About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2004/12/14

किस्णा

Liked this lyrics from 'Kisna' movie song. BTW, did I tell you that the 'Kisna Chorus Theme' song is out-of-this world?

मुझ मॆ शिव है । मुझ मॆ ब्रम्हा ॥
मुझ मॆ विश्णु । मुझ मॆ क्रिश्णा ॥
फ़िर मै का है मन्दिर जाऊ ॥

अहम ब्रम्हासमी ॥

2004/12/09

Return of the Father (of the Techno Thriller)

சோடா பாட்டில் ஸ்டைலில் என் தலைவருக்கு ஒரு வரவேற்பு!
Yeah, I beat you to it :)

எலேய் சோடா, யாராவது உருவி விட்டா எனக்கும் அனுப்பு...



Excerpts
http://www.crichton-official.com/fear/index.html

2004/12/08

Sindhu Bhairavi-2004

A eulogy to one of my friends :(

Sing it like 'Poo maalai vaangi vanthaan' song from Sindhu Bhairavi movie. If you are imaginative enough, use the song video too!

நேற்று சபதங்கள் உடைத்து விட்டான்
குடிக்கின்ற கோப்பையை எடுத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான்
கோப்பையை அவனின்று உடைத்து விட்டான்

dotNetக்கு ஒரு God என்று பேரெடுத்தான்
Hutch-net-ஐ தான் இன்று சுரம் பிரித்தான்

நண்பர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
REC மானத்தை வாங்கிவிட்டான்

மெல்லிசை பாடும் வேளையிலும்
சிந்துவின் ராகம் பாடினான் (அய்யய்யோ! மாத்தி சொல்லிட்டனோ!)

2004/11/29

Situation Song

All that is gold does not glitter,
Not all those who wander are lost;
The old that is strong does not wither,
Deep roots are not reached by the frost.
From the ashes a fire shall be woken,
A light from the shadows shall spring;
Renewed shall be the blade that was broken,
The crownless shall be king.
- JRR Tolkien

2004/11/06

Alexander preview : அலெக்ஸாண்டர் - ஒரு முன்னோட்டம்



rediff-இல் அலெக்ஸாண்டரைப்பற்றி உருவாகும் இரு படங்களைப்பற்றி எழுதியிருந்தார்கள். ஒன்று இந்த மாதம் ரிலீஸ் ஆகிறதாம். மற்றொன்று இரண்டு வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆகிறதாம். முதல் படம் ஆலிவர் ஸ்டோன்(Oliver Stone) என்னும் இயக்குனரின் படமாம். அந்த இயக்குனரைப்பற்றி கிழி-கிழின்னு கிழிச்சிருந்தாங்க. "He has visibly chosen fanciful fact over fiction, well evidenced in his biopic on Jim Morrison, The Doors, where he relied on a brilliant cast to create a film mired in sensationalism and misleading, irresponsible inaccuracy." சரி என்ன இருந்தாலும் ஒரு சரித்திரப்படம் வருது. என்னதான் இருக்குன்னு பாப்போம்னு படத்தொட trailer download பண்ணினேன்.

சும்மா சொல்ல கூடாது. இந்த அமெரிக்கா பசங்க ஓல் அடிச்சாலும்(ரீல் சுத்தறது) நல்லாவே அடிக்கறாங்க. ஒரு சில frames அப்படியே கண்ணுலயே நிக்குது. நம்ம ப்ளாக்-லயும் நிக்கட்டும்னு இங்க போட்டிருக்கேன்.

This is the one single frame that bowled me out. Try and imagine how the scene will be. If you haven't figured out what it is, this is supposedly the largest 'cavalry charge' ever filmed in movie history.




