About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/03/16

கார்த்தி,  ஏன் மறைத்தாய்?எதையெல்லாம் மறைத்தாய்?
ஒரு முறை மெர்சியிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது அவள் சொன்னாள்: கார்த்திக்கிற்கு முந்திரி பிடிக்கும் என்று முந்திரி வறுத்து எடுத்து சென்றேன்.அவனும் விரும்பி சாப்பிட்டான்.....பிறகு கேட்டான்.எனக்கு முந்திரி பிடிக்கும் என்று என் அம்மாவுக்கே தெரியாதே!உனக்கு எப்படி தெரிந்தது"
இதை மெர்சி என்னிடம் சொன்னபோது மனம் சிறிது வருத்தப்பட்டது.
நான் அடிக்கடி உன்னிடம் கேட்பேன்."ராஜாத்தி,இன்று என்ன சமைக்கட்டும்?
உனக்கு எது பிடிக்கும்?
கார்த்தி: எது வேண்டுமானாலும் செய்யுங்கள் அம்மா
நான்:உனக்கு எது பிடிக்கும் என்று சொல்,செல்லம்
கார்த்தி: என் அம்மா எது செய்தாலும் பிடிக்கும்.என் அம்மா எது செய்தாலும் டேஸ்டியாகத்தான் இருக்கும்.
இப்படியே பதில் சொல்வாய்.நானும் உனக்கு பிடிக்கும் என்று நிறைய ஐட்டங்கள் செய்து விடுவேன்.இத்தனை செய்தால் எப்படி சாப்பிட முடியும் என்று செல்லமாக அலுத்துக் கொண்டே சாப்பிடுவாய்.
ஆனால் , உண்மையிலேயே உனக்கு எது பிடித்திருந்தது?எனக்கு கஷ்டம் என்று அவைகளை மறைத்தாயா?இப்படி உன் ஆசைகள், ஏக்கங்கள் என்று என்னிடம் சொல்லாமல் மறைத விஷயங்கள்
:என்று என்னிடம் சொல்லாமல் மறைத்த விஷயங்கள் எத்தனை?எதுவும் கஷ்டமில்லை என்று சிரித்து சிரித்து பேசி,நடித்து,வாழ்ந்து என்னை தவிக்க விட்டு போனாயே?

2 comments:

Anonymous said...

karthimma, frm what i read..i can feel it.."he lived for u"

Ram said...

I searched for "Tiruchengode murugan", I end up reading your blog... felt so sad, to know the love and pain between you and karthik... and you're living with such unbearable pain mother...