் +ஒரு சென்ட் நிலம்
எல்லோருக்கும் முதல்வர் கனவு வருவதை பார்த்தால் எனக்கும் அப்படி கனவு காணும் எண்ணம் வந்தது.
திடீரென யாராவது என்னை அழைத்து'' என் வாரிசாக உன்னை நியமிக்கிறேன் . நீதான் அடுத்த முதல்வர் ''
ஆ ஹா ,ஆஹா
இது போல் எத்தனை பேருக்கு முதல்வர் கனவு. அதில் ஒருவர் சொல்கிறார்.
''தமிழ் நாட்டில் 50% மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை.என்பது வருத்தமான விஷயம்.''
இவரிடம் ஒரு 100 acre நிலமாவது இருக்கும்.அதை ஒருவருக்கு ஒரு சென்ட் என்று பிரித்து கொடுத்தால் 100*100 =10000 பேர் ஒரு சென்ட் உரிமையாளர்கள் ஆகி விடுவார்களே.
செய்யலாமே.
ஒரு முழப் பூ 20 ரூபாய் என விற்கிறது . அதனால் ஒரு 4 முழப் பூ வாங்கி காதில் சுற்றிக் கொள்ளவும் வழியில்லை.
யாராவது பூ வாங்கி தாருங்களேன்.
கார்த்திக் அம்மா
கலா கார்த்திக்

2015/07/14

கார்த்தியின் கனவு:
கார்த்திக்கிற்கு ஒரு கனவு இருந்தது.அதைப் பற்றி அவன் பேச வருவான்.அப்போது நான் சொல்வேன்  "கல்யாணம் செய்த பின் உன் மனைவி சரியென்றால் ஆரம்பி"  என்று.
அதுதான் .....''பாகுபலி  ''
இது போன்ற ஒரு பிரமாண்டத்தை கார்த்தியும் கனவு கண்டான்.ஆனால் கார்த்தியின் நாயகன் 'ராஜ ராஜ சோழன் ''

வேலையை விட்டு விட்டு  தயாரிப்பில் இறங்கத் துடித்துக் கொண்டிருந்தான்
நான்தான் 144 போட்டிருந்தேன்.
ஸ்கிரிப்ட் கூட 15 பக்கங்கள் எழுதியிருந்தான்.
உன்னைப் போன்ற இளைஞர்களை நம்பி யார் முதலீடு செய்வார்கள்
என்பது என் கேள்வியாக இருந்தது.
அண்ணன் வழியில் செல்ல தம்பி செந்தில் தயாராகிக்கொண்டிருக்கிறான்.
பார்க்கலாம்.
ஆனால் கார்த்தியின் கனவு ஒரு வகையில் நனவாகி இருக்கிறது.
பாகுபலி படம் பார்க்கவில்லை.(எந்த படமும் அதிகம் பார்த்ததில்லை.)ஆனால் எல்லோரும் புகழும் விதத்தையும் ,விளம்பரத்தையும் பார்க்கும்போதே தெரிகிறது.ஹாலிவுட் படங்களுக்கு நிகரான படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கார்த்தியின் எண்ணம் நிஜமாகியுள்ளது.
வாழ்த்துகள் ராஜமௌலி .
அன்புடன்,
கார்த்திக் அம்மா

2015/07/09

மலர்ந்தும் மலராத :
சில மொட்டுக்கள் மலரும் முன்பே மரணத்தை தழுவும் மாயமென்ன ?
என் கார்த்தி என்ற அழகிய இளம் தாமரை மொட்டு மலர்ந்து அருமையானமணம்  வீசி வாழும் என்ற என் எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டது யார்?
கலாகார்த்திக்
என் அருமை மகன் 
கலாகார்த்திக்

2015/07/06

எனக்கொரு கேள்வி :
இது நடந்தது 1990களில் .
என் ஊரில் ஒரு பெண் .அந்த பெண்ணை அதன் மாமாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.அந்த பெண்ணின் பெரியப்பா மகன் அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தான். இந்த பெண்ணுக்கு அண்ணன் முறை.
ஆனால் இருவருக்கும் காதல் ???!!!! வந்து விட்டது. கடித பரிமாற்றம் +++ நடந்தது.விஷயம் தெரிய வர பெண்ணின் அப்பாவும் , கணவரும் அந்த பையனை பைக்கில் துரத்த , அவன் ஓட , போலீஸ் நிலையம் எதிரில் அவனை மடக்கி ,மருமகன் அவன் தலையை பைக் சீட்டில் வைத்து அழுத்திக் கொள்ள ,பெண்ணின் அப்பா அவனை அரிவாளால் வெட்ட அவன் அந்த இடத்திலேயே உயிரை விட்டு விட்டான்.
அப்புறம் வழக்கு நடந்தது.கொலையாளிகள் இருவரும் வெளியே வந்து விட்டனர்,(சில காலம் தண்டனைக்கு பிறகு )
அந்த பெண் நிம்மதியாகத்தான் இருந்தாள்
..... .....
காலம் போனாலும் கோலம் போகவில்லை.
தருமபுரி திவ்யா
திருசெங்கோடு .சுவாதி
ஆம்பூர் பவித்ரா
இன்னும் லிஸ்ட் நீட்டிக் கொண்டே போகலாம்.
இந்த பெண்களால் எவ்வளவு கலவரம்??????
காதலிப்பது தப்பா என்று உரிமைக் குரல் கொடுக்காதீர்கள்.
உங்கள் காதலால் மற்றவர்கள் உயிர்  போகிறதே.
ஆம்பூர் பவித்ரா திருமணம் ஆனவள்.
ஒரு கைக்குழந்தை.
அப்படியிருக்க எதற்கு இன்னொரு ஆணுடன் காதல்?
அந்த பெண்ணால் ஆம்பூரே பற்றி எரிந்தது.
உயிரை விட்ட அஹமது ?
கைக்குழந்தையுடன் நிற்கும் கேணக் கணவன் பழனி ?
இந்த பெண் இப்போது பெற்றோருடன் போய்விட்டாள்
நீதிபதிகள் விவாகரத்து கடையில் கிடைக்கும் பொருளா என்று நறுக்கென்று 4 கேள்விகள் கேட்டனர். பரவாயில்லை.
ஆனால் இந்த பெண்களுக்கும் தண்டனை தரலாமே.
இந்த பெண்களை வெட்டலாமே.இவர்கள் சரி சொல்லப் போய்தானே இளவரசனோ, கோகுல்ராஜோ, அஹமதுவோ இறக்கின்றனர். இவர்கள் இறப்பிற்கு காரணமான இவர்களை சம்பந்தப் பட்டவர்கள் கொல்லலாமே .
இவர்கள் மகள்கள் என்றால் ஒரு நியாயமா ?
அல்லது நீதிமன்றம் கொலைக்கு காரணமாக, அல்லது தற்கொலைக்கு தூண்டியதாக இவர்களை தண்டிக்கலாமே.
என்ன நியாயமடா  இது?????????
கார்த்திக் அம்மா
கலா கார்த்திக்