அம்பு மழை


இதை எல்லாம் எந்த கணக்குல சேக்கறதுன்னே தெரியலை. யானையை இந்த போஸ்ல நிக்கறத பத்தி நான் கேள்விப்பட்டது கூட இல்லை. ('Trivia' : இந்தியா சம்பந்தபட்ட காட்சிகள் இந்தியாவில் எடுக்காம தாய்லாந்துல எடுத்திருக்காங்க. காரணம்:இந்திய யானைகள் போதிய பயிற்சியோடு இல்லையாம் :(




'Gladiator' படம் பாத்தப்போ ஒரு திருப்தியே இல்லை. படத்தின் ஆரம்பத்தில் வரும் போர் காட்சி நல்லா எடுத்திருந்தாலும், ரொம்ப சின்ன படைகளுக்கு நடுவில் நடக்கும் போராக இருந்தது. 'Troy', 'LOTR-ROTK' -ல எல்லாம் அதை விட கொஞ்சம் பரவா இல்லாம இருந்தது. ஆனா அது எதுவுமே ஒரு full fledged war between two countries மாதிரியே இல்லை. இந்த ரெண்டு framesaயும் பாக்கறப்போ முதல் முறையா அது மாதிரி ஒரு war scene எடுத்திருப்பாங்க போல இருக்கு. Can't wait for the movie to release in India...

2004/11/05

SK's Law of Fate

A law(!?!) that I formulated while in college.

SK's Law of Fate:
Human body is a bundle of chemical compounds, bundled in a specific way, whose next state depends on its current state and external forces, neither of which is under its control. Hence destiny is destined.

2004/10/29

The Village

Just a dialogue from the movie...

Ivy Walker : How is it that you are so brave while the rest of us shake in our boots?
Lucius Hunt : I don't think of what might happen, only what must be done.

Speaks like me ;)

2004/09/21

Sudden Recollections

Something I read longback. About a couple of ads of British Airways, a long time back. Donno how it relates to BA. But found it very romantic.

"All over the world, children walk to school and they run back home."

"All over the world, little boys hate little girls, and then they get married."

Senor Anonymous, I could not find the complete ad. This is all I read abt it. I guess, this ad is supposed to mean that British Airways flies 'All over the world'.

2004/09/18

What does the tricolour represent?

நீண்ட நாட்களுக்கு பிறகு வலை பதிகிறேன். இரவு 2.45 ஆகிறது. மழை பெய்துகொண்டிருக்கிறது. பெங்களூரில் சாதாரணமாகவே நடுங்கிக்கொண்டே வண்டி ஓட்ட வேண்டியிருக்கும். மழையில் நனைந்து கொண்டு செல்வதெல்லாம் நடக்கிற காரியமில்லை. அலுவலக வண்டி கிளம்ப இன்னும் கால் மணி நேரம் இருக்கிறது. அது வரை ஏதாவது தட்டுவோம்.

நம்ம தேசியக்கொடி இருக்கே, அதன் நிறங்கள் எதை குறிக்கின்றன? காவி - தியாகம், வெள்ளை - சமாதானம், பச்சை - பசுமை. இப்படித்தான் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்தார்கள். நானும் அதை தான் நம்பிக்கொண்டிருந்தேன். திடீர்னு ஒரு சந்தேகம். பாகிஸ்தான் கொடில ஏன் பச்சை மட்டும் இருக்கு? ஓ! பச்சை முஸ்லிம்களுக்கு புனித நிறம். (அட, கொஞ்சம் வெள்ளையும் இருக்கு! அது அங்க இருக்க மைனாரிட்டிகளை குறிக்குதுன்னு எங்கேயோ படிச்சோமே!) சரி, அதே பச்சையும் வெள்ளையும் நம்ம கொடிலயும் இருக்கே! அப்படி பாத்தா காவி எதை குறிக்குதுன்னு கண்டு பிடிக்கிறது ஒன்னும் கஷ்டமே இல்ல! அடப்பாவிகளா, இப்படி தான் நம்ம கொடியோட கலர் எல்லாம் முடிவு பண்ணுனீங்களா. காவி - இந்துக்கள், பச்சை - முஸ்லிம்கள், வெள்ளை - இந்து முஸ்லிம் சமாதானம் அல்லது கிருஸ்துவர்கள். சரி எப்படியோ வெச்சுக்கோங்க. ஆனா ஏன் இருக்கறவன் எல்லாரயும் கேனயனாக்கறீங்க?

