அன்றும் இன்றும் :
பொழுதை ஓட்டியாக வேண்டுமே.எதிலும் மனம் ஒன்றுவதில்லை.t .v சேனல்களை மாற்றிக் கொண்டே இருப்பேன்.சில சமயங்களில் ஏதாவது அகப்படும்.
அப்படித்தான் இந்த காட்சியை பார்க்க நேரிட்டது. எந்த சினிமாவோ தெரியவில்லை.
ஒரு பெண் கைக்குழந்தையுடன் வந்து ஒரு ஆணிடம் ஏதோ சண்டையிடுகிறாள்.
ஒலியை கூட்டினேன்.:''
''ஏய் என்னைப் பார்த்து கண்ணடிக்கிராயே இது நியாயமா ''என்று கேட்கிறாள் அந்த பெண்.
ஆண் :ஏன் நீ தாவணி போட்ட வயதில் கண்ணடித்த போது வெட்கப் பட்டாயே .இப்போது என்ன?''
பெண் : இப்போது எனக்கு திருமணம் ஆகி விட்டது.நான் உனக்கு அண்ணி "
ஆண் :அண்ணியாயிருந்தாலும் நீ எனக்கு முறை பெண்தான் .இனியும் இப்படித்தான் செய்வேன்''
பெண்: உன்னை திருத்த முடியாது"...என்று சொல்லி விட்டு போய்விடுகிறாள்.
******* அதிர்ச்சியாக இருந்தது. திருமணம் ஆன அனைத்து பெண்களையுமே தாயாய் ,சகோதரியாக பார்த்த காலம் எங்கே.
இது என்ன கலிகாலம்.
இந்த வசனத்தை கேட்கும் அனைவருக்கும் இந்த கோணல் புத்தி வராது என்பது என்ன நிச்சயம்.
***
இன்று அக்கா தங்கை என்ற படம் ஓடியது.
அதில் ஜெய்சங்கர் தன அண்ணியிடம்
''இந்த வீட்டை கோவிலாக்கி அதில் இருக்கும் தெய்வம் நீங்கள்.உங்கள் மீது எனக்கு அத்தனை பக்தி'' என்கிறார்.
உறவுகளை எப்படி புனிதப் படுத்தியிருக்கிறார்கள் அந்த காலத்தில்.
இன்று இப்படி கொச்சை படுத்துகிறார்கள்.
கொடுமை.கொடுமை.
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment