About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2023/11/06

thalith sinimaakkal

 தலித் சினிமாக்கள் :

 so called  கீழ் தட்டு மக்களின் அவல  நிலையை தோலுரித்து காட்டுகிறோம் என்று படங்களை எடுத்து தள்ளுகிறார்கள்.

போன நூற்றாண்டில் நடந்தது .'எங்களை அடிமையாக நடத்தினார்கள்.நல்ல சாப்பாடு கொடுக்கவில்லை.14 மணி நேரம் வேலை வாங்கினார்கள்' என்றெல்லாம் படத்தில் காட்சிகள் வருகின்றன.

நானும் கிராமத்தில்பிறந்தவள் .என் தாத்தா அந்த ஊர் சிற்றரசர் .நான் அறிந்த வரை சொல்கிறேன்.என் தாத்தா மிகவும் நல்லவர்.

ஆனால் மற்ற கிராமங்களில் இந்த கொடுமைகள் இருந்தன.இதில் பலருக்கு தெரியாத ஒரு விஷயம் என்ன என்றால் தலித் மக்கள் மட்டுமல்ல .'''.அனைத்து ஜாதி மக்களும் '''ஊர் தலைவருக்கு கட்டு பட்டே ஆக வேண்டும்.

தலைவரின் உறவினர்களே கூட கிட்டத்  தட்ட அடிமைகள் போல்தான் இருந்தனர்.

அவர் வைத்ததுதான் சட்டம்.

அவர் சொன்னதுதான் வேதம்.

கொடுமைக் கார தலைவர் என்றால் எல்லோருக்கும் கசை அடிதான்..

ஒரு தலைவர் தனக்கு அடங்காத, தவறு செய்த ஆணை 'குதிர் ' என்று சொல்ல படும் தானிய கிடங்கு (சுமார் 12 அடி  ஆழம் உடைய அறை .ஜன்னல் போன்ற காற்றுக்கு வழியே இல்லாத ) ஒரு கட்டிடம்.ஒரு வருடத்திற்கு தேவையான தானியங்களை கொட்டி வைத்து 1 அடி  அகலம் கொண்ட திட்டி வாசலை மூடி விடுவார்கள்.

எந்த ஆள் தவறுகிறானோ அவனை 10 'வல்லம் 'நெல் மேலே எடு'' என்று சொல்லி அந்த குதிர் ரூமிற்குள் ஏணியை வைத்து இறக்கி விட்டு விட்டு அவன் இறங்கியவுடன் ஏணியை மேலே எடுத்து விட்டு திட்டி கதவை மூடி விடுவார்கள்.

காற்று கிடையாது.

தண்ணீர் கிடையாது.

உணவு இல்லை.

அவன் அங்கேயே கிடக்க வேண்டியதுதான்.

15 நாட்கள் கழித்து கதவு திறக்க படும்.

மீதியை நான் சொல்ல மாட்டேன்.

இதெல்லாம் 90 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை.

நானே மறந்த கதை.

என் அம்மா சொல்லிய கதை.

ஆனால் இந்த டைரக்டர்கள் எடுத்த படங்களினால் இதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

இது   இதுதான்   பிரச்சினை.

இப்போதைய ''ஒடுக்கப் பட்ட மக்கள் '' இதையெல்லாம் ''கிரிஞ் '' என்று கடந்து போகிறார்கள்.

வெடிகுண்டு எங்கே வெடித்தது என்றால் இந்த so called  ஆண்ட பரம்பரையில்தான்.

ஆஹா நாம் ஒரு காலத்தில் இவ்வளவு அதிகாரமாக இருந்திருக்கிறோம் .இப்போது இந்த பயல்கள் நம்மை சல்லிக் காசுக்கு மதிக்கவில்லை  என்ற '' விழிப்புணர்வு '' வந்து விட்டது.

விளைவு ....6ங் கிளாஸ் மாணவன் கூட கையில் கலர் பட்டை கட்டி கொள்கிறான்.

மலம் எடுத்து ஸ்கூல் கேட்டில் அப்புகிறான்.

சக மாணவனின் உடையை கழட்டி விட்டு அவன் மீது சிறுநீர் கழிக்கிறான்.

இளைஞர்கள் கூட்டமாக சென்று ஒரு வாழ்விடத்தையே சூறையாடுகிறார்கள்.

படங்கள் பூமராங்காக மாறி எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த கொடுமைகள் இப்போது காட்டு தீ போல் பரவ ஆரம்பிக்கிறது.

ஆணவ கொலைகள் அதிகமாகிறது.

நான் சிறுமியாக இருந்த போது என் அப்பாவுடன் சென்றால் வழியில் வரும் அனைவரும் வேட்டியை இறக்கி விட்டு, துண்டை  எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு கும்பிடுவார்கள்.

எனக்கு அது வித்தியாசமாகவே தெரிந்ததில்லை.

ஆனால் அதே தந்தை 2008 ல் அந்த ஊரில் நடந்த பொது எல்லோரும் பேண்டிற்கு மாறி இருந்தனர்.

'வணக்கம் சார் '' என்று சொன்னனர் .

காலம் எவ்வளவோ மாறி விட்டது.

நான் அப்போது கஷ்டப் பட்டேன்  தெரியுமா????????????? என்று இந்த காலத்து குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள்.

ஜாதி வெறியை வளர்க்கிறார்கள்.

சரி.அப்படி கதறும் இவர்கள் தன் இன  மக்களுக்கு என்ன செய்தார்கள்?????? அவர்களை படிக்க வைத்தார்களா?

அவர்களுக்கு மருத்துவ மனைகள் கட்டினார்களா?

வீடு கட்டி கொடுத்தார்களா?

பீய்ம் படத்தில் காட்டிய குடும்பத்திற்கு அரசுதான் உதவி செய்தது .

நாங்கள் எங்கள் வங்கிக் கணக்கை பெரிதாக்கிக் கொண்டோம்.

உங்கள் சுய நலத்திற்கு,

உங்கள் அரிப்பை சொரிந்து கொள்வதற்கு மக்களை பழி கடா ஆக்காதீர்கள்.

பலர் சகோதரர்களாக வாழ ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு நடிகர் சொல்கிறார்.' நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன்.எனக்கு அப்போது ஜாதி பற்றி தெரியாது ''''' என்று.

உண்மைதான்.

நான் கல்லூரி படித்து முடிக்கும் வரை ஜாதி பற்றி தெரியாது.

திருமணமாகி என் மாமியார் வீட்டிற்கு போன போதுதான் 

''அவர்கள் வேற ஜாதி'' என்ற வார்த்தை .

வேண்டாம்.

மக்கள் மக்களாய் வாழ்வோம்.

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மிருகங்களாய் மாற்றி உங்கள் வெற்றியை கொண்டாட வேண்டாம்.

கார்த்திக் அம்மா ..கலா கார்த்திக்

2023/10/30

போரும் குழந்தைகளும்

 உக்ரைன் ஒரு புறம்.

இஸ்ரேல் ஒரு புறம்.

மணிப்பூர் ஒரு புறம்.

எங்கும் சண்டை.

நெருப்பு.

இடியும் கட்டிடங்கள்.

அலறும் மக்கள் .

கதறும் அம்மாக்கள்.

உயிர் இழக்கும் குழந்தைகள்.

உலகமே .எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?

அப்போதெல்லாம் போர் என்றால் ஊருக்கு வெளியே போர்க்களம் என்ற இடத்தில் சண்டை நடக்கும்.

1000 க் கணக்கான மனிதர்கள் ( வீரர்கள் ) என்று சொல்ல மாட்டேன்.உயிர் இழப்பார்கள்.

ஆனால் ஊரில் வயதானோர் ,பெண்டிர், குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

அதற்கு மேல் ஆபத்து என்றால் கோவிலுக்குள் சென்று விடுவார்கள்.அங்கு கோபுர கலசங்களில் தேவையான உணவு ,இருக்கும்.

அதற்கும் மேல்நிலைகளில் போர் கருவிகள் இருக்கும்.

இத்தனை பாதுகாப்பு அரண்களை மீறித்தான் மக்களை தொட முடியும்.

ஆ ஆ ஆ னா ல் ல் இன்று ஊர் மேல் குண்டு மழை .மக்கள் கொத்து கொத்தாக  மடிகிறார்கள்.

டி .வி செய்திகளை பார்க்கும் போது மனம் செயலற்று நிற்கிறது.

குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடும் பெற்றோரை பார்க்கும் போது அந்த கொடுமை சொல்ல வார்த்தைகள் இல்லை.

இறுதியில் அவர்களுடைய பங்களாக்கள் ,நிலங்கள் ,fridge ,டி .வி யை யா  தூக்கி கொண்டு ஓடுகிறார்கள் ???????????

எப்படியாவது தங்கள் குழந்தைகளை காப்பாற்றி விட வேண்டும் என்ற தவிப்போடு ஓடும் பெற்றோர்.

நிறுத்துங்கள் போரை.

குழந்தைகளை வாழ விடுங்கள்.


2023/09/18

சனாதனம்

 சனாதன தர்மம்.

இப்போது எல்லோரும் பேசும்  ஒரு வார்த்தை இதுதான்.

" ஜாதிகள் இருக்க வேண்டும் என்பதுதான் சனாதன தர்மத்தின் அடிப்படை கோட்பாடு என்று அறிய படுகிறது.

ஜாதிகள் ஏன் வந்தது?
ஜாதிகள் வேண்டுமா??

.....பழங் காலத்தில் மக்களை ஒரு ஒரு குழுவாக பிரித்து 

'நீ விவசாயம் செய்.

நீ வியாபாரம் செய்.

நீ தச்சு தொழில் செய்.

நீ தூய்மை பணி  செய் என்று நியதி வகுத்தனர்.

வழி வழியாக ,தலை முறை தலைமுறையாக இப்படியே நடக்க குழுக்களுக்கென தனி மொழி வழக்கு ,தனி சடங்குகள்,தனி உடைமுறை என வழக்கம் வந்து விட்டது.

அப்போதெல்லாம்' என்ன பிள்ளை வாள் சௌக்கியமா ?

கவுண்டர் நன்னா இருக்கேளா ?

ஆசாரியார் வீட்டில் போய் சுத்தி வாங்கி வா செட்டியார் வீட்டில் போய் நூல் வாங்கி வா " என்றுதான் சொல்வார்கள்.ஆனால் வார்த்தைகளில்தான் ஜாதி இருந்தது.இதயங்களில் இல்லை.மக்கள் மனித நேயத்தோடு இருந்தார்கள்.வெறுப்புணர்வு இல்லை.ஜாதி வெறி இல்லை.

அப்படி என்றால் ஜாதிக்குள்ளேயே ஏன் கல்யாணம்?

''ஒரு வேளாள பெண் ஒரு பிராமண குடும்பத்திற்குள் வருகிறாள்என வைத்துக் கொள்வோம்.மாட்டுப் பொன்னே ஆத்திலேந்து செத்த ஜலம் கொண்டு வா என்றவுடன் அந்த மருமகள் (தண்ணி இல்லாத )காவேரி ஆற்றிற்கு ஓடி ஜலம் எங்கே என்று தேடும்.

ஏன்னா செத்த இங்கே வரேளா என்று கணவனை மனைவி கூப்பிட்டவுடன் 'இதென்ன புருஷனை அண்ணா என்கிறாரே என்று குழம்பும்.

சரி.இன்னொரு வர்ண பெண் ஆசாரியார் வீட்டிற்கு போகிறது "சுத்தி எங்கம்மா ?"என்ற குரல் வந்தவுடன் அந்த பெண் வீட்டை சுத்தி சுத்தி வரும்.


நெசவு செட்டியார் பெண்வேளாண் குடும்பத்திற்குள்."கலப்பை எங்கே "என்றவுடன் எதையாவது கலந்து எடுத்து வரும்.

சேலம் மாவட்டத்தில் விவசாய நிலத்தை 'வயல் 'என்று சொல்ல மாட்டார்கள்.'காடு 'என்றுதான் சொல்வார்கள்.'நான் காட்டுக்கு போய் வரேன் 'என்று கணவன் சொன்னவுடன் 'காட்டில் புலி இருக்குமே' என்று அந்த பெண் பயப்படும்.

நான் ஒரு வீட்டிற்கு போயிருந்தேன்.'கோருங்க 'என்றார்  அந்த அம்மா.நான் பூ தான் கோர்க்க சொல்கிறார் என்று நினைத்து பூவை தேடினேன்.மெதுவாகத்தான் புரிந்தது.அவர் 'உட்காருங்க ' என்று சொன்னார் என்று.

உடையும் அப்படித்தான்.

ஒருவர் மடிசார்.

ஒருவர் முண்டு .

இந்த குழப்பங்கள் எல்லாம் வேண்டாமே என்றுதான் அந்தந்த ஜாதிக்குள் திருமணம் செய்தார்கள்.

ஜாதிகள் இருந்தால் இருந்து விட்டு போகட்டும்.ஆனால் 

''ஜாதீ தீ க்கள் வேண்டாம்.நான் பெரிய ஜாதி.நீ அடிமை ஜாதி.நீ கீழ் ஜாதி என்ற வன்மம் வேண்டாம்.சக மனிதனை இழிவு படுத்த வேண்டாம்.

என் தாத்தா 'ஊர் கவுண்டர்.'ஆனால் இத்தனை கொடுமைகளை நான் பார்த்ததில்லை.

மனித நேயத்தோடு இருப்போம்.மனிதனை மனிதன் நேசிப்போம்.'

அன்பால் வாழ்வோம்.

அன்புடன் வாழ்வோம்.

2023/08/15

NEET

 நீட்டினால்தான் தற்கொலைகளா ??????????

நாங்கள் படித்த காலத்தில் மொத்தம் 875 m .b .b .s  ஸீட்டுகள்தான்.என்னையும் டாக்டர்தான் என்ற எண்ணத்தில் ஊற  வைத்து வளர்த்தார்கள்.

அப்போது எண்ட்ரன்ஸ் தேர்வு இல்லை.

என்னை விட குறைந்த மதிப்பெண் பெற்ற என் நண்பி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தால்.பணமும் கட்சியும் விளையாடியது.

அப்போது நீட் தேர்வு இருந்திருந்தால் நான் இன்று டாக்டராகத்தான் இருந்திருப்பேன்.

கார்த்திக்கிற்கு அண்ணா பல்கலை கிண்டியில் ஸீட் கிடைத்தற்கு எண்ட்ரன்ஸ்தான் காரணம்.

+2 மதிப்பெண் மட்டும் வைத்து ஸீட் தருவதில் ஒருபெரிய அபாயம் உண்டு.பல ஆசிரியர்களின் கோர முகம்.

பிராக்டிகல் மதிப்பெண் குறைப்பது.

ஒரு 4 மதிப்பெண் குறைத்தால் போதும். மாணவனின் கட் ஆப் படுபயங்கரமாக குறைந்து விடும்.

இன்றும் பொறியியல் கல்லூரிகளில் இது நடக்கிறது.

கிராமத்து மாணவர்கள் என்ற அலம்பல் ...கிராமத்து மாணவர்கள் எல்லாம் அரசு பள்ளிகளில் படிப்பதாக ஒரு கூவல்.

நிலத்தை விற்றாவது '' ''பெரிய பள்ளிகளில்'' ''தான் படிக்க வைக்கிறார்கள் கிராமத்தினர்.

அடுத்த கேள்வி.?

அப்படி உலக மகா பேர் பெற்ற  பள்ளிகளில் படிக்கும் எத்தனை பேர் I .A .S ,,I .P .S ஆகி விட்டார்கள்? 

சரி.இதை எல்லாம் படிக்காதவர்கள் வாழ்வில் வெற்றி பெறவே இல்லையா?

டாக்டர்,கலெக்டர் ஆனால்தான் அறிவாளியா?

8ம் க்ளாஸ் படித்தவர்கள் எத்தனையோ பேர் எத்தனை சாதனை புரிந்திருக்கிறார்கள் தெரியுமா?

மாநில முதல் மதிப்பெண் பெற்ற எத்தனையோ பேர் சாதாரண வேலையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வில் வெற்றி பெற எத்தனையோ துறைகள் இருக்கின்றன.

இந்த மருத்துவ மாயையில் இருந்து விடுபடுங்கள்.

தற்கொலையை தவிருங்கள்.

பெற்றோர்களே பிள்ளைகளை வாழ விடுங்கள்

2023/08/12

JAATHI ....CASTE and Students

 ஜா''தீ ''

நாங்குநேரி என்ற ஊரில் பள்ளி மாணவர்கள் தங்களுடன் படித்த மாணவனை வெட்டிய நிகழ்ச்சி அதிர்சசி அளிக்கிறது என்று எல்லோரும் புலம்புகின்றனர்.

எனக்கு இதில் அதிர்ச்சி இல்லை.

சினிமா படங்களில் ''ஜாதி''.கட்சி எல்லாம் ஜாதியின் அடிப்படையில்தான்.ஒரு ஜாதிக்கு ஒரு கட்சி.

ஜாதி தலைவர்கள் தன் இன  மாணவர்களுக்கு ஒரு ''நீட்'' பயிற்சி தருகிறார்களா?

ஒரு ஐ.ஏ .எஸ் பயிற்சி கொடுக்கிறார்களா?ஒரு மீட்டிங் போட்டு குடி பழக்கத்தை நிறுத்த சொல்கிறார்களா?

எதுவும் இல்லை.

ஒரு போராட்டத்திற்கு பஸ்களை நொறுக்க,ரயில்களை கவிழ்க்க ,சாலை மறியல் செய்ய மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சினிமா ...

அதற்கடுத்து இந்த சினிமாக்கள். 1820ல் நம் ஜாதியை இப்படி கொடுமை படுத்தினர் என்று எப்போதோ நடந்த செத்துப் போன விஷயங்களை மைய படுத்தி படம் எடுத்து இப்போது இல்லாத நெருப்பை பற்ற வைக்கிறார்கள்.

சமீபத்தில் வந்த பரபரப்பாக பேசப் பட்ட படம் வேறு விதமான காட்டு தீயை பற்ற வைத்தது.' நாங்கள் ஆண்ட ஜாதி'' என்று மற்ற எல்லா ஜாதிகளும் கொண்டாட ஆரம்பித்தன.

அதன் விளைவுதான் இந்த வெட்டு குத்து.

கடசிகளும் டைரக்டர்களும் தங்கள் சுயநலத்திற்கு,தங்கள் சுய நலத்திற்காக செயல்படுத்துவதற்கு நிறுத்துங்கள்.

இளைஞர்களை நல்வழிப் படுத்துங்கள்.

அவர்களை படிக்க வையுங்கள்.

அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுங்கள்.

சில தொழிற்சாலைகளை உருவாக்கி கொடுங்கள்.வாழ விடுங்கள்.

2023/07/04

maamannan2

 மாமன்னன் மேலும் சில பழைய நினைவுகளை கிளறி விட்டது.

எனக்கு ஒரு பெரியம்மா இருந்தார்கள். ரவி வர்மா ஓவியம் போல் அவ்வளவு அழகு.வீட்டிற்கு வருவார்கள். அம்மாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அப்பாவின் வண்டி வரும் சத்தம் கேட்டால் போதும். போய் கதவிற்கு பின்னால் நின்று கொள்வார்கள்.அப்பா கேட்பார்.

''என்னங்க நல்லா இருக்கீங்களா? ''

ஹும்   என்று ஒரு 0 டெசிபலில் பதில் வரும்.

அட கதவிற்கு பின்னால்தானே நிற்கிறார்.  உட்காரலாம் அல்லவா . நின்று கொண்டேதான் இருப்பார்.என் அப்பா ஆங்கிலேயரிடம் படித்ததால் மிகவும் முற்போக்கு வாதி. என்ன சொன்னாலும் சரி.நின்று கொண்டே இருப்பார் அந்த பெரியம்மா.

இது 1960,70 களில் .

அடுத்த கதை.இது 1987.

ஒரு வீட்டிற்கு சென்று இருந்தோம்.அந்த வீட்டு மருமகள் ஒரு டாக்டர்.கான்வென்டில் படித்தவர்.

ஆனால் என் பெரியம்மா போல் இந்த பெண்ணும் கதவின் பின்னால் !!!!!!!!!!!!!!!.

எனக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.

இந்த காலத்தில் இப்படியா?

இப்படி படித்த குடும்பத்தில் இப்படி ஒரு பழக்கமா?

இது அடிமைத்தனமா??????????

அது அப்படி அல்ல.

காலங் காலமாக வரும் பழக்கம்.

அவ்வளவுதான்.

அதே போல்தான் என் மாமனார் வீட்டிலும்.யாருமே என் மாமனார் எதிரில் யாருமே நிற்க மாட்டார்கள்.தேவர்மகன் போல் 4 மகன்களும் பின்னால்தான் நிற்பார்கள்.

நான் அதெல்லாம் தெரியாமல் மாமனார் முன்னாள் உட்கார்ந்து கொண்டு ஒரே அலப்பறை.எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம் .இது என்னடா இது இந்த பெண்????????எல்லா ஆண்களிடத்திலும் சகஜமாக பேசுது?

கிராமத்து பெண்கள் ''இது என்னடா .இந்த பெண் கொழுந்தனை பேர் சொல்லி கூப்பிடுது.''என்று என்னை சுற்றி நின்று கேள்விகள்.

இதெல்லாம் அடிமைத்தனம் என்று யாருமே நினைக்கவில்ல .

அப்படி இருக்க மாமன்னனின் அடிமைத் தனம் பற்றி பேச என்ன இருக்கிறது.

2023/07/02

mamannan

 மாமன்னன் படம் பார்க்கவில்லை.ஆனால் வரும் விமர்சனங்களை வைத்து சொல்கிறேன்.

இந்த ஜாதி கொடுமைபற்றி படம் எடுப்பது அவர்களுக்கு ஏற்பட்ட அரிப்பை சொரிந்து கொள்ளத்தான்.

என் தாத்தாவும் ஜமீன்தான்.சேலத்தில் ஊர் கவுண்டர் என்று சொல்வார்கள்.

ஆண்ட பரம்பரை ,நீண்ட பரம்பரை என்று கூவவில்லை.

ஊரில் ஒரு சிறிய கோட்டை கூட இருந்தது.இப்போது சிதிலமடைந்து என் தம்பி அதை இடித்து விட்டான்.( இப்போதும் அவன்தான் ''''ஆண்டு '''[கொடுமை] கொண்டிருக்கிறான்.இன்றும் முதல் மரியாதை,ஊர் பஞ்சாயத்து என்ற வழக்கம் இருக்கிறது.

என் தாத்தா காலத்தில் ஊர் நிலம் முழுக்க அவருடையது.குதிரைகள் ,வில் வண்டி என்று உண்மையான ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார்.

நான் அவரை பார்த்ததில்லை.

என் தந்தை சிறுவனாக இருக்கும் போதே இறந்து விட்டார்.

ஊர் நிலம் முழுதும் அவருடையது என்றாலும் அவர் இறக்கும் பொது விட்டு சென்ற நிலம் 20 ஏக்கர்தான்.

ஏன் என்றால் சோழர் மன்னனின் சாசனப் படி சிறிது சிறிதாக நிலங்களை குடி மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்.

சேலம் மாவட்டம் முழுதும் அவர் ஆட்சி .அவரது பட்டயம் கூட எழும்பூர் மியூசியத்தில் இருப்பதாக குறிப்பு இருக்கிறது.ஆனால் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.[ உண்மையா இந்த விஷயங்கள் என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்]

எதற்கு இந்த பழைய கதை என்றால் நான் அறிய எங்கள் ஊரில் இந்த படத்தில் வருவது போல் எந்த நிகழ்வும் இல்ல.வேறு எங்காவது இருந்திருக்குமோ தெரியாது. என் தாத்தா மிகவும் நல்லவராக இருந்திருக்கிறார். அடுத்து என் பெரியப்பா இன்னும் நல்லவர்.அதிர்ந்து கூட பேச மாட்டார் .ஆனால் ஊரே அவருக்கு கட்டுப்படும்.எல்லா ஜாதியினரும் அவர் சொல்லுக்கு கட்டு பட்டனர்.இப்போது என் தம்பி.எந்த விஷயமாக இருந்தாலும் '' தலைவர்'' வீட்டிற்குத்தான் வருகிறார்கள்.எனக்கே சிரிப்பாக இருந்தது.

தலித் மக்கள் என்று இல்லை. வயலில் வேலை செய்யும் எல்லோரும் அவ்வளவு விசுவாசமாகத்தான் இருப்பார்கள்.

''பாசமாக இருப்பார்கள்.நான் வருடத்திற்கு ஒரு முறை அங்கு செல்வேன்.எல்லோருடைய கண்களிலும் அப்படி ஒரு பாசம் தெரியும்.