இத எழுத ஆரம்பிச்சது புதன்கிழமை இரவு. பதியறது சனிக்கிழமை மதியம். என் சோம்பேரித்தனத்துக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு.

2004/08/23

'Life is beautiful'

'Life is Beautiful' - These are the last words of Don Vito Corleone, in the book. (Now, don't ask me what book it is). As per the book, the Don dies in his bed, murmuring 'Life is Beautiful'. Then Michael contemplates 'If somebody can die with those words, then that was a life well lived' (Well, something like that). But this piece was missing in the movie. The Godfather dies in a garden without uttering a word.

I was puzzled the first time couple of times I saw the movie. How can they ignore those famous last words in the movie? After a few more runs, I realized. Coppola has decided not to let the Don say that his life was beautiful, but to show it in full flow. Those words were all over the scene where the Don dies. The Don dies when happily playing with his grand-child in the garden amongst the plants he nurtured. What better way to die? What better way to say 'Life is beautiful'?

2004/08/12

Updated my Archaeological Photo Gallery

Finally I managed to update my Photo Gallery with photos from my second trip to Hampi, photos from Mamallapuram, Kailasanatha temple in Kanchi etc. Also, have added map based navigation for Hampi photos. Have to do the same for Mamallapuram. And add the photos of Thanjavur and Madurai. But donno when I will find the time. Till then enjoy the new ones @ vijayanagar.topcities.com

வலைப்பூவில் எனது பதிவுகள்

சென்ற வாரம் வலைப்பூவில் ஆசிரியர் பணி.

அங்கு எழுதிய பதிவுகள் இங்கே

எழுதிய பதிவுகள்:
இனிய நண்பர்கள் தினம்!
சிக்கன் சாலையை கடந்தது ஏன்? - 4
வரலாற்று இருட்டடிப்பு?
நள்ளிரவில் விடுதலை
தமிழ் வளர்ப்பது எப்படி?
ஒப்புக்கு சப்பான் பதிவு
வலைப்பதிவு எனப்படுவது யாதெனில்
எஸ்கேப்

2004/07/27

முதலாளித்துவம் vs. பொதுவுடைமை - 2

முந்தையதுக்கும் முந்தைய பதிவோட continuation.

ஒரு சின்ன உதாரணம் எடுத்துப்போம். ஒரு குடும்பத்துல அண்ணன் வேலை இல்லாம இருக்கான், தம்பி நல்ல வேலையில இருக்கான்னு வெச்சுக்கோங்க. எத்தனை நாள் தம்பி தன்னோட சம்பளத்தை அண்ணனோட சும்மா பகிர்ந்துப்பான்? மிஞ்சிப்போனா கல்யாணம் ஆகும் வரை? ஆயிரத்தில் ஒருத்தர் கூட அப்படி இருப்பதில்லை. ஒரு குடும்பத்துக்குள்ளேயே பொதுவுடைமை சாத்தியமில்லாதப்போ, ஒருவன் தன் உழைப்பின் பலனை உலகத்தோட பங்கு போட்டுக்கனும்னு சொல்றது சாத்தியமே இல்லை! நியாயமும் இல்லை!!


