About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/05/07

கார்த்தி மகன்..கார்த்தியின் மகன்

கார்த்தி என்னை விட்டு சென்று 2 1/2 வருடங்கள் ஆகீவிட்டன.பைத்தியம் முற்றி விட்டது.காணும் இடமெல்லாம் அவன்..காணும் காட்சியெல்லாம் அவன்.ஜன்னலில் நின்று எட்டிப் பார்க்கிறான்.கதவை தட்டி,,திறந்து பார்க்கும்போது சிரீத்து மறைகிறான்.முழுப் பைத்தியமாக சுற்றிக் கொண்டிருக்கும் நான் ஒரு நாள் கடையில் ஒரு 2 வயது குழந்தையை பார்க்கிறேன்.எனக்கு தெரிந்து விட்டது.அது என் கார்த்தியின் மகன்.பொது இடம் என்பதையும் மறந்து, அந்த குழந்தையை இறுக அணைத்து "இது என் கார்த்தி மகன் " என கதறுகிறேன்.
அருகிலிருந்த அந்த பெண் , "ஆம்,இது உங்கள் கார்த்தியின் மகன்தான்" என்கிறாள
நம்ப முடியாமல் அவளைப் பார்க்கும் என்னிடம் அவள் கூறுகிறாள்:என்னை மன்னித்து விடுங்கள்.இது உங்கள் கார்த்தியின் மகன்தான்"என்று உறுதியுடன் கூறுகிறாள். "ஆனால், என் மகன் தப்பு செய்ய மாட்டானே.இது எப்படி??'"அவள் கூறுகிறாள்:"ஆம், அவருக்கே தெரியமால் போதை ஏற்றி , ஹார்மோன் ஊசி போட்டு அவரை இயங்க வைத்தேன். அவர் மீது நான் கொண்ட காதல் வெறித்தனமானது.ஆனால் அவரோ 'காதலாவது,,கத்தரிக்காயாவது,,என் அம்மாதான் எனக்கு உலகம்' என்றார்.
அவரை எனக்கே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆத்திரத்தில்....[திகைத்து நிற்கும் என் கையை பிடித்தபடி தொடர்கிறாள் ]
"என் சுய புத்தி இழந்து, ஒரு நாடகம் ஆடினேன். அவருக்கு ஒரு விபத்தை ஏற்படுத்தினேன்."---"வருடங்கள் ஓடினாலும் அம்மாவும் மாறவில்லை.மகனும் மாறவில்லை. அவருக்கும் அம்மா, அம்மா...24 மணி நேரமும் அம்மா.---உங்களுக்கும் மகன், , மகன்-24 மணி நேரமும் மகன்தான் மூச்சு.நான் தோற்று விட்டேன். அதனால்தான் உங்கள் மகனை உங்களிடம் ஒப்படைக்க வந்தேன்"

எனக்கு குழப்பம்.மகன் என்கிறாளா அல்லது பேரனை அப்படி குறிப்பிடுகிறாளா?
அவள் சற்றே நகர --அங்கே...அங்கே ..நிற்பது யார்--யார்?..என் கார்த்தியா? ஆம் .என் கார்த்திதான்..உயிரோடுதான் இருக்கிறானா?..உடல், பொருள் , ஆவி, உலகம் எல்லாம் சேர்ந்து ஒரு கதறல்.."கார்த்தி, என் மகனே" என அவனை கட்டியணைத்து கதறுகிறேன்.
என் மருமகள் குறுக்கிட்டு, "ஆம், உங்கள் மகன் போல் உருவத்தை அங்கு வைத்து விட்டு அவரை மறைத்து விட்டேன். ஆனால், உங்கள் அன்புக்கு முன் தோற்று விட்டேன். உங்கள் மகன் உங்களுக்கு..என் மகன் எனக்கு..நான் விடை பெறுகிறேன்" என்று கிளம்ப யத்தனிக்கும் அவளை "நில்லம்மா, வெறித்தனமான தோ , மூர்க்கத்தனமானதோ --நீ கொண்ட காதலும் நான் கார்த்தியிடம் கொண்ட அன்பைப் போன்றே பூரணமானது. நீ இங்கேயே எங்களுடன் இரு "என்று கூறி அவளை அணைத்துக் கொள்கிறேன்................கற்பனை நிஜமாகுமா? ஏக்கத்துடன்..............கார்த்திக் அம்மா

1 comment:

Anonymous said...

mmm i really donno what to write..but i can understand ur feelings karthiamma...HUGSsSSS