About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/07/28

கார்த்தியின் ஆசிரியர்
என் 30 வருட காதலர்.
செந்திலின் ஆஸ்தான project guide = = அப்துல் கலாம் .
பின் வருவது :
அவருக்கு 16.08.2014 ல் அவருக்கு நான் அனுப்பிய மெய்ல் :

o apj
மதிப்பிற்குரிய ஐயா ,
என் பெயர் கலாகார்த்திக்.இந்த மடலை முழுவதும் படியுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் அன்னை இந்திரா காந்திக்கு அறிவியல் ஆலோசகராக இருந்த காலத்தில் இருந்தே நான் உங்கள் பைத்தியம்.அமெரிக்கா தங்களை அழைத்த போது போக மறுத்து இந்தியாவிற்கு பணி  செய்த உங்கள் உறுதியைக் கண்டு தங்கள் மேல் கொண்ட காதல் வெறியாகிப் போனது..எனக்கு 1980ம் ஆண்டு திருமணம் நடந்தது.
என் கணவரிடம் சொல்வேன்.
''உங்களுக்கு முன்பு நான் A P J வை பற்றி தெரிந்திருந்தால் அவரைத்தான் திருமணம் செய்து கொண்டிருப்பேன் '' என்று.
நான் +2 ஆங்கில ஆசிரியையாக பணியாற்றினேன்.அப்போது Railway reservation form நிரப்ப வேண்டிய பாடம் நடத்த வேண்டும்.
என் படிவம் இப்படித்தான் இருக்கும்.
1.A P J அப்துல்கலாம் .அறிவியலாளர் வயது 50
2.S .கார்த்திகேயன் .asst வயது 16
3.S .செந்தில்குமார் asst  வயது 14.
என் பிறந்த நாளன்று மாணவர்களிடமிருந்து எந்த பரிசையும் ஏற்கமாட்டேன் என்று மாணவர்களுக்கு தெரியும்.
ஆனால் நான் மறுக்க முடியாத பரிசு ஒன்று உண்டு என்பதும் அவர்களுக்கு  தெரியும்..அதுதான் தங்கள் புகைப் படம்.
''மிஸ் .உங்கள் lover உடைய புகைப்படம்'' என்று சொல்லி தருவார்கள்.
எனக்கு இரு மகன்கள். அவர்களும் என்னைப் போல் உங்கள் பைத்தியம்தான்.மூத்த மகன் ச .கார்த்திகேயன்.
அண்ணா பல்கலை கிண்டி கல்லூரியில் 1998 ம் ஆண்டு சேர்ந்தான். 1999ல் நடந்த அறிவியல் மாநாட்டிற்கு தாங்கள் வந்த போது தங்கள் பெயரை பதிவு செய்யும் போது அவன் விரல்கள் கணினியில் நடனமாடிய வேகத்தைக் கண்டு தாங்கள் அதிசயித்து பாராட்டியது அவனுக்கு கிடைத்த 100 கோடி ரூபாய் பரிசு.தன்னுடைய பைத்தியத்திற்கு நாம் இப்படி ஒரு பாராட்டை தருகிறோம் என்பது தங்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.
அவன் 2002ல் 4ம் வருடம் படிக்கும் போது தாங்கள் அவனுக்கு பாடம் நடத்தினீர்கள்.என்ன ஒரு சந்தோசம்.
''ஏனப்பா லேட் '' என்று கேட்டால்
'அவர்தான்மா வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்'' என்பான்.
எங்களுக்கு அவர் என்றால் அது நீங்கள் மட்டுமே.அவனிடம் சொல்வேன் ''அவரிடம் ஒரு ப்யூன் வேலையாவது வாங்கி அவரிடம்தான் வேலை செய்ய வேண்டும்' என்று.ஆனால் அதிர்ஷ்டம் இல்லையே.தாங்கள் ஜனாதிபதியாகி விட்டீர்கள்.எல்லோரும் சந்தோஷப் பட்ட போது நாங்கள் மூவரும் (நான்,கார்த்தி,என் இளைய மகன் செந்தில்குமார்) மட்டும் வேதனையில் நின்றோம். ஒரு Godfather ஐ இழந்த வலி.
என் இளைய மகன் செந்தில் Aeronautics படிப்பு எடுத்ததும் உங்களால்தான்.தன project guide  நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று வெறியாக இருந்தான்.நீங்கள் டெல்லி சென்று விட்டீர்கள்.
'' '' ''இனி வருவதுதான் சோகத்திலும் சோகம்.என் அன்பு மகன் கார்த்தி 2005ம் ஆண்டு ஒரு விபத்தில் இந்த உலகை விட்டு  மறைந்து விட்டான்.'' '' ''
உங்களுக்கு இப்படி ஒரு ரசிகன் இருந்தது தங்களுக்கு தெரிய வேண்டுன் என்றுதான் இந்த மடலை நான் எழுதுகிறேன். வேறு எந்த சுயநலமும் இல்லை.2002ல் இதை எழுதியிருந்தால் எல்லோரும் போட்ட கோஷத்தில் சேர்ந்த 50 கோடி பேரில் நாங்களும் ஒருவராயிருந்திருப்போம்.
இல்லை.நாங்கள் உங்கள் பக்தர்கள்.
இல்லாமல் போய்விட்ட என் கார்த்தி மகனின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும். நீங்கள் அவனைப் பற்றி படித்து அவனை புரிந்து கொண்டீர்கள் என்றால்.
9 வருடங்கள் ஆகி விட்டன.அவன் என்னை விட்டு மறைந்து. இன்றும் அவன் பிரிவை தாங்க இயலாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு பேதை தாய்.
கலாகார்த்திக் 
இதற்கு அவரிடம் இருந்து பதிலும் வந்தது.
அவரைப் பற்றி பிறகு இன்னும் எழுதுகிறேன்.
இன்றைய சோகத்திற்கு என்ன விடை?
பி.கு.
இன்று ஒரு 12 வயது சிறுவன் என் வீட்டிற்கு வந்தான். அவனிடம் செந்தில் கேட்டான்.
"இன்று பள்ளி இல்லையா ?''
அந்த சிறுவன் சொன்னான் 
' ' யாரோ ஒருscientist  இறந்து விட்டாராம் ''
செந்திலின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
கார்த்திக் அம்மா 
கலாகார்த்திக்  

2015/07/20

tasmac டாஸ்மாக்  மூடலாமா?
எல்லோரும் டாஸ்மாக்கை மூடுங்கள் என்று குரல் கொடுக்கின்றனர். முதல்வரும் அது பற்றி யோசிப்பதாக செய்திகள் வந்தன . ஆனால் அதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக தெரிவதால் அந்த யோசனை கைவிடப் பட்டது என்றும் செய்திகள் வெளியாகின.
நானுமே டாஸ்மாக்கை மூடவதை வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
ஆ ,ஆ
என்று அலற வேண்டாம் .கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
சரியோ , தவறோ
80% மக்கள் குடிக்கு அடிமையாகி விட்டனர்.
காலை 6 மணிக்கே டாஸ்மாக் கடை வாசலில் தவம் இருக்கும் பலரை நான் பார்த்துள்ளேன்.
திடிரென நின்று விட்டால் பாதி பேர் பைத்தியமாகி விடுவர். அல்லது கஞ்சா ,இன்னும் என்னவோ   அதற்கெல்லாம் அடிமையாகி விடுவர். நாடே குழப்பமாகி விடும்.
.......      ........     ......
என்னுடைய யோசனை 
(யார் கேட்க போகிறார்கள்? ஆனாலும் ஊதும் சங்கை ஊதி வைப்போம்.)
ஒரு ''குடிமகனுக்கு ஒரு நாளுக்கு 50 எம் .எல் (m .l )மட்டும்தான்  தர முடியும்.அதுவும் ரேஷன் கார்டு போல் ஏதாவது ஒன்றை கொடுத்து அதில் பதிந்து ஒரு வரையறைக்கு கொண்டு வரலாம் .அப்புறம் சிறிது சிறிதாக கடைகளை மூடலாம்.
தெரிஞ்சத சொன்னனுங்க .தப்புங்களா ?
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2015/07/17

