சிறு வயதில் திட்டுவதற்கு நான் பயன்படுத்திய வார்த்தை '''Bloody Bastard ''.
அர்த்தமே தெரியாமல் அடிக்கடி இதே வார்த்தை.ஒரு நாள் மண்டையில் யாரோ ஓங்கி அடித்தாற் போல் (இதன் அர்த்தம் தெரியுமா?) கொடுமையே ...what a character assassination ??? அப்பன் பேர் தெரியாதவனே .அப்படி என்றால் அவனை திட்டுவதற்கு பதிலாக அவன் அம்மாவின் கற்பை அல்லவா கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறேன்.
இப்போது ககெட்ட வார்த்தை என்பது national trend .பாட்டுகளில் வசனங்களில் ஜோக்ஸ் மீம்ஸ் என்று எல்லா இடத்திலும் நீக்கமற கொட்டி கிடக்கிறது.கைக்குழந்தைகள் சர்வ சாதாரணமாக சொல்கிறார்கள்.ஒரு பெண் குழந்தை அப்பாவை பார்த்து ஒரு வார்த்தை சொல்கிறது.நடுங்கி விட்டது எனக்கு.
எனக்கு விவரம் தெரிந்தது போல் அந்த குழந்தைக்கும் அதன் அர்த்தம் தெரிய வரும் போது எப்படியிருக்கும்?
எது கெட்ட வார்த்தை என்று வரையறுங்கள் என்று சிலர் கேட்கலாம் .நான் சொன்ன ஒரு உதாரணம் போதும்.
No comments:
Post a Comment