About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/07/22

மேட்டூர் அணை 16 கண் மதகு

மேட்டூர்  அணை  16 கண் மதகு
பொங்கி வரும் காவேரி .16 கண் மதகு திறக்கப் பட்டால் இப்படித்தான்  சீறி வரும் தண்ணீர் .
அது ஒரு இனிய காலம்.
கார்த்திக் அம்மா

2018/07/20

மேட்டூர் அணை

மேட்டூர் அணை +
தேங்காய் பால் :
பழசை மறந்து விடுங்கள் என்று எனக்கு அறிவுரை சொல்கிறார்கள்..
நானும் முயற்சி செய்கிறேன்.
ஆனால்
எல்லா சேனல்களிலும் மேட்டூர் அணைதான் .
என் கணவர் மேட்டூர் அணையின் AEE யாக இருந்தார்.
நேற்று கோலாகலமாக நடந்த விழாவை பார்த்த பொழுது மனம் மிகவும் சோகப்பட்டது.
அவர் இருந்திருந்தால் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்திருப்பார்.நேற்று பார்த்த அணையின் மேல் சாலையில் சில அதிகாரிகளின் கார்கள் மட்டுமே செல்லும்.அதில் இவருடையதும் ஒன்று.கவர்னர் வண்டி வந்தால் கூட பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் படும். ஆனால் இந்த காரின் ஹாரன் சத்தம் கேட்கும் முன்னே கேட் திறக்கப் படும்.
என் கணவர் சிவில் பொறியாளர் என்பதால் அணையின் பராமரிப்பு இவருக்கு.
85 கிலோ எடை அவருடையது.6 அடி உயரம்.
ஒரு முறை அணையில் விரிசல் வர ஆரம்பித்தது.
" " நீங்கள் அணையின் மேல் தொம் தொம்  என்று நடக்காதீர்கள் .அதனால்தான் அணை விரிசல் விடுகிறது "  "
என்று அவரை கலாய்த்த இன்பமான காலங்கள் அவை.
.......   .......
தேங்காய் பால் :
ஆடி மாதம் சேலம் மாவட்டம் களை கட்டி விடும்.எங்கு பார்த்தாலும் மாரியம்மன் பண்டிகைதான்.
தேங்காய் சுடும் நோம்பி ( நோன்பு என்பதுதான் நோம்பி என்றாகி விட்டது.)
என் இனிய சேலத்து மக்களே.!!!!!!!!!!!!!!!!
அந்த slang ...சொல்ல முடியாது.ச் ச் சும்மா கலக்கியடிக்கும்
என்னுடையது சுத்த தமிழ். அந்த கிராமத்து மக்களுக்கு என் தமிழ் புரியாது.
எனக்கு அவர்கள் பேசுவது புரியாது.(நானும் கிராமம்தான் .ஆனால் சுத்த தமிழ் பேசுவேன் )
ஒரு நாள் 8 வழி சாலை குறித்து தந்தி டி .வி யில் ஒரு சேலத்துக்காரர் பேசினார்.
பாவம் அசோகா .
தன் அழகிய கண்களை விரித்து விரித்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள படாத பாடு பட்டார் .
என் இனிய சேலத்து மக்களே.!!!!!!!!!!!!!!!!
தேங்காய் பால் விஷயத்திற்கு வருவோம்.ஹரிகேச நல்லூர் சொல்லிக் கொண்டிருந்தார்.இந்த ஆடி மாதம் புது புனல் நோய்களையும் கொண்டு வரும் அதற்கு நோய் எதிர்ப்பு கொடுக்க வல்லது தேங்காய் பால் என்று.
தேங்காயை உரசி மொழு மொழு என்று செய்து ஒரு கண்ணை துளையிட்டு பாதி தண்ணீரை எடுத்து விட்டு எள் +வெல்லம்+அரிசி+ ஏலக்காய் எல்லாம் அந்த கண் வழியாக தேங்காய்க்குள் போட்டு புரசை குச்சியால் கண்ணை மூடி நெருப்பில் சுட்டு ,பின் அதை உடைத்து சாப்பிட்டால் ...பெரிய இனிப்பு பலகாரம் அது.
ஆனால் பெரிய அறிவியல் சார்ந்த விஷயம்.உடலுக்கு வலிமையையும்,நோய் எதிர்ப்பு சக்தியும் தரும்.அதே போல் அம்மனுக்கு மஞ்சள் +வேப்பிலை கொணட தண்ணீர் ஊற்றுகிறோம் என்று சொல்லி ஊர் முழுக்க அந்த தண்ணீரை எல்லோர் மேலும் ஊற்றுவாரக்ள்.ஒரு ஹோலி பண்டிகைதான்.ஆனால் அவ்வளவும்  நோயிலிருந்து காக்க.
அந்த பழைய நினைவுகள்தான் என் ஊட்ட சத்து உணவு
கார்த்திக் அம்மா

