About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/12/06

karthik's bike



]This is karthik's bike in his Bangalore house [ my TEMPLE ] .He loved this bike very much.So it will be there only for ever.
karthik amma

பெண் மருத்துவர் கொலை

பெண் மருத்துவர் கொலை :
தன் இரு சக்கர வாகனத்தை துருப்பு சீட்டாக பயன்படுத்தி கற்பழித்து கொலை செய்த நால்வரை என்கவுண்டர் செய்த நிகழ்வுதான் இன்றைய தலைப்பு செய்தியே .
ஆனால் ஒரு டி .வி எந்த நடிகை நடிகர்கள் என்ன சொன்னார்கள் என்று ;;BREAKING NEWS " "போட்டுக் கொண்டுள்ளது .இவர்கள் அரைகுறை ஆடையுடன் ஆடுவதால் காம வெறி தலைக்கேறி கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் நாசம் பண்ண வெறியர்கள் அலைகிறார்கள்.
இந்த நாட்டை காப்பவர்களின் கருத்துக்களை ''BREAKING NEWS ''என்று அப்படி ஒரு கர்ண கொடூரமான பல அணுகுண்டுகள் வெடிப்பது போன்ற ஓசையுடன் ஒளிபரப்பு செய்யும் டி .வி க்களை முதலில் தடை செய்ய வேண்டும்.
நான் என் கணவருடன்   கார்த்தி  செந்திலுடன் ஊருக்கு சென்று இருட்டிய பிறகு மேட்டூர் திரும்புவது உண்டு.
அப்போது நான் அவரிடம் சொல்வேன் .
வண்டி ஏதாவது பிரசினை செய்தால் நான் கார்த்தி  செந்திலுடன் அடுத்து வரும் பஸ்ஸில் ஏறி சென்று விடுவேன் .நீங்கள் வண்டியை சரி செய்து எடுத்து வாருங்கள் .'' ''
இதை மற்ற பெண்களிடம் சொல்வேன்.
ஆஹா ஒருவரை தனியாக விட்டு வருவது நியாயமா .நீ கல்நெஞ்சம் .சுயநலக்காரி என்றெல்லாம் குறை சொல்வார்கள் .
ஆனால் ஒரு பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் நம் நாட்டில் 'நான் அவருடன் நிற்பதுதான் ஆபத்தான விஷயம்.'.
இதையேதான் நான் எல்லா பெண்களுக்கும் சொல்கிறேன்.
ஒரு ஸ்கூட்டிதானே .போகட்டும் என்று விட்டு விட்டு அடுத்த வண்டியில் ஏறி இருந்தால் இந்த கொடுமையே நடந்திருக்காதே .
ஒரு ஸ்கூட்டி 50000 இருக்குமா ? இதை சம்பாதிக்க முடியாதா ?
ஒரு பெப்பர் ஸ்பிரே வைத்து கொள்ளலாமே ?.
இதை எதுவுமே செய்ய லையே .
ஒரு போலீசுக்கு எமெர்ஜென்சி அழைப்பு கொடுக்க தோணவில்லை?
இந்த ஸ்கூட்டி தான் பிரதானமா?
பெண்களே உஷாராக இருங்கள் .தைரியமாக இருங்கள் .ஒருவன் பார்த்தால் திரும்பி முறையுங்கள். நாம் பயப் படுகிறோம் என்று அவனுக்கு புரிந்தால் அவனுக்கு தைரியம் வந்து விடும்.
முடிந்த வரை ஜன நடமாட்டம் உள்ள பாதையை தேர்ந்தெடுங்கள்.
முடிந்த வரை இருட்டும் முன் வீட்டிற்கு திரும்புங்கள்.

2019/12/05

வெங்காயமும் நிர்மல் அமைச்சர்

     Innocence ?
Ignorance ?
ARROGANCE ????
பார்லிமெண்ட்ல ஒரு m .p கேட்ட கேள்விக்கு பதில் தருகிறார் .
....நாங்கள் வெங்காயம் சாப்பிடுற குடும்பம் இல்ல .அதனால் எனக்கு வெங்காய விலை பற்றி கவலை  இல்லை .......
கொடுமையே ...கொடுமையே ...
அம்மா   நீங்கள் ஒரு குடும்பத்  தலைவியாக மட்டுமே வா ?
அமைச்சர் இல்லையா ??கேள்வி
;;நீங்கள் வெங்காயம் பயன்படுத்துக்கிறிர்களா ::
இதற்கு என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும் ....நான் என் மக்களை பற்றித்தான் யோசிக்கிறேன் .வெங்காய விலை கட்டுப்படுத்துவது பற்றித்தான் யோசிக்கிறேன் ....என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும் . குடும்பம் எங்கே வந்தது?
நாங்கள் பிராமின் என்ற தொனி வேறு .
கொடுமை

2019/11/27

வெங்காய விலை

ஐயோ கத்தறதுக்கும் ஒரு அளவே இல்லையா .
என்னவோ வெங்காய விலை மட்டும்தான் அதிகமாகி விட்ட மாதிரி ஆர்ப்பரிக்கறாங்க .பருப்பு , அரிசி ,எண்ணெய் என்று எல்லாமே 50% அதிகமாகி இருக்கிறது .
போன மாதம் 2000 ரூபாய்க்கு வாங்கிய பொருட்கள் இப்போது 3000 ரூபாய் ஆகி இருக்கிறது .
வெங்காயம் இல்லாம கூட சமைக்கலாம் .
ஆனால் அரிசி பருப்பு உப்பு இல்லாம என்ன செய்யலாம்.
மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.

அப்பவே சூட்கேஸ்

1970 என்று நினைக்கிறேன் .treasury strike நடந்தது . அரசு ஆசிரியர்களுக்கு  அங்கிருந்துதான் சம்பளம் வர வேண்டும் .ஆனால் போராட்டம் .அரசு என்ன செய்தது .ஒரு தாலூக்காவிற்கு ஒருவரை பொறுப்பில் நியமித்து அவரிடம்  பணத்தை கொடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் பிரித்து கொடுக்க சொல்லியது .இது போன்ற முக்கிய பொறுப்புகளை என் தந்தையிடம் தான் கொடுப்பார்கள் .அவர் அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்து விடுவார் .என் மேல் ,என் திறமை (????????????) மேல்  அபார நம்பிக்கை .
 அதே போல்தான்  இந்த நிகழ்வின் போதும் .
SUITCASE :
சம்பள பணம் வந்தது .
ஒரு சூட்கேசில் .பெட்டி நிறைய புது நோட்டுகள் .+ஒரு லிஸ்ட் .எந்த எந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எவ்வளவு தர வேண்டும் என்ற குறிப்பு .
....தந்தை அப்படியே அதை என்னிடம் கொடுத்து விட்டார்.
எல்லா தலைமை ஆரியர்களும் வந்தனர் .
அப்பா எங்கே என்று கேட்டனர் .நான்தான் பொறுப்பு என்றவுடன் தொகையை சொல்லி பெற்று சென்றனர் .
இந்த சிறுமியா என்று ஆச்சரிய பட்டு இருக்கலாம் .ஆனால் அவர்களுக்கு தெரியும் .அப்பாவின் செல்லப் பெண் .அவர் ஒருவரிடம் ஒரு பொறுப்பை கொடுக்கிறார் என்றால்
''இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து ...''
மிக சரியாக செய்து எல்லோர் பாராட்டையும் பெற்றேன்.
சொல்ல வந்த விஷயம் என்ன என்றால்
அவ்வளவு நிறைய பணம் {ஒரு சூட்கேஸ் நிறைய }பார்த்தும்  மனதில் ஒரு சிறு சலனம் கூட வரவில்லை .
ஒரு சிறு ஆசை கூட வரவில்லை .
என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருக்கிறது.
...
அடுத்த சூட்கேஸ் :
இது 1996 ல் :
என் கணவரின் ஒரு கையெழுத்து ( விவரங்கள் வேண்டாம் )  போட்டால் ஒரு பெரிய deal முடியும் .அவரை சென்னைக்கு வர சொல்லி உத்தரவு .நாங்கள் மூவர் கூட்டணியும் {நான்+கார்த்தி+செந்தில் } காரில் தொற்றிக் கொண்டோம் .சென்னையில் ஒரு சூட்கேஸ் பணம் தருவதாக பேச்சு .கணவருக்கு என்னிடம் சொல்ல பயம் .இன்னொருவர் என்னிடம் இந்த விஷயத்தை தயங்கி தயங்கி சொன்னார்,
..யோசிக்க கூட இல்லை நான் .
(அந்த சூட்கேஸ் வாங்கினால் அவரை ..என் கணவரை ..வேறு கல்யாணம் செய்து கொள்ள சொல்லுங்கள் .நான் என் மகன்களை வளர்த்துக் கொள்கிறேன் )என்றேன் .....
என்னிடம் சொன்னவரின் mind voice ..அடடா நம்ம மனைவி இப்படி ஒரு சாய்ஸ் கொடுக்கலையே ....
ஆக இப்படித்தானே
நானும் சூட்கேஸும் .
கார்த்திக் அம்மா

2019/11/14

happy birthday karthik

இன்று பிறந்த நாள் :

இன்று பிறந்த நாள் :
இன்று என் உயிர் மகன் கார்த்திக்கிற்கு பிறந்த நாள்.
எனக்கும் இன்றே பிறந்த நாள்.
ஆம்.
இருவருக்கும் ஒரே நாள் பிறந்த நாள்.
நான்:14.11.1958.
கார்த்தி:14.11.1981.அவன் பிறந்த அன்று என்ன சந்தோசம். என் தாய் வீட்டின் 3வது தலைமுறையின் முதல் மகன். 4 சகோதரர்களுடன் பிறந்த செல்லப் பெண் நான் என்பதால் கார்த்தி பிறந்த  போது ஒரே ஆர்பாட்டம்தான்.
ஆனால் இன்று??????????????