காணி நிலம் +ஒரு சென்ட் நிலம்
எல்லோருக்கும் முதல்வர் கனவு வருவதை பார்த்தால் எனக்கும் அப்படி கனவு காணும் எண்ணம் வந்தது.
திடீரென யாராவது என்னை அழைத்து'' என் வாரிசாக உன்னை நியமிக்கிறேன் . நீதான் அடுத்த முதல்வர் ''
ஆ ஹா ,ஆஹா
இது போல் எத்தனை பேருக்கு முதல்வர் கனவு. அதில் ஒருவர் சொல்கிறார்.
''தமிழ் நாட்டில் 50% மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை.என்பது வருத்தமான விஷயம்.''
இவரிடம் ஒரு 100 acre நிலமாவது இருக்கும்.அதை ஒருவருக்கு ஒரு சென்ட் என்று பிரித்து கொடுத்தால் 100*100 =10000 பேர் ஒரு சென்ட் உரிமையாளர்கள் ஆகி விடுவார்களே.
செய்யலாமே.
ஒரு முழப் பூ 20 ரூபாய் என விற்கிறது . அதனால் ஒரு 4 முழப் பூ வாங்கி காதில் சுற்றிக் கொள்ளவும் வழியில்லை.
யாராவது பூ வாங்கி தாருங்களேன்.
கார்த்திக் அம்மா
கலா கார்த்திக்

2015/07/14

கார்த்தியின் கனவு:
கார்த்திக்கிற்கு ஒரு கனவு இருந்தது.அதைப் பற்றி அவன் பேச வருவான்.அப்போது நான் சொல்வேன்  "கல்யாணம் செய்த பின் உன் மனைவி சரியென்றால் ஆரம்பி"  என்று.
அதுதான் .....''பாகுபலி  ''
இது போன்ற ஒரு பிரமாண்டத்தை கார்த்தியும் கனவு கண்டான்.ஆனால் கார்த்தியின் நாயகன் 'ராஜ ராஜ சோழன் ''

வேலையை விட்டு விட்டு  தயாரிப்பில் இறங்கத் துடித்துக் கொண்டிருந்தான்
நான்தான் 144 போட்டிருந்தேன்.
ஸ்கிரிப்ட் கூட 15 பக்கங்கள் எழுதியிருந்தான்.
உன்னைப் போன்ற இளைஞர்களை நம்பி யார் முதலீடு செய்வார்கள்
என்பது என் கேள்வியாக இருந்தது.
அண்ணன் வழியில் செல்ல தம்பி செந்தில் தயாராகிக்கொண்டிருக்கிறான்.
பார்க்கலாம்.
ஆனால் கார்த்தியின் கனவு ஒரு வகையில் நனவாகி இருக்கிறது.
பாகுபலி படம் பார்க்கவில்லை.(எந்த படமும் அதிகம் பார்த்ததில்லை.)ஆனால் எல்லோரும் புகழும் விதத்தையும் ,விளம்பரத்தையும் பார்க்கும்போதே தெரிகிறது.ஹாலிவுட் படங்களுக்கு நிகரான படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கார்த்தியின் எண்ணம் நிஜமாகியுள்ளது.
வாழ்த்துகள் ராஜமௌலி .
அன்புடன்,
கார்த்திக் அம்மா

2015/07/09

மலர்ந்தும் மலராத :
சில மொட்டுக்கள் மலரும் முன்பே மரணத்தை தழுவும் மாயமென்ன ?
என் கார்த்தி என்ற அழகிய இளம் தாமரை மொட்டு மலர்ந்து அருமையானமணம்  வீசி வாழும் என்ற என் எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டது யார்?
கலாகார்த்திக்
என் அருமை மகன் 
கலாகார்த்திக்

2015/07/06

எனக்கொரு கேள்வி :
இது நடந்தது 1990களில் .
என் ஊரில் ஒரு பெண் .அந்த பெண்ணை அதன் மாமாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.அந்த பெண்ணின் பெரியப்பா மகன் அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தான். இந்த பெண்ணுக்கு அண்ணன் முறை.
ஆனால் இருவருக்கும் காதல் ???!!!! வந்து விட்டது. கடித பரிமாற்றம் +++ நடந்தது.விஷயம் தெரிய வர பெண்ணின் அப்பாவும் , கணவரும் அந்த பையனை பைக்கில் துரத்த , அவன் ஓட , போலீஸ் நிலையம் எதிரில் அவனை மடக்கி ,மருமகன் அவன் தலையை பைக் சீட்டில் வைத்து அழுத்திக் கொள்ள ,பெண்ணின் அப்பா அவனை அரிவாளால் வெட்ட அவன் அந்த இடத்திலேயே உயிரை விட்டு விட்டான்.
அப்புறம் வழக்கு நடந்தது.கொலையாளிகள் இருவரும் வெளியே வந்து விட்டனர்,(சில காலம் தண்டனைக்கு பிறகு )
அந்த பெண் நிம்மதியாகத்தான் இருந்தாள்
..... .....
காலம் போனாலும் கோலம் போகவில்லை.
தருமபுரி திவ்யா
திருசெங்கோடு .சுவாதி
ஆம்பூர் பவித்ரா
இன்னும் லிஸ்ட் நீட்டிக் கொண்டே போகலாம்.
இந்த பெண்களால் எவ்வளவு கலவரம்??????
காதலிப்பது தப்பா என்று உரிமைக் குரல் கொடுக்காதீர்கள்.
உங்கள் காதலால் மற்றவர்கள் உயிர்  போகிறதே.
ஆம்பூர் பவித்ரா திருமணம் ஆனவள்.
ஒரு கைக்குழந்தை.
அப்படியிருக்க எதற்கு இன்னொரு ஆணுடன் காதல்?
அந்த பெண்ணால் ஆம்பூரே பற்றி எரிந்தது.
உயிரை விட்ட அஹமது ?
கைக்குழந்தையுடன் நிற்கும் கேணக் கணவன் பழனி ?
இந்த பெண் இப்போது பெற்றோருடன் போய்விட்டாள்
நீதிபதிகள் விவாகரத்து கடையில் கிடைக்கும் பொருளா என்று நறுக்கென்று 4 கேள்விகள் கேட்டனர். பரவாயில்லை.
ஆனால் இந்த பெண்களுக்கும் தண்டனை தரலாமே.
இந்த பெண்களை வெட்டலாமே.இவர்கள் சரி சொல்லப் போய்தானே இளவரசனோ, கோகுல்ராஜோ, அஹமதுவோ இறக்கின்றனர். இவர்கள் இறப்பிற்கு காரணமான இவர்களை சம்பந்தப் பட்டவர்கள் கொல்லலாமே .
இவர்கள் மகள்கள் என்றால் ஒரு நியாயமா ?
அல்லது நீதிமன்றம் கொலைக்கு காரணமாக, அல்லது தற்கொலைக்கு தூண்டியதாக இவர்களை தண்டிக்கலாமே.
என்ன நியாயமடா  இது?????????
கார்த்திக் அம்மா
கலா கார்த்திக்

2015/07/05

மின் கட்டணம் ...ஆம் ஆத்மி ?
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின்  வீட்டு மின் கட்டணம் மாதம் 50000 ரூபாய் மட்டும்தானாம்.
இவர்தான் ஆம் ஆத்மி.
ஆம் ஆத்மி என்றால் சாதாரண மனிதன் என்றுதானே பொருள்.
இவர் சாதாரண மனிதரா?
அல்லது இந்திய சாதாரண மனிதர்கள் வீட்டு மின் கட்டணம் மாதம் 50000 ரூபாய் கட்டும் வருமானம் உள்ளவர்களா?
unanswerable questions ..
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்