[+/-] Expand/Collapse

Vijayanagar Travelogue - 2

முதல் நாள் காலையில் மியூசியம் போய்ட்டு கிளம்பரப்போ மணி 2. காலையில லேட்டா சாப்பிட்டதால பசிக்கவில்லை. மியூசியத்துக்கு எதிரில் இருந்த பெட்டிக்கடையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டு விட்டு 'பட்டாபிராமர் கோவிலு'க்கு கிளம்பினோம். கிட்டதட்ட 'விட்டலா கோவில்' போல தான் இருந்தது. இதன் இயற்பெயர் 'ரகுநாதர் கோவில்' என மகாமண்டபத்தில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன(அச்சுதராயர் காலக்கல்வெட்டுக்கள் கி.பி.1534 & 1539). இத நான் சொல்லல. கோவில் வாசலில் இருக்கிற ASI போர்டு சொல்லுது. அதுக்கு மேல ரொம்ப டெக்னிக்கலா இருக்கறதால அதை அப்படியே இங்க எழுதிடறேன்.

'Spread out within a spacious open courtyard, this temple complex comprises a main shrine, a separate Devi shrine and a KALYANA MANDAPA(கல்யாண மண்டபம்), all enclosed by a high cloistered PRAKARA(பிரகாரம்) WALL having a lofty towered entrance on the east besides two posterens on the north and the south. The main shrine, facing east, has on plan GARBA-BRIHA(கர்பகிருகம்), SUKANASA, ANTARALA, ARDHA-MANDAPA(அர்த்த மண்டபம்) and a square MAHA-MANDAPA(மஹா மண்டபம்). It is significant that a common PRADAKSHINA PATHA(பிரதக்ஷணை பாதை?) is provided to all the first three above mentioned components at a higher level, suggesting later addition of this and the MAHA-MANDAPA in front. The MAHA-MANDAPA is a finely proportioned structure with tall and slender composite pillars of various types bearing close affinity with the famous MAHA-MANDAPA of the VITTHALA TEMPLE. The striking feature of this temple, however is in ****itional grandeur achieved by excellent architectonics, ******' (இதுக்கு மேலே எல்லாம் பெயிண்ட் போயிடிச்சு)

அதுல சொல்லி இருக்கிற மாதிரி, வித்தலா கோவிலை விட இந்த கோவிலில் வேலைப்பாடுகள் கம்மி தான். ஆனா அதனாலயே அழகா இருந்தது. வழக்கமா, பெரிய கோவில்கள்ல எல்லாம் எப்பவும் கூட்டமா இருக்கும். அதனுடைய அழக ஒழுங்கா ரசிக்க முடியாது, வித்தலா கோவில் உள்பட. ஆனா இந்த கோவில்ல நாங்க போனப்போ ஈ, காக்கா கூட இல்ல. இவ்வளவு அமைதியான சூழ்நிலைல இவ்வளவு அழகான ஒரு கோவில ரசிச்சதே இல்ல. அப்படியே ஒரு தூண்ல சாய்ந்து உக்காந்துட்டோம். நகரவே மனசு இல்ல. மிக விசாலமான courtyard தான். தூண் மண்டபமும்(மஹா மண்டபம்) பக்கா proportioned-ஆ பக்கா சுத்தமா இருந்தது. இந்த view-அ பாத்துகிட்டே உக்காந்து இருந்தோம். (எல்லா கோவில்களும் இப்படி சுத்தமா, கூட்டம் இல்லாம இருந்தா எப்படி இருக்கும்?) அப்புறம் கோவில ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு கிளம்பினோம். எங்க அடுத்த destination 'Domed Gateway'. அடுத்து எப்ப continue பண்றேனோ தெரியாது. அது வரைக்கும் கோவிலோட படங்களை பாத்துட்டு இருங்க....









BTW, இது யாருன்னு தெரியல... உங்களுக்கு எதாவது தோணினா சொல்லுங்க...





[+/-] Expand/Collapse


முதலாளித்துவம் vs. பொதுவுடைமை

ப்ரதீப் மேற்கண்ட தலைப்பில் எழுதிய பதிவுக்கு என்னுடைய மறுமொழி. ஒரிஜினல் பதிவு இங்கே

>இந்த பூமியில் எல்லோருக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை எல்லாம் தாரளமாய் தான் இருக்கிறது என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்!