என்னை விட்டு பிரிந்து என்னை ஊமையாக்கி, சிலையாக்கியவனை,

நான்  அவனை சிலையாக்கி அவனுடைய  வீட்டில் நடு  நாயகமாக நிற்க வைத்து அழகு பார்க்கிறேன்.
மனதிற்கு சிறு ஆறுதல்.
அவன் பிறந்ததை நினைத்து சந்தோஷப் படுவதா, பிரிந்து விட்டானே என்று வருத்தப் படுவதா?
கார்த்திக் அம்மா

கண்மணி கார்த்தி பிறந்த நாள்

கண்மணி கார்த்தி பிறந்த நாள் அன்பே அன்பே
14.11.81
என் அன்பு மகன்
என் உயிர் மகன்
என் தங்க மகன்
கார்த்தியின் பிறந்த நாள்.
என்னுடைய   பிறந்த நாளும்தான்.
ஆனால் சூரியன் அருகில் நட்சத்திரம் போல்
கார்த்தியின் பிறந்த நாளே முதன்மை.
என் பிறந்த நாள் ????????
அருவமாய் இருப்பினும்
(மறு  பிறவி எடுத்து )
உருவமாய் இருப்பினும்
தெய்வமாய் இருப்பினும்
அன்பு மகனே
என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கார்த்திக் அம்மா

கலாகார்த்திக் 

கார்த்திக் +என் பிறந்த நாள்

 என் மகனே
என் மகனே
தங்கமே
தெய்வமே
செல்லமே
உன் பிறந்த நாள் இன்று
....(14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.).....

14.11.1981         இந்த நாள் தான்

நான் உயிர் கொண்ட நாள்.

என் உயிரை நான் கண்ட நாள்.

என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.

என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.

வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.
வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா
kalakarthik

2019/10/30

சுர்ஜித் .நாடகம்

நான் இரக்கமற்றவள் .
கல்நெஞ்சக்காரி .
இதயமே இல்லாதவள் .
இப்படி இன்னும்என்னை  என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள் .
ஆனால்
இமோஷனல்  emotional ஆகவே செயல்படுகிறோம் .
இந்த குழந்தை விழுந்தது யார் தவறு.
குழி வெட்டிய தந்தை.
குழந்தையை கவனிக்காத தாய்.
ஏன் அவர்கள் இருவரையும் யாரும் குறை சொல்லவில்லை ?
தண்ணீர் வரவில்லை என்றால் குழியை மூடியிருக்க வேண்டாமா ?
குழந்தை எங்கு விளையாடிக் கொண்டிருக்கிறான் என குழந்தை மேல் தாய் ஒரு கண் வைத்துக் கொண்டிருக்க வேண்டாமா?
சரி.நடந்து விட்டது.
மீடியாக்கள் ஏதோ இந்தியா சைனா யுத்தம் போல் லைவ் ஆக காட்ட வேண்டிய அவசியம் என்ன?அப்புறம்,
தமிழக மக்கள் அனைவரும் சோகத்தில் உறைந்து விட்டனர் என்ற அலப்பறை வேறு.
தமிழக மக்களே மனதை தொட்டு சொல்லுங்கள்.
வருத்தம் இருந்தது.உண்மை.ஆனால்
உண்ணாமல்
உறங்காமல்
வருந்தினோமா?
எல்லோருக்கும் ஒரு திரில்லர் சினிமா பார்க்கும் பொழுது போக்கு.
நன்றாக பொழுது போனது.(உண்மை இதுதான்.)
ஆனால் உண்மையை சொன்னால் எல்லோருக்கும் கோபம் வரும்.
அடுத்த நாடகம்.
20 லட்சம்
10 லட்சம்.
எதற்கு அந்த குடும்பத்திற்கு கருணை தொகை தர வேண்டும்?
கார்கில் போரில் போய் உயிரிழந்தானா .
அல்லது நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யப் போய் உயிர்  துறந்தானா ?
அந்த குடும்பம் நல்ல வசதியான குடும்பமாக தெரிகிறது.அப்புறம் அவர்களுக்கு எதற்கு பணம் தர வேண்டும்?
...
அப்படி பார்த்தால் டெங்குவால் இறக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் கொடுங்கள்.
விபத்தில் இறப்பவர்களுக்கும் கொடுங்கள்.இன்னும் எத்தனையோ பேர் அரசு உதவி வேண்டி நிற்கிறார்கள்.
எந்த காரணத்தின் அடிப்படையில் இந்த கருணை தொகை?
நியாய படி பார்த்தால் இதற்கான செலவு நிச்சயம் 2 கோடியாவது  இருக்கும் என கணிக்கிறார்கள்.இதை கொடுக்க வேண்டியது அந்த குடும்பம்.
அந்த குடும்பம் தன் சொந்த செலவு செய்வதாக இருந்தால் இவ்வளவு செய்திருக்குமா?
நியாயம்.
அரசு மக்களை காப்பாற்ற வேண்டியதுதான்.
கடமைதான்.
ஆனால் எல்லா இடத்திலும் இந்த கடமை சரி வர செய்யப் படுகிறதா?
இந்த லைவ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெற்றோர் தன் மகள் தண்ணீர் தேடியதையும்  தொட்டியில் விழுந்து உயிர் போய்விட்டதையும் எப்படி நியாய படுத்துவார்கள்?
ஆனால் அரசு இவர்களுக்கும் 50 லட்சம் தரலாம்.
அதற்கடுத்து the so called தலைவர்கள்....1 கோடி தர வேண்டும்.
அரசு வேலை தர வேண்டும்.etc .etc
வாழ்க தமிழ்நாடு.


2019/10/16

நினைவு

எப்போதோ எழுதியது
Rememberance 
As i have mentioned in my earlier post,from Adam, mothers feel the same grief and agony when their dearest son is snatched away from her. Some have the power and means to express but all suffer the same extremity,without sharing it to others.
here are two such outlets which i read.
One:Dearest Vijay,
2 years have passed since that August Day on which our dear one was called away.The blow was sudden, the shock is still severe.As time goes on we miss you more, more of your loving smiles, your cheerful face.Nobody on earth can fill your place.Not a moment passes without remembering you.
The intensity of grief of living without you will not diminish.We love, love you so much.Time can never erase your memory from our thoughts.You are in our hearts for ever.Our dearest one, we love you in a special way.The departure is too sudden.We cannot say goodbye to you.not a single minute has passed without remembering you in silent tears and loud cries.The agony and sorrow of your seperation will end only when we join you in heaven soon.
YOU were the most wonderful Gift to us, a gem in our family.Alas, your loss an incurable wound in our heart,too deep for tears.
The second one:From Prakash Raj, the actor,who bemourns the loss of his son.He says"my son was like a beautiful poem.like a dream, like camphor he dissolved in the air.I cry whenever I think of him.What design of life is this?"
what makes my Karthik's loss all the more greater is that after my husband's loss he was the one who saved me from doom,and made me live on earth by his unconditional,unmeasurable torrential love.So compared to others my loss cannot be explained in words, and my agony unfathomable.
Karthik amma