2015/07/05

மின் கட்டணம் ...ஆம் ஆத்மி ?
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின்  வீட்டு மின் கட்டணம் மாதம் 50000 ரூபாய் மட்டும்தானாம்.
இவர்தான் ஆம் ஆத்மி.
ஆம் ஆத்மி என்றால் சாதாரண மனிதன் என்றுதானே பொருள்.
இவர் சாதாரண மனிதரா?
அல்லது இந்திய சாதாரண மனிதர்கள் வீட்டு மின் கட்டணம் மாதம் 50000 ரூபாய் கட்டும் வருமானம் உள்ளவர்களா?
unanswerable questions ..
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2015/06/18

கிரிதர் +ஹெல்மெட் +iron rod = விதி
..
//அந்த கம்பி 6 அடி நீளம், 40 கிலோ எடை கொண்டதாகும். இந்த கோர விபத்தில், ஹெல்மெட்டையும் உடைத்து தலைக்குள் கம்பி புகுந்தது. எனவே ரத்த வெள்ளத்தின் நடுவே கிரிதர் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த கிரிதர் சாப்ட்வேர் இன்ஜினியர் என்று தெரியவந்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியம் பொதுமக்களில் ஒருவரின் உயிரை குடித்துள்ளதாக பரங்கிமலை மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். VIDEO : CHENNAI METRO UNDERGOES TRIAL RUN //.....
I was hurt to the utmost when people blamed me and Karthik for not wearing helmet on the fatal day. The same people who had been praising him till then complained
"what an irresponsible fellow?How can he go without helmet?''
.....
the irony was that his helmet was in his friends '  J.P nagar house.
Karthik felt reluctant to ask for it,  as u know he used to be very magnanimous and so he did not bring the helmet.எந்த சாமான்களையும் எடுக்க கார்த்தி சங்கடப் பட்டதால் செந்திலும் நானும்தான் அந்த வீட்டிலிருந்து பொருட்களை கார்த்தியின் சொந்த வீட்டிற்கு கொண்டு வந்தோம். So he had to go without helmet.
 his friend Senthilmanokar was with the helmet when his accident happened and the helmet pieces stuck in his skull and that became fatal.
.......
நானே  கார்த்தியை இழந்து துடித்துக் கொண்டிருந்த போது இந்த உலகம் தன வார்த்தைகளாலும் செயல்களாலும் என்னை குத்தி 1000000 துண்டுகளாக கிழித்து தோரணம் போட்டது.
அப்பப்பா ,
நான் பட்ட வேதனை?????????????
 in the above news who is to be blamed?
இந்த கிரிதர் ஹெல்மெட் அணிந்திருந்தார்.தலைக்கு மேலிருந்து இரும்பு கம்பி விழுந்தால் '' '' விதி'' '' என்றுதானே சொல்ல முடியும்.
எத்தனை ஆசைகள் ?
மனைவி நிறை மாத கர்ப்பிணி .
விதியை வெல்ல யாரால் முடியும்???????????
ஆனால் இந்த இழப்பையும், சோகத்தையும் தாங்க யாரால் முடியும்??
மாறாத சோகத்துடன் 
கார்த்திக் அம்மா 

2015/06/04

வேட்டி  விளம்பரம் :
ஒரு நடிகர் ( ராஜ்கிரண் ? ) வேட்டி  விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் "இந்த விளம்பரத்திற்கு நான் வாங்கும் தொகை வேட்டி  கட்டும் நடுத்தர மக்களின் தலையில்தான் கட்டப் படும் .அதனால் அவர்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டி வரும் ''
...... நல்ல மனிதர் என்றுதான் தோன்றியது ......
   ஆனால் இவர் நடிக்கவில்லைஎன்றால் வேறு யாரோ ஒருவர் பணம் வாங்கிக் கொண்டுதானே நடித்திருப்பார்?
அதற்கு பதில் இவர் இலவசமாகவே நடித்துக் கொடுத்திருக்கலாமே .
இரண்டாவதாக,
எனக்கு தெரிந்த வரையில் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் தான் வேட்டி கட்டுகிறார்கள்.
மற்றவர்களுக்கு ஜீன்ஸ் தான் கட்டுப்படியாகும் என்று நினைக்கிறேன்.
என் கருத்து சரியோ தவறோ தெரியவில்லை.........
...... .............  ........

.......  ...... எல்லா தொலைக் காட்சிகளும் 4 பேரை வைத்து கருத்தரங்கம் நடத்துகின்றன.
ஆனால் வர வர தொகுப்பாளர்கள் மட்டுமே பேசி (கத்தி ) கொண்டிருக்கிறார்கள்.வந்தவர்கள் ''எங்களை பேச விடுங்கள் '' என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த போக்கை ஆரம்பித்த ஆர்னாப்புக்கு வந்தனம்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்
JUNE 3 2005
இது ஒரு மீள்பதிவு .காலம் ஓடுகிறது. மனம் மட்டும் 2005 லியே இருக்கிறது.
1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)
 போன வேகத்தில் திரும்ப வந்து விட்டேன்.ஆசையுடன் அழைத்துச் சென்ற மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறி  கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து நடைப் பிணமாக இருந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி ஒரு வேதனை தேவையா? மனம் கதறிக் கொண்டே இருக்கிறது.
அம்மா 

2015/05/31

எதைப் பற்றி எழுதலாம்?
ஒரு வருட
சாதனை
சோதனை
வேதனை
போதனை ????????????
ஜெ
மீண்டும் முதல்வரானது பற்றி ???????????
I I T யில் நடக்கும் அமர்க்களம் பற்றி????????????
சலிப்பாக இருக்கிறது.
அதனால் .....
என் கண்ணின் மகன்,என் உயிர் மகன் படங்களை போட்டேன்,
அன்புடன்,
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2015/05/11

இன்று வழங்கப் பட்ட தீர்ப்பு சரியா ??????  தவறா?????
சரியோ தவறோ ஒரு வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. எந்த கடவுளை அவர் முழுமையாக நம்பினாரோ அந்த கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தீச்சட்டி ஏந்துவதும், அபிஷேகம் செய்வதும் பூஜை செய்வது மட்டுமே பரிகாரம் அல்ல.
இந்த தவறுக்கு ஒரு பரிகாரம் உள்ளது.  உரிமையில்லாத சொத்தை திரும்ப தந்து விடுவது.
மிக மிக நல்ல மக்கள் முதல்வராக மக்களுக்கு நல்லது செய்வது.
தயவு செய்து ஏழைகளை மட்டுமே வாழ வைக்கிறோம் என்று சொல்லி இலவசங்கள் வழங்கும் திட்டத்தை கை விட்டு
திறமையான இளைஞர்களை ஒன்றிணைத்து அரசு உதவியுடன் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கி ,தமிழகத்தை தலை நிமிர செய்யுங்கள். உங்களால் முடியும்..
நம்பிக்கையுடன்,
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2015/05/10

