தலித் சினிமாக்கள் :
so called கீழ் தட்டு மக்களின் அவல நிலையை தோலுரித்து காட்டுகிறோம் என்று படங்களை எடுத்து தள்ளுகிறார்கள்.
போன நூற்றாண்டில் நடந்தது .'எங்களை அடிமையாக நடத்தினார்கள்.நல்ல சாப்பாடு கொடுக்கவில்லை.14 மணி நேரம் வேலை வாங்கினார்கள்' என்றெல்லாம் படத்தில் காட்சிகள் வருகின்றன.
நானும் கிராமத்தில்பிறந்தவள் .என் தாத்தா அந்த ஊர் சிற்றரசர் .நான் அறிந்த வரை சொல்கிறேன்.என் தாத்தா மிகவும் நல்லவர்.
ஆனால் மற்ற கிராமங்களில் இந்த கொடுமைகள் இருந்தன.இதில் பலருக்கு தெரியாத ஒரு விஷயம் என்ன என்றால் தலித் மக்கள் மட்டுமல்ல .'''.அனைத்து ஜாதி மக்களும் '''ஊர் தலைவருக்கு கட்டு பட்டே ஆக வேண்டும்.
தலைவரின் உறவினர்களே கூட கிட்டத் தட்ட அடிமைகள் போல்தான் இருந்தனர்.
அவர் வைத்ததுதான் சட்டம்.
அவர் சொன்னதுதான் வேதம்.
கொடுமைக் கார தலைவர் என்றால் எல்லோருக்கும் கசை அடிதான்..
ஒரு தலைவர் தனக்கு அடங்காத, தவறு செய்த ஆணை 'குதிர் ' என்று சொல்ல படும் தானிய கிடங்கு (சுமார் 12 அடி ஆழம் உடைய அறை .ஜன்னல் போன்ற காற்றுக்கு வழியே இல்லாத ) ஒரு கட்டிடம்.ஒரு வருடத்திற்கு தேவையான தானியங்களை கொட்டி வைத்து 1 அடி அகலம் கொண்ட திட்டி வாசலை மூடி விடுவார்கள்.
எந்த ஆள் தவறுகிறானோ அவனை 10 'வல்லம் 'நெல் மேலே எடு'' என்று சொல்லி அந்த குதிர் ரூமிற்குள் ஏணியை வைத்து இறக்கி விட்டு விட்டு அவன் இறங்கியவுடன் ஏணியை மேலே எடுத்து விட்டு திட்டி கதவை மூடி விடுவார்கள்.
காற்று கிடையாது.
தண்ணீர் கிடையாது.
உணவு இல்லை.
அவன் அங்கேயே கிடக்க வேண்டியதுதான்.
15 நாட்கள் கழித்து கதவு திறக்க படும்.
மீதியை நான் சொல்ல மாட்டேன்.
இதெல்லாம் 90 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை.
நானே மறந்த கதை.
என் அம்மா சொல்லிய கதை.
ஆனால் இந்த டைரக்டர்கள் எடுத்த படங்களினால் இதெல்லாம் நினைவுக்கு வருகிறது.
இது இதுதான் பிரச்சினை.
இப்போதைய ''ஒடுக்கப் பட்ட மக்கள் '' இதையெல்லாம் ''கிரிஞ் '' என்று கடந்து போகிறார்கள்.
வெடிகுண்டு எங்கே வெடித்தது என்றால் இந்த so called ஆண்ட பரம்பரையில்தான்.
ஆஹா நாம் ஒரு காலத்தில் இவ்வளவு அதிகாரமாக இருந்திருக்கிறோம் .இப்போது இந்த பயல்கள் நம்மை சல்லிக் காசுக்கு மதிக்கவில்லை என்ற '' விழிப்புணர்வு '' வந்து விட்டது.
விளைவு ....6ங் கிளாஸ் மாணவன் கூட கையில் கலர் பட்டை கட்டி கொள்கிறான்.
மலம் எடுத்து ஸ்கூல் கேட்டில் அப்புகிறான்.
சக மாணவனின் உடையை கழட்டி விட்டு அவன் மீது சிறுநீர் கழிக்கிறான்.
இளைஞர்கள் கூட்டமாக சென்று ஒரு வாழ்விடத்தையே சூறையாடுகிறார்கள்.
படங்கள் பூமராங்காக மாறி எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த கொடுமைகள் இப்போது காட்டு தீ போல் பரவ ஆரம்பிக்கிறது.
ஆணவ கொலைகள் அதிகமாகிறது.
நான் சிறுமியாக இருந்த போது என் அப்பாவுடன் சென்றால் வழியில் வரும் அனைவரும் வேட்டியை இறக்கி விட்டு, துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு கும்பிடுவார்கள்.
எனக்கு அது வித்தியாசமாகவே தெரிந்ததில்லை.
ஆனால் அதே தந்தை 2008 ல் அந்த ஊரில் நடந்த பொது எல்லோரும் பேண்டிற்கு மாறி இருந்தனர்.
'வணக்கம் சார் '' என்று சொன்னனர் .
காலம் எவ்வளவோ மாறி விட்டது.
நான் அப்போது கஷ்டப் பட்டேன் தெரியுமா????????????? என்று இந்த காலத்து குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள்.
ஜாதி வெறியை வளர்க்கிறார்கள்.
சரி.அப்படி கதறும் இவர்கள் தன் இன மக்களுக்கு என்ன செய்தார்கள்?????? அவர்களை படிக்க வைத்தார்களா?
அவர்களுக்கு மருத்துவ மனைகள் கட்டினார்களா?
வீடு கட்டி கொடுத்தார்களா?
பீய்ம் படத்தில் காட்டிய குடும்பத்திற்கு அரசுதான் உதவி செய்தது .
நாங்கள் எங்கள் வங்கிக் கணக்கை பெரிதாக்கிக் கொண்டோம்.
உங்கள் சுய நலத்திற்கு,
உங்கள் அரிப்பை சொரிந்து கொள்வதற்கு மக்களை பழி கடா ஆக்காதீர்கள்.
பலர் சகோதரர்களாக வாழ ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு நடிகர் சொல்கிறார்.' நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன்.எனக்கு அப்போது ஜாதி பற்றி தெரியாது ''''' என்று.
உண்மைதான்.
நான் கல்லூரி படித்து முடிக்கும் வரை ஜாதி பற்றி தெரியாது.
திருமணமாகி என் மாமியார் வீட்டிற்கு போன போதுதான்
''அவர்கள் வேற ஜாதி'' என்ற வார்த்தை .
வேண்டாம்.
மக்கள் மக்களாய் வாழ்வோம்.
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மிருகங்களாய் மாற்றி உங்கள் வெற்றியை கொண்டாட வேண்டாம்.
கார்த்திக் அம்மா ..கலா கார்த்திக்