2019/10/14

அசுரன்

அசுரன்
மதுரை: "அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா.. கூட படிக்கிற ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என்னை கேலி செய்யறாங்க.. எனக்கு வெக்கமா இருக்கு.. வேற இடத்துக்கு என்னை மாத்து" என்று தந்தையிடம் அடிக்கடி கேட்ட 9-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் இன்று பிளேடு வைத்து கிழித்து அறுத்துள்ளனர்.போதுமா ?????????
விஷத்தை பரப்பி விட்டீர்களா?????
நான் சேலம் மாவட்டம் .
என் தாத்தா ஊர் தலைவர்.
ஜமீன்தார்,ஊர்கவுண்டர் ,நாட்டாமை ...என எது வேண்டுமானாலும் சொல்லலாம்.
அவருக்கு அடுத்து என் பெரியப்பா தலைவர்.
இப்போது என் தம்பி ஊர் தலைவர்.
இன்றும் ஒரு பிரச்சினை என்றால் அவரிடம்தான் பஞ்சாயத்துக்கு வருகிறார்கள்.
ஆனால் ,    ஆனால் ,....
என் விவரம் தெரிந்த காலத்தில் இருந்து 
இப்போதைய சினிமாக்களில் காட்டப் படுவது போன்ற காட்சிகள் நிகழ்வுகள் ஒன்று கூட நடந்ததில்லை.
எல்லோரும் செருப்பு அணிந்துதான் நடந்தனர்.
ஒன்றே ஒன்று .வீட்டிற்குள் வரமாட்டார்கள்.
அந்த தடையும் கூட என் அம்மா வீட்டில் இருந்ததில்லை.
ஒரு வேளை ..என் அப்பா ஆங்கிலேயரிடம் படித்ததாலோ என்னவோ.
சில சமயங்களில் சமையல் கூட செய்வார்கள்.
சிறு வயதில் எங்களுக்கு அந்த பேதம் எல்லாம் தெரியாது.
அவர்களை '' அண்ணா '' என்றுதான் கூப்பிடுவோம்.
சில சிறு சிறு தவறுகள் வேண்டுமானால் நடந்திருக்கலாம்.
ஆனால் அந்த ஊரில் இருந்த தலித்துகள் அனைவரும் படித்து நல்ல வேலை யில் இருக்கின்றனர்.
என் அப்பாதான் தலைமை ஆசிரியர்.
ஒருவர் விடாமல் படிக்க வைத்தார்.
ஹரிஜன் விடுதி உண்டு.எல்லோரும் கண்டிப்பாக அங்கு வந்து தங்கி படிக்க வேண்டும்.
நடு இரவில் ரகசியமாக சென்று மாணவர்களை கண்காணிப்பார்.
அப்படி அவர்களை எல்லோரையும் முன்னேற்றினார்.
அதுவும் அல்லாமல் மற்ற ஊர்களிலும் கூட இவ்வளவு கொடுமைகளை நான் பார்த்ததில்லை.
தென் மாவட்டங்களில் இருக்கிறதோ என்னவோ.
......சரி....அப்படியே இருந்தாலும் 1968 களில் நடந்ததை இப்போது காட்டி மக்களை உசுப்பேத்துவது ஏன் ????
தெரியாதவர்களுக்கு கூட தெரிய வைக்க வேண்டிய அவசியம் என்ன???????
சென்னை மாணவர்கள் எத்தனை பேருக்கு தன் பக்கத்து மாணவன் என்ன ஜாதி என்று தெரியும்?
WHO CARES என்பதுதான் அவர்கள் போக்கு.
அதை விட சாதிக்க எங்களுக்கு நிறைய இருக்கிறது என்கிறார்கள்.
ஆனால் இந்த ஒரு 4 படங்கள் வந்தபின்  எல்லோருக்கும் ஜாதி உணர்வு 100% அதிமாகி விட்டது.
இல்லையென்றால் ஒரு பள்ளி மாணவன் பிளேடால் கீறுவானா?? அதை விட அந்த ஜாதி தலைவர்கள்.கலப்பு திருமணம் செய் என்ற உபதேசத்தால் சீரழிந்த கூட்டம்.
இந்த படம் சொன்ன விஷயத்தை  1980 முதல் நான் என் மாணவர்களுக்கு சொல்லி இருக்கிறேன்.அரசு தரும் சலுகைகளை தவறாக பயன்படுத்த வேண்டாம்.
படியுங்கள்.அதுதான் உங்களை உயரத்திற்கு கொண்டு போகும் என்று சொல்வேன்.
எல்லா சினிமாக்கார்களுக்கும் என் வேண்டுகோள் ஒன்றுதான்.
சிறு புகையை ஊதி எரிமலை ஆக்காதீர்கள்.
உங்கள் சுய நலத்திற்காக ,சுய லாபத்திற்காக மக்களை மாக்கள் (விலங்குகள் )ஆக்காதீர்கள்.

2019/09/23

ஆடியோ launch

ஆடியோ launch .
போஸ்டர்,டீசர் ,ட்ரெய்லர் ,பாடல் ,முதல் பாடல், பாடல் வெளியீடு என எத்தனை அலப்பறைகள்.
எதை எடுத்தாலும்
'' வைரல் '' என்ற வார்த்தை.
3 மில்லியன் view .5 லட்சம் likes .
இப்போது நடந்த ஆடியோ லாஞ்சில் எத்தனை கொடுமைகள் .யூ டியூபில் ஒரு பையன் பேசுகிறான்.
முகம் வீங்கி ,கண் வீங்கி இருக்கிறது.
ஆனால் எங்கள் தளபதிக்காக இதை பொறுத்து கொள்கிறேன் என்கிறான்.
3500 ரூ கொடுத்து டிக்கெட் வாங்கி 500 கி.மீ பயணம் செய்து வந்திருக்கிறேன்.என்னை உள்ளே விடாமல் அடித்தனர்
என்று சொல்கிறான்.
உள்ளே அந்த நடிகர் பேசிக் கொண்டிருக்கிறார்,.
''  '' என் ரசிகர்கள் மேல் கை  வைத்து பாருங்கள் '' ''
இப்ப அந்த ரசிகர்களை அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள்.
என்ன செய்யப் போகிறார் ?????????
ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
அயல்நாடு பயணம் போய் விட்டார்.
அதென்ன ,
ஒரு படம் முடிந்தவுடன் ரெஸ்ட் எடுக்க அயல்நாடு பயணம் ??????????
சரி.
யாருடன்???
தன் மனதில் நிற்கும்,
தன்னை வாழ வைக்கும்
என் உயிர்
the so called ரசிகர்களில் யாரையாவது கூட கூட்டி செல்லலாமே ??
தன் குடும்பத்துடன்தான் போகிறார்கள்.
ஒரு டிக்கெட் 2500
விற்ற டிக்கெட்டுகள் 20000.அப்படி என்றால்
2500*20000=50000000 ரூ .5 கோடி .நன்று.
ஒரு ஊரில் பையன்கள் மேல தாளத்துடன் தியேட்டருக்கு சென்றுள்ளார்கள்.
போலிஸ் அதிகாரி தடுத்து நிறுத்தி
'' ''இப்படியெல்லாம் செய்வதற்கு அனுமதி வாங்க வேண்டும் '' என்று சொல்லி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க சொல்லியுள்ளார்.
ஒரு கடிதம் கூட  படிக்க தகுதியில்லை.அவ்வளவு தப்பும் தவறுமாக எழுதியுள்ளனர்.என்று வேதனை படுகிறார்.எந்த தகுதியையும் வளர்த்து கொள்ளாமல் இப்படி வெறி பிடித்து அலைந்தால் நகை பறிப்பும் திருட்டும்தான் அதிகரிக்கும்.
இந்த நெருப்பில் குளிர் காய்பவர்கள் இந்த ரசிகர்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்கிறார்கள்?
ரசிகர்களே சிந்தியுங்கள்.

2019/09/14

ஜீவசமாதி

அட கொடுமையே?????????
சந்திரனுக்கும் செவ்வாயுக்கும் மனிதர்களை அனுப்ப ஆராய்ச்சி நடக்கும் இந்த காலத்தில் ....
என் கனவில் பார்வதியும் சிவனும் வந்து சொன்னார்கள்.தேதி குறித்து கொடுத்தார்கள் .........என்று ஒருத்தர் சொல்கிறார்.
அதற்கும் அவ்வளவு கூட்டம்.
இதில் தாங்கவே தாங்கவே வே வே வே முடியாத கொடுமை என்னவென்றால் அந்த ஆளின் அருகில் '' '' கலெக்டர் '' '' போலீஸ் ஆபீசர் ..ஒரு மருத்துவர் !!!!!!!!!!!
எனக்கு இதய துடிப்பே நின்று விட்டது.......
ஒரு கலெக்டர் என்பவர் இதை ஆமோதிக்கிறார் என்றால் ....
என்னடா கொடுமை இது  ?????????
இந்த ஆளை அரெஸ்ட் செய்து சிறையில் அடைப் தை விட்டு அவர் காலில் விழுவதும் ஆசி வாங்குவதும்
மீண்டும் கற்காலத்திற்கே போகிறோம்.
இதை ஊதி பெரிதாக்கும் மீடியாக்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
Religion starts where Science ends 
என்பார்கள்.
தெய்வ நம்பிக்கை right.RIGHT.
Can be accepted to an extent.
BUT
BUT
மூட நம்பிக்கையை வளர்த்து ,அதை வைத்து வியாபாரமாக்கி ,பிரபலம் அடைதல் எல்லாம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.
இப்படித்தான் 48 நாட்கள்,40 வருடங்கள் என்று ஒரு கதை பண்ணி பலரை சாகடித்தார்கள்.
தன்  மீது நம்பிக்கை இல்லாதவன் (தன்னம்பிக்கை ) இல்லாதவர்கள் இப்படி கும்பல் கும்பலாக ஓட வேண்டியதுதான்.
உடனே நான் நாத்திகவாதி என்று சண்டைக்கு வர வேண்டாம்.
I am '' SCIENTIFICALLY RELIGIOUS''
I am '' SCIENTIFICALLY RELIGIOUS''
I am '' SCIENTIFICALLY RELIGIOUS''
இந்து மதம் அறிவியல் சார்ந்தது.
இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ திரிபுகள்.புனை கதைகள்.மக்களை முட்டாளாக்கியவர்கள் .....போதும்.போதும்
கார்த்திக் அம்மா

