About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/01/23

சிறந்த மனிதர்கள்

எப்போது செய்தித்தாளை கையில் எடுத்தாலும்,கொலை,கொள்ளை,மோசடி,விபத்து என்றே செய்திகளைப் படித்து மனிதர்களிடம் மனிதத் தன்மையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறதே என்று வருந்திக் கொண்டிருந்த எனக்கு, இன்றைய தினமலர் செய்திகள் இரண்டு மிகுந்த ஆறுதலை தந்தன.
மனித்ர்கள் மிருகங்கள் ஆகிக் கொண்டிருக்கும் போது ,மிருகங்கள் மனித்ர்கள் ஆகிக் கொண்டிருக்கின்றன.
செய்தி ஒன்று:மேலூர் அருகே சின்னவீரன் , ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்.அவர் ஒரு காளையை பாசமுடன் வளர்த்து வந்தார்.அந்த காளையை ஜன.17 ம் தேதி நடைபெற்ற அலங்கானல்லூர் ஜல்லிக்கட்டிற்கு கொண்டு சென்றார்.அங்கு அவரது காளை வீரர்களால் பிடிக்கப் பட்டு விட்டது.பின்னர் ஊர் திரும்பிய காளை உணவு உண்ணாமல் இருந்து,ஜன்.19ம் தேதி இறந்தது.
செய்தி இரண்டு:
கோவை அருகே யானைகள் ஊருக்குள் புகு்ந்து விவசாய நிலங்களை சேதப் படுத்தும் செய்தி.அதில் சில யானைகள் 'கில்லாடி'....மின்வேலியின் அருகில் வரும் யானைகள் அங்கிருக்கும் மின்கம்பிகளை தொடாமல் , வேலிக்கு போடப்பட்டுள்ள நடுகற்களை மட்டும் கீழே சாய்த்து விட்டு,மின்சார அதிர்ச்சி தாக்காத வகையில் காய்ந்த மரங்களை தூக்கிப் போட்டு அதன் மேல் நடந்து செல்லும் அறிவை பெற்றுள்ளன.ஆனைகட்டியில் ரோட்டில் நின்று கொண்டிருந்த இரண்டு வயது சிறுமியை ஒன்றும் செய்யாமல் தும்பிக்கையால் அந்த குழந்தையை தூக்கி ரோட்டில் ஓரத்தில் நிற்க வைத்து விட்டு யானைகள் சென்றன......
இதை எழுதும்போது,எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.ஒருமுறை மைசூரில் உள்ள விலங்ககத்திற்கு [zoo] சென்றிருந்தோம்.அப்போது சில இளவயது வாலிபர்கள் மனிதக் குரங்கு பகுதியில் நின்று கொண்டு பலவிதமான கேலிக் கூச்சல்களும் சேஷ்டைகளும் செய்து அந்த விலங்கை எரிச்சலூட்டிக கொண்டிருந்தனர்.அதுவும் மிகுந்த கோபத்துடன் அவர்களை நோக்கி தன் வெறுப்பை காட்டி அங்கும் இங்கும் குதித்து தவித்துக் கொண்டிருந்தது.[by impulse] எனக்கு என்ன தோன்றியதோ,என்னையும் அறியாமல் நான் HALLO FRIEND என்றேன்.நம்பினால் நம்புங்கள்.அவ்வளவு கோபத்துடன் இருந்த அந்த விலங்கு என் பக்கம் திரும்பி அப்படி ஒரு நேசப் புன்னகையுடன் கை உயர்த்தி என்னுடைய நட்பை அங்கீகரித்தது.இதை ஒருவரிடம் சொல்லிய போது அவர் கிண்டலாகக் கூறி்னார 'தன் இனத்தை அது அடையாளம் கண்டு கொண்டிருக்கும்".நன்றி, அன்பு, நேயம்,பண்பு இல்லாத இந்த மனித வர்க்கம் என்னை தன் இனம் என்று அடையாளம் கண்டு கொள்ள வில்லையென்றால் அது என் பாக்கியமே.
ஆக,இந்த வார விருது பெறும் சிறந்த காளைக்கும் , யானைக்கும் என் வந்தனங்கள்

2 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Jeevan said...

அந்த குழந்தையை தூக்கி ரோட்டில் ஓரத்தில் நிற்க வைத்து விட்டு யானைகள் சென்றன......

Happy to hear it:) That person said it right, "தன் இனத்தை அது அடையாளம் கண்டு கொண்டிருக்கும்" that's why it smiled when u call it Friend. Varavara Animals are becoming intelegent than humans!