ஒரு நடிகர்.
அவருக்கு 2000 கோடி சொத்து என்று சொல்கிறார்கள். 13 வருடங்களுக்கு முன் கார் ஏற்றி ஒருவர் இறக்கிறார்.இருவருக்கு கை , கால் முறிந்து போகிறது.இன்றும் ஊனமாக நிற்கிறார்கள்.இப்போது தீர்ப்பு வருகிறது. அவர்களுக்கு நஷ்ட ஈடு 10 லட்சம்.
தீர்ப்பு வந்த 3  மூன்றே மணி நேரத்தில் 30000 ( வெறும் 30000 மட்டுமே ) பெற்றுக் கொண்டு பிணை அளிக்கப் படுகிறது. கோலாகலமாக வீடு திரும்புகிறார்.இதற் குள் அவரின் நண்பர்கள் ,ரசிகர்கள் என்று ஒரு மாபெரும் கூட்டமே பரபரத்து நிற்கிறது. சிலர் தீக் குளிக்க  முற்படுகின்றனர்..
அவர் ''turned   a   new  leaf  '' என்று மீடியாக்கள் கச்சை கட்டுகின்றனர்.
அவரின் நண்பர் இந்த ''street dogs '' சாலையில் படுத்து தூங்கினால் நாங்கள் கார் ஒட்டாமல் இருக்க முடியுமா? என்று கேட்கிறார்.
இது எல்லாம் நியாயமாக ஆகி விட்டது.
ஆனால்
 முதல்வர் ஜெயலலிதா .
கொஞ்சம் மனசாட்சியுடன் நினைத்து பாருங்கள்.
அவர் ''turned   a   new  leaf  '' இல்லையா? அவர் மக்களுக்கு ஒரு ஆடு மாடாவது கொடுக்கவில்லையா? அவருடைய பணமே இல்லாமல் இருக்கட்டுமே. யாரெல்லாம் ,எந்த பிரதமர் , எந்த முதல் மந்திரி தன கைகாசை கொடுத்தார்கள்?
அவருக்கு மட்டும் 100 கோடி  பிணைத்தொகை. அவரை பிணை தராமல் சிறையில் அடைத்தனர். அவருக்காக அவர் தொண்டர்கள் பரபரத்தபோது எவ்வளவு எள்ளி நகையாடினர்?
இதே நடிகர் சிறைக்கு சென்றிருந்தால் மும்பையே தீகிரையாகியிருக்கும்.எப்போதும் தமிழ் நாடென்றால் ஒரு கணக்குதான்.
லேடியா  **தியா என்று வேளச்சேரியில் பேசியதுதான் தவறாகி விட்டது.வீட்டு சிறையில் அடைத்து விட்டனர்.
ஒரு குற்றவாளிக்கு இவ்வளவு வக்காலத்தா என்று கோபப் பட வேண்டாம்.
இவரை விட பெரிய மலை முழுங்கி மகாதேவங்கள் வெளியில் சுதந்திரமாக, தைரியமாக நடமாடுகின்றனர்.
நீதி எல்லோருக்கும் ஒன்றாக இருக்கட்டும்.
தெருவோர  ''நாய்கள்'' ஆனாலும் சரி..
100 லட்சம் கோடிக்கு உரியவராக இருந்தாலும் சரி.
மாநில, மத்திய மந்திரியாக இருந்தாலும் சரி.
நீதி எல்லோருக்கும் ஒன்றாக இருக்கட்டும்.
அன்புடன்,
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2015/04/22

*பூணூல் :
**மேகதாது அணை :
***கார்த்திக்+நண்பன்+கணிதம் :
அதுதானே பார்த்தேன். இன்னும் கார்த்திக் புராணம் ஆரம்பிக்கவில்லையே .கார்த்தி பற்றி இல்லாமல் பதிவு இருக்காதே என்று என் வாசகர்கள் ??????? (ஒருவர் சொல்லிக் கொள்கிறாரே ..என் பதிவை ஒரு நாளுக்கு 15000   படிக்கின்றனர் என்று ) அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. ஐயோ  பாவம் என என் மேல்  பரிதாபப் பட்டு ஒரு 10 பேர் படிக்கலாம்.

கார்த்தி:எப்போதும் கணக்கில் 100% மதிப்பெண்கள்தான் . அவன் வகுப்பு தோழன் தான்தான் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற வெறியுடன் இருந்தான்.காலாண்டு, 1/2 ஆண்டு தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் வீட்டில் மாணவர்கள் இருப்பர். கார்த்தி தன மதிப்பெண்ணை அறிந்து கொண்டு, ஏதாவது தவறு செய்திருக்கிறோமா என பார்த்து  விட்டு வந்து விடுவான்.அவன் வந்த   பிறகு அவன் நண்பன் கார்த்தியின் விடைத்தாளை ஆசிரியரிடம் விவாதித்து கார்த்தி கமா போடவில்லை.முற்றுப்புள்ளி வைக்கவில்லை இதற்கு 1/2 மதிப்பெண் ,அதற்கு 1/2 மதிப்பெண் குறையுங்கள் என்று வாதிட்டுக் கொண்டிருப்பான். ராமனின் தம்பி இலக்குவனைப் போல் கார்த்தியின் தம்பி செந்தில் அங்கிருந்து இதை பார்த்து கத்தி சண்டை போட்டு விட்டு வருவான்.
நான் என்ன சொல்கிறேன் என்றால், கார்த்தியை பார்த்து அவனை போல் படித்து நீயும் 100 மதிப்பெண்கள் பெற முயற்சி செய். அவன் மதிப்பெண்களை குறைத்து உன் மதிப்பெண்ணை முதல் மதிப்பெண் ஆக்காதே,
.
பூணூல்:
இதையேதான் பிராமணர் அல்லாத அனைத்து மக்களுக்கும் சொல்கிறேன்.அவர்களுக்கு பூணூல் அணிவது வழக்கம் என்றால் அணியட்டும். நாமும் அணிந்து கொள்ளலாம். எந்த சட்டம் தடுக்கிறது? என் தாத்தா பூணூல் அணித்து இருப்பார்.பூணூல் அனைவருக்கும் உரியது. நூலின் எண்ணிக்கைதான் மாற்றம்.இதை மறைத்து பொய் கதைகள் சொல்லி நம்மை அடிமைப் படுத்தியவர்களை அறிவால்தான் வெல்ல வேண்டும். அராஜகத்தால் அல்ல.அனைவரும் பூணூல் அணிவோம்.

மேகதாது ஆணை:

இப்போது ஈரோட்டில் பெய்த மழையில் அணை நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்து 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த சிறு மழையின் நீரையே சேமிக்க எந்த வழியும் செய்யவில்லை நாம். அவர்கள் ஒரு அணை கட்டினால் நாம் 2 அணை கட்டலாமே..எப்போதும் போராட்டம். உரிமை கேட்கிறோம் என்ற பெயரில் யாசகம்....
சிந்தித்தால் மட்டும் போதாது. ஒன்று கூடுவோம். போராட்டம் விடுத்து செயல்படுவோம்.
நேற்று காமராஜ் என்னும் பொறியாளர் ஒரு திட்டம் கொடுத்துள்ளார். மிக சிறந்த திட்டமாக தெரிகிறது. அதை முழு முனைப்போடு செயல் படுத்தலாமே.
பி.கு.
பெங்களூருவில் கார்த்தி வீடு அடுக்ககத்தில் தண்ணீர் பற்றாக் குறை. போர் போட்ட போது 700 அடியில்தான் நீர் கிடைத்தது. சென்ற வருடம் லாரியில் நீர் வாங்கினோம்.இப்போது பிரச்சினை இல்லை அங்கேயே நீர் பஞ்சம் 700 அடி என்ற கதைதான்.
அன்புடன் கலாகார்த்திக்
 கார்த்திக் அம்மா

2015/04/09

பதிவிடுவது   கார்த்திக் அம்மா
*****20 பேர்  பலி :***
முதலில் .சொல்லி விடுகிறேன்
உயிர் என்பது விலை மதிப்பற்ற விஷயம் :
இரண்டு இன்னுயிர்களை ( என்  கணவர் ++என் அன்பு அன்பு மகன் கார்த்திகேயன் ) இருவரையும் இழந்து வேதனையிலும்  கண்ணீரிலும் காலத்தை கடத்தும் எனக்கு உயிரின் அருமை தெரியும் .என்ன விலை கொடுத்தால் திரும்ப வருவார்கள் ?
அதனால் 20 பேரை சுட்டுக் கொன்றது    மகா   தவறு .ஒத்துக் கொள்கிறேன் .
ஆனால்
ஆனால்
நம் பக்க தவறையும்  ஒரே ஒரு  நிமிடம்  சிந்திப்போம் :
எத்தனை வட மாநிலத்தவர் சென்னையில் வேலை செய்கின்றனர் . அவர்கள் எந்த  கடின கடின  வேலையையும் செய்கின்றனர்..
திருவண்ணாமலை  மாவட்டத்தில் வேலை   வாய்ப்பு  இல்லை .அதனால் மரம் வெட்ட  சென்றோம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் .அதிக பணம். அதுதான்  காரணம் .
பணம்
ஒரு எழுத்து மாறினால்
பணம் ......பிணம்
இரண்டாவதாக  மாறிய பின் எவ்வளவு பணமும்  என் செய்யும் ?
எல்லோருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் .
ஒரு மோர் சாதம் போதும்.
பிரியாணி தேவையில்லை .
வாழ வேண்டும்.
அதற்கான பணம் போதும் .மீண்டும் தவறு செய்யாதீர்கள் .
அன்புடன்
கார்த்திக் அம்மா

2015/03/29

ISRO : CLOSE IT :says an idiot.
Today morning i was watching a t.v channel where two persons were discussing. One of them said
'' what is the use of ISRO? Why should we spend so much money on these projects?Do these projects help the poor in anyway?
Instead we can spend this money to help the poor.
WE SHOULD CLOSE ISRO"
I LITERALLY SWOONED.
முழு மயக்கமே வந்து விட்டது .
ISRO வால்  என்ன பயன்? இந்த ஏவுகணைகள்,சேடலைட்டுகள் என்ன செய்கின்றன?இந்தியா விவசாய நாடு.
விவசாயத்தை மட்டும் பார்த்தால் போதும்.அறிவியலால் பயனில்லை ;;"" ""
இவர்கள் போல் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் நாட்டில்?
எப்படி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படி பேசுகிறார்கள்?
அதிர்ச்சியாகி விட்டேன்.
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2015/03/24

நானும் ஒரு ஆங்கில ஆசிரியையாக இருந்தேன் என்பது நினை விற்கு வந்ததால் வந்த விபரீதம்.
மாணவர்களுக்கு அடிக்கடி புதிர் கொடுப்பதுண்டு.அதில் ஒன்று இங்கு. .
1..He beat the boy.
2.They beat the boy.

Can anyone guess what i come to say?
what is the tense in both the sentences?

the first sentence : past tense.
the second sentence: present tense.
ஹா என்று அலறுகிரீர்களா ?
beat  என்ற வார்த்தையின் past tense ம் பீட் தான்.
since the first sentence subject 'he' is a third person singular it should take 's' with the verb in the present tense.
so it is
''he beats the boy ''....present tense.
''he beat the boy'' ..past tense.
ஹ ஹா ,இனிமே blog பக்கம் வருவீங்களா? வருவீங்களா?
கலா கார்த்திக் ...கார்த்திக் அம்மா

2015/03/20

தாங்க முடியலட சாமி:
சமையல் show ம் கீச்சு கீச்சுகளும் :அய்யோ ஐயோ :ஏம்ப்பா  எங்கேருந்து புடிக்கிறிங்க இந்த அம்மணிகளை?
சமைக்கிறவர்களை  சமைக்க விடாமல் ஓகே ...ஹா ...ஹையா என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் நடு நடுவில் கீச்சு குரல் கொடுக்கிறதுதான்   இமசையோ இம்சை..
அதுவல்லாமல் எங்கோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த மாதிரி இதுதான் டோமேடோவா (உச்சரிப்பு வேறு தனி கொடுமை) பொடடோவா என்று ...தனி இம்சை .இதுவே வெந்தயத்திற்கு,சோம்புவிற்கு எல்லாம் ஆங்கிலம் வராது.(தெரியாதே ).கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் அம்மணிகளே
கலாகார்த்திக்

2015/03/18

அதிகாரிகளும்  தற்கொலைகளும்:
   தமிழ்நாட்டில் ஒருவர்
கர்நாடகாவில் ஒருவர்
என அதிகாரிகள் தற்கொலை பற்றி படிக்கும் போது வியப்பாக இருக்கிறது.
இவர்கள் எல்லாம் இந்த சிறு விஷயத்திற்கு தற்கொலை என்றால் நான் எத்தனை முறை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்.
வாழ்க்கையில் பட்ட துன்பத்திற்காக மட்டும் அல்ல
 பணியிலும் நான் பட்ட கஷ்டங்கள் அளவிட முடியாதது.
நானும்  100% நேர்மையானவள்..
உண்மை,
வாய்மை,
சத்தியம்
என்றெல்லாம் பிதற்றி திரிபவள்..
அதனால் நான் பட்ட ,அனுபவித்த துயரங்கள், போராட்டங்கள் எத்தனை?
ஆசிரிய பணியில் என்ன போராட்டம் என்கிறீர்களா?
அரசு பள்ளியில் பணி  புரிந்த போது நான் உண்மை மட்டுமே பேசியதால் வந்த எதிர்ப்புகள் எத்தனை.
9 மார்க் என்பதை 19 என்றும் 90 என்றும் மாற்றுவார்கள்.தனி வகுப்பு(,ட்யூஷன் ) எடுக்க மாட்டேன்.அதில் பிரச்சினை.ஆனால் இப்படிப்பட்ட எனக்குதான் வாழ்க்கையிலும் சோதனைகள் வந்தன. எண்ணில்  அடங்கா ஊழல்கள் செய்த அந்த தலைமை ஆசிரியர் நன்றாகவே இருந்தார் 73 வயது வரை வாழ்ந்தார்...அமைதியான இறப்பு.....கடவுள் இருக்கிறார்.கெட்டவர்களை  தண்டிப்பார் என்ற 
கணெக்கெல்லாம்  பொய்யானது....
 நான் என் கணவரை இழந்த போதும்
உயிருக்கு உயிரான கார்த்தி மகனை இழந்த போதும் கைகொட்டி சிரித்தார். உங்கள் நேர்மை எல்லாம் உங்களுக்கு என்ன செய்தது என்று கேலி பேசினார்..வெளியில் தைரியசாலி போல் காட்டிக் கொண்டு தனிமையில் கதறினேன்.ஏன் எனக்கு சோதனை என்றால் முற்பிறவி என்றார்கள்.
சொல்லிக் கொண்டே போகலாம். நானும் என் கணவரை இழந்த போதும்  சரி,கார்த்தியை இழந்த போதும் தற்கொலை எண்ணத்தில்தான் இருந்தேன்.ஆனால் செய்யவில்லை.
அப்படியிருக்க இந்த அதிகாரிகள் செய்தது என்ன நியாயமோ?
கார்த்திக் அம்மா.
கலாகார்த்திக்