இருக்கிறது.
இடம் - இதற்கு இங்கு வீடு என அர்த்தம். இதை உருவாக்க மனித உழைப்பு தேவை
உணவு - இதை உற்பத்தி செய்யவும் உழைப்பு தேவை
உடை - ditto
இவை எல்லாம் குறைவான அளவே உள்ளன.

>முதலாளித்துவம் எங்கே எப்போது தொடங்கியிருக்கும்? மனிதன் வேட்டை ஆடித் திரியும் போது தொடங்கி இருக்க வாய்ப்பில்லை..அப்போது கிடைத்ததை எல்லோரும் சமமாகவே பகிர்ந்து உண்டார்கள்! பிறகு எங்கே? எப்படி? ஏன்?

கண்டிப்பா அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்ல. ஒரு மனிதன் வேட்டையாடிட்டு வந்து தன்னோட குடும்பத்துக்கு மட்டும் தான் கொடுத்திருப்பான். இப்ப கூட மிருகங்களை பாருங்க. எதாவது மிருகம் அப்படி செய்யுதா? கூட்டமா வேட்டையாடும் மிருகங்கள் இருக்கு. ஆனா, சும்மா உக்கார்ந்து ஓசியில சாப்பிட யாராலும் முடியாது.

>என்று நீராவியினால் இயங்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டனவோ அன்று தொடங்கியது முதலாளித்துவம்

அதற்கு முன்பிருந்தே இருந்திருக்கிறது. நிலக்கிழார்கள், ஜமீந்தார்கள் நிலத்தின் உரிமையாளர்களாக இருக்க அதில் பலர் கூலி வேலை செய்வது நம் நாட்டில் காலம் காலமாக நடந்து வருகிறது. Industrial revolution மேல் பழியை போடுவதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. Industrial revolutionக்குப் பிறகு தான் மனிதனின் வளர்ச்சி exponentialஆக உயர்ந்திருக்கிறது. கார், பைக்கில் போய்க்கொண்டு, டி.வி. பார்த்துக்கொண்டு, செல்·போனில் பேசிக்கொண்டு, ·பேன், ஏ.சி. போட்டுகொண்டு என Industrial revolution-இன் அணைத்து பயன்களையும் அனுபவித்துக் கொண்டு அதனால் தான் உலகம் கெட்டுவிட்டது என கூறுவது ஏற்புடையது அல்ல.

> முதலாளித்துவத்தால் வந்த வினைகள்
1. வேலை இல்லாத் திண்டாட்டம்
2. வறுமை
3. உலக மகா யுத்தங்கள்!
4. விபச்சாரம்
5. ஊழல்
6. பெண்ணடிமை


1.வேலை இல்லா திண்டாட்டத்திற்க்கு முக்கிய காரணம், மக்கள் தொகை பெருக்கம். Industrial revolution-ஆல் வேலை வாய்ப்பு பன்மடங்காக உயர்ந்திருக்கும் என நினைக்கிரேன்.
2.இதுவும் அதிகமாகவில்லை. பணக்காரனுக்கும் எழைக்கும் உள்ள வித்தியாசம் தான் அதிகரித்திருக்கிறது. முன்பு தேவைகள் கம்மி. இப்போ தேவைகள் ஜாஸ்தி. பழங்கால scale-ஐ வைத்து பார்த்தால் இப்போது நாட்டில் உள்ள 99 சதவிகிதம் பேர் பணக்காரர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.
3.மனிதன் காலங்காலமாக போர் புரிந்து வருகிறான். உலக மகா யுத்தத்திர்க்கும் முதலாளித்துவத்திர்க்கும் என்ன சம்மந்தம் என தெரியவில்லை. பொதுவடைமை நாடான சைனா நம் மீது போர் புரிந்ததர்க்கு முதலாளித்துவமா காரணம்? எல்லாம் மண்ணாசை தான்.
4.அடப்பாவிகளா, இதுவும் காலம் காலமாக இருந்து வந்திருக்கு. நல்லதங்காள் வூட்டுக்காரரை விபச்சாரி கிட்ட தூக்கிட்டு போனாலாம்!
6.Ditto.
5.டொமிங்கோ பயாஸ் என்ற போர்துகீசியன் 16ம் நூற்றாண்டில் விஜயனகரம் வந்திருக்கிறான். அங்கு ஏதோ ஒரு கோவிலுக்கு போயிருக்கிறான். அங்கு இருந்த காவலாளி அவனை கர்ப கிருகத்துக்குள் விட வில்லையாம். 'I gave him something and he let me in' என்று எழுதியிருக்கிறான். நம் நாட்டில் இந்த something-உம் ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயமாக இருக்கிறது