சரி.இன்றைய படத்திற்கு வருவோம்.

அப்படியே ஜாதிக கொடுமை இருக்கிறது என்றால் இவர்கள் என்ன செய்ய வேண்டும்? அந்த ஊர்களுக்கு சென்று அனைத்து மக்களையும் கூட்டி எல்லோரும் மனிதர்களே.உறவாய் இருப்போம் என்ற முயற்சி செய்யலாமே.இப்போது திரௌபதி கோவில் விவகாரத்தில் ஒரு டி .வி அந்த ஊர் மக்களை பேட்டி கண்டது. ''நாங்கள் தாயாக ,பிள்ளையாக'' உறவாகத்தான் இருக்கிறோம்.எங்களுக்குள் எந்த பிரஸ்ஸினையும் இல்லை. சிலர்தான் இதை ஊத்தி பெரிதாக்குகிறார்கள் ''என்றுதான் சொன்னார்கள்.

மறைந்து விட்ட ,அல்லது மறைந்து கொண்டிருக்கிற ஒரு விஷயத்தை எதற்கு பூதாகாரமாக்குகிறார்கள்.

நான் என்ன வேண்டுமானாலும் சொல்வேன்.

நான் யார் தெரியுமா என்ற மமதைத்தான் .நிறுத்துங்கள் இந்த ஈன செயலை.இன்றைய தலை முறைக்கு தெரியாத ஒன்றை சொல்லி அவர்களை தூண்டி  விட்டு உங்களுக்கு என்று ஒரு கூட்டத்தை கூட்டி கொண்டு நீங்கள் நன்றாக சம்பாத்தித்து கொண்டு அந்த இளைஞர்களின் வாழ்வை வீணடிக்காதீர்கள்

2023/06/09

vexed to the extreme

 காலம் ஓடுகிறது.மாற்றம் ஏதுமின்றி.

கார்த்தியின் இழப்பு தாங்க முடியாத துயரமாக இருக்கிறது.

வாழ்வில் சந்தோஷமான நிகழ்வுகளே இல்லை.ஜூன் 2005 ல் பெங்களூரு சென்றேன்.

இனி இங்குதான் வாழ்நாள் முழுக்க.

இல்லையென்றால் டெக்சாஸ் என்று.

உலகின் எந்த ஊராக இருந்தால் என்ன ?

கார்த்தியின் கை  பிடித்து நடந்தால் போதும்.

சென்னையில் இருந்து கிளம்பியாயிற்று.

transfer கிடைக்கவில்லை. வேலையை பற்றி கவலை இல்லை.

கார்த்தி நான் அவனுடன் இருக்க வேண்டும் என்று ஆசை பட்டான்.

அப்புறம் என்ன?

வேலையாவது.சம்பளமாவது .DON'T CARE  .

ஆனாலும் மனம் சற்று கலங்கித்தான் இருந்தது.

புது ஊர். புது மொழி .புது மக்கள்.செந்திலின் மேற்படிப்பு.

எல்லாம் பயமுறுத்தியது.

ஆனால் 

கார்த்தி ..

அவனுடன் சேர்ந்து இருக்க போகிறோம் என்ற ஒரே நினைவு.

கொடுமையே ......3 மாதம்தானடி ....பாவியே ...என்று விதி கை  கொட்டி சிரித்து கொண்டிருந்தது காதில் கேட்கவில்லை.

சுனாமியாய் வந்தது .கார்த்தியின் பைக் விபத்து.

தாயை இழந்த குழந்தையாய் மீண்டும் சென்னை.

வாட்டுவது வெய்யில் மட்டும்தானா ????

கண்ணில் நிற்காத கண்ணீர் .

ஒரே ஒரு முறை கார்த்தியை பார்த்து விட மாட்டோமா என்ற தவிப்பு.

2023/05/28

 கார்த்திக்கின் வாழ்நாள் கனவே பொன்னியின் செல்வன் கதையை ''LORD of the RINGS '' ரேஞ்சுக்கு சினிமாவாக பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்பதுதான்.கார்த்தியின் மெயில் ஐ .டி .யே (1999)ponniyin selvan karthik என்பதுதான்.1999ல் .''varalaaru .com '' ஆரம்பித்தான்.

பொன்னியின் செல்வனுக்கான ஸ்கிரிப்ட் எழுதினான்.கீழே இருப்பது அவன் கையெழுத்தில் அவன் கைப்பட எழுதிய ஸ்கிரிப்ட் ன் ஒரு sample பக்கம்.

எத்தனை ஆசைகள்.

எத்தனை லட்ச்சியங்கள்.

பொன்னியின் செல்வனுக்கு அடுத்த வெறி A I .

விபத்து என்ற ஒரு வார்த்தை .

எல்லாம் காணோம்.

2023/05/21

SUNNY DAYS

 Every year we say this same dialogue.

haaaaa

how scorching the sun is.

But this year its truly truly hotter than the previous years.

ஆம். சுட்டெரிக்குது வெயில் .

வயிறு எரியுது

 என்று வழக்கமாக சொல்வார்கள்.

ஆனால் நெருப்பு உடல் மேல் பட்டு விட்டது போல் இருக்கிறது.முகத் தோல் கூட எரிகிறது.

மழை என்ற வார்த்தையிடமிருந்து சென்னை டைவர்ஸ் வாங்கி விட்டது போலும்.

கடல் காற்று கூட கோபித்து கொண்டு போய்விட்டது அதன் அம்மா வீட்டிற்கு.

இதுவும் கடந்து போகும் என்ற வேதனையுடன் நாட்களை எரித்துக் கொண்டிருக்கிறோம்.

2023/05/07

time flies

 காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.

கார்த்தியை பிரிந்து '''''18''''' வருடங்கள்.அவன் முகம் பார்க்காமல்,அவன் குரல் கேட்காமல் .....இவ்வளவு நாட்கள் ....

வேதனையை சொல்ல வார்த்தைகள் இல்லை.ஒவ்வொரு நிமிடமும்

துடிக்கிறேன்..கடமை கண் முன்னே நின்று வாட்டுகிறது.இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டி வரும் என்று நினைக்கவே இல்லை.

விதி.எல்லா செயல்களிலும் ஆர்வம் போய் விட்டது.எதிலும் பிடிப்பு இல்லை.கார்த்தியின் ஏக்கம் நாளுக்கு நாள் அதிகம் ஆகிறது.

அதை விட கொடுமை .செந்திலின் வாழ்க்கை.இன்னும் திருமணம் ஆகாமல் தனி மரமாய் நிற்கிறான்.அவனை பார்த்தால் கண்களில் கண்ணீர் கொப்பளிக்கிறது. வாழ்வில் எந்த பக்கமும் எதுவும் நன்றாக இல்லை.

விரக்தி.விரக்தி.விரக்தி

 

.

2023/05/01

what a movie

Heart Renting :

 அயோத்தி :

இன்று Z டி வி யில் பார்த்தேன்.

எப்போதாவது படம் பார்ப்பேன்.'இந்த படத்தை பற்றி நல்ல விமர்சனம் படித்ததால் ,பார்த்தேன்.

40 பெண்கள் 1/4 மீட்டர் துணியில் நடனம் என்ற பெயரில் ஆபாச அசைவுகளில் ஆடாமல் .

ஹீரோ தன காதலியின் உடலை இஞ்ச் இஞ்சாக தடவாமல்.

100 ஆடம் பாம் வெடிப்பது போல் ஹீரோ எதிரில் இருப்பவர்களை சுட்டு தள்ளாமல் 

100 பேரை கொல்லாமல் 

இப்படி தமிழ் சினிமாவிற்கென்றே இருக்க வேண்டிய எந்த போர்முலாவும் இல்லாமல் 

'' இப்படி ஒரு படமா ??????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு இடத்திலும் காதல் இல்லை.

4 ஆபாச நடனங்கள் இல்லை.

இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.

கெட்ட வார்த்தை இல்லை.

காதை  செவிடாக்கும் bgm  இல்லை..நடிகர்களின் நடிப்பு பிரமாதம்.

எடுத்துக் கொண்ட கருத்து பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

மத நல்லிணக்கம்.

மத மூட நம்பிக்கைகளை  யார் மனமும் நோகாத வகையில் சாடியிருப்பது.

