About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/12/25

தலித் அனுமன்

தலித் அனுமன் :
WONDERFUL :
பிரமாதம்.
சாமிக்கும் ஜாதி,கட்சி கொண்டு வந்துட்டாங்க .
அனுமன் தலித்.
ராமன் சத்திரியன்.
சுடுகாட்டில் திரிவதாக சொல்லப் படும் சிவன் வெட்டியான்.
லட்சுமி செட்டியார்.
எங்களுக்கு மட்டுமே படிப்பும் அறிவும் என்று சொல்வதால் சரஸ்வதி பிராமின்.
இரு ஆண்களுக்கு GAY பிறந்ததால் அய்யப்பன் திருநங்கை.
கையில் கொடுவாளோடு இருப்பதால் முனியப்பன் வன்னியர்.படையில் கொடுவாளோடு செல்வதால் அப்படி சொன்னேன்.
.....இப்படி ஒரு காலம் வரும்.
அப்போது எந்த எந்த சாதியினர் எந்த எந்த கடவுளை கும்பிடலாம் என்ற சட்டம் வந்தாலும் வரலாம்.
......
நாட்டில் எத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன.
இதையெல்லாம் விட்டு விட்டார்கள்.
சாமிக்கு ஜாதி கண்டுபிடிக்கிறார்கள்.
காலம் கலிகாலம்.
ஆளுக்கொரு statement .யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.
ஒரே ஒரு கண்டிஷன் .ஒரு குறிப்பிட்ட தலைவர்களை பற்றி மட்டும் வாய் திறக்கக் கூடாது.
குண்டாஸ்தான்
பயமாய் இருக்கிறது.
கார்த்திக் அம்மா

2018/12/17

கார்த்தி சிலை

கலைஞரின் சிலை செய்த சிற்பி தீனதயாளன் அவர்தான் கார்த்தியின் இந்த சிலையும் செய்தார்.
பெருமை இல்லை.வேதனைதான்.
23 வயதில் சிலையாவது தவறு.
தாய்க்கு துன்பம் அளவிட முடியாதது.
கண்ணீருடன்
கார்த்திக் அம்மா

