About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/05/24

THANK YOU C.M

 நன்றி.நன்றி.

முதல்வருக்கு நன்றி.

2020ல் கோவிட பரவ தொடங்கிய போது நான் தனியாக புலம்பி கொண்டிருந்தேன்.

எல்லா   காய்கடைகளையும்   மூடுங்கள்.

ஒரு வண்டியில் கொண்டு வந்து ஒரு குடியிருப்பில் நிறுத்துங்கள்.அந்த வீடுகளில் உள்ளவர்கள் அவர்கள் வீட்டு எண் படி வந்து வாங்கி செல்லட்டும்.

உதாரணமாக முதல் தளம்.எண் 1.என்று சத்தம் கொடுத்தவுடன் அந்த வீட்டு நபர் வந்து காய் வாங்கி செல்லட்டும்.

அடுத்து 2ம் தளம்.

இப்படி வாங்கும் போது கொரோனா பரவலுக்கு வாய்ப்பே இல்லை.

அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது.

....ஆனால் 

இப்போதைய முதல்வர் அதை செயல் படுத்தி உள்ளார்.

நல்ல செயல்.

நன்றி.

நன்றி 

முதல்வருக்கு நன்றி

2021/05/08

மருத்துவ மனை கொடுமை

 மருத்துவ மனை கொடுமை .கொடுமையிலும் கொடுமை என்பது மருத்துவ மனையில் தன் உயிருக்கு உயிரான ஒருவரை சேர்த்து விட்டு அவர் படும் கொடுமைகளை பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் ...

அவர்கள் முன்னால்  அழவும் முடியாமல் நிற்கும் நிலை இருக்கிறதே.

என்ன வேதனை.

நான் பட்டேனே 

கணவரை அப்போல்லோவில் வைத்துக் கொண்டு நான் பட்ட வேதனை.அவர் இறந்து விடுவார் என்று அறிவு சொல்லியும் 

அன்பு அதை ஏற்க மறுத்து 

நாம்தான் இவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறோம் 

கோவில் கட்டி இருக்கிறோம் 

ஏழை மாணவர்களுக்கு உதவி செய்திருக்கிறோம் 

உறவு அனைத்துக்கும் கடமையை அன்பாக செய்திருக்கிறோம் 

அதனால் நமக்கு கெட்டது நடக்கவே நடக்காது என்று நம்பி 

நம்பி 

அவரை உயிரற்ற உடலாக ஆம்புலன்சில் கொண்டு வந்த கொடுமை 

........

இப்போது கோவிட் பிரசினையில் மக்கள் படும் கஷ்டங்களை பார்க்கும் போது மனம் பரிதவிக்கிறது.

2021/05/01

kovid

 என்னடா இந்த உலகத்துக்கு வந்த சோதனை?

மரணம் அடைபவர்களின் உறவினர்கள் படும் பாடுதான் கொடுமையிலும் கொடுமை.

இறப்பிற்கு அழக்  கூட முடியாமல் அவர்களை நல்லடக்கம் செய்ய மக்கள் படும் பாடு ...அப்பப்பா ....

இது என்ன வேதனை.

வர வர சமையல் செய்ய பிடிக்கவில்லை.சாப்பிட பிடிக்கவில்லை.

ஏற்கனவே அப்படி இப்படித்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது

.யாருக்கோ வரும் துன்பம்தானே என்று நினைக்க முடியவில்லை. 

மனது அல்லாடுகிறது.

இந்த கொடுமை விரைவில் முடியட்டும்.