நிச்சயமாக மந்திரமூர்த்தி ,டைரக்டர்,

சசிகுமார் 

பெயர் தெரியாத அக்காவும் தம்பியும் 

புகழ் 

அந்த நண்பர்கள் 

அதிகாரிகள் 

சிம்பிளாக ,யதார்த்தமாக தங்கள் பங்கினை மிக சிறப்பாக செய்துள்ளனர்.

நான் 6 மாதத்திற்கு ஒரு முறை ஒரு சினிமா பார்ப்பேன்.(அதுவும் டி .வியில் )

 

அதனால் நடிகர்கள் பெயர் தெரியவில்லை. எனக்கு கார்த்தியின் பிளாக்கில் எழுதுவதை தவிர வேறு சோசியல் மீடியா தெரியாது.

யாரவது இந்த பாராட்டை அவர்களுக்கு தெரிய படுத்துங்கள் 

PLEASE

2023/04/28

PS

 பொன்னியின் செல்வன் 

கார்த்தியின் மெயில் ஐ .டி யே பொன்னியின்செல்வன் தான்.1999 ல் நடந்தது.பல நண்பர்களை அந்த புத்தகத்தை வாசிக்க வைத்தான்.( எனக்கு கல்கியை விட சாண்டில்யன்தான் பிடிக்கும்.) வாசிப்பு என்பது ,"reading ".

படிப்பு என்பது '' study ''.ஆழ ,ஊன்றி எழுத்து எழுத்தாக detailed ஆக படிப்பது.

நானும் சரி.

கார்த்தியும் சரி.

p .s மனப்பாடமே செய்திருப்போம்.

நான் 1970 களில் .

கார்த்தியின் வாழ்நாள் கனவே 'பொன்னியின் செல்வன் கதையை LORD of the RINGS ரேஞ்சுக்கு மிக பிரமாண்டமாய் சினிமாவாக எடுக்க வேண்டும் என்பதுதான்.

script எழுதிக் கொண்டிருந்தான்.

இன்று அது படமாக வந்து விட்டது.

மனம் வெடித்து வெடித்து அழுகிறது.

2023/04/11

 வாழ்க்கையில் விரக்திதான் மிச்சம்.

நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

எந்த முன்னேற்றமும் இல்லை.

நடக்க வேண்டிய எந்த நல்ல நிகழ்வும் நடக்கவும் இல்லை.

சலிப்பாக இருக்கிறது.

மக்களின் மனப் போக்கு மிகவும் மாறி வருகிறது.

பண்பாடு,

கலாச்சாரம் 

நன்னடத்தை எதுவும் காணோம்.

15 வயது பையன் கொலை செய்கிறான்.

சினிமா ஒரு முக்கிய காரணம்.

எல்லோரும் கத்தி எடுத்து வயிற்றில் குத்துகிறார்கள்.

சிறுவனும் தானும் தன ஹீரோ போலவே செய்து புளகாங்கிதம் அடைகிறான்

.என்னவோ 

நாம் சொல்ல என்ன இருக்கிறது

2023/03/30

Dog menace and Peacocks

 நாய்கள் ...மயில்கள் :

விலங்குகளை துன்புறுத்த வேண்டாம் .

'' '' நல்ல பாலிசி '' ''

ஒத்து கொள்கிறேன் .

ஆனால் .....

ஆனால் ......

விலங்குகளும் நம்மை துன்புறுத்தக் கூடாதே.

தெருவில் நடக்கவே மக்கள் பயப் படுகிறார்கள்.

ஒரு சிறுவனை 10 நாய்கள் கடித்து குதறுகின்றன.

ஒரு பெண்ணை ஓட ஓட துரத்துகிறது .

மிக மிக உயர்ந்த உள்ளம் உள்ள வள்ளல் பெருமக்கள் நாய்களுக்கு சோறு வைப்பதை ஒரு பெருமைக்கே செய்கிறார்கள் .

அவ்வளவு கருணை உள்ளம்உள்ள இந்த மாமனிதர்கள் அந்த நாய்களை அவர்கள் வீட்டிற்கு கூட்டி சென்று வைத்து பார்த்துக் கொள்ளலாமே.

இவர்கள் வைக்கும் கறி சோறை தின்று விட்டு தினவெடுத்து அலையும் நாய்கள் யாரை கடிக்கலாம் என்று வெறியுடன் ,திமிருடன் அலைகின்றன.

நாய்கள்தான் இப்படி என்றால் 

மயில்கள் 

விவசாயிகள் புலம்புகிறார்கள்.

10 மயில் இருந்தால் போதும் .4 ஏக்கர் நிலத்தில் உள்ள தானியங்களை தின்று தீர்த்து விடும்.

பாவ பட்ட விவசாயிகள் ஏதாவது செய்ய போய்விட்டால் அவ்வளவுதான் .விலங்கியல் ஆர்வலர்கள் படையெடுத்து வந்து விடுகிறார்கள்.

ஊருக்குள் கரடி, புலி, சிங்கம் ,யானை என்று எல்லோரும் நடமாடுகிறார்கள்.

கேட்டால் அவர்கள் இடத்தை நாம் பறித்துக் கொண்டோமாம்.

அவைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.

2023/03/19

Why Temples ?

 கோவில்களின் உண்மை.

நம் முன்னோர்கள் , நம் அரசர்கள் ஏன் கோவில் கட்டினர் ?????

சாமி கும்பிட இல்லவே இல்லை.

கோவில்களின் அமைப்பை பார்த்தாலே புரியும்.

அது ஒரு கோட்டை போல.

கோவிலுக்குள் தான்ய கிடங்கு , நகைகள், பணம் போன்ற அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைத்தனர்.

போர் காலங்களில் மக்கள் கோவிலுக்குள் தஞ்சம் அடைவர்.

கோவில் கதவுகள் அடைக்க படும்.

மக்கள் பாதுகாக்க படுவர்.

இரண்டாவது

 மற்ற காலங்களில் உழைக்கும் வர்க்கம் வேலை முடிந்து (இப்போது போல் டி .வி எல்லாம் இல்லாத காரணத்தினால் ) கோவில் மணடபத்தில் ஆடல், பாடல்,மக்களுக்கான நீதி கதைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்  பட்டு அவர்கள் ரிலாக்ஸ் செய்யும் இடமாக அமைந்தது.

அதோடு சேர்ந்து கொண்டதுதான் கடவுள் வழிபாடு.

2023/03/08

Women's day

 why  should we celebrate women 's day ?

SHOULD WE ?????????????

நாம் கொண்டாட வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல சரித்திரத்தை சற்று திரும்பி பார்க்க வேண்டும்.

ஆங்கிலேயர் வழக்க படி பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது.

அவர்கள் வேலைக்கு போக கூடாது.

சம்பாதிக்க கூடாது.

அவர்களுக்கு என்று தனி பெயர் கூட கிடையாது.

Mrs .henry 

Mrs  .david 

பிள்ளை பெறுவது  மட்டுமே அவள் வேலை.

10 குழந்தைகள் பிறந்தால் 8 இறந்து விடும்.

அதன் துக்கம் கருதி கருப்பு நிற உடையில்தான் பாதி காலத்தை கழிப்பர்.

அடுத்த குழந்தைக்கு ஸ்வெட்டர் பின்ன ஆரம்பித்தது விடுவர் .

இப்படித்தான் இருந்தது.மிக பெரிய போராட்டத்திற்கு பிறகே அந்த பெண்கள் ஒவ்வொரு உரிமையாக பெற  தொடங்கினர் .

ஆனால்   நம் நாட்டில் அப்படி அல்ல. புராண காலத்தில் இருந்தே பெண்களுக்கு சம உரிமை இருந்தது.தனக்கு வர போகும் கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை ( சுயம்வரம்) இருந்தது.காந்தர்வ கல்யாணம் என்ற வழக்கம் இருந்தது.

( இன்றைய living  together ).

நெசவு ,உழவு,என வேலைகளில் சம பங்கு இருந்தது.

கணவனை இழந்தாலும் கம்பிரமாக வாழ்ந்தனர்.

பொட்டு அழிப்பது,வெள்ளை உடை என்பதெல்லாம் மிக மிக பிற்காலத்தில் வந்தது.என் பாட்டிகள் எல்லாம் நிற புடவைகள் ,நகைகள் போட்டுக் கொண்டு மங்களமாக இருந்தனர் .

