About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/07/13

எமன் துரத்தினால்

எமன் துரத்தினால் தப்புவர் யாரோ ?????????
அது விதியோ
அல்லது யமனோ
காலமும் நேரமும் கெட்டால்
யமன் துரத்தினால் 
நாம் எவ்வளவு தூரம் ஓடினாலும்
மரணத்திலிருந்து தப்ப முடியாது.
கோவை மாணவி  லோகேஸ்வரி மாலையில் வீடு திரும்பி விடுவோம் என்று நினைத்துதானே காலையில் கல்லூரிக்கு புறப்பட்டிருப்பாள் .
விதி இரண்டாம் மாடிக்கு அழைத்து செல்கிறது.
எந்த பணம்
ஈடு செய்யும் இந்த இழப்பை.
நான் கதறிக் கொண்டிருக்கிறேனே  13 வருடங்களாய் .
நிற்காத கண்ணீருடன்.
இன்று போல் ஒரு வெள்ளி கிழமைதான் கார்த்தி காலை 8.50க்கு வீட்டை விட்டு கிளம்பினான்.
மதியம் என்ன சாப்பாடு செய்கிறீர்கள் என்று கேட்டு சென்றான்.
அவனுக்கு பிடித்த உணவு என்ன
எதை சமைக்கலாம் என்ற யோசனை முடிவாகும் முன்னே அவன் முடிந்து விட்டான்.
இழந்தவருக்கு மட்டுமே இழப்பின் வலி புரியும்.
உலகமே கூடி நின்று ஆறுதல் சொன்னாலும் தாயின் அழுகை அவள் கடைசி மூச்சு வரை.
கார்த்திக் அம்மா
என் அன்பு மகன் கார்த்திக் .

2 comments:

Anonymous said...

I am very sorry to here this. what happened, looked like a student! May God bless you and give you strength. I am a mother too.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

2005 ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி என்னுடன் காலை 8.40க்கு இட்லி சாப்பிட்டு விட்டு ஆபிசுக்கு கிளம்பிய மகன் பைக் விபத்து என்ற பெயரில் என்னை விட்டு பிரிந்து விட்டான்.வீட்டிற்கும் DELL க்கும் ஒரு 5 அல்லது 6 கிலோமீட்டர்தான் இருக்கும்.தெளிவான வானம்.எப்போதும் செல்லும் சாலை .பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் பைக்கில் இருந்து விழுந்து விட்டான் என்கிறார்கள்.உடலில் சிறு காயம் கூட இல்லை.கல்லிரலில் அடி என்கிறார்கள்.எல்லாம் முடிந்து விட்டது.
karthik amma