About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/07/22

பிற ஜாதியினர்??????
கடிவாளமிடா குதிரையாய் மனம் தறி கெட்டு ஓடி ஏதோதோ சிந்தித்துக் கொண்டிருக்கும் போது திடீர் திடீர் என சில சந்தேகங்கள் வரும்.
அப்படித்தான் இந்த சந்தேகமும்.
எப்போது பார்த்தாலும் காதல்,  கொலை எனற விவகாரத்தில் தலித்,வன்னியர் ,கவுண்டர் , பிராமின் ஜாதிகள் மட்டுமே பேசப் படுகிறதே.
ஏன் ,இந்த முதலியார், செட்டியார் ,ஆசாரியார் போன்ற ஜாதிகள் பெயரையே கேள்விப்படுவதில்லையே?
அவர்களின் பெண்கள் காதல் செய்வதில்லையா?
அல்லது அவர்களின் காதலை இவர்கள் அங்கிகரித்து பிரச்சினை இல்லாமல் முடித்து விடுகின்றனரா?
மண்டபத்திலே யாராவது வந்து என் தலையாய இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன்.
confused
கார்த்திக் அம்மா

2016/07/19

தலித் தலைவர்களே :
உங்களுக்கு ஒரு வேண்டுகோள் :
இன்று செய்தியில் C .A தேர்வில் ஒரு முற்படுத்தப் பட்ட இனத்தை சேர்ந்த இளைஞன் இந்திய அளவில் முதல் இடம் பெற்றுள்ளான்.
மதம் மாறி திருமணம் செய். நம் கரு அனைத்து ஜாதி பெண்கள் வயிற்றில் வளர வேண்டும் என்ற மிக தப்பான ஒரு விஷ கருத்தை உங்கள் இளைஞர்கள் உள்ளத்தில் உருவேற்றி
இன்று அவர்கள் செயல் முழுக்க மதம் மாறி, இனம் மாறி காதல் என்பதோடு மட்டுமே நின்று விட்டதோ என்ற சந்தேகம் வருகிறது.
தலைவர்களே,உங்கள் இளைஞர்களுக்கு தகுந்த கல்வியை அளித்து,நல்ல வேலை வாய்ப்பை பெற்று தந்து சமூகத்தில் உயர் நிலைக்கு  செய்யுங்கள்.
நான் ஜாதி வெறி கொண்டவள் அல்ல.
சிறு வயதிலிருந்தே ஜாதி வித்தியாசம் பார்க்காதவள் .
இந்த ஸ்ரீராம் முதல் ரேங்க் வாங்கும் போது நாமும் அதே போல் சாதிப்போம் என்ற எண்ணத்தை உங்கள் இளைஞர்களுக்கு சொல்லுங்கள்.
நம் இனத்திலேயே திருமணம் செய்யலாம்.
கல்வி,வேலை,உயர் பதவி வந்தால் அனைத்து வேறுபாடுகளும் கண்டிப்பாக மறையும்.
உதாரணம்.
நம் சகாயம் I .A .S .
நல்லெண்ணத்தில்
அன்பின்பால்
சொல்லும் கருத்து இது.
செயவீர்களா?
கலா கார்த்திக்
கார்த்திக் அம்மா

2016/07/18

விடுதலை ராஜேந்திரன் :==+கபாலி
HATS OFF ராஜேந்திரன் .
just now
இப்போதுதான் உங்கள் வாட்ஸ் அப் செய்தியை t .v யில் பார்த்தேன் .wonderful .அற்புதம் .
இதே போன்ற ஒரு பதிவை சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதியிருந்தேன்.
என்னமா பில்ட் அப் கொடுக்கிறாங்க.இந்த படம் வந்தால் நீங்கள் சொன்னதில் ஏதாவது ஒன்றாவது நடக்குமா?
திருந்தாத நம் மக்களை என்ன சொல்வது?

2016/07/16

நீ ஒருவன்தான் அழகு :
இது ஒரு ரஜினி பட பாடல்.
எந்த படம்?
எந்த வருடம் என்பதெல்லாம் தெரியவில்லை.
ஆனால் அந்த நடிகை
பார்க்கும் எல்லோரையும் ரஜினியாகவே பார்ப்பார்.
இந்த பாடலை பார்த்த நான் கார்த்தியிடம் சொன்னேன்.
'' ராஜா ,நீ u .s போய் விடுவாய்.
இந்த பாட்டில் வரும் பெண் போல் பார்க்கும் எல்லோரையும் 
என் கார்த்தி 
என்று பைத்தியமாக அலைய போகிறேன் .'' ''
கார்த்தி எப்படியும் U .S ல் தான் வேலை செய்வான் .(அப்போது என் வேலையை விடும் எண்ணம் எனக்கு இல்லை.2017 ல்  தான் எனக்கு பணி ஓய்வு .retirement .).
அதனால் நான் இங்குதான் இருப்பேன். கார்த்தியை பிரிந்து பைத்தியமாக அலைவேன் என்ற எண்ணம் இருந்தது.
இப்போதும் அந்த பயம் உள்மனதில் இருந்து கொண்டே இருக்கிறது.
எத்தனை நாள் அறிவு அன்பை ஜெயிக்கும்?
அன்புதான் இறுதியில் வெல்லும்.
கார்த்திக் பைத்தியம்.
கார்த்திக் அம்மா 