வட நாட்டில் ஒரு குலத்தில் ,கணவனை இழந்த பெண்ணிற்கு பேரன் தாலி கட்டும் வழக்கம் உண்டு. ஏன் எனில் அவள் விதவை கோலத்திற்கு அர்த்தமில்லாமல் போய் அவள் சுமங்கலி போல் வாழவே.

அரசன் வரும்போது பட்டத்து அரசியும் உடன் வருவதே வழக்கம்.

இப்படி எல்லா விதத்திலும் பெண்களை சிறப்பாக போற்றிய நம் நாட்டிற்கு இந்த ஆங்கில நாட்டு பழக்கம் தேவையே இல்லை.

எதையும் ஆங்கில நாட்டை காப்பியடித்தே பழகி விட்டோம்.

எல்லா நாளும் மகளிர் நாளே.

வாழ்க அனைவரும் ,

2023/03/06

Holi festival

 ஹோலி பண்டிகை .

மதம் என்று சொல்லுங்கள்.இல்லை என்ன பெயரில் சொன்னாலும் சொல்லுங்கள்.

நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய அறிவியல் வாழ்வியல் முறைதான் பண்டிகைகள்.

இன்று ஹோலி .

என்ன காரணம்.?

இன்று சென்னையிலும் பெங்களுரூவிலும் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன.

ஒரு வைரஸ் காய்ச்சல்.

என்ன காரணம் ? என்ன வைரஸ்? மருத்துவ துறை ஆராய்ச்சி செய்கிறது.

ஆனால் நம் முன்னோர்கள் இது போன்ற காய்ச்சலை தடுக்கத்தான் மாரியம்மன் பண்டிகை என்று செய்து ஊரெங்கும் வேப்பிலையும் மஞ்சளும் கலந்த தண்ணீரை  எல்லோருக்கும் ஊற்றினார்கள்.

வடநாட்டில் இந்த முறை  சற்று மாறுபட்டு கலர் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.

கலர் மாறினாலும் நோக்கம் ஒன்றுதான்.

வைரஸ் காரணியை விரட்டி அடிப்பது.

காரணம் காரியம் மறைந்து ஒரு கோலாகல கொண்டாட்டமாகவே மாறி விட்டது.

அதற்கு ஒரு சொதப்பலான பக்தி(  ?????? )கதை.

பாமர மக்களை மூளை சலவை செய்வது.

இப்போது எல்லா மக்களும் மூளை சலவையை  விரும்பி செய்து கொள்கிறார்கள்.

மதத்தின் உண்மை அறிவியல் பின்னணி மறைந்து ( அல்லது  மறைக்கப்பட்டு )

எல்லாம் வெறும் ஆடம்பரம் ,ஆரவாரம் , பகட்டு என்று மாறி விட்டது.

இன்னும் நிறைய எழுதலாம் .ஆனால் என்ன பலன் ??????????????

2023/03/01

Maaza ad and my father-in-law

 மாஷா குளிர் பான விளம்பரத்தில் வரும் அமிதாப்பை பார்க்கும் போதெல்லாம் என் நினைவில் தோன்றும் காட்சி  இது.

நாங்கள் மேட்டூரில் இருந்த போது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர்.அப்போது கோகோ ,போன்ற குளிர் பானங்கள் பாட்டிலில் வரும்.

உறவினர்கள் ,விருந்தாளிகள் யார் வந்தாலும் ஆளுக்கொரு பாட்டில் ஸ்டராவுடன் கொடுப்பது வழக்கம்.

அப்படி ஒரு முறை வந்தவர்களுக்கு கொடுக்கும் போது மாமனாருக்கும் ஒரு பாட்டில் கொடுத்தோம்.அதை அவர் அவ்வளவு ரசித்து குடித்தார்.விருந்தினர்கள் கிளம்ப bye சொல்லும்போதும் நின்று கொண்டே அந்த பாட்டிலோடே இருந்தார்.

எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

வயதானவர் என்றாலும் இப்படி ஆசை இருக்கும் என்று நினைக்கவே இல்லை.வீட்டில் குழந்தைகள் நினைத்த நேரத்தில் பிரிட்ஜை திறந்து எடுத்து குடிக்கும் போது பார்த்து கொண்டுதானே இருந்திருப்பார்.ஆசை இருந்திருக்கும்.அவரை கவனிக்க தவறி விட்டோம்.

அவருக்கு கொடுக்க கூடாது என்றில்லை.

தோன்றவில்லை.

அவருக்கு நல்ல உணவு தர வேண்டும். மருந்து சரியாக தர வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்த நான் ,இந்த விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறேன்.அமிதாப்பை பார்க்கும் போதெல்லாம் மாமனார் நினைவு வந்து குற்ற உணர்ச்சியும் வருகிறது.

அவராவது கேட்டிருக்கலாம்.கேட்க சங்கட பட்டிருக்கலாம்..

ஐயா என்னை மன்னித்து விடுங்கள்.

2023/02/20

widow

 இந்த வார நீயா நானா வில் விவாதிக்க பட்ட பொருள் single parent .

கணவனை இழந்த பெண்கள் பற்றி.(single parent )மனைவியை இழந்த கணவன்கள் பற்றி பேச்சே இல்லை.

விதவைகள் என்று பேசினால் எதிர்ப்பு வரும் என்பதால் இப்படி தலைப்பு.

தமிழில்தான் '' விதவன் '' என்ற சொல் இல்லை.

பேசிய பெண்கள் அனைவரும் தங்களின் கஷ்டங்களை, தங்களுக்கு உடன் பிறந்தவர்கள்,சொந்தங்கள் தரும் பிரச்சினைகள் பற்றியும் ,சமுதாயத்தில்,வேலை பார்க்கும் இடங்களில் படும் இன்னல்களையும் பேசினார்கள்.

நானும் ஒரு தனி மனிதிதான்.என்னை விதவை என்று சொல்லிக் கொள்ளவே மாட்டேன்.

எவனோ ஒருவன் என் பெற்றோரிடம் பேரம் பேசி வரதட்சினை ஒத்து வந்தால் பெரிய தியாகி போல் தாலி கட்டுவான்.வரதட்சினை பேரம் படியாவிட்டால் பக்கத்து வீட்டு பெண்ணை பெண் பார்க்க போய்விடுவான்.

இப்படிப்பட்ட பிசினஸ் திருமணத்தை பற்றிய ஒரு வெறுப்புணர்வு எப்போதுமே எனக்கு உண்டு.

அந்த உத்தம புருஷன் போய் விட்டால் ஒரு பெண்ணுக்கு எத்தனை கொடுமைகள்?

அவள் வெளியே வர கூடாது..குடும்ப உறுப்பினர் யாராவது வெளியே போகும்போது அவள் அவர்கள் பார்வையில் படாத வாறு எங்காவது ஒளிந்து கொள்ள வேண்டும்.

எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள கூடாது.

அது வரை '' ஆஹா அவரின் படிப்பென்ன?

வேலை என்ன?

திறமை என்ன?

சாமர்த்தியம் என்ன?

ஆளுமை என்ன ?

சம்பாத்தியம் என்ன ?'' ''

என்று இமயமலையின் உச்சியில் வைத்து கொண்டாடிய அனைவரும் அப்படியே தலை கீழாக மாறி 

''உனக்கு என்ன தெரியும்?

நாங்கள் சொல்வது போல்தான் நீ நடக்க வேண்டும் என்று கட்டளை இடுவதென்ன ?

3, 4 வயது குழந்தை கூட என்னை இளக்காரமாக ,கேவலமாக பார்த்து முகவாய்  கட்டையை தோளில் இடித்துக் கொண்டு சென்ற கொடூரம் என்ன?

ஒரு நல்ல உடை உடுத்தி வந்தால் அந்த தாயே வெறிக்க பார்த்த அவலம் என்ன ?

என் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட நீதான் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்ற அகங்காரம் என்ன?

எத்தனை கொடுமைகள்?

எத்தனை சிறுமைகள்?

எத்தனை அவமானங்கள்?

இன்னும் மாறவில்லையா என்று நெறியாளர் ஒன்றும் அறியாதவர் போல் கேட்கிறார்.

நகரங்களிலும் இப்படியா என்று வியக்கிறார்.

படித்த குடும்பம்.

நாகரிகமான குடும்பம் .என்ற குடும்பத்தில்தான் கொடுமைகள் அதிகம்.