உலக யுத்ததிற்கான காரணம் முதலாளித்துவம் என்பதற்கான லாஜிக்கும் உதைக்கிறது. 'பொன்னாசை' என்பதே Industrial revolution-க்கு அப்புறம் தான் தோன்றியது போல எழுதப்பட்டிருக்கிறது.

ஆக, முதலாளித்துவம் பற்றி உங்கள்/ராகுல்ஜியோட fundamental premises-ஏ தப்பா இருக்குன்னு நினைக்கிறேன்! என்ன சொல்றீங்க?



[+/-] Expand/Collapse

2004/07/09

Troy - A Sensible Movie

மதுரை வரலாறு, விஜயநகர் travelogueனு ரெண்டு தொடர்கள், தொடராமயே இருக்கு. எல்லாரும் அடிக்க போறாங்க. கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க. கூடிய சீக்கிரம் continue பண்ணுவோம்... அதுக்கு நடுவுல நேத்து பாத்த படத்தோட review.

I should say, Troy, was a complete surprise package, after having read the abridged version on Homer's Iliad in school. I expected a war of the Men & Gods; Gods coming now and then throwing spells on armies; Achilles(pronounced அகிலீஸ்), who could not be wounded anywhere on his body except his heel etc. Something on the lines of Mahabharata or Lord of the Rings. Things (like triumph of hope against fate, do your duty and have faith in the gods, the gods will guarantee you results..., basically reinforcing the so-called 'old values') I don't believe in/agree with but nevertheless, love watching.

But what turned out was the exact opposite. (And that partly explains why the movie is not a blockbuster like Gladiator or LOTR.) First and foremost, no Gods come into picture... Achilles coolly beheads the Apollo statue and the Trojan's keep saying, 'Apollo will bring about his doom' but nothing happens.... When the priests say that the king need not fear, since the city is guarded by Apollo, Hector asks 'How many battalions does your Apollo command?'... and finally Achilles doesn't get killed because of the arrow in his heel, but rather coz of lots of other arrows piercing his heart... Hector who knows he can't win against Achilles and doesn't do any wishful thinking or expect the gods to help him (a smart-ass commented, 'this guy is going to fight without morale, how would he win?', 'buddy, soldiers and troops need morale, not great warriors. They can give their best with their eyes closed and dreaming about Sharapova')

ok. Enough of my atheism and Ayn-Randism(err.. objectivism, rite?) the fight between Hector and Achilles is a treat to watch... again not because of the special effects like Neo vs. Smith ... not a fight of immortal men with special gifts from gods, but rather two homo sapiens fighting, who are the best of the breed. not a fight of fierce super-human blows and dramatic comebacks... but the agility and speed and simplicity of the fight has you on your seats edge.(ok.. too old a phrase, but couldn't think of anything else)

some breath-taking views of troy. definitely better than Rome in Gladiator. nicely done. though the 1000 ships stand out as graphics.

and the actress playing Helen, definitely not a face that would launch a ship, let alone launch a 1000.

b4 going to the movie, I read reviews which said the scene where king Priam comes to beg for Hector's body is one of the most touching scenes in recent years. didn't cut much ice with me. but I am cold-hearted ******* anyway...

and then one could help seeing Legolas and Boromir, instead of Paris and Odysseus. Thank god(?), Viggo Mortenstein or Hugo Weaving didn't play any role.

last and the best, the dialogues are terrific(at least the kind I like). for a sample

Agamemnon : Achilles cannot be controlled!

