வந்துடுச்சா தேர்தல்.
அள்ளி வீசுவாங்களே வாக்குறுதிகள்.
ஆளாளுக்கு வீடு தர்றேன்,கார் தர்றேன்.
பெண்களுக்கு மட்டும்தான் free bus ஆ .ஆண்களுக்கும்தான் free .
..அதென்ன free என்று ஆங்கிலத்தில்?
அதான் இலவசம் என்று சொல்லக் கூடாதாமே.
எங்களை பிச்சைக்காரர்கள் என்கிறீர்களா? ஆங் எங்க தன்மானம் என்ன ஆவது?
(ஆனால் எத பிச்சையா போட்டாலும் 20 மணி நேரம் வரிசையில் நின்று வெட்கம் கெட்டு மானம் கெட்டு வாங்கிக் கொள்வோம்)
எல்லோருக்கும் இலவச பஸ் பயணம் என்றவுடன்
இன்னொரு the so called '' தலைவர் '' கத்துவார்.
போக்குவரத்து துறை 10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது ...
அத்தனை கோடிக்கு எத்தனை சைபர் என்று எனக்கு சத்தியமா தெரியாது.
ஆளாளுக்கு சேர்த்து வச்சிருக்கிற 10000 கோடி,20000 கோடி எல்லாம் நாட்டுக்கே கொடுத்துடுங்களேன்.
ஈஸியா கடனை அடைச்சிடலாமே.
ஏழை 😂😀😢😅மக்கள் துன்பத்தை துடைத்து விடலாமே.
ஒரு ஒரு குடி மகன்கள் மேலும் 50000 ரூ கடன் இருக்கிறதே என்று தூக்கம் வராமல் வேதனை படும் இவர்கள் தங்கள் மில்லியன், பில்லியன் சொத்துக்களை கொடுத்து ஏழை மக்களின் கண்ணீரை துடைத்து விடலாமே.
ஹ ஹ ஹி ஹி .அடுத்த காமெடி இருக்கும் பாருங்க..
தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அப்புறம் பாருங்க. காலனி காலனியா போய் குழந்தைகளை குளிப்பாட்டி,முத்தம் கொடுத்து,__ _ _ இன்னும் இருக்கு ...சொல்ல அசிங்கமா இருக்கு..
அப்புறம் தோசை சுட்டுக் கொடுப்பாங்க.
etc etc .நான் தோசை சுடவா அரசியலுக்கு வந்தேன்?
நான் 1000 கோடி வருமானத்தை விட்டு வந்தேன்.
நான் அவதரித்ததே மக்களை காப்பாற்றத்தான்.
நான் என் குடும்பத்தையே மறந்து விட்டேன் (1,2 குடும்பம் இருந்தால்தானே ஞாபகம் வைத்துக் கொள்ள..ஊர் ஊருக்கு ஒரு குடும்பம் இருந்தால் எப்படிடா நினைவு வைத்துக் கொள்ள முடியும் என்று மனதுக்குள் அவர்கள் புலம்புவது உங்களுக்கு கேட்கலையோ )
ஆனால் ...ஆனால் ..
மக்களுக்கும் கொண்டாட்டம்தான்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
நீங்க கூட்டம் போடுங்கடா.எங்களுக்கு லாபம்தான்.500 ரூ .மது ,பிரியாணி எல்லாம் கிடைக்குது. எங்க காசுதானே .நாங்க 3 மாசம் பண்டிகை கொண்டாடிக்கிறோம்.
இதில் வேதனை என்னன்னா வரி கட்டுற ஜென்மங்கள்தான் .அதுகளுக்குத்தான் எந்த லாபமும் இல்லை.
நானும் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிருக்கேன்.
...க .மு.க KMK
அதாங்க. கலாகார்த்திக் முன்னேற்ற கழகம்
சீ சீய் கலகம் இல்லிங்க .கழகம்.
யார் கண்டாங்க.
நான் கூட தேர்தல்ல நிக்கலாம்.
ஆனா ஒன்னுங்க ..ஓட்டுக்கு ஒத்த பைசா கொடுக்க மாட்டேன்.
அய்யோடா ..அப்புறம் எப்படி ஓட்டு விழும்னு கேக்கிறிங்களா?
ஒரு ஓட்டு கண்டிப்பா இருக்கு.
அது என் வோட்டுதான் .
ஒரு வோட்டு வாங்கிய சாதனை பெண்மணின்னு எனக்கு விருது கொடுத்தாலும் கொடுக்கலாம்.
....இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தன.
...சிறிது இடைவேளைக்கு பிறகு மீண்டும் செய்திகள் தொடரும்,,,,,
--
No comments:
Post a Comment