2018/12/16

காதலி,கல்யாணம் செய்

காதலி,கட்டிப் புடி கல்யாணம் செய் :
அட ,நீ  தலித் , கவுண்டர், வன்னியர் ....எந்த ஜாதியாக வேண்டுமாக இரு.
ஆனால் நீ ஒரு ஆண் .
ஒரு ஆண் இன்னொரு ஆணை ஜெயிக்க ஒரு பெண் பகடை காயா ????
பெண் என்றால் அவ்வளவு கேவலமா ?
உன் ஜாதி ஆண்கள் கட்டுடல் இல்லை.என் ஜாதி ஆண்கள் திமிரும் காளைகள் போல் தினவெடுத்த உடல்.
என்ன ஒரு மகா மட்டமான ,கேவலமான அறை கூவல்.
ஆரம்ப காலத்தில் இருந்தே ,இந்த கேவலம் நடக்கிறது.
ஒரு டெஸ்டிமோனா ,etc ஒரு ஆண் பெண்ணை வெகு சுலபமாக வசிய படுத்துகிறான்.
உடல் சுகத்திற்காக போவதில்லை.பேதை மனம் .பேதலிக்கிறது.
சினிமாவில் இது இன்னும் அதிகம்.
சவால் விட்டு பெண்ணை காதலித்து தந்தையிடம் இருந்து பிரித்து அந்த தந்தையை ஜெயிக்கிறான்.
ஒரு தாலி கட்டி விடுவானாம்.
ஒரு முத்தம் கொடுத்து விடுவானாம்.
நெற்றியில் ஒரு பொட்டை வைத்து விடுவானாம்.
உடனே பெண் ஓ என்று அழுவாளாம்.
அந்த தாலியை கையில் பிடித்துக் கொண்டு ஒரு மணி நேரம் அழுது கொண்டே வசனம் பேசுவாள்.
ஆ ஆ ,எனக்கு தியேட்டரை விட்டு ஓடி விடலாம் போலிருக்கும்.
1971ல் பாகிஸ்தான் போரின் போது என் அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு 3 நாட்கள் சாப்பிடவில்லை.
எதற்கு???????????
நானும் போருக்கு போவேன் என்று.
சிரிக்காதீர்கள்.
என் வயது 11.
பாகிஸ்தான் போய் கடகடவென்று எல்லோரையும் சுட்டு வீர மங்கையாக வருவது போல் கற்பனை.
அடுத்த கேவலமான கற்பனை.அங்கு போய் டான்ஸ் ஆடி அவர்களை கிறங்கடித்து பின் சுடுவது போல்.
எங்கிருந்து வந்தது இந்த எண்ணம்?
காரணம் சினிமா .ஒரு பெண் என்றால் உடல்தான் பிரதான மூலதனம்.
இதை நினைத்து பல நாட்கள் வேதனை பட்டிருக்கிறேன்.
நோயால் அவதி படும் கணவனை கூடையில் வைத்து தாசி வீட்டிற்கு கொண்டு செல்.
என்ன வகையாக பெண்களை கொடுமை படுத்தி இருக்கிறார்கள்.
ஏன் ...ஒரு தேவ தாசி குலத்தில் பிறந்து 1933ல் 40000 சம்பளம் வாங்கிய இசைக் குயில் பற்றி பெண் பிள்ளைகளுக்கு சொல்லி தரவில்லை.
அதே தேவ தாசி குலத்தில் பிறந்து ,கணவனை இழந்து பின் மருத்துவம் பயின்று டாக்டராகிய முத்துலெட்சுமியை பற்றி சொல்லித் தரவில்லை.
1971ல் அணுகுண்டு சோதனை செய்யக் கூடாது என்ற உலக கட்டுப் பாடு இருந்த போது பூமிக்கு மேல்தானே வெடிக்கக் கூடாது.பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி பொக்ரானில் அணு சோதனை செய்து உலகையே அதிர வைத்த இந்திரா காந்தி பற்றி சொல்லித் தரவில்லை?
திருமண பந்தம் என்பது கணவனை மனைவிக்கோ,மனைவியை கணவனுக்கோ அடிமைப் படுத்தும் சாசனம் அல்ல.Life partners என்றுதான் சொல்கிறோம்.
பெண்களே இவ்வளவு பெண் உரிமை பேசும் நீங்கள் ஒரு ஆன் மகனின் பசப்பு வார்த்தையில் , அவன் நடத்தும் நாடகத்தில் மயங்கி காதல் என்ற கேவலமான செயலை செய்யாதீர்கள்.
அன்புடன்,
கார்த்திக் அம்மா

2018/12/11

விதவை கட்சி

at the outset let me declare that i am a vidow .ஆம் .நான் ஒரு விதவை.
ஆனால் நான் தனிப் பெண்ணாக போராடி வாழ்க்கையில் சாதித்திருக்கிறேன்.
விதவை என்றால் அறிவு இல்லாமல் போய்விடுமா?
ஒரு பிரதமர் எதிர் கட்சியை தாக்கிப் பேச, கிண்டல் செய்து பேச வேறு வார்த்தைகளே இல்லையா ?????????
அப்படி என்றால் இவருடைய அம்மா
இவருடைய மனைவி???????????
இத்தாலிப் பெண் என்று பழித்து பேசுகிறிர்களே
அவர் உடை அணியும் நேர்த்தி ,
வேறு யாருடனும் தவறாக ....என்று ஒரு வார்த்தை.....
இந்திய கலாசாரத்திற்குள் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்ட பாங்கு .....
மனம் மிக மிக வேதனைப் படுகிறது.
விதி விளையாடுகிறது.
விதவையானோம்.இதை கேலி செய்தால்
மனம் மிக மிக வலிக்கிறது.
கார்த்திக் அம்மா