2016/07/10

தேவாங்கு :
THE ONLY FACE I HAVE :
With the photographer :
இது ஸ்வாதி சம்பந்தப் பட்ட பதிவு அல்ல .
அந்த பெண் ராம்குமாரை தேவாங்கு என்று சொல்லியதாகவும் அதனால் கொன்றதாகவும் ......
1990களில்  +1படித்தவர்களுக்கு ஆங்கில முதல் பாடமே
"With the photographer "என்ற பாடம்தான். எனக்கு மிகவும் பிடித்த பாடம். ரசித்து நடத்துவேன் அந்த பாடத்தை..அதில் ஒருவர் தான் புகைப்படம் எடுக்க செல்வார்.எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம்தான். எப்போதும் எல்லா photographer ம் சொல்வது போல் ''  '' தலையை இப்படி சாய், கண்ணை மேலே பார்,வாயை நேராக வை ''  என்று சொலவதோடு நில்லாமல்'' ' உன் வாய் இன்னும் சற்று சிறியதாக இருந்திருக்கலாம் கண் சற்று பெரியதாக இருந்திருக்கலாம் ,'' என்ற ரீதியில் சொல்லிக் கொண்டே போவார் .பொறுத்து பொறுத்து பார்த்த ஆசிரியர் அந்த photographer இடம் சொல்வார்
THIS IS MY FACE. 
THE ONLY FACE I HAVE 
சொல்லி விட்டு புகைப் படம் எடுக்காமலே சென்று விடுவார்.
அற்புதமான கருத்து.
எத்தனை ஆசிரியர்கள் இந்த கருத்தை மாணவர்களுக்கு வலியுறுத்தினரோ தெரியவில்லை.
நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை என்ற ரஜினியின் பாடல் வரிகளை (எழுதிய கவிஞர் யாரோ ) சொன்னவுடன் மாணவர்களுக்கு மின்னல் அடிக்கும்.
கருத்து இதுதான். .
ஒருவன் கருப்பாக பிறந்திருக்கலாம்.
சிறிய கண்களுடன் பிறந்திருக்கலாம்.
குட்டையாக  பிறந்திருக்கலாம்.
அந்த உருவத்தை மாற்ற முடியாது.
மாற்றவும் வேண்டாம்.
குணத்தை character ஐ மாற்ற முடியும்.
நல்லவன் மேலும் நல்லவனாக முடியும்.
அதுதான் ஒரு மனிதன் செய்ய வேண்டும்.
நீ அழகாக இல்லை என்று வருந்தாதே.
அது படைப்பு.
அதற்கு பதிலாக உன் ஆளுமையை வளர்த்துக் கொள்
என்பதுதான் ஆசிரியர் சொல்லும் சேதி.
மாணவர்கள்
மிஸ் அந்த கருப்பா ,குட்டையா இருப்பானே
என்று யாரை பற்றியாவது  சொன்னால் காட்டு கத்தல் கத்துவேன்.
ஏன் அப்படி சொல்கிறாய் ? வேறு விதமாக அவனைப் பற்றி சொல்ல முடியாதா ..அந்த 3வது வரிசையில் இருப்பானே
இந்த ஊரிலிருந்து வருவான் என்பது போன்ற வேறு விஷயங்களை சொல்லேன் '' என்று அறிவுரை சொல்வேன்.
இந்த செந்தில் காமெடியனை பண்ணி வாயா ,சட்டி தலையா என்றெல்லாம் உருவத்தை வைத்து காமெடி என்ற பேரில் அராஜகம் செய்வது கண்டு பொங்குவேண்.
காந்தி என்னஅழகு ?
நெல்சன் மண்டேலா என்ன அழகு?
காமராஜ் என்ன அழகு?
அவர்களை ஏன் போற்றுகிறோம்?
அவர்களின் குணம்.
செயல்.
இந்த ராம்குமாரும் அந்த பெண் சொன்னால் (அது உண்மையாய் இருந்தாலும்) அதை விட்டு விட்டு மேற்கொண்டு படித்து,ஒரு ஆராய்சசி ,ஒரு மக்களுக்கு உதவும்படியான கண்டுபிடிப்பு என்ற வழியில் சென்றிருந்தால் உலகம் அவனை எவ்வளவு போற்றியிருக்கும் ?
இளைஞர்களே சிந்தியுங்கள்.
காதல் தேவையில்லாத ஒன்று.
சினிமாக்களை பார்த்து அப்படி ஒரு மாயையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
காதல் என்ற இல்லாத ஒன்றிற்காக உங்கள் நேரத்தையும்,அறிவையும் வீணடிக்காதீர்கள் .
முன்னேறுங்கள் .
கார்த்திக் அம்மா
கலா கார்த்திக்