One day Senthil came with some surprising guests. As his friend planned to go on a trip he needed someone to take care of his pets. இரண்டும் வந்தன . ஒரு வாரம் வீடு ஒரே அமர்க்களம்தான்.ஒரே சத்தம்தான். கறுப்பிதான் மனைவி. வெள்ளையன் பாவம். அமைதி. கறுப்பி அவனை மிரட்டும் மிரட்டலுக்கு அளவே இல்லை.சண்டை, சண்டை அப்படியொரு சண்டை.
விசில் அடித்தால் அவர்களுக்கு பிடிக்கும் என்று செந்திலின் நண்பன் சொல்லியிருந்ததால், செந்தில் கூண்டில் பக்கத்தில் போய் உட்கார்ந்து விசில் அடிக்க , கறுப்பி பயந்து கத்த ஏக ரகளை. அதன் பின் செந்திலை பார்த்தாலே கறுப்பி அலற ஆரம்பிக்க ,அவனுக்கு கோபம் வர " வா,வா, உன்னை துண்டு துண்டாகி சில்லி மஞ்சூரியன் போட்டு விடுகிறேன் " என்று கத்த [ ஒரு யு டிபிள் , ஒரு குழந்தை மற்ற எல்லோரையும் பார்த்து சிரிக்கும். தன அப்பாவை பார்த்தால் மட்டும் பேயை பார்த்தது போல் வீரிட்டு அழும். ] இதை நான் சொல்ல போக செந்திலுக்கு இன்னும் ரோஷமாக போய்விட்டது. விடுவனா பார் என்று விசில் அடிப்பதும், அவர்களிடம் பேசுவதுமாக என்ன என்னவோ செய்து பார்த்தான். அவர்களுக்கு மினரல் வாட்டர் தான். அவர்களின் சாப்பாட்டு கிண்ணத்தை கழுவுவது என்ன , [என்ன என்ன ] ஒன்றும் வேலையாகவில்லை. எனக்கே அவனை பார்த்து பாவமாகி விட்டது.
இப்படியாகத்தானே ஒரு வாரம் .நான் போய் கூண்டின் அருகில் அமர்ந்து ,''உங்களுக்கு ஏதாவது வேண்டுமா , பசிக்கிறதா '' என்றெல்லாம் அவைகளுடன் பேசிக் கொண்டிருப்பேன்.
கிளைமேக்சே இதுதான்.
மீண்டும் தன் சொந்த வீட்டிற்கு திரும்பிய இந்த பறவைகள் ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லையாம். செந்திலின் நண்பன் ''என்னடா செய்தீர்கள் '' என்று குழம்ப , சரி அவைகளுக்கு தானியம் வைத்த அந்த கின்னத்தையாவது கொடு என்று அந்த நண்பன் அந்த கிண்ணத்திலேயே தானியம் வைக்க அவைகள் சாப்பிட்டு தம் விரதத்தை முடித்துக் கொண்டன.
என்னையும் என் வீட்டையும் அவைகளுக்கு பிடித்து விட்டது போலும்.
ஒரு வேலை, மிருகங்களுக்கு மட்டும்தான் என்னை பிடிக்கிறது போலும்.
கார்த்திக் +அம்மா
1 comment:
இதை நான் கண்டிக்கிறேன் "மிருகங்களுக்கு மட்டும்தான் என்னை பிடிக்கிறது போலும்" ! Good to know they were your visitors lately and sure it must be nice treating and talking to them :)
Post a Comment