2018/11/24

தீபமும் மழையும்

கார்த்திகை தீபம் ஏற்றுவது பற்றி ஆன்மிக கதைகள்  இருந்தாலும் அறிவியல் தான் இதன் பின்னணி.
ஊரில் மாவலி சுற்றுவது என்ற பழக்கம் உண்டு.
குன்றுகளில் பனை,வைக்கோல் ,தென்னை கொண்டு உயரமான இடத்திற்கு சென்று தீ சுற்றுவார்கள்.
கோவில்களில் சொக்கப்  பனை எரிப்பார்கள்.
இந்த வெப்பம் புவியின் வெப்ப நிலையில் மாற்றம் செய்து வரும் புயல்களை வலு இழக்க செய்து விடும்.
பாருங்கள் .
இன்று செய்தியில் மழை குறையும் என்று சொல்கிறார்கள்.
I   AM    SCIENTIFICALLY     RELIGIOUS.
எனவே இந்த மாதம் முழுவதும் வீட்டில் விளக்கேற்றுங்கள்.
புயலின் கோர தாண்டவத்தை கட்டு படுத்துங்கள்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

2018/11/22

கஜா ..கேள்விகள்

அதிர்ச்சி ...
நிஜமாகவே மிகுந்த மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது.
அடித்தட்டு மக்கள் என்ற வார்த்தையின் முழு அர்த்தம் இப்போதுதான் முழுமையாக புரிகிறது.
நானும் கிராமத்தில்தான் பிறந்தேன்.
ஆனால் இவ்வளவு குடிசைகளை பார்த்ததில்லை.
கர்வமோ,திமிரோ  இல்லை.
எங்கள் கிராமங்கள் நல்ல வசதியோடு இருப்பதாக தெரிகிறது.
ஒரு வேளை சேலம் மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் காலூன்றியதால் மக்கள் வாழ்க்கை தரம் நன்றாக இருக்கிறதோ?
இப்போது புயல் பாதிக்கப் பட்ட மக்களின் குடிசைகளை பார்க்கும்போது ...நாம் வாழும் வாழ்க்கைக்கும் அவர்களின் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் வேதனையை தருகிறது.
இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் இந்த மக்களுக்கு செய்தது என்ன?
அவர்களை படிக்காதவர்களாகவும் ஏழைகளாகவே வைத்திருந்தால்தான் வோட் கிடைக்கும் என்பதால்தானோ ?
ஆனால் கண்ணீர் வடிகிறது.
ஒரு குடிமகன் என்ற முறையில் நான் கூட என் கடமையை சரியாக செய்யவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி எழுகிறது.
கார்த்திக் அம்மா

2018/11/21

நடிகர்களே

நடிகர்களே இது நியாயமா ?
இப்போதான் சர்க்கார் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு வந்தது.
அடுத்து விஷால் .
ரஜினி ஸ்டைல் பார்த்து சிகரெட் ,மது குடிக்க ஆரம்பித்த பலரை எனக்கு தெரியும்.
சர்கார் படத்திற்கு பின் இங்கு இளைஞர்கள் அதே ஸ்டைலில் தாங்களும் அதே நடிகர் என்ற மாயையில் அலைகின்றனர் .
நடிகர்களே
பணம் என்ன செய்து விடும்???????
பணமும் புகழும் மட்டுமே வாழ்க்கை என்ற மாயை வேண்டாம்.
எவ்வளவு பணம்,புகழ் ,பதவி இருந்தும் நம் தமிழ் முதல்வர்கள் 4 பேர் மருத்துவ மனையில் பட்ட கஷ்டங்களை பார்த்தும் ஏன் '' ''நிலையாமை '' '' என்பதை உணர மாட்டேன் என்கிறீர்கள் ????????
வேண்டாம் இந்த போக்கு.
படம் முழுவதும் குடிக்கும் காட்சிகளில் நடித்து விட்டு இறுதி காட்சியில் நல்லவன் ஆனால்
பார்க்கும் விடலைகள் மனதில் அது நிற்காது.
நடிகர்களே
இளைஞர்களை நல்  வழி படுத்தும் காட்சிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடியுங்கள்.
கார்த்திக் அம்மா

