About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2023/07/04

maamannan2

 மாமன்னன் மேலும் சில பழைய நினைவுகளை கிளறி விட்டது.

எனக்கு ஒரு பெரியம்மா இருந்தார்கள். ரவி வர்மா ஓவியம் போல் அவ்வளவு அழகு.வீட்டிற்கு வருவார்கள். அம்மாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அப்பாவின் வண்டி வரும் சத்தம் கேட்டால் போதும். போய் கதவிற்கு பின்னால் நின்று கொள்வார்கள்.அப்பா கேட்பார்.

''என்னங்க நல்லா இருக்கீங்களா? ''

ஹும்   என்று ஒரு 0 டெசிபலில் பதில் வரும்.

அட கதவிற்கு பின்னால்தானே நிற்கிறார்.  உட்காரலாம் அல்லவா . நின்று கொண்டேதான் இருப்பார்.என் அப்பா ஆங்கிலேயரிடம் படித்ததால் மிகவும் முற்போக்கு வாதி. என்ன சொன்னாலும் சரி.நின்று கொண்டே இருப்பார் அந்த பெரியம்மா.

இது 1960,70 களில் .

அடுத்த கதை.இது 1987.

ஒரு வீட்டிற்கு சென்று இருந்தோம்.அந்த வீட்டு மருமகள் ஒரு டாக்டர்.கான்வென்டில் படித்தவர்.

ஆனால் என் பெரியம்மா போல் இந்த பெண்ணும் கதவின் பின்னால் !!!!!!!!!!!!!!!.

எனக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.

இந்த காலத்தில் இப்படியா?

இப்படி படித்த குடும்பத்தில் இப்படி ஒரு பழக்கமா?

இது அடிமைத்தனமா??????????

அது அப்படி அல்ல.

காலங் காலமாக வரும் பழக்கம்.

அவ்வளவுதான்.

அதே போல்தான் என் மாமனார் வீட்டிலும்.யாருமே என் மாமனார் எதிரில் யாருமே நிற்க மாட்டார்கள்.தேவர்மகன் போல் 4 மகன்களும் பின்னால்தான் நிற்பார்கள்.

நான் அதெல்லாம் தெரியாமல் மாமனார் முன்னாள் உட்கார்ந்து கொண்டு ஒரே அலப்பறை.எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம் .இது என்னடா இது இந்த பெண்????????எல்லா ஆண்களிடத்திலும் சகஜமாக பேசுது?

கிராமத்து பெண்கள் ''இது என்னடா .இந்த பெண் கொழுந்தனை பேர் சொல்லி கூப்பிடுது.''என்று என்னை சுற்றி நின்று கேள்விகள்.

இதெல்லாம் அடிமைத்தனம் என்று யாருமே நினைக்கவில்ல .

அப்படி இருக்க மாமன்னனின் அடிமைத் தனம் பற்றி பேச என்ன இருக்கிறது.

2023/07/02

mamannan

 மாமன்னன் படம் பார்க்கவில்லை.ஆனால் வரும் விமர்சனங்களை வைத்து சொல்கிறேன்.

இந்த ஜாதி கொடுமைபற்றி படம் எடுப்பது அவர்களுக்கு ஏற்பட்ட அரிப்பை சொரிந்து கொள்ளத்தான்.

என் தாத்தாவும் ஜமீன்தான்.சேலத்தில் ஊர் கவுண்டர் என்று சொல்வார்கள்.

ஆண்ட பரம்பரை ,நீண்ட பரம்பரை என்று கூவவில்லை.

ஊரில் ஒரு சிறிய கோட்டை கூட இருந்தது.இப்போது சிதிலமடைந்து என் தம்பி அதை இடித்து விட்டான்.( இப்போதும் அவன்தான் ''''ஆண்டு '''[கொடுமை] கொண்டிருக்கிறான்.இன்றும் முதல் மரியாதை,ஊர் பஞ்சாயத்து என்ற வழக்கம் இருக்கிறது.