Odysseus : You don't have to control him, you have to unleash him

The whole movie is full of such dialogues(அனல் பறக்கும் வசனங்கள் ;)

The movie ends with a disclaimer 'Inspired by Homer's Iliad'. It had to be done, considering the considerable number of changes in the story like Paris not getting killed, Menelaus getting killed, Paris is a good-hearted lover-boy rather than the evil-villain, Patrocolous is Achilles' cousin rather than friend.... I don't understand why some of these changes had to be done.



[+/-] Expand/Collapse

2004/06/29

விஜயநகரம் Travelogue

நாம ஒரு travelogue எழுதினா என்ன? நமக்குன்னு ஒரு blog வேற இருக்கு. அதையும் ரெண்டு மூணு பேர் படிக்கறாங்க! சரி எழுதிடுவோம்!

வாழ்க்கையிலேயே நான் போன ஒரே உருப்படியான travel ஹம்பி போனது தான். அதைப்பத்தி எழுதுவோம்.

நான் ஹம்பி(விஜயநகரம்) முதலில் போனது ஜனவரி 2003-இல். ஆ·பீஸ் நண்பர்களுடன் சென்று அரக்க பறக்க ரெண்டு நாள் ஹம்பியை whirlwind டூர் அடிச்சதில் ஒரு திருப்தியே இல்லை. இன்னொரு தடவ போய் பொறுமையா பாத்தாகணும்னு தொனிச்சு. இந்த தடவ மாட்டினவன் பாலா. (இந்த blog-அ படிக்கிற ரெண்டு ஜீவன்கள்ல ஒண்ணு). ஒரு வாரம் சுத்தனும்னு ப்ளேன் பண்ண ஆரம்பிச்சு, கடைசியா மூணு நாள் சுத்தரதுன்னு முடிவு பண்ணி ஒரு வழியா ஹோஸ்பேட் போய் சேர்ந்தோம்.

ஹோஸ்பேட் பஸ்-ஸ்டாண்ட்-ல ஒரு பஸ்ல இருந்தவங்க கிட்ட திக்கி திணறி 'ஹம்பி போகுமான்னு' கன்னடால கேட்டு ஏறி உக்காந்தா, அந்த ஆளு cool-ஆ 'தினமனி' பேப்பர விரிச்சு படிக்க ஆரம்பிச்சான். பக்கத்துல இருந்தவன் 'குடும்ப மலர்' எடுத்து படிக்க ஆரம்பிச்சான். 'அடப்ப்பாவிகளா¡¡¡!, இங்கயுமா?'

ஒரு வழியா ஹம்பி-ல KSTDC ஹோட்டலுக்கு போய் ரெடி ஆயிட்டு, நாங்க பாக்க கிளம்பின முதல் இடம், ASI மியூசியம். அங்கு ஆராய்ந்த சில exhibit-கள்:

* ஐந்து லிங்கங்கள் உள்ள லிங்கம். (குழப்புகிறேனா? இதை வேற எப்படி சொல்றது?)


* நந்தி fountain?!?


* சாப்பாட்டு கல், இதை எப்படி கழுவுவார்கள்?


* ஒரு சாமியார். நம்ம ஊரான்னு சரியா தெரியலை. பாக்க எதோ அராபியர் மாதிரி இருக்கார்.


* பல வீரக்கற்கள்/சதி கற்கள். இவற்றில் ஓரளவு பொதுவான விஷயங்கள் : சந்திரன், சூரியன், சிவலிங்கம் அல்லது வைணவ நாமம், போரில் மாண்ட வீரர்களின் வீர சாகசங்கள், அவருடன் உயிர் மாய்த்துக்கொண்ட பெண்கள். பல சிலைகளில் கழுத்துக்கு இரு புரமும் குழிகள் இருக்கின்றன. பூமாலைகள் மாட்டுவதற்கோ?


To be continued...



[+/-] Expand/Collapse

2004/06/19

கோழி சாலையை கடந்தது ஏன்? - III

Jurassic Park Trilogy, Terminator Trilogy போல 'கோழி சாலையை கடந்தது ஏன்?' மூன்றாம் பாகமும் புதிய இயக்குனரால் இயக்கப்படுகிறது. (ஒரிஜினல் இயக்குனரின் அனுமதி இல்லாமல் ;)(http://sodabottle.blogspot.com) இதற்காக பல மாதங்களாக கிடப்பில் கிடந்த blog-ஐ தூசி தட்டி எடுத்திருக்கிறேன்.

சாண்டில்யன்:
அத்தியாயம் 53
விஜயநகரத்து கோழி

பல்வேறு ஊர்களில் பல முட்டைகள் போட்டதும், யாரும் கடக்காத சாலைகள் பலவற்றை சுலபமாக கடந்ததனால் 'சாலை கடந்தான்'* என்ற சிறப்பு பெயர் பெற்றதும், காந்தளூர் சாலையை கடக்கும் போது உயிர் துறந்ததனால் 'காந்தளூர் சாலை துஞ்சிய கோழி' என பின்னாளில் வரலாற்றில் பிரசித்தி பெற்றதும், 'முர்கி' என வட நாட்டவர்களால் அழைக்கப்பட்டதுமான விஜயநகரத்து கோழியை இளையகுமாரன் அந்த சாலையில் அந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அதனால் சற்றே கலக்கமுற்றான் என்றாலும் 'உதயகிரி கோழி பண்ணையில் இருக்க வேண்டிய கோழி இங்கு ஏன் வந்தது?' என சிந்தனையில் ஆழ்ந்தான். கோழியை பற்றி இளைய குமாரன் தீவிர சிந்தனையில் இருந்தாலும், கோழியை பார்த்த அதிர்ச்சியில் 'ஆஆஆ' என அலறி அவன் மேல் சாய்ந்துவிட்ட மயில்விழி, இன்னமும் மூர்ச்சை தெளியாமல் அவன் மேல் விழுந்து கிடந்ததாலும், அவள் அங்க லாவண்யங்கள் அவன் மேல் பலவாராக மோதியதாலும் பல இன்ப துன்ப வேதனைகளுக்கு உள்ளானான். மயில்விழியின் தோள்களை பற்றி தூக்கிவிட்டு அவள் மூர்ச்சையை தெளிவிக்கலாமா என்று எண்ணினாலும், மயக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணை தொட்டு தூக்குவது தவறு என்று வழிவழியாக வந்த அவன் தமிழ் பண்பாடு உணர்த்தியதால், ஒன்றும் செய்யாமல் அவளுக்கு அடியிலேயே படுத்து கிடந்தான். இதனை தூரத்தில் இருந்து விஜய நகரத்து கோழி பார்த்து கொண்டிருக்கிறது என்பதையும் கவனித்த இளையகுமாரன், அதனை குறுவாளெறிந்து கொன்று விடலாமா என யோசித்தான்.

இதற்குள்ளாக விஜய நகரத்து கோழி மெதுவாக சாலையை கடக்க ஆரம்பித்தது.
(தொடரும்...)
---------------------------------------------------------
* - பண்ணைபுரம் கோழி பண்ணை கல்வெட்டு
(வரலாற்று குறிப்பு : 2003-ம் ஆண்டு கோழி சாலையை கடக்கும் போது லாரியில் அடிபட்டு இறந்தது - The Hindu dt. 11.12.2003)

(என் குறிப்பு : விஜய நகரத்து கோழிக்கும், இளைய குமாரன்-மயில் விழிக்கும் எந்த சம்மந்தமும் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.)



[+/-] Expand/Collapse