2018/11/14

பிறந்த நாள் பரிசு

எனக்கும் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள் பரிசாக ISRO தந்த பரிசுதான் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
பைத்தியம் போல் ஓடுவேன் மொட்டை மாடிக்கு ஓடுவேன்.
திருவான்மியூரில் இருப்பது ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.செயற்கைகோள் விண்ணில் பாயும் அழகே அழகுதான்.
அதுவும் இன்று ஜெகஜோதியாக தெரிந்தது.பரவசமாகி விட்டேன்.இஸ்ரோ மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
கார்த்திக் அம்மா

2018/11/13

கிழவி ஆகிவிட்டேன்

கிழவி ஆகிவிட்டேன் .ஆம் .
நான் S .C  {senior citizen }ஆகி விட்டேன்..
ஆம்.
இன்றுடன் 60 வயது முடிந்து மூத்த குடிமகள் ஆகிறேன்.
நாளை 14.11 நானும் என்  மகனும் பிறந்த நாள்


2018/11/10

அரசு அவசர அறிவிப்பு

:அரசு அவசர அறிவிப்பு :
வள்ளி படத்தில் ரஜினி இலவசம் வாங்க வந்த கூட்டத்தில் அதை எதிர்த்து வசனம் பேசி இருந்த காட்சி ஒரு வலைதளத்தில் பார்த்தேன்.அப்போதே செய்திருக்க வேண்டிய அரசு இப்போது உடனடியாக செய்து  விட்டது.அதுதான் இன்றைய தலைப்பு செய்தி.
அரசு அறிவிப்பு.
இன்று முதல் அனைத்து இலவசங்களும் நிறுத்தப் படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்கள் கல்வி கட்டணம் கட்ட வேண்டும் .
மதிய சத்துணவு திட்டம் இல்லை.மாணவர்கள் வீட்டிலிருந்தே மதிய உணவு கொண்டு வர வேண்டும் .
புத்தகங்களுக்கு பணம் கட்ட வேண்டும்.
இலவச சீருடை கிடையாது.
இலவச சைக்கிள் கிடையாது.மாணவிகள் பெற்றோரிடம் கேட்டு சைக்கிள் வாங்கிக் கொள்ளலாம் .அல்லது நடந்து வரலாம்.ஏன்  நடக்க வேண்டும்? ஏனென்றால் இலவச பஸ் பாஸ் கிடையாது.
கர்ப்பிணி பெண்களுக்கு வைட்டமின் மாத்திரை போன்ற இலவசங்கள் கிடையாது.
அரசு மருத்துவ மனைகளில் கட்டணம் அமல்படுத்தப் படுகிறது.
முதியோர் ஓய்வூதியம் ரத்து செய்யப் படுகிறது.
ரேஷன் கடைகளில் இலவச அரிசி கிடையாது,நாளை முதல் ரேஷன் கடைகள் மூடப்படும் .
........அரசு அறிவிப்பின் படி இந்த லிஸ்ட் இன்னும் சொல்லிக் கொண்டே போகிறது.
இந்த படத்தை பார்த்த வர்கள் வீட்டிலிருந்த கேஸ் அடுப்புகளை எல்லாம் தூக்கி தெருவில் வீசி விட்டார்கள்.
அதனால் புது அடுப்பு வாங்க கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
மாணவர்கள் இந்த வருடம் அரசு கொடுத்த அனைத்து லேப்டாப் ,புத்தகங்கள் etc எல்லாவற்றிற்கும் பணம் கொண்டு வந்து பள்ளிகளில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சமுதாய புரட்சி ஏற்பட்டு விட்டது.
தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
பி .கு :
நானும் ஒரு சட்டை வாங்கி போட்டுக் கொண்டு காலரை தூக்கி வீட்டுக் கொள்ள போகிறேன்..
disclaimer
சும்மா ஒரு பிதற்றல்.அரசு சொல்லவில்லை.
சொன்னால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.
விளையாட்டாக படித்து மறந்து விடுங்கள்.
another disclaimer :
இது நான் போட்ட பதிவல்ல .என் அட்மின் போட்டது.

