About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2010/06/30

ஆயாசம் என்ற ஒரு சொல் haunts me completely. I feel totally dejected even to write this post.
SURPRISINGLY, i got a book in a library which ,, you could have easily guessed ,, a history book.
Because Karthik was interested in HISTORY ,now a days I read such books only.
My grandfather used to tell me that we are Chola descendents.
Karthik read soooo many books to find out who we are actually, and his guess was that we are
VIJAYANAGARA NAICKERS.
and the book I read told about a ''ceppedu'' [தாமிர பட்டயம் ] which was issued by the ruler of '' Malliakundham '' [ salem district] .in 1913.
எனக்கு தூக்கி வாரி போட்டது. ஏனென்றால் அதுதான் என் தந்தையின் ஊர் .என் தந்தை பிறந்தது 1933. அப்படிஎன்றால் அந்த பட்டயம் அளித்தது என தாத்தா .
I was so excited and immediately I contacted the author. and wanted to know the complete details. He asked me to come in person so that we could have a detailed discussion.
அன்று முழுவதும் என மனம் துடித்த துடிப்பு.
''கார்த்திம்மா, வா, நீ கேட்ட விவரங்கள். நான் கண்டு பிடித்து விட்டேன். நீ வந்து மீதி ஆராய்ச்சிகளை செய் ''
என்று அவனிடம் சொல்ல வேண்டும் என்று நான் பட்ட பாடு.
I would meet the author and would try to write a book.
But will it reach karthik? will he read it ?
நாங்கள் அரச குடும்பத்தினர் என்று சொல்லிய போது அரைப் பைத்தியம் என்று கிண்டல் செய்தனர் பலர். கார்த்தி அடிக்கடி நான் '' சேலத்து சிங்கம் '' என்று சொல்வான். ஆம். அவன் சேலத்து இளவரசன்தான். நான் எழுதும் புத்தகம் அதை நிருபிக்கும் . என் கார்த்தி மகன் செய்ய நினைத்ததை செய்ய வேண்டும்.
ஆனாலும், அழுகையுடன்,
கார்த்திக் அம்மா

2010/06/04

2005...June..4 th
சென்னையிலிருந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு பெங்களுரு வந்து சேர்ந்து விட்டேன்.
கார்த்தி மகன் " வந்து விடுங்கள் " என்று சொன்ன ஒரே வார்த்தைதான் .
மகனுடன் நூறாண்டு சந்தோஷமாக வாழப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டு வந்து விட்டேன். I applied for a transfer , and came to B'lore , just because Karthik wanted me to be here with him. Never cared for anything else.
மனதில் ஏதோ ஒரு கிலேசம் இருந்தது. புது ஊர் . வேலை மாறுதல் கிடைக்கவில்லைஎன்றால் என்ன செய்வது? என்று பல எண்ணங்கள் மனதில் சுழன்றாலும் கார்த்தியுடன் இருக்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சி மேலோங்கி இருந்தது.
அல்ப நாட்கள்தான் . மீண்டும் சென்னைதான் என்று தெரியவில்லை. சென்னையோ , பெங்கள்ரூவோ , சஹாராவோ ,எந்த இடமும் எனக்கு ஒன்றேதான். கார்த்தி அருகிலிருந்தால்.
ஏன் இப்படி நடந்தது ? எங்கே என் கார்த்தி மகன் ? வா, கார்த்தி வா. உனக்காக , உன் வீட்டில் , நீ வருவாய் என்ற நம்பிக்கையுடன் கதவை பார்த்து உட்கார்ந்திருக்கிறேன். வா, கார்த்தி வா. வந்து விடு. வந்து விடு.
அம்மா

2010/06/01

எம் .பி. சீட் : பிச்சையோ பிச்சை.
அம்மா [ அடடா ,மன்னிக்கவும் ..அப்பா தெய்வமே ] பிச்சை போடுங்க சாமி. ஒரு எம்.பி சீட் பிச்சை போடுங்க சாமி.
கட்சி ஆரம்பிக்கும்போது " எனக்கோ , என் குடும்பத்தில் யாருக்குமே பதவி ஆசை இல்லை என்று சொன்னதெல்லாம் இப்போ ஞாபகப்படுத்தணுமா ..அதையெல்லாம் அப்பப்பவே மறந்திடணும். ஆமாம் ,சொல்லிட்டேன்.
அப்புறம் இன்னொன்னும் சொல்றேன் . எப்படியாவது சீட் வாங்கி விட்டால், அடுத்த தேர்தலுக்கு இவர்களோடுதான் கூட்டணி வைப்பேன் என்று நம்பி விடாதிர்கள். சகோதரியுடனும் வைப்பேன்.
நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் . அடுத்து என் மகளுக்கு சீட் கேட்பேன்.
தருபவருடன்தான் கூட்டணி. ஹஹா.
ஹையா, ஹிஹி.
பிச்சையோ பிச்சை. எம்.பி.சீட் பிச்சை.