2019/09/13

சுபஸ்ரீ

சுபஸ்ரீ விபத்து :
23 வயது .கார்த்திக்கிற்கும்  23 தான்.
எத்தனை ambitions .லட்சியங்கள் .கனவுகள் .சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு .
எல்லாம் ஒரே ஒருநொடியில்  சுக்கு நூறாக சிதறி போகிறது.
அந்த அப்பா அம்மா நிலைதான் சுத்த மோசம்.இனி உயிருள்ள வரை அந்த மகள் கண்ணில் இருந்து மறைய மாட்டாள்.
சாப்பிடுவோம்....ருசி என்ன என்று உணராமல் ....
தூங்குவோம் ...கனவிலாவது அந்த முகத்தை பார்க்க மாட்டோமா என்ற ஏக்கத்துடன் .....
முடிந்தது....வாழ்க்கையில் எல்லாம் முடிந்தது.
நான் அனுபவிக்கிறேனே ....
கார்த்திக் அம்மா

2019/08/26

August 26 ...2005

August  26 ...2005
என் வாழ்வில் வந்திருக்கவே  கூடாத நாள்.
என் அருமை கண்மணி கார்த்திக்கிற்கு விபத்து ஏற்பட்டு  என்னை விட்டு பிரிந்த நாள்....
என் வாழ்வில் வந்திருக்கவே கூடாத நாள்.
.....
தன் அம்மாவை தவிர இந்த உலகில் எதுவுமே தேவை இல்லை என்று வாழ்ந்த மகன்.
2002ல்
ஒரு பெரிய U .S கம்பெனியில் வேலை வந்தும் அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற மகன்.
(அவன் நண்பர்கள் என்னைத்தான் திட்டினர்.நீங்கள்தான் கார்த்தியின் எதிர் காலத்தை கெடுக்கிறீர்கள். எங்களுக்கு எல்லாம் மைக்ரோ சாஃப்ட்டில் வேலை கிடைக்காதா என்று ஏங்குகிறோம்.)
நான் கார்த்தியிடம் ''போய் வா கார்த்தி.'' என்றுதான் சொன்னேன்.உறுதியாக மறுத்து விட்டான்.அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற வைராக்கியம்.அது எவ்வளவு பெரிய வேலை ,எவ்வளவு பெரிய சம்பளம் என்றாலும் சரி அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற மகன்.
ஒரே அடியாக விட்டு விட்டு போய் விட்டான்.
எப்போதும் புலம்பல்.
அழுகைதானா
என்று குற்றம் சொல்பவர்களுக்கு ..
கார்த்தி போல் ஒரு மகன் கிடைக்க 100 கோடி ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அவன் அன்பு, அறிவு, அடக்கம் ...சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த அன்பு மகனை இழந்த நாள்.
ஒவ்வொரு நிமிடமும் அவன் நினைவால் தவிக்கும்
கார்த்திக் அம்மா 

2019/08/24

மத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே = கார்த்தி

கோபிநாத் மண்டே = கார்த்தி
எதற்கெடுத்தாலும் , எந்த நிகழ்வோ, செய்தியோ
மனம் என்னை அறியாமல் கார்த்தியுடன் சம்பத்தப் படுத்தி விடுகிறது.
இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்தார்   மத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே என்ற செய்தி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது .முதலில் இதை நம்பக் கூட முடியவில்லை.
அதே போல்தான் கார்த்தியும். வீட்டிலிருந்து 8.50 a .m க்கு அலுவலகத்திற்கு புறப்பட்டான். கூப்பிடு தூரம் என்பார்களே. 10 நிமிட தூரம்தான். வீட்டிலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்கள் கூட இல்லை.அலைபேசி அழைப்பு வந்தது.
விதி. விதி. விதி
வேறொன்றும் சொல்ல முடியாது.
கோபிநாத் மண்டேவின் கல்லீரல் சிதைந்தது என்று சொல்வதையே கார்த்திக்கிற்கும் சொன்னார்கள்.
இதயத் துடிப்பு நின்று விட்டது.அவரை பார்க்கும் போது எந்த காயமும் இல்லாமல் உறங்குவது போன்றுதான் இருக்கிறார்.கார்த்தியும் அப்படித்தான் இருந்தான்.
( ( (மோத்தி பாக் சாலையில் உள்ள சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்ததையும் மீறி தனது காரை இயக்கிய அவர் முண்டேவின் கார் மீது மோதினாரா என விசாரணை செய்து வருவதாக டெல்லி காவல்துறை இணை ஆணையரான எம்.கே.மீனா கூறியுள்ளார்.
முண்டேவின் கார் டிரைவரும் குர்வீந்தர் சிக்னலை மீறி தங்கள் கார் மீது மோதியதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே குர்வீந்தர் மீது அதிவேகமாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் முண்டேவின் கையில்  மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனையை அடையும் முன்பு அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முண்டே மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவரது கல்லீரல் சேதமடைந்து 2 லிட்டர் அளவுக்கு ரத்தம் போயுள்ளதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கார்கள் மோதியபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முண்டே இருக்கையின் மறுபுறம் வந்து விழுந்துள்ளார்இது எல்லாமே கார்த்தியின் விபத்தில் அச்சு அசலாக நடந்தது.) ) )
இதற்கப்புறம்தான் எல்லாமே.
அவர் என்பது '' அது '' என்றாகிவிடும்.
''பாடி'' வந்து விட்டதா? என்பார்கள்.
சுரீர் என்று உடல் முழுவதும் மின்சாரம் பாயும்.
வாய்விட்டு கூட கத்த முடியாது.
அப்புறமென்ன?
ஒரு நாள், 10 நாள்
உடன் இருப்பவர்கள் அவர் அவர் வேலையை பார்க்க சென்று விடுவர். யாரையும் குறை சொல்லவில்லை.
இது உலக நியதி.
அவர்கள் எல்லோரும் சென்ற பின்புதான் இழப்பின் தாக்கம் முழுமையாக தெரியும்.
அப்புறமென்ன?
வாழ்நாள் முழுவதும் ஊமை அழுகைதான்.
......     ........
என்ன வாழ்க்கை?
நிலையாமை.
ஒரு நிமிடம்.
ஒரே ஒரு நிமிடம்தான்.
வாழ்க்கை தலைகீழ்.
இந்த ஜூன்  3ம் தேதி 2005 ல் தான் சென்னையிலிருந்து  பெங்களூருக்கு புது வாழ்வு தொடங்க புறப்பட்டோம்  நானும் செந்திலும்.
கார்த்தியுடன் சேர்ந்து வாழப் போகிறோம் என்ற சந்தோஷத்தில்.
''பல்லாக்கு வாங்க போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக''
என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
விதியே,விளையாட்டில் எப்போதும் வெற்றி உனக்குத்தான்.
சோகத்துடன்,
கார்த்திக் அம்மா

2019/08/22

அற்புதமான நிலா

என் முழு நிலவு
இன்னும் மனம் 2005 லேயே இருக்கிறது.
தேறும் வழி தெரியவில்லை.
மகன் ஏக்கம் உயிரை கொல்கிறது  Still living in 2005.
Today is 21st aug.
I+KARTHIK+SENTHIL WERE IN KARUR.