2018/11/09

மீம்ஸ்

மீம்ஸ்
அப்பாடா 
இந்த மீம்ஸ் எப்படித்தான் போடுகிறார்களா .இது போல் ஒரு 50 க்கும் அதிகமான மீம்ஸ் .நான் சேம்பிளுக்கு ஒன்றை போட்டிருக்கிறேன் .இந்த மீம்ஸ் போடுபவர்களுக்கு என் பாராட்டுக்கள்  

2018/11/08

நான் கார்த்திக்

நான் கார்த்திக் பேசுகிறேன் .
இல்லை இல்லை  .
எழுதுகிறேன்.
2005 ல் 23 வயதில் இந்த உலகிற்கு டா டா ,பை பை சொல்லி விட்டு கிளம்பி  விட்டேன்.
13 வருடங்கள் ஆகி விட்டது.
ஆனால்
ஒரு 5 அடி உயர ஜீவன் இன்றும் அந்த உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறது .
நான் ஆரம்பித்த பிளாக்கை நானே எழுதுவது போல் எழுதி இந்த உலகை நம்ப வைக்க முயற்சி செய்து தோற்று போகிறது.சா ....இற ....என்ற வார்த்தைகளை சொல்ல முடியவில்லை அம்மாவால் .
என் நினைவில் ஒவ்வொரு நிமிடமும் துடிக்கும் அம்மாவிற்கு என்ன ஆறுதல் சொல்வது ?????
யார் ஆறுதல் சொல்வது ???????????
எது ஆறுதல் தரும் ???
யாராலும் முடியாது.
அம்மா
என் மீது ஏன் இவ்வளவு அன்பு வைத்தீர்கள் ?????????ஏனம்மா என்னையே உங்கள் உயிர் என்று நினைத்தீர்கள் ????
நானும் அப்படித்தான் நினைத்து வாழ்ந்தேன் .அதனால்தான் நீங்களும் அப்படியே நினைத்தீர்கள் ...
ஆனால் விதியை வெல்ல முடியாமல் உங்களை இந்த உலகில் விட்டு விட்டு நான் மட்டும் பறந்து விட்டேனே .....
இன்று உயிரில்லா உடம்புடன் ஒரு கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களே ...
உங்களின் பரிதாப நிலை ....
கண்ணீருடன்
உங்கள் அன்பு மகன்
கார்த்திக்

2018/11/06

தீபாவளி படங்கள்

இன்று டி வி யில் தீபாவளி படங்கள் :
ஒரே  நடிகரின் படங்கள் 3 சேனல்களில்.
ஏன் ?
ஒருவரை  தூக்க ஆரம்பித்தால் இந்த அளவிற்கா?
இதன் பின்னணி என்ன?
ஏன் நடிகர்களை இவ்வளவு மிகைப் படுத்துகிறார்கள்?
ஊடகங்கள் இளைஞர்கள் வேறு எதை பற்றியும் நினைக்க கூடாது.என்று நினைக்கிறதா ?
வேறு எந்த சாதனையையும் செய்ய ஊக்கப் படுத்தலாமே .
ஒரு படம் ரிலீஸ் ஆவது அவ்வளவு பெரிய விஷயமா ?
நன்றாக இல்லை.