2015/03/10

செய்தியும் comment ம்
//  //  ......டெல்லி: முன்னாள் காதலனை ஹோலி கொண்டாட கூப்பிட்டு காதலியும், அவரின் புது காதலனும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டெல்லியில் நடைபெற்ற இந்த படுபாதக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது. ஜகன்ஜிர்புரி பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். கூலி வேலை செய்யும் இந்த சிறுமியும், அதே பகுதியில் வசிக்கும் கமல் என்ற 16 வயதான சிறுவனும் காதலித்து வந்தனராம். புது காதலனுடன் சேர்ந்து, மாஜி காதலனை கொன்ற 15 வயது சிறுமி! ஹோலி கொண்டாட்டத்தில் வெறிச்செயல் கமலுடன் சில ஆண்டுகளுக்கு முன்புவரை நட்பாக இருந்த சிறுமி தற்போது வேறு ஒரு 17வயது சிறுவனுடன் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளார். இதை கமல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கமலை தீர்த்துக் கட்டிவிட்டு ஜாலியாக ஊர் சுற்ற, சிறுமி திட்டமிட்டுள்ளார். எனவே, புராரி பகுதிக்கு வருமாறும், அங்கு வண்ண பொடிகளை தூவி, ஹோலி கொண்டாடலாம் என்றும், கமலை, சிறுமி அழைத்துள்ளார். இதை நம்பிய கமல் சம்பவத்தன்று அங்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமியும், அவரின் புது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 4பேர் சேர்ந்து, கமலை கத்தியால் குத்தி கொன்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், குற்றவாளிகள் ஆறுபேரையும் கைது செய்துள்ளனர். ..........// // //
வாழ்க  பெண்ணுரிமை
வாழ்க பெண் சுதந்திரம் 
இதே 15 வயது சிறுமியை கற்பழித்திருந்தால் என்ன ஆர்ப்பாட்டம் நடந்திருக்கும்.
இப்போது எங்கே போயின மகளிர் சங்கங்கள்
கலாகார்த்திக்

2015/02/16

பதிவிடுவது:
கார்த்திக் அம்மா
.......      ......
மரண அடி
புதுடெல்லி: டெல்லியில் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம் காதலர்கள் இந்து அமைப்புகளை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காதலர்களை கண்டால் திருமணம் செய்துவைப்போம் என "ஹிந்து மஹாசபா" அறிவிப்பு செய்திருந்ததை ஒட்டி காதலர் தினமான நேற்று ஏராளமான இளம் காதலர்கள் ஹிந்து மஹாசபா அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளனர்.
திகைத்துப்போன இந்துமகாசபா நிர்வாகிகள் காவல்துறையினரிட்ன் உதவியை நாடியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
*******
 
கோவை : கோவையில் காதலர் தினத்தன்று தலித் ஆண்களுக்கு பிராமணப் பெண்களை, பெண் கேட்டும் போராட்டம் பாஜக அலுவலகம் முன் நடைபெற்றது.
"இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே" எனக் கூறியுள்ள பாஜகவின் அறிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டுள்ள இந்து மணமகன்களுக்கு இந்து பெண்களை முறைப்படி மணமுடிக்க கேட்டு, தமிழ்ப்புலிகள் அமைப்பின் செயலாளர் நாகை. திருவள்ளுவன் தலைமையில் கோவை பாஜக அலுவலகம் முன்பு பெண் கேட்கும் போராட்டம் நடைபெற்றது.
தலித்களை தொடர்ந்து இந்துக்கள் என வரலாற்று பொய்களை கூறி வரும் சங்பரிவார் அமைப்புகள், தலித் ஆண்களுக்கு பிராமணப் பெண்களை மண முடித்து வைத்து அனைவரும் இந்துக்கள் தான் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.
இப்போராட்டம் தொடர்பாக தமிழ்ப்புலிகள் அமைப்பின் தமைமை நிலையச் செயலாளர் இளவேனில், "காதலர் தினக் கொண்டாட்டத்தை சங்பரிவார் அமைப்புகள் தவறு எனக்கூறுவதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். பூங்காக்கள், கடற்கரைகளில் காதலர் தினம் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரங்களை நாமும் ஏற்றுக் கொள்ளவில்லை. முறைப்படி பெண் கேட்கிறோம். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் என்பது பாஜகவின் கொள்கை. எனவே, எங்கள் இளைஞர்களுக்கு பெண் தாருங்கள் என முறைப்படி கேட்டு பாஜக அலுவலகம் சென்றோம்" என்றார்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்கள். தலைநகர் டில்லியில், காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என இந்து அமைப்புகள் கூறியதைத் தொடர்ந்து, திருமணம் செய்து வைக்க கேட்டு, காதலர்கள் இந்து அமைப்புகளை முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.
  

ஹ ,,ஹா .
நன்றே,
நன்றே.
கலா கார்த்திக்


2015/02/10

பதிவிடுவது கார்த்திக் அம்மா ://

டெல்லி தேர்தல் :
கேஜ்ரிவால் வெற்றி::
நான் ஒன்றும் பெரிய அறிவாளி அல்ல.
மனதிற்கு தோன்றியதை  எழுதுகிறேன்....
என்னைப் பொருத்தவரை இது கெஜ்ரிவாலுக்கு கிடைத்த வெற்றி அல்ல.
கிருத்துவ தேவாலயங்கள் தாக்கப் பட்டதால் ..கிருத்துவர்களின் கோபம்.......
முஸ்லிம்களின் கோபம்.......
தாங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை......மோடி வந்து விடக் கூடாது என்ற காங்கிரசின் நிலைப்பாடு.
என எல்லோரும் சேர்ந்து வேறு வழியின்றி கேஜ்ரிவாலை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.
எப்படியோ.....
ஜெயித்தாகி விட்டது.
சென்ற முறை செய்த தவறை செய்யாமல்,
உணர்வு பூர்வமாக செயல்படாமல் அறிவு பூர்வமாக ஆட்சி நடத்தினால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்
KALA KARTHIK

2015/02/08

பதிவிடுவது
கார்த்திக் அம்மா ************
மாநகராட்சியும் திருநங்கைகளும் :
கொடுமையே  கொடுமையே:
வரி வசூலிப்பதற்கு 100 ஆயிரம் வழிகள் இருக்க நம் மாநகராட்சிக்கு வந்ததே ஒரு ஐடியா .வரி செலுத்தாத HILTON  ஹோட்டலின் முன்  திருநங்கைகளை  நடனமாட விட்டு வரி கேட்டுள்ளனர்.
திருநங்கைகள் பல படங்களில் கேவலமாக சித்தரிக்கப் படுவதாக அவர்கள் மனம் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி.
மாநகராட்சியை எதிர்த்து யாரும் போராடாதது ஏனோ ?
கலாகார்த்திக்

2015/02/05

எனது தந்தையும்   என் தந்தை ஆனவனும்.
என் கார்த்தி அழகன்.
அவன் கண்கள் மின்னும்.
கன்னத்தில் விழும் குழி தனி அழகு.
முகத்தில் ஒரு குறுகுறுப்பு.
ஒரு துறு துறுப்பு
அள்ளி கொஞ்ச வேண்டும் என்று வெறியாக இருக்கிறது
கார்த்திக் அம்மா

2015/01/30

நான் சிறுமியாக இருந்த போது எங்கள் கிராம கோவில் திருவிழாக்களில் பலவித வேடமிட்டு வரும் நிகழ்ச்சி இருக்கும். அதில் முக்கிய வேடம் புலி வேடம். உடல் முழுவதும் மஞ்சள் வர்ணம் பூசி மீசை வரைந்து    பார்ப்பதற்கு புலி(ஐ  ) போலவே இருக்கும். அந்த வேடம் போட்டவுடனேயே அந்த கண்களைப் பார்க்கவே பயமாக இருக்கும். இப்போது போல் அப்போது கஷ்டப் பட்டு ( உயிரைக் கொடுத்து ?? ) எல்லாம் நடிக்கவில்லை..மேலை நாட்டிலிருந்து ஒப்பனை காரர்கள் வரவில்லை..
இப்போது எது செய்தாலும் சாதனை ? ஆகி விடுகிறது. ஒரு கும்பல் துதி பாடுகிறது.
பாவம் ...அந்த கிராமத்து மக்கள்.
கலாகார்த்திக்

2015/01/23

அமெரிக்காவும்.... இந்தியாவும்:
ஒபாமாவின் இந்திய வருகையின் போது அவரின் இரு மகள்களும் வருவதாக சொல்லப்பட்டது.
அனால், இப்போது அவர்கள் வர இயலவில்லை என்று சொல்லப் படுகிறது.
காரணம்???????????????????
அந்த பெண்கள் படிக்கும் பள்ளி அவர்களுக்கு விடுப்பு (லீவ் ) தர மறுத்து விட்டதாம்.
நம்முடைய அரசியல்வாதிகளுக்கு புரியவேயில்லை.சமீபத்தில் ஒரு தொழில் அதிபரின் மகனை ஆசிரியர் கண்டித்ததற்காக பள்ளியே சூறையாடப்பட்டு,ஆசிரியரை குற்றுயிரும்  குலைஉயிருமாக ஆக்கிய நாடு நம் நாடு.
இங்கெல்லாம் ஒரு பள்ளி அப்படி செயல்பட முடியுமா?
எதிலும் பணம் உள்ளவனும்  பதவி உள்ளவனும் ஜெயிக்கிறான்.
சட்டம் அவன் காலடியில்.
வாழ்க அமெரிக்கா.
கார்த்திக் அம்மா

2015/01/14

மாதொருபாகன் :
நான் புத்தகத்தை படிக்கவில்லை. ஆனால் வலைதளங்களில் படித்ததை வைத்தும், தொலைகாட்சிகளில் நடந்த விவாதங்களை வைத்தும் சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
முதலில் முருகன் உபயோகப்படுத்திய வார்த்தையே சரியா?
திருசெங்கோட்டை பற்றி கள  ஆய்வு செய்து எழுதியதாக சொல்லும் அவர் அதற்கான சரித்திர சான்றுகளை அளித்திருக்கலாமே?
அப்படியே ஒரு ஊரை பற்றியும் அந்த மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் சொல்ல  வேண்டும் என்றால் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றனவே.
உன் தாய், பாட்டி, கொள்ளுபாட்டி நடத்தை கெட்டவர்கள் என்று சொன்னால் யாருக்கும் கோபம் வரும்.இந்து முன்னநியினரோ , பா.ஜா.காவோ செய்த சதி, இன்னும் சிலர் செய்த சூழ்ச்சி என்றெல்லாம் சொன்னாலும் பெண்களை இழிவு படுத்தும் விஷயத்தை ஏன் எழுத வேண்டும் ?
இவரோ இவரை ஆதரிக்கும் மற்றவர்களோ கிருத்துவ மதத்தை பற்றி தைரியமாக எழுதுவார்களா?
ஏவாள் முதலில் தோன்றிய பெண். அவளுக்கு இரு மகன்கள்..அப்போது ஏவாள் மட்டும்தான் இந்த உலகில் உள்ள ஒரே பெண்.(விவிலியப் படி)
அப்படியாயின் அந்த மகன்களின் மனைவிகள்?
இப்படியெல்லாம் குதர்க்கமான கேள்விகள் கேட்பதை விடுத்து, கிருத்து என்ற ஒரு நல்லவர் இருந்தார். மக்களுக்கு நல்லது  செய்தார்.அவர் வழியை பின்பற்றி நாமும் மக்களுக்கு நல்லதே செய்வோம் என்றுதான் செயல்பட வேண்டும்.
ஒரு இந்து நடிகரும் , ஒரு கிருத்துவ நடிகரும் முஸ்லிம் தீவிரவாதத்தை மையப் படுத்தி தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டனர்.
உண்மையில் சமூக அக்கறை இருந்தால் முஸ்லிம் மக்கள் மாநாடு நடத்தி அந்த மக்களை நல்வழிப்படுத்தலாமே.அவர்களுக்குண்டான மனவருத்தம் என்னவென்று அறிந்து, மூல காரணங்களை அலசி, தீர்வை நோக்கி செல்லலாமே.
ஏற்கனவே வெடித்துக் கொண்டிருக்கும் ஜாதி, மத எரிமலையில்  ஒரு பெட்ரோல் கிணறையே கொண்டுவந்து கொட்டிவிட்டு,
எனக்கு கருத்து சுதந்திரம் இல்லையா ,நான் எழுதக்  கூடாதா,நான் படம் எடுக்கக் கூடாதா
என்றெல்லாம் ஆர்ப்பரிப்பது எந்த வகையில் சரி?
நல்லவற்றை எழுதுங்கள்.
நல்லவற்றிற்காக எழுதுங்கள்.
for the good ,
by the good ,
of the good
என்றிருக்கட்டுமே .ஜாதி மத பிரச்சினைகளை மறந்து ஒன்று பட்டு வாழ்வோமே.
அன்புடன்'
கார்த்திக் அம்மா.