அன்று  பௌர்ணமி .
2005 Aug  20 ம் தேதி அன்று பௌர்ணமி.அன்று நான், கார்த்தி, செந்தில் மூவரும் Bangalore லிருந்து கரூர் நகருக்கு புறப்பட்டோம். கார்த்தியின்  நண்பருக்கு திருமணம். திங்கள்  அன்று திருமணம்..சனிக்கிழமை கிளம்பினோம்.இரவு 7 மணி.செந்தில் காரை ஓட்டி  வர நான் முன் சீட்டில் ..கார்த்தி பின் சீட்டில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.சாப்பிட்டு முடித்து கை கழுவ  கார் கதவை திறக்க நான் ''ஜாக்கிரதை கண்ணம்மா '' என்கிறேன்.'' ''ஆமாமாம்.பார்த்து ,பறந்து விடப் போகிறாய் ''  என்று (கார்த்தி ஒல்லியாய் இருப்பதை கேலி செய்து ) செந்தில் சொல்ல  பேச்சும்  சிரிப்புமாக வந்து கொண்டிருந்தோம்.அப்போது செந்தில் ''அம்மா இங்கு பாருங்கள். '' என்று முழு ,பிரகாசமான நிலவை காட்டினான். நான் ''இது என்ன பெரிய நிலா,  இதை விட அற்புதமான நிலா   பின் சீட்டில் இருக்கிறது.  என் கார்த்தி மகன் முகம்தான் என் பிரிய நிலா. அழகு நிலா '' என்று சொல்ல பின் சீட்டில் இருந்த கார்த்தி இரண்டு சீட்டிற்கு  நடுவில் தன முகத்தை நீட்ட அவனை கொஞ்சி உச்சி முகர்ந்து என் இரு கைகளில் அவன் முகத்தை ஏந்த , செந்தில் '' போதும் ,போதும் அம்மாவும்  மகனும் கொஞ்சியது '' என்று செல்லமாக கோபிக்க ....சேலம்  சென்று என் அம்மா வீட்டில் தங்கி ,எல்லோருடனும்  அவ்வளவு சந்தோஷமாக  இருந்து விட்டு கரூர் சென்றோம்.
அந்த 3 நாட்களும் எவ்வளவு சந்தோஷமான  நாட்கள்.
சினிமாவில் வருமே .ஒரு பெரிய குடும்பம் .சந்தோஷமான,  பாசமான  குடும்பம் பாட்டு  பாடி ஆடி முடிக்கும் போது  வில்லன்கள் வந்து அவர்களை நாசப் படுத்துவார்களே.
அதே போல்தான்  என் வாழ்விலும்  நடந்து விட்டது.
கடைசி, கடைசி என்று கார்த்தி தன் உறவினர்கள்,  நண்பர்கள் என அனைவருடனும் சந்தோஷமாக இருந்தான்.கரூரிலிருந்து  திரும்பும் போதும் சேலம் சென்று தன்  பாட்டி  தாத்தா  மாமன்கள்  என எல்லோரையும் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்து விட்டு bangalore  சென்றோம்.
என் வாழ்வின் கடைசி சந்தோஷமான நாட்கள்.
இன்றும் முழு நிலவை பார்க்க தைரியம் இல்லாமல் பைத்தியமாக இருக்கிறேன்.
கார்த்திக் +அம்மா
KALAKARTHIK

2019/08/19

பால் விலையேற்றம்

எனக்கு ஒன்று புரியவில்லை.
பால் விலை 6 ரூ அதிகம் என்றவுடன் இந்த கூச்சல் ,கூப்பாடு போடுகிற மக்களே ,  நேற்று 20 ரூ வாங்கிய சோப் இன்று 30 ரூ .எண்ணெய் ,பேஸ்ட் ,இன்னும் அத்தனை பொருட்களின் விலையும் அதிகம் அதிகம் அதிகரித்துள்ளது.
இதற்கெல்லாம் யாரும் கேள்வி கேட்பதே இல்லை.
ஒரு துணி கடையில் போனால் சாதாரண சுடிதார்,etc விலையை பார்த்தால் தலை சுற்றுகிறது.
இதையெல்லாம் வாங்காமலா இருக்கிறார்களா?
தங்கம் விலை விர்ர்ர் .ஆனால் வாங்காமலா இருக்கிறார்கள்.?மக்கள் எப்போது ஏழை ?????????
எப்போது பணக்காரர்கள்????????????
இதற்கெல்லாம் மேல் மீடியா .
அப்பாடா ,நாட்டில் பல குழப்பத்திற்கு காரணமே இவர்கள்தான் .
புகையை ஊதி ஊதி பெரு நெருப்பாக்கி குளிர் காய்கிறார்கள்.
.....
ஒன்று வேண்டுமானால் செய்யலாம்.
எல்லாம் இலவசமாக தருவது போல்
....பால் ,ணெய்,தயிர் எல்லாம் இலவசமாக கொடுக்கலாம்.
வரி கட்டத்தான் நாங்கள் இருக்கிறோமே.

2019/08/02

01 August 2005

01 August 2005
நாட்கள் ஓடுகின்றன. ஆனால் மனம் கார்த்தியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 01 August 2005  அன்று பள்ளியில் பணியில் சேர வேண்டிய நாள் என்பதால் நானும் கார்த்தியும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திறங்கினோம்.அவன் நண்பர் வீட்டிற்கு சென்று பைக் எடுத்துக் கொண்டு என்னை பள்ளியில் விட்டு விட்டு மகாலிபுரம் சென்றான்.

இது போல் சரித்திர ,வரலாறு சம்பந்தப்பட்ட இடங்கள் என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் மிகவும் ஆசை. வெறி என்று கூட சொல்லலாம்.

இரவு ரயிலில் புறப்பட்டு மீண்டும் பெங்களூர் சென்றோம்.
இன்னும் 25 நாட்கள்தான் அவனுடன் இருப்பேன் என்று தெரியாமல் சந்தோஷமாக ....போனேன்.
26ம் தேதி எல்லாம் முடிந்து போனது.

எவ்வளவோ ஆசைகளும் திட்டங்களும் மனதில் வைத்திருந்த அந்த மகன் இல்லாமல் நான் தவிக்கும் தவிப்பு..... கொடுமை. கொடுமை.
இன்று 01.08.2019.
எத்தனை வருடங்கள் ஓடினாலும் மனம் இன்னும் 2005 லியே இருக்கிறது .
மனம் ஓ என கத்திக் கொண்டே இருக்கிறது.
கதறிக் கொண்டே இருக்கிறது.
மகன் மீண்டும் வந்து விட மாட்டானா ?ஒவ்வொரு முறை காலிங் பெல் அடிக்கும் போதும் அது கார்த்தியாக இருக்கும் என்று மனம் பரிதவிக்கிறது.
என்ன சொல்ல?
தாள முடியா வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2019/07/31

காஃபி டே சித்தார்த்

அதிர்ச்சி அல்ல .எரிச்சல்தான் வருகிறது .எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் .எப்படிப் பட்ட சாதனை.
ஒரு நஷ்டம் ,ஒரு தோல்வி ,ஒரு கஷ்டம் வருமே.அப்படி இல்லாத வாழ்க்கை யாருக்கோதான் அமையும்.
வாழ்வில் வரும் கஷ்டங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்வதாக இருந்தால் நானெல்லாம் எத்தனை முறை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் .
கடனுக்காக
நோய்க்காக
கணவரின் மறைவிற்காக
இதற்கெல்லாம் சிகரம் வைத்த என் உயிர் மகன் கார்த்தியின் இழப்பிற்காக
......இன்னும் எத்தனை சோதனைகள்.
வேதனைகள்.
சித்தார்த்
இன்று தைரிய மகள் முத்துலட்சுமி தினம் .ஒரு தேவ தாசி குலத்தில் பிறந்து ,
நோயில் வாடி
தாயை இழந்து
படிப்பில் தடங்கல்
சக மாணவர்களின் எதிர்ப்பு
இதையெல்லாம் தாண்டி இந்தியாவின் முதல் மருத்துவர் ஆகி ,
சட்டசபையில் 'நீ உன் குலத் தொழில் செய் 'என்ற மற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு பதிலடி கொடுத்து
இன்று அடையாறு ஆல  மரம் போல் நிற்கும் கேன்சர் மருத்துவ மனையை நிறுவி .......
என்ன சித்தார்த்
இவ்வளவுதானா ??
கார்த்திக்
காஃபி டே கடைக்கு அடிமை.
ஒரு நாளுக்கு ஒரு டேஸ்ட் .ஒரு நாள் cool coffee .
ஒரு நாள் 4 அடுக்கு காஃபி .
ஒரு நாள் ராகி காஃபி .
நான் கார்த்தியை கிண்டல் செய்வேன் .
''இந்த ராகி மாவு நம் வீட்டிலேயே இருக்கிறது .நானே செய்து தருவேனே .இதற்கு எதற்கு 300 ரூபாய் ?''
அப்படி ஒரு 100 விதமான காஃபி தந்து சாதனை செய்த சித்தார்த்
இவ்வளவுதானா ?
பரிதாபம் வரவில்லை.
ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விட்ட சித்தார்த்
RIP .