2018/11/05

ஆம்புலன்ஸ் நண்பர்கள்

ஆம்புலன்ஸ் நண்பர்கள் :
TRULY GREAT :
திருச்சியில் இருந்து சென்னை கொண்டு  வரப்பட்ட குழந்தை .
பிறந்த சிசு உயிருக்கு போராட
திருச்சி மருத்துவ மனையில் சென்னைக்கு கொண்டு சென்றால்தான்  காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் சொல்லிவிட தவித்து விட்டனர் பெற்றோர் .
இந்த தருணத்தில்தான் ஆம்புலன்ஸ் மிக அரிதான செயலை செய்தது.3.1/2 மணி நேரத்தில் குழந்தை திருச்சியில் இருந்து சென்னைக்கு கொண்டு வர பட்ட செய்தி  பரபரப்பு ஆனது.
ஆனால் இந்த feat ,இந்த சாதனைக்கு பின் நடந்த விஷயங்கள்தான் மிகவும்  கவனிக்க  வேண்டியது.
ஆம்புலன்ஸ் whats app குழு மிக மிக துரிதமாக வேலை   செய்தன,
voice call தொடர்பை முழுமையாக பயன்படுத்தி குழந்தை வரும் ஆம்புலன்ஸ் தடை இன்றி வர அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்தன,
டோல் கேட்டில் வண்டி நிற்காமல் செல்ல 5 நிமிடங்களுக்கு முன்பே தடம் சரி செய்யப் பட்டது.
வண்டி எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பது  ட்ராக் செய்யப் பட்டுக்  கொண்டே இருந்தது.உதவிக்கு,அவசரத்திற்கு  முன்னும் பின்னும் ஆம்புலன்ஸ்கள் வந்து கொண்டிருந்தன.
இப்படி ஒரு ராணுவ தோரணையில் நடந்தது இந்த சாதனை.
இதில் மிக மிக கவனிக்க வேண்டியது .
இந்த குழந்தை ஒரு மகா பணக்காரரின் குழந்தை அல்ல .
ஒரு பெரிய செல்வாக்கோ,அதிகார பலம் மிக்கவரின் குழந்தையோ அல்ல.
நம்மை  போன்ற ஒரு சாதாரண குடிமகனின் குழந்தை.
air ஆம்புலன்ஸ் , விமான நிலையத்தில் இருந்து 10 நிமிடத்தில் பறக்க கூடிய நபர்களுக்கு மட்டும்தான் எங்கள் சேவை என்ற கொடுமையை தகர்த்து எல்லோருக்கும் உதவி செய்வோம் .மதம் ,ஜாதி ,பணம் என்று எதுவும் பார்க்க மாட்டோம் .உயிர் காப்பது மட்டுமே எங்கள் குறிக்கோள் என செயல்பட்ட அத்தனை நல்லவர்களுக்கும் என் பாதம் பணிந்த வணக்கங்கள் .
ஏன் இந்த நல்ல விஷயத்தை எல்லா ஊடகங்களும் பெரிதாக செய்தியாக்கவில்லை.???????
அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கவில்லை????????????
 .ஹும் .
இதுதான் உலகம்.
கார்த்திக் அம்மா