2015/01/13

போகி பண்டிகை:
     வருடா  வருடம் எழுதுகிறேன்.இதை பற்றி.
பழையன கழிதலும் புதியன புகுதலும்:
அந்த காலத்தில் தானியங்களை கொட்டி வைக்க ''சேர் '' அல்லது  '' குதிர்'' ( store house   or  granary ) என்ற வீடு இருக்கும்.4 அறைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.3 அல்லது 4 ஆள் 20, 24 அடி இருக்கும்.ஜன்னல், (திட்டிவாசல் ) போன்ற கதவு இருக்கும்.
ஒரு அறையில் கம்பு, இன்னொன்றில் சோளம் ,மற்றொன்றில் ராகி  மற்றும் நெல் கொட்டி வைப்பர்.மாதம் ஒருமுறை ஒருவர் ஏணி  வைத்து உள்ளே இறங்கி தேவைப்பட்ட தானியங்களை எடுத்துக் கொண்டு மேலே வந்து கதவை மூடி விடுவர்.
  தை மாத அறுவடையின்போது புது தானியங்கள் வந்தவுடன் பழைய தானியங்களை வெளியே எடுத்துவிட்டு   பூலாப்பூ ,ஆவாரம்பூ ,வேப்பிலை,  மஞ்சள் போன்றவற்றை தரையில் பரப்பி( இயற்கை பூச்சிக் கொல்லிகள்) அதன் மேல் தானியங்களை கொட்டுவர்.பூச்சிகள் அண்டாமல் காப்பதால் ''காப்பு கட்டுதல்'' என்றாகியது.
பழைய தானியங்கள் கழிந்து புது தானியங்கள் வருவதால் பழையன கழிந்து புதியன புகுதல் வருதல் என்றாகியது.
அதே போல் மட்பாண்டங்கள் ஒரு வருடம்வரைதான் உபயோகப்படுத்தலாம்.அதனால் பழைய பானைகள் சட்டிகள் போன்றவற்றை மாற்றி புது பானையில் பொங்கலிடுவர்.
இதுவும் பழையன கழிந்து புதியன புகுதல்.
இக்கால வாழ்க்கை முறைக்கும் போகிப் பண்டிகைக்கும் ஒவ்வாது.இப்போது எல்லாவற்றிற்கும் பூச்சி கொல்லி மருந்து அடித்துவிடுகிறோம்.காய் பழங்கள்   மேல் vax தடவி விடுகிறோம்.
அதனால் போகியே அர்த்தமற்றதாகி விடுகிறது.முன்னோர்கள் காரண காரியங்களுடனேயே பண்டிகைகளை வைத்தனர்.எல்லா காரணங்களையும் மறந்து டயர்களையும் துணிகளையும் எரித்துக் கொண்டிருக்கிறோம் .
காலத்தின் கோலம்.
கார்த்திக் அம்மா ...கலாகார்த்திக்

26th august

கலையாத நினைவு நான்
விலகாத உறவு நான்
சிதை ஏறும் போதிலும்
மறையாத பந்தம்
விலகாது நண்பனே
நமது ஆன சிநேகம் - i

By today it is 3 years, missing my friend a lot, still not able to accept the truth.
ஜோதிடம்:
இதுதான் சொந்த செலவில் சூனியம் வைப்பது என்பதோ?
பாவம் இலங்கை அதிபர் (முன்னால் )
யாரோ  ஜோதிடம் சொல்லப் போய் இன்னும் பதவியும் ஆட்சியும் ஒரு வருடம் இருந்த நிலையில் அவசரப்பட்டு தேர்தல் நடத்தி எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்.
அப்படித்தான் தமிழ்நாடு சங்கதியும்.
''மதியம் சாப்பாட்டிற்கு சென்னை சென்றுவிடலாம் '' என்று  ஓட்டுனரிடம் சொல்லி நீதிமன்றத்திற்குள் போனவர் நேராக சிறைச்சாலை சென்றார்.
சென்னையிலிருந்து பெங்களூர் வரை கடவுள்களையும் கோயில்களிலும் வணங்கியவாறே சென்றதாக சொல்லப்பட்டது.
ஜோசியர்கள் தவறா?ஜோதிடம் தவறில்லை.நிறைய கணிதம் நிறைய அறிவியல் உள்ளது என்று புரிகிறது.ஆனால் ஒரு பஞ்சாங்கப்படி சனி அக்டோபரிலேயே இடம் மாறுகிறார். இன்னொரு பஞ்சாங்கப்படி டிசம்பரில் இடம் மாறுகிறார்.
தொலைக் காட்சிகளில் பார்க்கலாம்.''இன்று மதியம் 3.32க்கு சந்திரன் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார்'' என்கின்றனர்.3.32 லிருந்து 3.33க்குள் பிறக்கும் குழந்தைக்கு எந்த ராசி என்று நிர்ணயிப்பது? ராசியோ லக்கினமோ மாறும்போது எல்லாமே மாறுகிறதே..இதற்கெல்லாம் விடை தெரியவில்லை என்றால் ஏதோ ஒரு பதில் சொல்கின்றனர்.
 முன்னோர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒரு விஷயத்தை சொல்ல மாட்டார்கள்.நிச்சயம் உண்மையான விஷயமாக இருக்கலாம். காலப் போக்கில் எல்லாம் வியாபாரமான சூழ்நிலையில் ஜோதிடத்திலும்  அவரவர் தன பங்குக்கு புனைகருத்துகளை சொல்கின்றனர்.
ஜாதகத்தையோ , ஜோதிடத்தையோ நம்ப வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆனால் அதையே வேதமாக கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.
ராஜபக்ஷே என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கார்த்திக் அம்மா

2015/01/12

மீள்பதிவு.
HAPPENISM   HAPPENISM
This is a new "ISM' founded by Kalavathy Karthikeyan.This is a new religion.It has no gods,no rituals,no poojas,no mantras,no bajans.This HAPPENISM believes not in karma,sin,janmas,previous births,rebirths,soul,anma,athma and salvation.
This religion firmly believes that any incident or action or event or motion occurs not due to any pre destined design or because an omnipotent sitting in some mountains [with a wife simply doting on him saying "YES LORD" to everything he says ..and with a lot of so called sages dressed funnily chanting some hymns in praise of him] directs each and every minute action of the whole earth, of the 1000s of billion people and decides their birth,course of life,time of marriage,time of death and the whole lot.Isn't it unimaginable and unbelievable for a man turned to become all powerful,all capable and to become the sole deciding authority?
And he needs no computers,no calculators,no statistics!And we believe that we act as is written on our forehead.How many lines are written on your forehead?Is it a micro chip,where a hell lot can be written?If so,this Funny god knows embedding and programming!
If this is a disclaimer,what does HAPPENISM CLAIMS? It says that any action,event,motion,incident or accident happens because it so happens.Let me explain.You are reading this now.Which god or destiny directed you to read this?Did your astrologer predict you that you will be reading this blog at this time?Go and ask him what you had been doing exactly at that time?Can any astrologer tell you that you were reading Vijayanagar blog at that point of time?No,..no one can..So HAPPENISM defines that it so happened that you are reading this blog now.
Shall i exemplify with a better a well known example?As many of you know I and Karthik have roamed over the roads of Bangalore in his favourite Fiero in mists,in rains,midnight,early morning,and i pinching him and playing with him while he was driving and he will drive at such high speed and "without a helmet".Why didn't any accident happen then?How many times would he have crossed the same u turn and was he not aware that he had to be cautious?His friends could site so many such rash driving days,but it so happened that he happened to apply a sudden brake.If it's your god and if there is a karma or the sins of the previous births is there no appeal?No redemption?No annihilation?Even in the man framed constitution there is a provision to go for appeal.Your gods do not give any such choice.Then how do you believe that he will save us?He cannot do anything against destiny eh?If so why should we beg him to save us?
SO let us believe in this HAPPENISM and strengthen ourselves to face the happenings.Instead of being a slave to someone who ditches and deserts at the deserved time[isn't something like the villain of the movies who ruthlessly kills his ardent follower].
So HAPPENISM says that you be your master and let things happen as they happen.
பெண்ணே ..மகளே :
இந்த மாதம் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது ஓசூரில் ,ஒரு தந்தையும் பெண்ணும் வண்டியில் ஏறினர் . அந்த பெண் ஒரு பொறியியல் கல்லூரியில் படிப்பதாகவும் அங்கு அவளை இறக்கி விட்டு விடும்படியும் வேண்டினார்.அந்த பெண் என் அருகில் அமராமல் அடுத்த இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்
அப்போதே எனக்கு வித்தியாசமாக பட்டது.
ஆனால் தந்தையை பார்த்தால் பாவமாக இருந்தது.
''நீங்கள் கவலை பட வேண்டாம்.நான் பார்த்து கொள்கிறேன்''
என்று சொன்னேன். பேருந்து புறப்படும் வரை இங்கே நின்றார். அங்கே நின்றார்..
இந்த பெண்ணும் டாடா சொல்லியது. பேருந்து நகர்ந்தவுடன், அந்த பெண் நடத்துனரிடம்
''இந்த பஸ் கிருஷ்ணகிரி செல்லுமா?'' என்று கேட்டு கிருஷ்ணகிரிக்கு டிக்கெட் எடுத்தது.
பையிலிருந்து இன்னொரு அலைபேசியை எடுத்து பேசியது.
எனக்கு பொறுக்கவேயில்லை.
'' ஏம்மா  நீ சென்னை போகவில்லையா? உன் தந்தை நீ சென்னைக்கு போவதகாகவும் கல்லூரியில் இறங்கிக் கொள்ளும்படியும் சொன்னாரே?''
நான் சென்னைதான் வருகிறேன். என் நண்பி கிருஷ்ணகிரியில் வருவாள் ;'' என்று அற்புதமாக கதை சொல்லியது.
எனக்கு புரிந்து விட்டதால் ஊமையாகி விட்டேன். கிருஷ்ணகிரியில் அந்த பெண் இறங்கி வேறு ஒரு பையனுடன் சென்று விட்டாள் .
நடத்துனரும் மற்றவரும் பயங்கரமாக புலம்பினர்.
காதல் செய்யும் வயதும் அல்ல.
மிக மிக வேதனையான விஷயம் அந்த பெண்ணிற்கு எப்படி தன தந்தைக்கு துரோகம் செய்ய மனசு வந்தது. அவர் தன மகள் மேல் எவ்வளவு நம்பிக்கை வைக்கிறார்.
ஏன் பெண்களே?
ஏன் மகள்களே?
நாங்களும் கல்லூரியில் படித்தோம்.எங்களுக்கு எல்லாம் ஏன் காதல் வரவில்லை?
தாய் தந்தையரின் நினைவு வந்தால் காதல் வருமா?
என்னை பெண் பார்க்க வந்தவரை
''  பிடித்திருக்கிறதா?'' என்று தாய் தந்தையர் கேட்டனர். '' ''கழுதையோ, குதிரையோ நீங்கள் சொல்பவர்க்கு கழுத்தை நீட்டுவேன் '' என்றேன்.
பிரச்சினையே 450 பொறியியல் கல்லூரிகள்தான்.எல்லோரும் என்னவோ 1100 மதிப்பெண் பெற்று பொறியியல் கல்லூரியில் இடம் பெற்ற மாதிரிதான். மிதப்புதான்.தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி ஒரு கடிதம் கூட எழுத தெரியாது. காதல் செய்ய மட்டும் தெரியும்.
அந்த தந்தைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்புடன் கார்த்திக் அம்மா

2015/01/09

பெண்ணே  பெண்ணே
நேற்று என் சொந்த கிராமத்திலிருந்து 4  பேர் வந்திருந்தனர். உறவினர்களா என்பது தெரியாது.இதுவரை ஜாதி மதம் பார்த்து பழகவில்லை.
அவர்களில் ஒரு பெண்.
வயது 20.
கொடுமை என்னவென்றால் கணவனை இழந்து 9 மாத கைக்குழந்தையுடன் வெறுமையாக நின்றது.பழனி கந்தசாமி ஐயாவிடம்  கருத்து பகிர்ந்ததற்கு இது ஒரு முக்கிய காரணம். 20 வயதில் வெறும் நெற்றியுடன், வளையில்லா கைகளுடன்.......பார்த்த நிமிடத்தில் மனம் கலங்கிப் போயிற்று.
அந்த பெண்ணிற்காக சில அலுவலகங்கள் அலைந்து சில நன்மைகளை செய்து தந்தேன் . மறு கல்யாணம் வேண்டாம் என்று உறுதியாக சொல்கிறாள்.சமுதாயம் அவளை கொத்த காத்திருக்கிறது. எப்படி சமாளிப்பாள்?
படித்து கை நிறைய சம்பளம் +கார்த்தியின் யானை பலம்  நிலையிலிருந்த நானே எவ்வளவு போராட வேண்டியிருந்தது.கைம்பெண் என்றால்நல்ல நிகழ்ச்சிகள், எதிரில் வந்தால் அபசகுனம் என்பது போன்ற எண்ணற்ற கொடுமைகளை சந்திக்க வேண்டுமே. ஆ ஆ அப்படியெல்லாம் இல்லை. சமுதாயம் எவ்வளவோ மாறிவிட்டது என்று மட்டும் சொல்லாதீர்கள்.10 % கூட மாறவில்லை.
அந்த பெண்ணை மேற்கொண்டு படிப்பை தொடர். உனக்கான உதவிகளை செய்கிறேன் என்று சொன்னேன்.
சீக்கிரம் இளைய மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்.
இது போன்றவர்களுக்கு உதவி செய்ய என்னை அர்பணித்துக் கொள்ளவேண்டும். கார்த்தியின் திருவடியை அடையும் வரை என்னால் முடிந்த உதவிகளை இவர  போன்றவர்களுக்கு  செய்ய வேண்டும்.
கலாகார்த்திக். (அம்மா )
  

2015/01/08

தொலைக் காட்சி தொடர்களும் மதுவும்தான் நாட்டை கெடுக்கிறது என்று ஒரு மருத்துவர் சொன்னார்.
அவருக்கு தெரியுமோ  தெரியாதோ அவர் தொலைகாட்சியிலேயே தொடர்கள் வருகிறதே.