மதம்
யானைக்கு மதம் பிடிக்கும்.ஆனால் இங்கு மனிதனுக்கு மதம் பிடித்திருக்கிறது.
or
மதம் மனிதனை பிடித்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில் ஒரு தொழிலுக்கு ஒரு சில குடும்பங்கள் என்று உருவாக்கப் பட்ட விஷயம் பிற்காலத்தில் ஜாதியாக உருமாறியது.
அந்தந்த குடும்பங்கள் வாழும் நிலத்திற்கேற்ப , செய்யும் தொழிலுக்கேற்ப சில வழிபாட்டு முறைகளை பின்பற்ற ஆரம்பித்தனர்.ஒரு கூட்டம் எங்கிருந்தோ வந்தது.தன் பிழைப்பிற்காக பல கட்டுக் கதைகளை சொல்லி மக்கள் அறிவை சீர்குலைத்து பல பூஜை புனஸ்காரம் என்ற பெயரில் மக்களுக்கு புரியாத வகையில் சொல்லும் கதையை திறமையாக சொல்லி அடித்தட்டு மக்களை அடிமைகளாக்கினர்.
இப்போது மதம் என்ற பெயரில் மதம் பிடித்து ஆடுகின்றனர்.
வர்க்க பேதம்,
மத பேதம்
என்று மக்களை ஒற்றுமையாய் வாழ விடாமல் சித்திர வதை செய்கின்றனர்.
ஆதி காலத்தை விடு.
இப்போது நான் என்ஜினியர் ,நான் டாக்டர் ,நான் விவசாயி என்ற வரை முறைக்குள் கொண்டு வந்து நான் பெரியன் , நீ தாழ்ந்தவன் என்ற கொடுமைகளை துரத்தி மக்களை அன்போடு,கண்ணியத்தோடு வாழும் வழி சொல்வோம்.
No comments:
Post a Comment