மீண்டும் ஒரு தேர்தல் பண்டிகை கொண்டாடி முடித்தாகி விட்டது.
பலர் காணாமலே போய் விட்டனர். 'அம்மாவின்' நம்பிக்கைபடி ஏழரை சனி போகும்போது அள்ளிக் கொடுத்து விட்டு சென்றுள்ளது.
மு.க ஒரு சொதப்பல் அறிக்கை அளித்துவிட்டு மகளை பார்க்க போய்விட்டார்.
பாவம் ஸ்டாலின் ...உடல்நிலை சரியில்லாத போதும் ,தனியாளாக பிரச்சாரம் செய்தார். அஞ்சாநெஞ்சன் எங்கே என்றே தெரியவில்லை .
இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள் ..
கவனிக்கப் பட வேண்டிய விஷயம் இரண்டு.
*விஜயகாந்த் :'' அந்த அம்மாவை நாங்கள்தான் ஜெயிக்க வைத்தோம் '' என்று பேசி தன்னை தானே கவிழ்த்துக் கொண்டார்.
* ராமதாஸ் : இவர்தான் தேர்தலின் ஹைலைட் : விஜயகாந்த் '' தண்ணி '' போட்டு உளருவதாகக் சொல்வது உண்மையோ இல்லையோ. ஒன்று சர்வ நிச்சயம். ராமதாஸ் உளறிய உளறலுக்கு அளவே இல்லை. 'அரசு அதிகாரிகளைக் கொல்வேன் ' என்றெல்லாம் மிக மிக அளவுக்கு அதிகமாக பேசி தன் தலையில் கூடை கூடையாக அல்ல, லாரி, லாரியாக மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார். இதில் வேறு ,ஏதோ வன்னிய சாதிக்காகவே உயிர் வாழ்வது போல் ஒரு பில்டப் .
எப்படியோ, தமிழ மக்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். தேர்தல் முடிந்தால் தீபாவளி. அடுத்தது வேறு எதாவது ஒன்று. எல்லாம் இலவசமாக கிடைப்பது போதாது என்று தேர்தல் காசு, போனஸ் .ஒரே ஜமாதான். மஜாதான். இருக்கட்டும். சந்தோஷமாக இருக்கட்டும்.
கார்த்திக்+அம்மா
No comments:
Post a Comment