என் தாத்தா காலத்தில் ஊர் நிலம் முழுக்க அவருடையது.குதிரைகள் ,வில் வண்டி என்று உண்மையான ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார்.

நான் அவரை பார்த்ததில்லை.

என் தந்தை சிறுவனாக இருக்கும் போதே இறந்து விட்டார்.

ஊர் நிலம் முழுதும் அவருடையது என்றாலும் அவர் இறக்கும் பொது விட்டு சென்ற நிலம் 20 ஏக்கர்தான்.

ஏன் என்றால் சோழர் மன்னனின் சாசனப் படி சிறிது சிறிதாக நிலங்களை குடி மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்.

சேலம் மாவட்டம் முழுதும் அவர் ஆட்சி .அவரது பட்டயம் கூட எழும்பூர் மியூசியத்தில் இருப்பதாக குறிப்பு இருக்கிறது.ஆனால் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.[ உண்மையா இந்த விஷயங்கள் என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்]

எதற்கு இந்த பழைய கதை என்றால் நான் அறிய எங்கள் ஊரில் இந்த படத்தில் வருவது போல் எந்த நிகழ்வும் இல்ல.வேறு எங்காவது இருந்திருக்குமோ தெரியாது. என் தாத்தா மிகவும் நல்லவராக இருந்திருக்கிறார். அடுத்து என் பெரியப்பா இன்னும் நல்லவர்.அதிர்ந்து கூட பேச மாட்டார் .ஆனால் ஊரே அவருக்கு கட்டுப்படும்.எல்லா ஜாதியினரும் அவர் சொல்லுக்கு கட்டு பட்டனர்.இப்போது என் தம்பி.எந்த விஷயமாக இருந்தாலும் '' தலைவர்'' வீட்டிற்குத்தான் வருகிறார்கள்.எனக்கே சிரிப்பாக இருந்தது.

தலித் மக்கள் என்று இல்லை. வயலில் வேலை செய்யும் எல்லோரும் அவ்வளவு விசுவாசமாகத்தான் இருப்பார்கள்.

''பாசமாக இருப்பார்கள்.நான் வருடத்திற்கு ஒரு முறை அங்கு செல்வேன்.எல்லோருடைய கண்களிலும் அப்படி ஒரு பாசம் தெரியும்.

சரி.இன்றைய படத்திற்கு வருவோம்.

அப்படியே ஜாதிக கொடுமை இருக்கிறது என்றால் இவர்கள் என்ன செய்ய வேண்டும்? அந்த ஊர்களுக்கு சென்று அனைத்து மக்களையும் கூட்டி எல்லோரும் மனிதர்களே.உறவாய் இருப்போம் என்ற முயற்சி செய்யலாமே.இப்போது திரௌபதி கோவில் விவகாரத்தில் ஒரு டி .வி அந்த ஊர் மக்களை பேட்டி கண்டது. ''நாங்கள் தாயாக ,பிள்ளையாக'' உறவாகத்தான் இருக்கிறோம்.எங்களுக்குள் எந்த பிரஸ்ஸினையும் இல்லை. சிலர்தான் இதை ஊத்தி பெரிதாக்குகிறார்கள் ''என்றுதான் சொன்னார்கள்.

மறைந்து விட்ட ,அல்லது மறைந்து கொண்டிருக்கிற ஒரு விஷயத்தை எதற்கு பூதாகாரமாக்குகிறார்கள்.

நான் என்ன வேண்டுமானாலும் சொல்வேன்.

நான் யார் தெரியுமா என்ற மமதைத்தான் .நிறுத்துங்கள் இந்த ஈன செயலை.இன்றைய தலை முறைக்கு தெரியாத ஒன்றை சொல்லி அவர்களை தூண்டி  விட்டு உங்களுக்கு என்று ஒரு கூட்டத்தை கூட்டி கொண்டு நீங்கள் நன்றாக சம்பாத்தித்து கொண்டு அந்த இளைஞர்களின் வாழ்வை வீணடிக்காதீர்கள்