About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2020/10/22

நானும் மாணவர்களும்

நானும் ஒரு டீச்சர் என்று செய்த அலப்பறைகள் கொஞ்சமா நஞ்சமா ?

comparative degree பாடம் நடத்தும் போது .....

மாணவர்களேதான் வாக்கியம் அமைக்க வேண்டும்.

'' English teacher is ........than commerce tr '''என்று போர்டில் எழுதி விட்டு மாணவர்களை fill up செய்ய சொல்வேன் .

ஒருவன் 

stricter 

simpler என்று ஏதாவது சொல்வார்கள் .கொஞ்ச நேரம் விட்டு 

English teacher is more beautiful என்றவுடன் ஒரே ஆர்ப்பாட்டம் .ஏண்டா மகன்களா (மாணவர்கள் மகன்கள் ...கார்த்தி , செந்தில் குட்டிஸ் ) ஒருத்தரும் இதை சொல்லவில்லை.எல்லோருக்கும் 5 மார்க் மைனஸ் .என்றவுடன் மறுபடியும் சத்தம்.

என்னை மிஞ்சிய மாணவன் இருப்பானே.மிஸ் u r more beautiful than ஐஸ்வர்யா ராய் '' என்பான்.

இப்படி பொய் சொன்னதால் உனக்கு 10 மார்க் மைனஸ் ......

++++++

அடுத்தது ...மாணவர்கள் ''மிஸ் பேய் இருப்பது உண்மையா ?''

ஏண்டா தினமும் உங்கள் english டீச்சரை பார்க்கிறீர்கள் .அப்புறமும் சந்தேகமா ?

இன்னும் கதை சொன்னால் நீண்டு கொண்டே போகும் .அவ்வப்போது எழுதுகிறேன்.

2020/10/09

B.E COUNSELLING

 கார்த்தி கௌன்சலிங் கதை .

கார்த்தி எண்ட்ரன்ஸ் தேர்வில் மாநில அளவில்  23  வது ரேங்க் .(  எந்த கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்லாமல் அவனே படித்து அந்த ரேங்க் வாங்கியதால் எல்லோரும் அவனை கொண்டாட )    

 அவன் என் அம்மா வீட்டின் 3ம் தலைமுறை  முதல் மகன் .செல்லமோ செல்லம் .அவன் கௌன்சலிங்கிற்கு 

நாங்கள் நால்வர்,

 என் அப்பா ,

அம்மா ,

என் மாமனார் ,

கார்த்தியின் பெரியப்பா ,

அவரது இரு மகன்கள் 

,என் கணவரின் நண்பர் என எல்லோரும் வரிசை கட்டி நிற்க 

பல்கலைக்குள் நுழைந்தால் ஏதோ கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்து விட்டோமோ என்ற சந்தேகம் வந்து விட்டது ..(கார்த்தி முதல் நாள் , முதல் பேட்ச் )  அந்த மாணவர்களுக்கு ஸ்பெஷல் வரவேற்பு .நாதஸ்வர மேளம் முழங்க கல்யாண வரவேற்பு 

.ஒரே திகைப்பு, பெருமை ,சந்தோசம் . 

டி .வி கவரேஜ் வேறு .நானும் என் அம்மாவும் அமர்ந்திருக்க , படம் பிடிக்க ,ஒரே அமர்க்களம் .அது வரை பக்கத்தில் உட்கார்ந்திருந்த செந்தில் அப்போதுதான் தாத்தாவிடம் போய் அவரை கலாய்த்து கொண்டிருந்தான்.வந்து பார்த்தால் டி .வி வேறு பக்கம் போய் விட்டது.

அடுத்த நாள் பள்ளிக்கு வந்தால் ஒரே கோரஸாக '' ''நாங்கள் உங்களை டி .வி யில் பார்த்தோமே '' '' என்று ஆசிரியைகள் உற்சாக பாடல் .

வாழ்க்கை எவ்வளவு இனிமையாக , சந்தோஷமாக இருந்தது .

காட்ச்சிகள் மாற, செந்தில் +2 படிக்கும் போது அவன் தந்தை இறந்து விட குடும்பம் சோகத்தில் மூழ்கி விட ,செந்திலின் கௌன்சலிங் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும் ?