போதும் பட்டது என்று வீட்டிற்குள் முடங்கும்  நிலைக்கு தள்ளும் இந்த சமுதாயம்.

போராட்டம்.

போராட்டம்.

மனம் சலித்து விட்டது.

உறவை வெறுத்து விட்டது.

கலா கார்த்திக்

2023/02/19

House rent

 வீட்டு வாடகை 40 % உயர்ந்துள்ளதாக தரவுகள் சொல்கின்றன.

வீட்டு விற்பனையும் உயர்ந்துள்ளது.

ஆனால் விலைதான் பயமுறுத்துகிறது.

வீட்டு கடன் வட்டியும் உயர்ந்துள்ளது.

சாமான்ய மக்களின் கத்தி?????????

2023/02/18

vaththi and so

இப்போதைய படங்கள் : ஒரு விமர்சனம் : 

ஜெய்பிம் 

வாத்தி 

கர்ணன் 

அசுரன்

அயலி 

இந்த படங்களில் சொல்லப் பட்ட கருத்துக்களும் காட்சிகளும் 2023 ல் நடக்கிறதா?

or ,அட் தி லீஸ்ட் 2000 த்திலாவது நடக்கிறதா?

என் அம்மா 1933 ல் பிறந்தவர் .

ஆங்கிலேய அரசு.

வீடு வீடாக சென்று பெண்பிள்ளைகளை இழுத்து வந்து பள்ளியில் சேர்த்தனர்.சில பெண்கள் விருப்பம் இல்லாமல்தான் பாதியில் படிப்பை நிறுத்தினர்.

என் அம்மாவின் தோழிகள் அத்துணை பேரும் அரசு பணியில் சேர்ந்தனர்.

என் உறவு பெண் ஒருவர் 14 வயதில் கணவனை இழந்தார் .

ஆனால் அவருடைய அப்பா அந்த பெண்ணை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து அரசு பணியில் சேர்த்தார்.

இதெல்லாம் நடந்தது 1950 களில் .

என்னவோ ' பொட்டை பிள்ளையாம் .'படிக்க கூடாதாம்.வேறு ஊருக்கு போய் படிக்க கூடாதாம்.

19ம் நூற்றாண்டின் கதை இது.இதை இப்போது எடுத்து ?????????

இந்த காலத்து பெண்கள் (சிறுமிகள்) விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து ,தலித்துகள் உரிமைகள் மறுக்க படுகின்றன.கல்வி கற்க தடை.

எங்கோ ஒரு இரண்டு சம்பவங்கள் நடக்கலாம்.ஆனால் இன்றைய நிலை என்ன????

90% பட்டியலினத்தவர் நன்கு படித்து மிக மிக நல்ல வேலையில் இருக்கின்றனர்.அவர்களுடைய வாழ்க்கை தரம் மிக மிக உயர்ந்து உள்ளது.

ஜெய் பீம் படத்தில் வருவது போல் எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளன???

சரி .RIGHT .அப்படி அவர்களின் பரிதாப நிலை இது .அவர்களின் கஷ்டங்களை தோலுரித்து காட்டுகிறேன் பார் என்று ஆர்ப்பரித்த டைரக்டரும், அதில் நடித்த அந்த நடிகர்களும் பாதிக்க பட்டவர்களுக்கு என்ன உதவி செய்தனர்?

ஒரு வீடு கட்டி கொடுத்தாரா?

ஒரு 4 பையன்களை தத்து எடுத்து படிக்க வைத்தனரா?

பலரின் நன்கொடையில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அவர்களின் உழைப்பில் வரும் நல்லவைகளை தானே செய்தது போல் தம்பட்டம் அடித்து கொள்ள மட்டும்தான் செய்கின்றனர்.

அதுவும் அல்லாமல் நாட்டு நடப்பு என்ன என்பதே கூட தெரியவில்லை இவர்களுக்கு.

ஒரு படத்தில் ,'' இலவச கல்வி வேண்டும்.இலவச மருத்துவம் வேண்டும் '' '' என்று ஒரு நாயகன் முழங்குகிறார்.

அட கொடுமையே...அரசு பள்ளிகளும், அரசு மருத்துவ மனைகளும் இருப்பதும் இவர்களுக்கு தெரியாதா????

நாளைக்கு சி .எம் ஆக வேண்டும் என்ற கனவில் மிதப்பவர்களுக்கு இது கூட தெரியவில்லை.இது போன்ற அபத்தங்கள் கொட்டி கிடக்கின்றன.

இதில் பரிதாபம் என்ன என்றால் இதை பார்க்கும் ஒரு இளைஞர் கூட்டம் ,கத்தி எடுத்து கொண்டு அலைவதும்,பஸ் கண்ணாடியை உடைப்பதும்,நாங்களும் காதலிக்கிறோம் என்ற கருமத்தை செய்து விட்டு ஆணவ கொலையில் உயிரை விடுகின்றன.

அல்லது ,காதலிக்கும் போது தெரியாத பொருளாதார நிலை ,கல்யாணம் செய்த பின் அந்த பெண்ணுக்கு தெரிய அவள் அவனை விட்டு வேறு ஒருவனுடன் ஓடுகிறாள்.

லவ் டே படத்திலும் செல் போன் தான் பிரசினை.ஆனால் '' ''நீ எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உறவில் இரு.நானும் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உறவில் இருக்கிறேன் ''என்று சொல்லும் படம் கொண்டாட படுகிறது.

ஆனால் செல் போனால்  எத்தனை தீமைகள் என்று சொன்ன ஒரு படத்தை ஒரு ஆங்கில நாளிதழ் அது எப்படி அப்படி படம் எடுக்கலாம் .எங்கள் இளைய சமுதாயத்தின் சுதந்திரம் என்ன ஆகும் என்று கதறுகிறது. 

பி .கு :இந்த பதிவிற்கும் முகத்தை காட்டிக் கொள்ள தைரியமில்லாத ஒரு ஐந்து நான் ''old fashioned '' என்று கருத்திடும்.

உண்மை என்ன என்று யோசித்து பாருங்கள்.

இளைய சமுதாயத்தை உணர்சசி பூர்வமாக தூண்டி விட்டு அவர்களின் எதிர்காலத்தை கெடுத்து நீங்கள் 40 கோடி லாபம் சம்பாதிக்க வேண்டாம்.

2023/02/04

The great Indian Kitchen

 இந்த படத்தின் மலையாள மொழி யிலேயே பார்த்தேன்.

அப்போதே எழுத நினைத்தேன்.

இப்போது தமிழ் வடிவம் வந்துள்ளது.

எல்லோரும் பாராட்டும் இந்த படத்தை பற்றி எனக்கு மாறுபட்டகருத்துக்கள்.

ஒரு ஆணாகட்டும்.பெண்ணாகட்டும்.இவர்களுக்கு இந்த வேலை என்று வயது, உடல் வாகு ,உடல் வலிமை ,மன நிலை என்பதை பொறுத்துதான் நம் முன்னோர்கள் விதி முறைகளை வகுத்தனர். .இவர்களால் இந்த வேலைகளை செய்ய முடியும் என்று ஆராய்ந்து அறிந்து வேலைகளை ஒதுக்கினர்.

இதில் ஜாதி, மதம் போன்ற பேதங்கள் வரவில்லை.

ஜெனட்டிக் ,dna போன்ற விஷயங்கள் கணக்கில் எடுத்து கொள்ள பட்டன.

பெண்ணுக்கு என்று சில உடல் கட்டுப்பாடுகள் இருக்கிறது.

அதை மீறி நானும் ஆணுக்கு சமம் என்று உழைப்பை மேற்கொண்டவர்களில் பலர் தோல்வியையே கண்டனர்.

ஒரு பெண் மட்டுமா திரும்ப திரும்ப ஒரே மாதிரி வேலைகளை செய்கிறாள்?

ஆணும்தான் ஒரே ரொடீன் வேலைதான்.

தினமும் ஆபிஸுக்கு ஓடுவது.

பஸ் பிடித்து வீட்டிற்கு வந்து அலுத்து போய் களைப்பாய் உட்காருவது .

அடுத்த நாள் மீண்டும் ஓடு.

நான் ஆசிரியையாக இருந்தவள்.

தினமும் 5 மணிக்கு எழுந்து சமைத்து கார்த்தி செந்திலுக்கு சாப்பாடு கட்டி ,பள்ளிக்கு அனுப்பி விட்டு ,கணவரை அனுப்பி விட்டு ,அவசர அவசரமாய் ரெடியாகி பள்ளிக்கு போய் அதே poem ,அதே lesson ,அதே ஜோக்ஸ் ,மாத தேர்வு,விடைத் தாள் திருத்துதல்,+2 விடைத்தாள் திருத்த 50 கி.மீ பயணம் செய் என்று எத்தனை வருடங்கள்????????

பெண்தான் சமைக்க வேண்டும்.பெண்தான் எல்லா வீட்டு வேலைகளையும் கவனித்து கொள்ள வேண்டும்.குழந்தைகளின் homework பார்க்க வேண்டும்.

நான் பெண் என்பதால் நான் மட்டும்தான் செய்ய வேண்டுமா என்று ''போர்க்கொடி '' உயர்த்தி இருந்தால் என்ன நடந்திருக்குமோ தெரியாது.(நான் பெண் என்றாலும் 120 ஆசிரியர்கள் மத்தியில் நம்பர் 1 என்று சாதித்து காட்டியுள்ளேன்.)

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் .குழந்தைகள் மன நிம்மதி இழந்திருப்பார்கள். 

ஆஹா தியாகம் , அன்பு என்ற வார்த்தையில் சுய மரியாதையை அடகு வைக்கிறீர்கள் என்று வாதிடுகிறார்கள்.

நானும் பெண்ணுரிமை போராளிதான்.ஆனால் குடும்பம்,குழந்தைகள் என்று வந்த போது எனக்கு மகன்கள் மட்டுமே சர்வம்.

இந்த திரை படத்தில் அந்த பெண் தாய் ஆவது பற்றி பேசவில்லை.

சரி அப்படி அந்த பெண் வெளியே வந்து சாதித்தது என்ன?

ஒரு நாள் தீராத தனிமை.

அந்த ஆண்  எந்த விதத்தில் பாதிக்க பட்டான்?

அவனுக்கு அடுத்த கல்யாணம்.அதே பழைய வாழ்க்கை.

இன்று எத்தனை டைவர்ஸ்.

நீதிமன்றம் சொல்கிறது.உங்கள் ஈகோவிற்கு குழந்தைகளை பலி கொடுக்கிறீர்கள் என்று.

ஒரு குடும்பம் என்று வரும்போது ஆணும் சரி.பெண்ணும் சரி.பல விஷயங்களை விட்டு கொடுத்தால்தான் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

நான் கிரிஞ்சுதான்.

பூமர்தான்.

ஆனால் நான் பழம் பட்டிக் காடாகவே இருக்க விரும்புகிறேன்.

2023/01/31

Budget 2023

 இன்று பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்.

நாளை பட்ஜெட் .

திக்.

திக்.

வெடி குண்டா?

ஆடம் பாம்பா ?

கிண்டிய அல்வாவா?

பாலா?

பாஷாணமா ?

எப்போதும் ஏழைகளுக்கும் 

கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மட்டுமே உண்டான சலுகைகள் நிறைந்த பட்ஜெட் ஆகத்தான் இருக்கிறது.

இந்த மத்திய தர வர்க்கம் திண்டாட்டத்தில்தான்.

அதிலும் இளைஞர்கள்தான் பாவம்.

நிசசயம் அவர்களுக்கு உண்டான பட்ஜெட் ஆக இருக்க வேண்டும்.



2023/01/15

Bogi

 போகி பண்டிகை என்றவுடன் பழையன கழிதல் என்று எது எது கையில் கிடைக்கிறதோ அதையெல்லாம் தீயில் போட்டு எரித்து ஊரே புகை மண்டலம்தான்.

உண்மையில் போகி யின் காரணம் என்ன?

அப்போது மண்பானைகள்,சட்டிகள்தான் சமையல் சாமான்கள் .அதன் வீரியம் ஒரு வருடம்தான்.அதே போல் முறங்கள். பாய்கள் ,இன்ன பிற பொருள்களும் வருட பொருள்கள்தான்.அந்த பொருள்களைத்தான் அப்புற படுத்துவார்கள்.

தங்க தட்டு,வெள்ளி டம்பளர் எல்லாம் எரித்தார்களா?

மிக மிக முக்கியமாக பழைய தானியங்கள் (நெல்,ராகி,பருப்பு )இவை எல்லாம் ஒரு வருடம்தான் சுவையுடன் இருக்கும்.

அதனால் அவைகளை சேமிப்பு கிடங்கில் இருந்தது வெளியே எடுத்து விட்டு அந்த இடத்தில் இயற்கை பூச்சி கொல்லிகளான வேப்ப இல்லை,பூலாப் பூ ,ஆவாரம் பூ இவற்றிற்கு ஒரு படுகை போல் போட்டு அதன் மேல் புது தானியத்தை கொட்டி வைப்பார்கள் .

அதே போல் காற்று மாசு பாட்டை கட்டு படுத்த இவைகளை வீட்டில் அங்கங்கே கட்டுவார்கள்.இது காப்பு கட்டு என்றானது.

அதே போல் தன நிலத்தில் விளைந்த காய்கறிகள் எல்லாவற்றையும் சேர்த்து பொங்கல் குழம்பு வைத்து புதுஅரிசியில் சமைத்து பொங்கி அன்று சாப்பிடுவார்கள்.Actually its a 'THANKS GIVING DAY ''

அடுத்த நாள்தான் இனிப்பு பொங்கல் .

3ம் நாள் தங்களுக்கென ஆண்டு முழுதும் உழைத்த கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாடுகளை அலங்கரித்து,நல்ல உணவு கொடுத்து அவைகளுடன் விளையாடுவார்கள்.

அதுவே பின்னாளில் மஞ்சு விரட்டு,எருதாட்டம் என்ற பல பெயர்களில் இன்று ஜல்லிக் கட்டாகி விட்டது..சிறு வயதில் என் தாத்தா வீட்டில்தான் இதெல்லாம் நடக்கும்.

களத்தில் பாத்தி கட்டி மாடுகளை அவிழ்த்து விடுவார்கள்.அதன் பாய்சசல் கொண்டு நிலத்தின் தன்மை, நீரோட்டம் என்பதை அளவிடுவார்கள்.

முளைப்பாரி கட்டி அந்த வருடம் எந்த பயிர் பயிரிட்டால் நல்ல விளைசல் தரும் என்பதை கணக்கிடுவார்கள்.

பொங்கல் பொங்கும் திசை,அளவு கொண்டு மண்ணின் தரத்தை நிரனயம் செய்வார்கள்.

என் தாத்தா கையில் ஒரு பேப்பருடன் உட்கார்ந்து எதையோ கணக்கிடுவார்.ஒரு வருடம் கூட அவர் விவசாயம் பொய்த்ததில்லை.

அந்த அளவிற்கு விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்தார்கள். அதுவே பொங்கல் பண்டிகை.

A Perfect planning .

2023/01/11

Fans? Fanatics? Mentals? Terrorists? Barbarians?

 Thunivu and varisu :

என்ன அராஜகமான ,அவமானமான ,அசிங்கமான ,அருவருப்பான செயல்கள்?

ரசிகர்கள் என்ற போர்வையில் ''என்ன வேண்டுமானாலும் செய்வோம். எப்படி வேண்டுமானாலும் கத்துவோம்.எப்படி வேண்டுமானாலும் ஆடுவோம் ''

என்று யாருக்கும் அடங்க மாட்டோம் என்று இப்படி ஒரு கூட்டம் ஆடுகிறதே?இவர்களை நெறி  படுத்த வேண்டாமா?

கட்டு படுத்த வேண்டாமா?

சட்ட படி தண்டிக்க வேண்டாமா?

தண்ணீர் லாரி மேல் ஏறி ஆடிய ஒரு .........கீழே விழுந்து உயிர் போய் விட்டது '

அதற்கும் எங்கள் கூட்டம் ஒழுங்கு.அவர்கள்தான் இப்படி ..இவர்கள்தான் அப்படி என்று நியாய படுத்துதுகள் சில ஈன ஜன்மங்கள். 

அந்த காட்டு கூட்டத்தில் இருந்து இங்கும் இந்த கூட்டத்தில் இருந்து அங்கும் ஊடுருவி இப்படி செய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறதே?

இதில் நாடாளும் ஆசை வேறு?

இந்த barbaric ,uncultured ,uncivilized கூட்டம் வந்தால் நம் நிலைமை என்ன????????????

நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறதே .