About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/11/27

வெங்காய விலை

ஐயோ கத்தறதுக்கும் ஒரு அளவே இல்லையா .
என்னவோ வெங்காய விலை மட்டும்தான் அதிகமாகி விட்ட மாதிரி ஆர்ப்பரிக்கறாங்க .பருப்பு , அரிசி ,எண்ணெய் என்று எல்லாமே 50% அதிகமாகி இருக்கிறது .
போன மாதம் 2000 ரூபாய்க்கு வாங்கிய பொருட்கள் இப்போது 3000 ரூபாய் ஆகி இருக்கிறது .
வெங்காயம் இல்லாம கூட சமைக்கலாம் .
ஆனால் அரிசி பருப்பு உப்பு இல்லாம என்ன செய்யலாம்.
மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.

அப்பவே சூட்கேஸ்

1970 என்று நினைக்கிறேன் .treasury strike நடந்தது . அரசு ஆசிரியர்களுக்கு  அங்கிருந்துதான் சம்பளம் வர வேண்டும் .ஆனால் போராட்டம் .அரசு என்ன செய்தது .ஒரு தாலூக்காவிற்கு ஒருவரை பொறுப்பில் நியமித்து அவரிடம்  பணத்தை கொடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் பிரித்து கொடுக்க சொல்லியது .இது போன்ற முக்கிய பொறுப்புகளை என் தந்தையிடம் தான் கொடுப்பார்கள் .அவர் அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்து விடுவார் .என் மேல் ,என் திறமை (????????????) மேல்  அபார நம்பிக்கை .
 அதே போல்தான்  இந்த நிகழ்வின் போதும் .
SUITCASE :
சம்பள பணம் வந்தது .
ஒரு சூட்கேசில் .பெட்டி நிறைய புது நோட்டுகள் .+ஒரு லிஸ்ட் .எந்த எந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எவ்வளவு தர வேண்டும் என்ற குறிப்பு .
....தந்தை அப்படியே அதை என்னிடம் கொடுத்து விட்டார்.
எல்லா தலைமை ஆரியர்களும் வந்தனர் .
அப்பா எங்கே என்று கேட்டனர் .நான்தான் பொறுப்பு என்றவுடன் தொகையை சொல்லி பெற்று சென்றனர் .
இந்த சிறுமியா என்று ஆச்சரிய பட்டு இருக்கலாம் .ஆனால் அவர்களுக்கு தெரியும் .அப்பாவின் செல்லப் பெண் .அவர் ஒருவரிடம் ஒரு பொறுப்பை கொடுக்கிறார் என்றால்
''இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து ...''
மிக சரியாக செய்து எல்லோர் பாராட்டையும் பெற்றேன்.
சொல்ல வந்த விஷயம் என்ன என்றால்
அவ்வளவு நிறைய பணம் {ஒரு சூட்கேஸ் நிறைய }பார்த்தும்  மனதில் ஒரு சிறு சலனம் கூட வரவில்லை .
ஒரு சிறு ஆசை கூட வரவில்லை .
என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருக்கிறது.
...
அடுத்த சூட்கேஸ் :
இது 1996 ல் :
என் கணவரின் ஒரு கையெழுத்து ( விவரங்கள் வேண்டாம் )  போட்டால் ஒரு பெரிய deal முடியும் .அவரை சென்னைக்கு வர சொல்லி உத்தரவு .நாங்கள் மூவர் கூட்டணியும் {நான்+கார்த்தி+செந்தில் } காரில் தொற்றிக் கொண்டோம் .சென்னையில் ஒரு சூட்கேஸ் பணம் தருவதாக பேச்சு .கணவருக்கு என்னிடம் சொல்ல பயம் .இன்னொருவர் என்னிடம் இந்த விஷயத்தை தயங்கி தயங்கி சொன்னார்,
..யோசிக்க கூட இல்லை நான் .
(அந்த சூட்கேஸ் வாங்கினால் அவரை ..என் கணவரை ..வேறு கல்யாணம் செய்து கொள்ள சொல்லுங்கள் .நான் என் மகன்களை வளர்த்துக் கொள்கிறேன் )என்றேன் .....
என்னிடம் சொன்னவரின் mind voice ..அடடா நம்ம மனைவி இப்படி ஒரு சாய்ஸ் கொடுக்கலையே ....
ஆக இப்படித்தானே
நானும் சூட்கேஸும் .
கார்த்திக் அம்மா

2019/11/14

happy birthday karthik

இன்று பிறந்த நாள் :

இன்று பிறந்த நாள் :
இன்று என் உயிர் மகன் கார்த்திக்கிற்கு பிறந்த நாள்.
எனக்கும் இன்றே பிறந்த நாள்.
ஆம்.
இருவருக்கும் ஒரே நாள் பிறந்த நாள்.
நான்:14.11.1958.
கார்த்தி:14.11.1981.அவன் பிறந்த அன்று என்ன சந்தோசம். என் தாய் வீட்டின் 3வது தலைமுறையின் முதல் மகன். 4 சகோதரர்களுடன் பிறந்த செல்லப் பெண் நான் என்பதால் கார்த்தி பிறந்த  போது ஒரே ஆர்பாட்டம்தான்.
ஆனால் இன்று??????????????

என்னை விட்டு பிரிந்து என்னை ஊமையாக்கி, சிலையாக்கியவனை,

நான்  அவனை சிலையாக்கி அவனுடைய  வீட்டில் நடு  நாயகமாக நிற்க வைத்து அழகு பார்க்கிறேன்.
மனதிற்கு சிறு ஆறுதல்.
அவன் பிறந்ததை நினைத்து சந்தோஷப் படுவதா, பிரிந்து விட்டானே என்று வருத்தப் படுவதா?
கார்த்திக் அம்மா

கண்மணி கார்த்தி பிறந்த நாள்

கண்மணி கார்த்தி பிறந்த நாள் அன்பே அன்பே
14.11.81
என் அன்பு மகன்
என் உயிர் மகன்
என் தங்க மகன்
கார்த்தியின் பிறந்த நாள்.
என்னுடைய   பிறந்த நாளும்தான்.
ஆனால் சூரியன் அருகில் நட்சத்திரம் போல்
கார்த்தியின் பிறந்த நாளே முதன்மை.
என் பிறந்த நாள் ????????
அருவமாய் இருப்பினும்
(மறு  பிறவி எடுத்து )
உருவமாய் இருப்பினும்
தெய்வமாய் இருப்பினும்
அன்பு மகனே
என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கார்த்திக் அம்மா

கலாகார்த்திக் 

கார்த்திக் +என் பிறந்த நாள்

 என் மகனே
என் மகனே
தங்கமே
தெய்வமே
செல்லமே
உன் பிறந்த நாள் இன்று
....(14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.).....

14.11.1981         இந்த நாள் தான்

நான் உயிர் கொண்ட நாள்.

என் உயிரை நான் கண்ட நாள்.

என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.

என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.

வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.
வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா
kalakarthik