2018/07/18

ராகு +கேது

ராகு +கேது +ஜாதகம்.
ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை என்பவர் சிலர்.
ஆனால் ஜாதக பைத்தியமாக இருப்பவர் பலர்.
ஜோதிடம் மிகப் பெரிய அறிவியல்.
மிக மிக பெரிய அறிவியல்.
ITS A WONDERFUL SCIENCE .
கோள்களின் சதிராட்டம்.
சிறிது பொறுமை வேண்டும்.இதை படிக்கவும்..புரிந்து கொள்ளவும்.
360 degree என்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்த 360 degree யைத்தான் 30 முப்பது டிகிரியாக பிரித்து 12 மாதங்கள் என்கிறார்கள்.
அந்த 12 தான் ஜாதக கட்டங்கள்.
முதல் கட்டம் மேஷம் .அங்குதான் சூரியன் உச்சம் பெறுகிறார்.
அதுதான் சித்திரை .ஆக வருட பிறப்பு சித்திரை ஒன்றுதான்.
உச்சம் என்றால் முழு பலத்துடன் இருப்பது.
வெய்யில் காலம்.summer .
சூரியன் 7 குதிரை பூட்டிய தேரில் வருகிறார் என்பார்கள்.
அந்த 7 தான் 7 வர்ணங்கள்.
7 colours .
vibgyor
அத்துடன்
அல்ட்ரா வயலட் (ultra violet )புற  ஊதா 
infra red அக சிவப்பு
so nine planets = nine colours .
ஒவ்வொரு கோளுக்கும் ஒரு வண்ணம் .ஒரு தானியம்.ஒரு ரத்தினம்.
நவ தானியம்.
நவ ரத்தினம்.
இந்த 9 வண்ணங்களை தாண்டி NASA வும் எதையும் கண்டு பிடிக்கவில்லை.
நம் சித்தர்கள் எந்த டெலஸ்கோப் வைத்து பார்த்தார்கள்?
எப்படி ஆராய்ச்சி செய்தார்கள் ?
பெரிய மலைப்பான விஷயம்.ஆனால் ஏதோ செய்திருக்கிறார்கள்.
அப்போது கணிக்கிறார்கள் .இன்று சூரிய கிரகணம்.
இன்று பிறை வட கோடு உயர சுபிட்ச மழை வருஷிக்கும் என்று நாட்காட்டியில் போட்டிருக்கும்.
கவனித்து பார்த்தால் ஒரு இரு துளி மழையாவது அன்று பெய்யும்.
ஆனால் அன்று சந்திர பிறையின் வடக்கு நீண்டு வர வேண்டும்.
அப்போது கணித்தது இப்போதும் நடக்கிறது.
நம்பாதவர்களுக்கு ஒரு உதாரணம்.
இப்போது ஜாதக கட்டத்தில் கோள் சார படி (கோச்சார ம்  என்று சொல்கிறோமே ) அந்த கோள் எந்த கட்டத்தை சார்ந்து இருக்கிறதோ அதுவே கோள் சாரம் .
இப்போது செவ்வாய் எனும் கோள் சனி (சனிஸ்வரர் அல்ல சனாச்சாரியார் )கிரகத்தின் வீடான மகரத்தில் உச்சம் (மிக அதிக வலிமையுடன் )உள்ளது.நீங்களே பாருங்கள். உலகம் முழுவதும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி எங்கு பார்த்தாலும் தண்ணீர் .இதுதான் கோள்களின் சதிராட்டம்.
இது போல் வக்கிரம் எனும் சொல்.
ஒரு 3 பஸ்கள் ஒரு சாலையில் போய் கொண்டிருக்கின்றன.ஒரு பஸ் அடுத்த பஸ்ஸை ஓவர்டேக் செய்யும் போது இந்த பஸ் பின்னால் செல்கிறது.அதுவே வக்கிரம் .அதே பஸ் வேகம் எடுத்து ஒரு பஸ்ஸை முந்தி சென்றால் அதிசாரம்.
இதை எல்லாம் எப்படி கண்டு பிடித்தார்கள் நம் சித்தர்கள்?
ஆனால் அவர்கள் நமக்கு காட்டிய வழியை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம்.
அது போல்தான் செவ்வாய் தோஷம்.
பதிவு நீள்வதால் அது பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

2018/07/16

120 கோடி பணம்+100 கிலோ தங்கம்

அம்மாடியோவ்
போதுமா
என்னதான் செய்வார்கள்?
இவ்வளவு பணத்தை கண்ணால் பார்த்தால் மயக்கம் வந்து விடும்.
இவர்கள் ஒரு நிமிடம் யோசித்து பார்க்க வேண்டும்.
எம் .ஜி ஆர்
ஜெ அம்மையாருக்கு இல்லாத பணமா ????
எவ்வளவு பணம் இருந்து என்ன காப்பாற்றியது?
இன்னும் எத்தனை பேரை சொல்லலாம்.
ஆனாலும் ஏன் இந்த பேராசை?
ஒரு கிலோ தங்கம் என்றால் 124 பவுன் (சவரன் )
அப்படி என்றால்
100*124 =12400 பவுன் நகை.
ஒரு நாள் போட்ட நகையை  அடுத்த நாள் போட மாட்டார்களோ?
நியாயமாக சம்பாதித்தாலே கூட இவ்வளவு நகை தேவையில்லை.
அப்படியிருக்க இப்படி அநியாய வழியில் சம்பாதித்து  இப்படி அனுபவிக்க வேண்டுமா?
இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது அரசு.?
எனக்கு தினமும் ஒரு எஸ் .எம்.எஸ் + ஒரு மெய்ல் வருகிறது.
நான் கட்டிய துக்கிளியூண்டு வரிக்கு இவ்வளவு மிரட்டல்.
ஜூலை 31க்குள் படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன செய்கிறோம் பார் என்ற தொனியில் இருக்கிறது
இவர்களை என்ன செய்வார்கள்?
இது வரை ரெய்டு போனார்கள்.
அவர்களை என்ன செய்து விட்டார்கள்?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
நானும்தான்.
கார்த்திக் அம்மா

2018/07/14

என் தந்தை .கடைக்குட்டி சிங்கம்

என் தாத்தா 1880 ல் பிறந்திருக்க வேண்டும்.
ஒரு யூகம்தான்
அவரின் முதல் மனைவிக்கு இரு மகன்கள் பிறந்து இறந்து விடுகின்றனர்.என்ன காரணம் என்று தெரியவில்லை.தன்  கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தார்.
அவருக்கும் இரு பெண்பிள்ளைகள்.
அடுத்து தன் கணவருக்கு 3ம் திருமணம் !!!!!!!!!!!!!!செய்து வைத்தார் .
பாவம் ..
அந்த பாட்டிக்கும் இரு பெண் பிள்ளைகள்.
விட்டாரா என் பெரிய பாட்டி ? { பெரிய பிராட்டி என்பது  பெரிய பாட்டி என திரிந்து விட்டது என்பது என் யூகம் }
4ம் ...நான்காம் ...திருமணம் செய்து வைத்தார்.
அந்த பாட்டிக்கும் முதல் பிள்ளை பெண் பிள்ளை.
அடுத்து பிறந்த சிங்கம்தான் என் அப்பா .
கடைக்குட்டி சிங்கம் படம் பற்றி படித்தவுடன் [ படிப்பதுதான் .பார்ப்பது இல்லை] இந்த பழைய நினைவு வந்தது.என் அப்பாவிற்கும் 5 சகோதரிகள்.
5 அத்தைகளும் வாரிசுகளும் சம்பந்திகளும் என வீடு நிறைந்து இருக்கும்.அதை நினைத்தால் ...அந்த இனிமையான காலங்களை நினைத்தால் ஒரு ஏக்க பெருமூச்சுதான் வருகிறது.
கார்த்திக் அம்மா


2018/07/13

எமன் துரத்தினால்

எமன் துரத்தினால் தப்புவர் யாரோ ?????????
அது விதியோ
அல்லது யமனோ
காலமும் நேரமும் கெட்டால்
யமன் துரத்தினால் 
நாம் எவ்வளவு தூரம் ஓடினாலும்
மரணத்திலிருந்து தப்ப முடியாது.
கோவை மாணவி  லோகேஸ்வரி மாலையில் வீடு திரும்பி விடுவோம் என்று நினைத்துதானே காலையில் கல்லூரிக்கு புறப்பட்டிருப்பாள் .
விதி இரண்டாம் மாடிக்கு அழைத்து செல்கிறது.
எந்த பணம்
ஈடு செய்யும் இந்த இழப்பை.
நான் கதறிக் கொண்டிருக்கிறேனே  13 வருடங்களாய் .
நிற்காத கண்ணீருடன்.
இன்று போல் ஒரு வெள்ளி கிழமைதான் கார்த்தி காலை 8.50க்கு வீட்டை விட்டு கிளம்பினான்.
மதியம் என்ன சாப்பாடு செய்கிறீர்கள் என்று கேட்டு சென்றான்.
அவனுக்கு பிடித்த உணவு என்ன
எதை சமைக்கலாம் என்ற யோசனை முடிவாகும் முன்னே அவன் முடிந்து விட்டான்.
இழந்தவருக்கு மட்டுமே இழப்பின் வலி புரியும்.
உலகமே கூடி நின்று ஆறுதல் சொன்னாலும் தாயின் அழுகை அவள் கடைசி மூச்சு வரை.
கார்த்திக் அம்மா
என் அன்பு மகன் கார்த்திக் .

2018/07/11

காவிரி பெருக்கு

காவிரி பெருக்கு :
ஒருவருக்கு நல்லது என்றால்    அது யாரோ ஒருவருக்காவது  கெட்டதாகத்தான் இருக்கும்.
மழையால் கர்நாடகா மக்கள் துன்பம் அடைந்தால் (பாவம்தான்)
காவிரி நீரையே நம்பியிருக்கும் எங்களுக்கு மகிழ்ச்சியே .
ஒரு நெல் அறுவடை செய்து விடலாம்.
பாவமே பாவம் யார் என்றால்
5000 வோட்டு கூட வாங்காமலேயே
டெபாசிட் கூட வாங்காமலேயே
காவிரியை வைத்தே அரசியல் செய்த வட்ட ஆள் நாகுதான் .
ஆந்திராகாரர் என்றாலும் கர்நாடகாவை தத்து எடுத்து கொண்டு அதிரடி செய்து கொண்டிருந்தார் பாவம்.
இப்போதும் காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு தர மாட்டோம் என்று போராட்டம் செய்யுங்கண்ணா
அவர் மட்டும்தானா
தமிழ் நாட்டிலும் காவிரியை வைத்து அரசியல் செய்தவர்களும் இப்போது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசு இந்த தண்ணீரை (நண்ணீரை  )சிறந்த முறையில் சேமிக்க போர்க்கால (!!!!!!!!!!!!!!!????????????)நடவடிக்கை எடுத்தால் நன்று. .
இப்போது ஒகேனக்கல் சென்று பார்க்க வேண்டும்.
நயாகரா மாதிரியே இருக்கும்.
ஒரு 7 கிலோ மீட்டருக்கு முன்னாலேயே அருவி ஆர்ப்பரிக்கும் சத்தம் மெய் சிலிர்க்க வைக்கும்.
கார்த்திக் அம்மா

2018/07/10

பழனி முருகன்

பழனி முருகனுக்கும் 7.5 ஏழரை சனி போல் இருக்கிறது.
இன்றைக்கு நீதி மன்றம் போகிறார்.
பாவம்.
புழல் சிறையா
அல்லது
வேலூர் சிறையா   என்று தெரியவில்லை.
தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரா என்னை காப்பாற்ற போகிறார்?
முருகா முருகா .
..............
சிறு நீர் :
என்னடா நாட்டுக்கு வந்த கொடுமை...
ஒரு மொழி பெயர்ப்பாளர்தான் மைக்ரோ என்பதற்கு சிறுநீர் பாசனம் என்று சொல்கிறார்  
(ஒரு வகையில் உண்மைதான்.காவிரியில் தண்ணீர் வராது...அதனால் விவசாயிகளே இப்படி செய்யுங்கள் என்று மறைமுகமாக சொல்கிறார் போலும்.)
அவர்தான் அப்படி என்றால்
ஒரு செய்தி வாசிப்பாளர்
சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் என்று சொல்வதற்கு பதிலாக
சிறுநீர் மூழ்கி கப்பல் 
என்று செய்தி வாசிக்கிறார்.
ஏற்கனவே ஒருவர் தமிழ்நாடு மாவட்டம் என்கிறார்
இவர்களை பார்த்து நானும் உளறப் போகிறேன்
MIND VOICE :
இப்போது என்ன செய்து கொண்டிருப்பதாக நினைப்பு????????????
அம்மணி உங்க உளறல் பற்றி சொல்லோணுமா !!!!!!!!!!!!!!!
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
உளறல் மன்னி (அரசி)
கலாகார்த்திக்

2018/07/09

குகைக்குள் சிறுவர்கள்

தேவையா
இது தேவையா
தான் அடங்க   தன குலம் அடங்க
என்று சொல்வார்கள்.
அட்வெஞ்சர் என்று சொல்லிக் கொண்டு முட்டாள் தனமான காரியம் செய்யக் கூடாது.
...
என்னதான் கோபம் வந்தாலும் சிறுவர்கள் பத்திரமாக வெளியேற வேண்டுமே என்ற ஆதங்கம் மிக மிக அதிகமாக இருக்கிறது.
இத்தனை நாட்கள் பசி,இயற்கை உபாதைகள் என்ற பிறவும் கவலை அளிக்கிறது.
ஆக்சிஜன் அளவும் குறைவதை கண்டால் பயமாக இருக்கிறது.
பெற்றோர்கள்,கவலை ஒரு புறம்.
இவர்களை மீட்க போராடுவோர் படும் பாடு ஒரு புறம்,
யாருக்கும் இது ஒரு எச்சரிக்கை.
அளவோடு விளையாடுங்கள்.
சிறுவர்கள் பத்திரமாக வர வேண்டுமே என்ற கவலையுடன்
கார்த்திக் அம்மா