2019/07/22

ஏமாற்றம்

ஏமாற்றம் .ஏமாற்றம் .
சந்திராயன் விண்ணில் பாயும் காட்சியை என் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்க்க முடியும்.
ஆனால்
மேகங்கள்.
HIGHLY HIGHLY  DISAPPOINTED .
ஆனாலும் டி .வி யில் பார்த்து மனதை தேற்றிக் கொண்டேன் .
KUDOS .என் பெரு மதிப்பிற்குரிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
கார்த்திக் அம்மா

2019/07/20

கிராம புற மாணவர்கள்

நீட்டும் மாணவர்களும் :
சத்தியமாக இது என் சுய புராணம் அல்ல ,நான் செய்ததை சொல்கிறேன்.சில பிரச்சினைகளுக்கு அது ஒரு தீர்வாக இருக்கலாம் என்பதால்.
சூர்யா பேசியது கொண்டாடப் படுகிறது.அது அவர் கருத்து.அது பற்றியல்ல என் பதிவு.
நான் கிராமத்தில் படித்தவள்.கிராமத்தில் வேலை செய்தவள்.
அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
என் மாணவர்கள் ஏழை மாணவர்கள்.(ஆனால் திறமையில் ,அறிவில் குறைந்தவர்கள் அல்ல)
தினமும் 8 கி.மீ நடந்து வந்து படித்தவர்கள்.
சில மாணவர்கள் காலையில் சந்தன மர  வீரப்பனுக்கு மலையில் சாப்பாடு கொடுத்து விட்டு ஓடி வருவார்கள் .
''ஏன் லேட்டாக வருகிறாய் ? ''
என்று கேட்டால் இந்த காரணத்தை சொல்வார்கள்.
ஒரு நாள் கத்தி விட்டேன்.
'' வீரப்பனிடம் சொல்லுங்கள்.டீச்சர் திட்டுகிறார்.படிப்புதான் முக்கியம் என்று சொல்லி அடிக்கிறார் '' ''
இப்படி எல்லாம் டிராமா போட்டு அந்த மாணவர்களை படிக்க வைத்தேன்.
''மாணவிகள் ''
மாணவிகள் நிலை இன்னும் மோசம்.கிராமத்தில் நிறைய தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும்.
விறகு பொருக்கி வர வேண்டும்.
சாப்பாடு கூட சரியாக இருக்காது.
நான் பார்த்தேன்.வீட்டிற்கு அனுப்பினால்தானே வேலை செய்ய வேண்டும்.
பள்ளி நேரம் முடிந்தவுடன் 5 மணி வரை சிறப்பு வகுப்பு எடுத்தேன்.
அத்தனை மாணவிகளையும் பள்ளி மைதானத்தில் உட்கார வைத்து படிக்க வைத்தேன்.
சனிக் கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை பள்ளியில் கோச்சிங் .அதன் பிறகு என் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவேன்.
மாலை 5 மணி வரை வகுப்பு.
எத்தனை மாணவிகள் பயன் அடைந்தனர்.இதற்கெல்லாம் காசு கிடையாது.
full free .பல சமயம் என் வீட்டில் உணவும் உண்டு.
WHY WHY ???????சுய புராணமா ??????அல்ல
இதுதான் தீர்வு.
இதுதான் தீர்வு .
இதுதான் தீர்வு.
படிக்க வையுங்கள்.
படிக்க வையுங்கள்.
படிக்க வையுங்கள்.
......
பணம் கொடுக்கிறேன்.
புத்தகம் கொடுக்கிறேன்.
பேனா , பென்சில் கொடுக்கிறேன் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது.
அவர்களுக்கு கோச்சிங் வேண்டும்.
எத்தனை I .T மக்கள் பின் தங்கிய பள்ளிகளுக்கு சென்று வகுப்பு எடுக்கிறார்கள் தெரியுமா?
அவர்கள் செய்வதுதான் உண்மையான சேவை.
SOLUTION :
அரசு கொடுக்கும் free coaching வருடம் முழுவதும் தரப் பட வேண்டும்.
கல்வி அமைச்சர் பல நல்ல விஷயங்களை செய்கிறார்.அவருக்கு பாராட்டுக்கள்.
எங்களை போன்றோரின் சேவையையும் பயன் படுத்தி கொள்ளலாம்.
படிக்க வையுங்கள்.
பிறரை குறை சொல்வது வேண்டாம்.நீட் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம்.
எங்களால் சாதிக்க முடியும் என்ற மாணவர்களுக்கு நிறைய பயிற்சி கொடுப்போம்.நாம் வல்லவர்கள் என்பதை நிரூபிப்போம் .
கார்த்திக் அம்மா

2019/06/20

துர்க்கை என் மகள்

1995 மேட்டூர் அணை நகரில் TNEB மின்வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தோம். அருகிலேயே சிவன் கோவில்.
என் அண்ணா கேலி செய்வார்.
''உனக்கு C /OF சிவன் கோவில் என்றுதான் கடிதம் எழுத வேண்டும் ''
அப்படி ஒரு பரம பக்தை.அந்த கோவிலில் இருந்த துர்க்கை சிலை கால் உடைந்து விட்டது.குருக்கள் கோவில் கட்ட சிரம பட்டார்.
என்ன  தோன்றியதோ, ''நான் கட்டுகிறேன் '' என்று சொல்லி விட்டேன்.
அவிநாசியில் சிலை செய்து எடுத்து வந்து கோவில் தண்ணீர் தொட்டியில் வைத்தோம்.
திருமணஞ்சேரி  சுவாமிநாத குருக்கள் வந்து பார்த்தவர்
''அய்யோ ,எதற்கு அம்மனை நீரில் வைத்தீர்கள் ? துர்க்கை எஜமானர் வீட்டில்தானே இருக்க வேண்டும்''  என்றார்.
எனக்கு குழப்பம் .
யார் அந்த எஜமானர் ???????
அவர் என்னை பார்த்து ''அம்மா ,இவள் உன் மகள் .உன் வீட்டில்தான் இருக்க வேண்டும் ''  என்றார்.
நாங்கள் சத்திரியர்கள். (வன்னியர்.)
அதிகம் அசைவம் சாப்பிடுவோம்.
எங்கள் வீட்டில் எப்படி ???????
வீடும் பெரிதல்ல .
ஆனால் அவர் உத்தரவு.
துர்க்கை மகள் வீட்டிற்கு வந்தாள் .6 மாதம்.
கார்த்தி ,  செந்தில் இருவரும்தான் தினசரி காலையும் மாலையும் விளக்கேற்றி   நிவேததனம்   (நெய்வேத்தியம் ) செய்தனர்.
6  மாதம் ....
இருவரும் 6 மாதமும் ஒரு function க்கும் செல்லவில்லை.6 மாதமும் ஊரை விட்டு வெளியே செல்லவில்லை.
6 மாதம் ஒரு முட்டை கூட வீட்டில் சமைக்கவில்லை.
கணவன் மனைவி உறவு எதுவும் இல்லை.அப்படி ஒரு புனிதமாக இருந்து கோவில் கட்டி முடித்து அற்புதமான கும்பாபிஷேகம் .
சுவாமிநாத குருக்கள் சொன்னார்.
''அம்மா, என் தந்தை 1000 கோவில் குடமுழுக்கு செய்ய ஆசைப் பட்டார்.ஆனால் முடியவில்லை.அந்த பொறுப்பை என்னிடம் தந்தார்.நான் செய்த குடமுழுக்கு களிலேயே இதுதான் இவ்வளவு சிறப்பாக நடந்தது.''
கார்த்தி, செந்திலிடம் சொன்னார்.
''டேய் ,இவள் உன் தங்கை .தங்கைக்கு கல்யாணம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் .சீர் வரிசை சிறப்பாக செய்ய வேண்டும் ''
3 நாட்கள் ஹோம குண்டம்.கண்ணை பறித்தது.
ஒரு அன்பர் போட்டோ எடுக்கலாம் என்கிறார்.
என் பதில் ''இல்லை வேண்டாம்.என்றாவது ஒரு நாளில் இந்த புகைப்படங்களை பார்த்து ஒரே ஒரு நொடி   நான்தான்  இந்த கோவிலை கட்டினேன் என்ற எண்ணமோ ,  கர்வமோ  வந்து விட கூடாது ''......
இன்று 21.06 ...இன்றுதான் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்த anniversary.
 மனம்  அழுகிறது.
கணவரையும் பறித்து,உயிரான கண்மகன் கார்த்தியையும் பறித்து ....இதுதான் என் பணிவிடைக்கு துர்க்கை கொடுத்த பரிசா ?
இன்றும் துர்க்கை ஜெகஜோதியாக இருக்கிறாள்.
தாயைத்தான் இருளில் தள்ளி விட்டாள் .
வாழ்க என் மகள்.
கார்த்திக் அம்மா

