About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/06/20

துர்க்கை என் மகள்

1995 மேட்டூர் அணை நகரில் TNEB மின்வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தோம். அருகிலேயே சிவன் கோவில்.
என் அண்ணா கேலி செய்வார்.
''உனக்கு C /OF சிவன் கோவில் என்றுதான் கடிதம் எழுத வேண்டும் ''
அப்படி ஒரு பரம பக்தை.அந்த கோவிலில் இருந்த துர்க்கை சிலை கால் உடைந்து விட்டது.குருக்கள் கோவில் கட்ட சிரம பட்டார்.
என்ன  தோன்றியதோ, ''நான் கட்டுகிறேன் '' என்று சொல்லி விட்டேன்.
அவிநாசியில் சிலை செய்து எடுத்து வந்து கோவில் தண்ணீர் தொட்டியில் வைத்தோம்.
திருமணஞ்சேரி  சுவாமிநாத குருக்கள் வந்து பார்த்தவர்
''அய்யோ ,எதற்கு அம்மனை நீரில் வைத்தீர்கள் ? துர்க்கை எஜமானர் வீட்டில்தானே இருக்க வேண்டும்''  என்றார்.
எனக்கு குழப்பம் .
யார் அந்த எஜமானர் ???????
அவர் என்னை பார்த்து ''அம்மா ,இவள் உன் மகள் .உன் வீட்டில்தான் இருக்க வேண்டும் ''  என்றார்.
நாங்கள் சத்திரியர்கள். (வன்னியர்.)
அதிகம் அசைவம் சாப்பிடுவோம்.
எங்கள் வீட்டில் எப்படி ???????
வீடும் பெரிதல்ல .
ஆனால் அவர் உத்தரவு.
துர்க்கை மகள் வீட்டிற்கு வந்தாள் .6 மாதம்.
கார்த்தி ,  செந்தில் இருவரும்தான் தினசரி காலையும் மாலையும் விளக்கேற்றி   நிவேததனம்   (நெய்வேத்தியம் ) செய்தனர்.
6  மாதம் ....
இருவரும் 6 மாதமும் ஒரு function க்கும் செல்லவில்லை.6 மாதமும் ஊரை விட்டு வெளியே செல்லவில்லை.
6 மாதம் ஒரு முட்டை கூட வீட்டில் சமைக்கவில்லை.
கணவன் மனைவி உறவு எதுவும் இல்லை.அப்படி ஒரு புனிதமாக இருந்து கோவில் கட்டி முடித்து அற்புதமான கும்பாபிஷேகம் .
சுவாமிநாத குருக்கள் சொன்னார்.
''அம்மா, என் தந்தை 1000 கோவில் குடமுழுக்கு செய்ய ஆசைப் பட்டார்.ஆனால் முடியவில்லை.அந்த பொறுப்பை என்னிடம் தந்தார்.நான் செய்த குடமுழுக்கு களிலேயே இதுதான் இவ்வளவு சிறப்பாக நடந்தது.''
கார்த்தி, செந்திலிடம் சொன்னார்.
''டேய் ,இவள் உன் தங்கை .தங்கைக்கு கல்யாணம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் .சீர் வரிசை சிறப்பாக செய்ய வேண்டும் ''
3 நாட்கள் ஹோம குண்டம்.கண்ணை பறித்தது.
ஒரு அன்பர் போட்டோ எடுக்கலாம் என்கிறார்.
என் பதில் ''இல்லை வேண்டாம்.என்றாவது ஒரு நாளில் இந்த புகைப்படங்களை பார்த்து ஒரே ஒரு நொடி   நான்தான்  இந்த கோவிலை கட்டினேன் என்ற எண்ணமோ ,  கர்வமோ  வந்து விட கூடாது ''......
இன்று 21.06 ...இன்றுதான் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்த anniversary.
 மனம்  அழுகிறது.
கணவரையும் பறித்து,உயிரான கண்மகன் கார்த்தியையும் பறித்து ....இதுதான் என் பணிவிடைக்கு துர்க்கை கொடுத்த பரிசா ?
இன்றும் துர்க்கை ஜெகஜோதியாக இருக்கிறாள்.
தாயைத்தான் இருளில் தள்ளி விட்டாள் .
வாழ்க என் மகள்.
கார்த்திக் அம்மா

2019/06/12

அன்றும் இன்றும்

//அவரை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள். //
இந்த வார்த்தைகள் கிரேசி மோகனின் சகோதரர் பாலாஜி மன வேதனையுடன் உருக்கமாக வெளியிட்ட விடியோ வின் ஒரு பகுதி.
இந்த உலகம் மாறவே மாறாதா?
எதற்காக அவர் தன் அண்ணாவை கவனிக்காமல் விடுவார்?
மோகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தால் அவரின் நாடக  ட்ரூப்பிற்கு தெரியாமல் இருந்திருக்குமா?
அவர் எந்த டாக்டரிடமும் போனதாக யாருமே சொல்லவில்லை. 
அப்படி இருக்க அவரது குடும்பம் அவரை சரியாக கவனிக்கவில்லை என்று எப்படி  அப்பட்டமாக பழி சொல்வார்கள்? எவ்வளவு மன வேதனை ஏற்பட்டிருந்தால் அவர் இப்படி ஒரு விடியோ வெளியிட்டிருப்பார்?
....2000....
அன்று என் கணவருக்கு திடீரென உடல் நலம் மாறியது.
யாருமே எதிர்பார்க்காத அடி ...இடி.. 
ராஜ மருத்துவம்.
ஆனால் பலன் இல்லை.
......
அப்போதும் ஊரும் உறவும் இப்படித்தான் சொல்லியது.
நான் சரியாக கவனிக்கவில்லை.
மருத்துவர்கள் சரியாக கவனிக்கவில்லை.
.....எத்தனை குற்ற சாட்டுகள்?????????
எத்தனை மன வலி?????????? 
கணவரின் இழப்பு என்ற வேதனையை விட இந்த நெருப்பு அம்புகள் தந்த வேதனை....
சாரதா நம்பி ஆரூரான் ஒரு இடத்தில் இது பற்றி சொல்லியுள்ளார்.
அவருக்கும் அதே வேதனை.
...ஆக ....உலகம் மாறவில்லை.
WHAT A SADISTIC PLEASURE ...
ஆ ...
இவ்வளவு வெற்றியாளனா ???????????
ஆ 
விழுந்தானா ???????????
சிரி .சந்தோஷப்படு .என்பதுதான் உலகம்.
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா  


  

2019/06/10

தாம்பரம் விபத்து

இன்று தாம்பரம் பகுதியில் ஒரு சிகப்பு நிற கார் அசுர வேகத்தில் வந்து இரண்டு பைக்குகள் மேல் மோதி 4 பேர் தூக்கி வீசப்படுகின்றனர்.
இதுதான் கார்த்திக்கிற்கும்  நடந்தது.
பின்னால் வேகமாக வந்த கார் கார்த்தியின் பைக்கின் மேல் இடித்த வேகம்தான்....இன்று நான் மகனை இழந்து தவிக்க காரணம்.
யாரை நொந்து என்ன பயன்?
என் விதி.
அவ்வளவுதான்.
23 வயது மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறிகொடுத்து எரிமலையின் உச்சியில் எரிமலை குழம்பில் நின்று கொண்டிருக்கிறேன்.
கார்த்திக் அம்மா

2019/06/06

தப்பு.தப்பு.

.இந்த பெயர்களை எல்லாம் படிங்க, இவர்கள் தான் இனி உங்கள் பகுதியின்
EB Department AE,

1) Satya Kumar Behera
2) Pendyala Jothsna Praveena.P
3) Nimmalameher Santhosh
4) Suparna .M Das
5) Soni Kumari.S
6) Guru Prasad Reddy.V
7) Awin Gupta
8) Ramasubba Reddy.Poli
9) Nukala Vijayabhaskar.N
10) Mangala Bhargava Kumar.M
11) Nageswara Rao.Gonna
12) Geddamyugandhar.G
13) Aklavya Kumar.Nil
14) Vamsi Krishna.Yele
15) Prudhvi Raj.Saibaba
16) Deepak Kumar.Nill
17) Anil Kumar.Polisetty
18) Raghava Rao.B
19) Venkata Ramaiah.Midde
20) Senapti Naga Venkata Sai Phanindra
21) Neelam Siva.Sankar Reddy
22) Naga Venkata Vamshi Kumar.V
23) Wien.R
24) Ashutosa Kumar Trapathi.Na
25) Mangala Veera Sekhar
26) Shadab Usmani.Su
27) Sai Krishna.Chintha Ginjala
இதெல்லாம் பெரிய தப்பா தெரியுதுங்க.
நம் தமிழ் நாட்டில் படித்த பொறியாளர்கள் யாருமே தகுதியானவர்கள் இல்லையா?
இவர்கள் என்ன தேர்வு எழுதினார்கள்?
என்ன கட் ஆஃ ப் ?
யாரவது விவரம் சொல்லுங்களேன்.
கார்த்திக் அம்மா
பி .கு .
இது       (இந்த லிஸ்ட் )   ஒரு பிளாக்கில் வந்த பதிவு.அவர் அனுமதி பெறாமல் பயன்படுத்தினேன்.மன்னிக்கவும்.

2019/06/04

JUNE 3 2005

JUNE 3 2005
இது ஒரு மீள்பதிவு .காலம் ஓடுகிறது. மனம் மட்டும் 2005 லியே இருக்கிறது.அப்போது எழுதியது..
// //1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)// //

இது இன்று 03/06/2019
தம்பி செந்திலின் படிப்பு முடியும் வரைதான் நீங்கள் சென்னையில் இருக்க வேண்டும்.
அப்புறம் என்னுடன் இருக்க பெங்களூரு வந்து விட வேண்டும் என்று கார்த்தி அன்பு கட்டளை இட்டதால் பணி  மாறுதலுக்கு விண்ணப்பித்து விட்டு (கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் long leave ) என்று சொல்லி விட்டு வேளச்சேரியில்  இருந்து வீட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு பெங்களூரு கிளம்பி விட்டேன்.
இனி வாழ்நாள் முழுக்க பெங்களூருதான் என்பது திட்டம்.
எனக்கு பெங்களூரு பிடித்த நகரம் அல்ல 
சென்னை பிடிக்காத ஊரும் அல்ல .
மகன் இருக்கும் இடம் என் சொர்க்கபுரி. 
அவனுடன் சேர்ந்து வாழ்வது தலையாய இன்பம்.
அவ்வளவுதான்.
நான்+கார்த்தி+செந்தில் ...போதும்.
வேறு என்ன வேண்டும் ஒரு தாய்க்கு .
விதி இவ்வளவு கோரமாக விளையாடும் என்று தெரியவில்லை.
 போன வேகத்தில் திரும்ப வந்து விட்டேன்.ஆசையுடன் அழைத்துச் சென்ற மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறி  கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து நடைப் பிணமாக இருந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி ஒரு வேதனை தேவையா? மனம் கதறிக் கொண்டே இருக்கிறது.
அம்மா

யூ tube எரிச்சல்கள்

கல்வி அமைச்சர் திரும்ப திரும்ப சொல்கிறார் .
june  3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் ...
ஆனால் ஒரு யூ டியூப் பதிவில் ஒருவன் ஜூன் 10ம் தேதிதான் பள்ளிகள் திறப்பு என்று சொல்கிறான்.
இது ஒரு சேம்பிள்தான் .இது போல் எத்தனை டுபாக்கூர் பதிவுகள்.
இவர்களை தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
எந்த சட்டமும் இல்லையா?
சன் டி .வி க்கு ஆப்பு.மோடி சன் டி .வி.யை  முடக்கப் போகிறார்.
இப்படி ஒருத்தன்.
படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்களா ?
அதிலும் சிலர் பேசும் தமிழ் ....இது தமிழா என்று தலையில் அடித்துக் கொள்ள தோன்றுகிறது.
''நுப்பது'' (முப்பது )
பாவம் ..கலைனர் (கலைஞர் )
இப்படி ஒரு க்ரூப் .
எதற்கும் ஒரு வரைமுறை வேண்டும்.
வரைமுறைப் படுத்துங்கள்.