About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2009/05/21

ஆஆஆஹா,
தில்லியில் நடைபெறும்
திடீர் திருப்பங்கள் நிறைந்த
நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடிய
பரபரப்பு காட்சிகள் நிறைந்த
1000 thriller movies
ஒரே நிமிடத்தில் பார்ப்பது போன்ற
ஒரு திரைப்படத்தை கண்டு தலை சுற்றி..
.... .....
யாராவது ஒரு நல்ல தலைப்பு தாருங்களேன்.
..... ..... ...
என்னென்னவோ எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
தலை சுற்றல் நிற்குமோ?
நின்றால் பார்க்கலாம்?
...... ..... ....
அடுத்து சட்டசபை தேர்தலா?
தாங்காதுடா தேவுடா.....

2009/05/18

Election.--2009

I am not an expert or anything of that sort.
I seriously doubt whether I am ''eligible '' to write anything at all.
I am an innocent, IGNORANT , infant.
But it needs a child to tell that '' the king is naked ''.
So my ideas may be an eye opener also.!!!!
ஒரு குழந்தைதான் சொல்ல முடியும் ''அரசர் ஆடையின்றி இருக்கிறார் '' என்று.
ஆகவே , இந்த குழந்தையின் மழலையும் கூட படிக்கப் படலாம்.
So I register some sentences which are neither criticism or accusation.
First,
ஜெ.ஜெ.
ஜெயித்தால் மக்கள் தன் தலைமையை தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார். தோற்று விட்டாலோ '''பணம் விளையாடி விட்டது. ரவுடித்தனம் ஜெயித்து விட்டது '' என்கிறார்.
பணம் விளையாடியது என்பது உண்மையானால், அழகிரி 3 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் ஜெயித்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக,
அவர் வழி அராஜகம் , அவர் எல்லோரையும் மிரட்டுபவர் என்பதாக ஒரு பிரச்சாரம் நடந்தது. அப்படி என்றால் அவருக்கு எதிரான வேட்பாளர் கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.
அப்படியானால், அந்த 3 லட்சம் மக்களுக்கு அழகிரியிடம் பயம் இல்லையா ? அல்லது அந்த 3 லட்சம் பேருக்கு அண்ணன் பணம் தரவில்லையா ?
எந்த பட்டனை அழுத்தினாலும் தி.மு.க விற்கே லைட் எரிந்தது என்றாரே ஜெ.
அப்படியாயின், எப்படி இந்த 3 லட்சம் பேர் அழுத்திய போது எப்படி அந்த கட்சியின் லைட் எரிந்தது?
நான் ஒரு நடுநிலையாளர்.எல்லோருடைய பிரச்சாரத்தையும் தொடர்ந்து பார்த்து வந்தேன் என்பதால் சொல்கிறேன். திரு.அழகிரியின் அணுகுமுறை மக்களை அடைந்தது. அவர் சொல்லியதெல்லாம் ''நான் மதுரையை மேம்படுத்துவேன்'' என்பது மட்டுமே. அதில் ஒரு உறுதி தெரிந்தது.
ஆனால், ஜெ, தான் சென்ற இடத்தில் எல்லாம் மைனாரிடி அரசு என்ற புராணமே பாடினார். 5 வருடத்திற்கு ஒரு முறை மேடை ஏறி விட்டால் மக்கள் மயங்கி விடுவார்கள் என்ற அவருடைய எண்ணம் மாற வேண்டும்.யாருமே அவரை எளிதில் பார்க்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகவேண்டும்.
தன் தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராய முனைய வேண்டும். தனக்கு வாக்களித்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்.மறுபடியும் கொடநாடு, படகு, ஆங்கில நாவல்கள் ,அருமைதோழி என்று அங்கு போய் உட்கார்ந்து கொண்டு, தன் பெயரில் யாரோ எழுதி, யாரோ வாசிக்கும், அறிக்கைகள் மட்டுமே உதவும் என்ற அணுகுமுறையும் மாறவேண்டும்.
பா.ம.க.
இது எதோ வன்னியர்களை இந்த நாட்டின் அரசர்களாக மாற்றுவதற்காகவே உருவாக்கப் பட்ட கட்சி என்ற எண்ணம் பரவலாக உள்ளது.உண்மை என்னவென்றால், இந்த கட்சியால், எத்தனை வன்னியர்கள் என்ன நன்மை அடைந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் தொழில் அதிபர்கள் ஆகியுள்ளனர்? அதற்கு கட்சி எவ்வளவு உதவிஉள்ளது ? எத்தனை வன்னியர்கள் நினைத்த நேரத்தில் போய் மருத்துவரை நேரில் சந்திக்க முடியும்? எவ்வள்வு வன்னிய இளைஞர்கள் அவரால் உதவி பெற்றுள்ளார்கள்?
மக்கள் நிறைய படிக்கிறார்கள். நிறைய தொலைக் காட்சி செய்திகள் அனைத்து விஷயங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. 20 வருடத்திற்கு முந்தைய வாக்காளர்கள் மாறி விட்டார்கள்.
எனவே அரசியல்வாதிகளே மாறுங்கள்.