2019/06/12

அன்றும் இன்றும்

//அவரை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள். //
இந்த வார்த்தைகள் கிரேசி மோகனின் சகோதரர் பாலாஜி மன வேதனையுடன் உருக்கமாக வெளியிட்ட விடியோ வின் ஒரு பகுதி.
இந்த உலகம் மாறவே மாறாதா?
எதற்காக அவர் தன் அண்ணாவை கவனிக்காமல் விடுவார்?
மோகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தால் அவரின் நாடக  ட்ரூப்பிற்கு தெரியாமல் இருந்திருக்குமா?
அவர் எந்த டாக்டரிடமும் போனதாக யாருமே சொல்லவில்லை. 
அப்படி இருக்க அவரது குடும்பம் அவரை சரியாக கவனிக்கவில்லை என்று எப்படி  அப்பட்டமாக பழி சொல்வார்கள்? எவ்வளவு மன வேதனை ஏற்பட்டிருந்தால் அவர் இப்படி ஒரு விடியோ வெளியிட்டிருப்பார்?
....2000....
அன்று என் கணவருக்கு திடீரென உடல் நலம் மாறியது.
யாருமே எதிர்பார்க்காத அடி ...இடி.. 
ராஜ மருத்துவம்.
ஆனால் பலன் இல்லை.
......
அப்போதும் ஊரும் உறவும் இப்படித்தான் சொல்லியது.
நான் சரியாக கவனிக்கவில்லை.
மருத்துவர்கள் சரியாக கவனிக்கவில்லை.
.....எத்தனை குற்ற சாட்டுகள்?????????
எத்தனை மன வலி?????????? 
கணவரின் இழப்பு என்ற வேதனையை விட இந்த நெருப்பு அம்புகள் தந்த வேதனை....
சாரதா நம்பி ஆரூரான் ஒரு இடத்தில் இது பற்றி சொல்லியுள்ளார்.
அவருக்கும் அதே வேதனை.
...ஆக ....உலகம் மாறவில்லை.
WHAT A SADISTIC PLEASURE ...
ஆ ...
இவ்வளவு வெற்றியாளனா ???????????
ஆ 
விழுந்தானா ???????????
சிரி .சந்தோஷப்படு .என்பதுதான் உலகம்.
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா  


  

2019/06/10

தாம்பரம் விபத்து

இன்று தாம்பரம் பகுதியில் ஒரு சிகப்பு நிற கார் அசுர வேகத்தில் வந்து இரண்டு பைக்குகள் மேல் மோதி 4 பேர் தூக்கி வீசப்படுகின்றனர்.
இதுதான் கார்த்திக்கிற்கும்  நடந்தது.
பின்னால் வேகமாக வந்த கார் கார்த்தியின் பைக்கின் மேல் இடித்த வேகம்தான்....இன்று நான் மகனை இழந்து தவிக்க காரணம்.
யாரை நொந்து என்ன பயன்?
என் விதி.
அவ்வளவுதான்.
23 வயது மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறிகொடுத்து எரிமலையின் உச்சியில் எரிமலை குழம்பில் நின்று கொண்டிருக்கிறேன்.
கார்த்திக் அம்மா

2019/06/06

தப்பு.தப்பு.

.இந்த பெயர்களை எல்லாம் படிங்க, இவர்கள் தான் இனி உங்கள் பகுதியின்
EB Department AE,

1) Satya Kumar Behera
2) Pendyala Jothsna Praveena.P
3) Nimmalameher Santhosh
4) Suparna .M Das
5) Soni Kumari.S
6) Guru Prasad Reddy.V
7) Awin Gupta
8) Ramasubba Reddy.Poli
9) Nukala Vijayabhaskar.N
10) Mangala Bhargava Kumar.M
11) Nageswara Rao.Gonna
12) Geddamyugandhar.G
13) Aklavya Kumar.Nil
14) Vamsi Krishna.Yele
15) Prudhvi Raj.Saibaba
16) Deepak Kumar.Nill
17) Anil Kumar.Polisetty
18) Raghava Rao.B
19) Venkata Ramaiah.Midde
20) Senapti Naga Venkata Sai Phanindra
21) Neelam Siva.Sankar Reddy
22) Naga Venkata Vamshi Kumar.V
23) Wien.R
24) Ashutosa Kumar Trapathi.Na
25) Mangala Veera Sekhar
26) Shadab Usmani.Su
27) Sai Krishna.Chintha Ginjala
இதெல்லாம் பெரிய தப்பா தெரியுதுங்க.
நம் தமிழ் நாட்டில் படித்த பொறியாளர்கள் யாருமே தகுதியானவர்கள் இல்லையா?
இவர்கள் என்ன தேர்வு எழுதினார்கள்?
என்ன கட் ஆஃ ப் ?
யாரவது விவரம் சொல்லுங்களேன்.
கார்த்திக் அம்மா
பி .கு .
இது       (இந்த லிஸ்ட் )   ஒரு பிளாக்கில் வந்த பதிவு.அவர் அனுமதி பெறாமல் பயன்படுத்தினேன்.மன்னிக்கவும்.

2019/06/04

JUNE 3 2005

JUNE 3 2005
இது ஒரு மீள்பதிவு .காலம் ஓடுகிறது. மனம் மட்டும் 2005 லியே இருக்கிறது.அப்போது எழுதியது..
// //1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)// //

இது இன்று 03/06/2019
தம்பி செந்திலின் படிப்பு முடியும் வரைதான் நீங்கள் சென்னையில் இருக்க வேண்டும்.
அப்புறம் என்னுடன் இருக்க பெங்களூரு வந்து விட வேண்டும் என்று கார்த்தி அன்பு கட்டளை இட்டதால் பணி  மாறுதலுக்கு விண்ணப்பித்து விட்டு (கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் long leave ) என்று சொல்லி விட்டு வேளச்சேரியில்  இருந்து வீட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு பெங்களூரு கிளம்பி விட்டேன்.
இனி வாழ்நாள் முழுக்க பெங்களூருதான் என்பது திட்டம்.
எனக்கு பெங்களூரு பிடித்த நகரம் அல்ல 
சென்னை பிடிக்காத ஊரும் அல்ல .
மகன் இருக்கும் இடம் என் சொர்க்கபுரி. 
அவனுடன் சேர்ந்து வாழ்வது தலையாய இன்பம்.
அவ்வளவுதான்.
நான்+கார்த்தி+செந்தில் ...போதும்.
வேறு என்ன வேண்டும் ஒரு தாய்க்கு .
விதி இவ்வளவு கோரமாக விளையாடும் என்று தெரியவில்லை.
 போன வேகத்தில் திரும்ப வந்து விட்டேன்.ஆசையுடன் அழைத்துச் சென்ற மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறி  கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து நடைப் பிணமாக இருந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி ஒரு வேதனை தேவையா? மனம் கதறிக் கொண்டே இருக்கிறது.
அம்மா

யூ tube எரிச்சல்கள்

கல்வி அமைச்சர் திரும்ப திரும்ப சொல்கிறார் .
june  3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் ...
ஆனால் ஒரு யூ டியூப் பதிவில் ஒருவன் ஜூன் 10ம் தேதிதான் பள்ளிகள் திறப்பு என்று சொல்கிறான்.
இது ஒரு சேம்பிள்தான் .இது போல் எத்தனை டுபாக்கூர் பதிவுகள்.
இவர்களை தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
எந்த சட்டமும் இல்லையா?
சன் டி .வி க்கு ஆப்பு.மோடி சன் டி .வி.யை  முடக்கப் போகிறார்.
இப்படி ஒருத்தன்.
படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்களா ?
அதிலும் சிலர் பேசும் தமிழ் ....இது தமிழா என்று தலையில் அடித்துக் கொள்ள தோன்றுகிறது.
''நுப்பது'' (முப்பது )
பாவம் ..கலைனர் (கலைஞர் )
இப்படி ஒரு க்ரூப் .
எதற்கும் ஒரு வரைமுறை வேண்டும்.
வரைமுறைப் படுத்துங்கள்.

2019/05/29

ஆச்சரிய ஒற்றுமை.

ஆச்சரிய ஒற்றுமை.

நாங்குநேரி

நாங்குநேரி இடைத்தேர்தல் :
இந்த சிஸ்டம் மாற வேண்டும்.
இவர் எம் .எல்.ஏ வாக இருந்து கொண்டே எம்.பி தேர்தலில் ஏன் நிற்கிறார்?

இப்போது இன்னொரு தேர்தல்.அதற்கொரு செலவு.
நாங்கள் கட்டும்  வரிப் பணம் இப்படி வீணாகிறது.
இந்த தேர்தலுக்கான செலவை இவரிடம் இருந்து பெறலாம்.
அல்லது
முந்தைய தேர்தலில் இவருக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை எம்.எல்.ஏ ஆக ஆக்கலாம்.
....
அதே போல் ஒருவர் 2 தொகுதிகளில் நின்று இரண்டிலும் வெற்றி பெற்று ஒரு தொகுதியை ராஜினாமா செய்தால் அந்த தேர்தல் செலவையும் அவரே ஏற்க வேண்டும் என்று சட்டம் வர வேண்டும்.
கார்த்திக் அம்மா

2019/05/22

பெற்ற தாயே செய்யும் கொலை

//  சென்னை அம்பத்தூரில் மூன்றரை வயது மகனை பெற்ற தாயே தவறான நட்புக்காகக் கொலை செய்துள்ளார்.//
பெண் உரிமை வேண்டும் என்று போராடியவர்கள் இப்போது அதிர்ந்து போய் உள்ளனர்.
செய்திகளை பார்த்தால் ஒரு நாளைக்கு 4 கொலையாவது நடக்கிறது.
தோசை கரண்டியால் அடித்து 
குக்கர் மூடியால் அடித்து 
வெய்யிலில் நிற்க வைத்து 
கழுத்தை இறுக்கி 
என்று பல உத்திகள்.
கொலை செய்யப் படுவது குழந்தைகள்.
கொல்வது அம்மாக்கள்.
காரணம் 
கள்ள உறவு. 
என்ன '' '' உடல் பசி????????????'' '' 
'' என் உடம்பு '' 
என் உரிமை 
என்ற கூச்சல் .
கலிகாலம். 

2019/05/20

கார்த்திக் resume




S.Karthikeyan

ponniyinselvan@india.com

M35C, Mahalakshmi Colony,

Kamaraj Nagar, Thiruvanmiyur,

Chennai - 41.

Ph: +91-44-4424847

Personal Details

Date of Birth 15th June 1981
Mother's Name V.Kalavathy,M.A,M.Ed,M.Phil,M.B.A.
Marital Status Single

Academic Details

  • Matriculation Exams (Std. X) June 1996

Malco Vidhyalaya Matric. Hr. Sec School, Mettur Dam.
959/1100 - 87%

  • Higher Secondary Course (Std. XII) June 1998

Govt. Hr. Sec School, Mettur Dam.

1131/1200 - 93%


  • Bachelor of Engineering (Computer Science and Engg.) June 2002
Anna University, Chennai.
CGPA - 6.6

Software Skills

Programming languages : C, C++, C#, ASP.Net, VB.Net, Java, Visual Basic, Assembly, MatLab
Operating systems : Windows, Unix, DOS
Databases : FoxPro, Oracle, Developer 2000

Electives

    • C# and .Net Programming
    • Advanced Java Programming
    • Visual Programming
    • Mobile Computing
    • Unix Internals
    • Neural Networks
    • Digital Speech and Image Processing
    • Robotics

Academic projects

Travel Planner C#
The software provides the functionality for manipulation of maps generated using an allied Map Generation Program. The user can plan his travel based on time and distance constraints. The project is founded upon Dijkstra's Shortest Path Algorithm and Travelling Salesman Problem.

Signature Recogniser Matlab
The project uses a Stroke-based approach for recognition of the signatures, where the signatures are trained as a series of strokes in a chain-code format. The concept of Dynamic Programming is used in the matching of signatures.
Multilingual Keyboard Simulator 8086 Assembly
This project realises the advantages provided by the Unicode encoding standard and the inherent capabilities of the browsers to display multi-lingual content. This enables the creation of multi-lingual web-pages that does not require installation of any fonts or special software.

Network Carrom Board Java
This is the implementation of the classic game of Carrom-board that can be played over a network by two persons in real-time.

Fractal Mountain Generation C
This Graphics-project generates a random mountain-scape continuously for application in games like Flight Simulators. The project implements it using Fractal Curves for 2-D landscape and the report discusses the changes required for a 3-D implementation.

English - Tamil Transliterator Visual Basic
This software was developed using the concepts of Compiler Design - Parsing and Lexical Analysis to generate documents in Tamil using the conventional English keyboard.

Compiler for C-like language C, Lex, Yacc

Library Automation Oracle, Developer 2000
Digital Voting Machine Digital







Responsibilities Held

  • Secretary of Computer Society of Anna University for 2001-02.
  • Vice President of Computer Society of Anna University for 2000-01.
  • Administrator and Design Committee Head of the web-site of SCSE: cs.annauniv.edu
  • Authored part of C Text Book for Computer Society members.
  • Conducted the following events:
  • Technical Quiz at SPARKS 1998 for Chennai School Students
  • Technical Quiz at EUREKA 1999 for First Year Students
  • Technical Quiz at UNDEFINED 2000 – Annual Intra University Contest
  • Technical Quiz at UNDEFINED 2001 – Annual Intra University Contest
  • Technical Quiz at ABACUS 2001 – National Level Tech. Symposium
  • General Quiz at Agni 2001 – Intra University.
  • Technical Quiz at ABACUS 2002 - National Level Tech. Symposium
  • General Quiz at Techofes 2002 – Intercollege meet


Areas of Interest

  • Systems Programming
  • Rapid Application Development
  • Web Designing and Programming
  • Artificial Intelligence
  • R&D in any related field


Additional Information

  • Secured 23rd rank in the State in Entrance Examinations and an Overall Rank of 81.
  • Attended a certificate course on Oracle conducted by Anna University.
  • Worked on a paper titled 'Design of an A.I. Model for Military Warfare'.
  • Working on a paper titled 'Design of an A.I. Model for e-Governance'.
  • Articles in Cursor - bi-monthly Technical Magazine of Computer Society - Get Linked to HTML (HTML Tutorial), Weird Wild Web (Web Review).


Other Interests
Reading Novels, Visiting Historical Places, Travel and Strategy Games.

Prizes in National Level Technical Symposiums

Event

College

Prize

Software Presentation

REC, Trichy

II

Software Presentation

Hindustan College

II

Software Presentation

REC, Nagpur

Presented

Software Presentation

CIT, Coimbatore

Presented

Software Presentation

Annamalai University

Presented

Software Presentation

K.S.R.Tech, Tiruchengode

Presented

Paper Presentation

V.R.S.E.C, Villuppuram

II

Paper Presentation

NITS, Chennai

Presented

Technical Quiz

C.I.T, Coimbatore

I

Technical Quiz

NITS, Chennai

I

Technical Quiz

K.S.R.Tech, Tiruchengode

I

Technical Quiz

Stella Maris College

II

Technical Quiz

Madha Engineering College

I

Technical Quiz

Hindustan College of Engg.

II

Technical Quiz

V.R.S.E.C, Villuppuram

II

Programming/Debugging

Sri Venkateswara College

I

Programming/Debugging

V.R.S.E.C, Villuppuram

I

Programming/Debugging

St.Joseph's College

II

Programming/Debugging

NITS, Chennai

II

Programming/Debugging

Rajalakshmi Engg.

II

Programming/Debugging

Hindustan College of Engg.

II

Programming/Debugging

REC, Trichy

III

Technical Crossword

Bharat Inst. of Sci. & Tech.

I

Declaration


I hereby declare that all the information provided above is true to the best of my knowledge.

Yours truly,

(S.Karthikeyan)
 

2019/05/13

என் அம்மா



என் தந்தையானவன்.
என் மகனானவன்
என் உயிரானவன்.
இந்த தாய்க்கு தாயானவன்.
என் அன்னையும் இவனே.
என் அம்மாவும் இவனே.
என்ன செய்து என் உயிர் மகன் கார்த்திக்கிற்கு நான் பட்ட அன்பு கடனை தீர்ப்பேன்?
என் உயிரை உருக்கி நெய்யாக்கி விளக்கேற்றி
என்னையே தீபமாக்குகிறேன்
இந்த தெய்வத் தாய்க்கு
என் அன்னையான கார்த்தி தெய்வமே உன்னை வணங்குகிறேன்
*****

இவர் என்னை பெற்ற அன்னை .இவரும் ஒரு சாதனையாளர்
பன்முக திறமை கொண்டவர் .ஒரு சிறந்த தலைமை ஆசிரியர்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்
இது ஒரு மீள் பதிவு.
நாட்கள் ஓடுகின்றன.கார்த்தி மறைந்து 14 வருடங்கள் ஓடி விட்டன.
விரக்தி,சோகம்,ஏக்கம் என மனம் வெம்பி ஊமையாய் அழுது கொண்டே இருக்கிறது .
என் அம்மா