About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/05/07

வாழ்க்கை மிகவும் தமாஷாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு முறை ஆட்டோவில் போய் இறங்கும போது அவரிடம் ரூபாய் நோட்டை தந்தேன..'"மீதியை அப்புறம தருகிறீர்களா?'' என்றார் ஆட்டோகாரர். மிகவும் மரியாதையாக [அட, அதாங்க, 'திரு திரு ' ] என விழித்தேன்.அப்புறம்தான தெரிந்தது.100 ரூபாய் என்று நினைத்துக் கொண்டு 50 ரூபாய் தாளை எடுத்து கொடுத்திருக்கிறேன்.
அடுத்த முறை 50 ரூபாய் தர வேண்டியிருந்தது. மிகவும் புத்திசாலித்தனமாக 500 ரூபாய் தாளை எடுத்து கொடுத்து விட்டு நடக்க ஆரம்பித்தேன். "அம்மா மீதி சில்லரை வேண்டாமா?" என்று கேட்டார் ஆட்டோகாரர். என்ன மறுபடியும் மரியாதையாக திரு திரு வென விழித்து விட்டு டன் கணக்கில் அசடு வழிந்து விட்டு சமாளித்தேன்.
அடுத்த விஷயம் இன்னும் மோசம். குளிப்பதற்கு immersion heater போட்டு விட்டு தண்ணீர் சூடாகி விட்டது ,,குளிக்கலாம் என்று heater ஐ off பண்ணாமலே எடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து "என்ன குளியலறை சூடாவது போல் தெரிக்றதே " என்ற குழப்பத்துடன் பார்த்தால், heater அழகான சிவப்பு நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.. எங்கு போய் முடியுமோ?
அட கார்த்திகேயா!! [புரியவில்லையா....எல்லோரும் அடக் கடவுளே என்பார்கள்..என் கடவுள் கார்த்திகேயன்தானே ...அதனால்தான்...அட கார்த்திகேயா.

2 comments:

Anonymous said...

u must take care of ur self with things like heater...

frenchgori said...

Greetings! how you make me wish i could read Tamil! Keep up the writing! regards,diana