2018/10/24

வட சென்னை

வட  சென்னை :
2004 ல் தேர்தல் பணிக்கு வட சென்னைக்குதான் சென்றேன். ஐயோ
அங்கேயா  என்கிறார்கள்.
சவால் என்பது எனக்கு வாடிக்கையான ஒன்று.
எப்படியாவது என்ன எதிலாவது மாட்டி வைக்க வேண்டும் என்பது பலரது வெறியாக இருந்தது.
போனேன்.தேர்தல் அதிகாரி..
ஓட்டுகள்  பதிவாகிக் கொண்டிருந்தன.
கள்ள வோட்டுக்கு அனுமதி இல்லை என்று கடசியினரிடம் உறுதியாக சொல்லி விட்டேன்.
நடபாக நல்ல விதமாக கேட்டார்கள்.
மீண்டும் மறுத்து விட்டேன்.
தேர்தல் பணி  செய்பவர்களுக்கு காபி ,பிரியாணி கொடுப்பார்கள்.எங்களுக்கு வரவில்லை.என்னுடன்  பணி  செய்தவர்களுக்கு நானே வாங்கிக் கொடுத்தேன்.
2 மணி அளவில் ஒரு 20 பேர் வந்தார்கள்.
யார் தொகுதி தெரியுமா என்றார்கள் ????
எல்லோரையும் தெரியும் என்றேன்.
சென்று விட்டார்கள்.
DSP  வந்தார்.sir பணி  முடிந்து செல்லும் போ து எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றேன்.மிகவும் மகிழ்ந்தார் அவர். கள்ள வோட்டு விழாத ஒரே பூத் என பாராட்டி சென்றார்.
...
எதற்கு பழைய கதை என்கிறீர்களா ???????
2 நாட்கள் அந்த ஏரியாவில்தான் இருந்தேன்.
சாம்பிளுக்கு கூட எந்த கெட்ட வார்த்தையும் காதில் விழவில்லை.
கட்சியினரும் என்னிடம் நல்ல விதமாகவே பேசினர்.
சிறிய மிரட்டல். மற்ற படி எந்த தவறோ ,அத்து மீறலோ இல்லை.என்னை வட சென்னை ,ரௌடி ஏரியா என்று ஏன் பயமுறுத்தினார்கள் என்றே தோன்றியது.
அப்படி நான் பார்த்த வட சென்னையை மிகவும் கெட்ட வார்த்தைகளே பேசிக் கொண்டு கத்தி அரிவாளுடன் அலையும் கூட்டமாக ஏன்  திரைப் படம் எடுத்தார்கள்.
ஒரு வட சென்னை வாலிபன் பெங்களூரில் MNC  யில் வேலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
அவனுக்கு இனிமேல் கம்பெனியில் என்ன மதிப்பு இருக்கும்?
அங்கே படித்தவர்களே இல்லையா?
அதே வட சென்னையில்தான் ஆசிரியர் கருத்தரங்கம் நடந்தது.அப்போதும் எந்த தவறான வார்த்தைகளையோ நிகழ்வுகளையோ நான் பார்க்கவில்லை.
என் நண்பிகள் இருவர் அங்குதான் வேலை செய்தனர்.
கஷ்டம் என்று ஒரு நாளும் சொன்னதில்லை.சந்தோஷமாகத்தான் வேலை செய்தனர்.
ஒரு பேச்சுக்கு அங்கு அப்படியான வார்த்தைகள்தான் பயன் படுத்துகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
அதை இப்போது வெளிச்சம் போட்டு எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டிய அவசியம் என்ன?
பீப் பாடல் வந்த போது அந்த வார்த்தை எனக்கு பதிந்து போனது.மிக மிக பயமாக இருந்தது.என்றாவது என்னை அறியாமல் இந்த வார்த்தையை சொல்லி  விடுவேனோ என்று திகில்  அடித்தது.
இப்போது அது போல் 100 வார்த்தைகள் என்கிறார் திரு.ராஜன்.
சமுதாயத்தை நல்வழிப் படுத்த வில்லை என்றாலும் கெடுக்காதீர்கள்.
இன்று குங்கும பூவும்  கொஞ்சு புறாவும் என்ற படம் பார்த்தேன்.எதற்கு?
இப்படிப் பட்ட படங்களை எடுத்து இளைஞர்களை கெடுக்காதீர்கள்.
கார்த்திக் அம்மா


2018/10/19

ஐயப்பனும் முஸ்லீம் ரெஹானாவும்

மத நல்லிணக்கம் வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளவள் நான்.
ஆனால் என் தாய்க்கு ஒரு அவமானம் என்றால் நான் பொறுத்துக்க கொள்ள மாட்டேன்.
ஏனப்பா .நீதிமன்றம் என்ன சொல்லியது ????
பெண் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றுதான் சொல்லியது.எதற்கு பத்திரிக்கையாளர்கள்????
அதிலும் பெண் பத்திரிக்கையாளர்கள்???????????
அதிலும் ...அதிலும்  ஒரு முஸ்லீம் ???????????????
அதிலும் ..அதிலும் ஒரு முஸ்லீம் பெண்???????????
அதிலும் இளம் பெண்கள்???????????
சரி...
உடையாவது  கோவிலுக்கு வரும் உடையா????????
ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து கருப்பு அல்லது நீல நிற உடை அணிகிறார்கள்.
அன்று ஒரு பெண் செல்கிறார்.அவர் சாதாரண உடையில் செல்கிறார்.அதிலும் ஒரு டிசைன் பிளவுஸ் .தேவையா ???
இந்த முஸ்லீம் பெண் அவர் மதத்தின் மசூதி உள்ளே செல்வாரா ?
அவர் மதத்திற்கு ஒரு நியாயம்.
இந்து மதத்திற்கு ஒரு நியாயம்.
இதன் பின்னணியில் யார் இருந்தாலும் செய்வது தவறு.
தவறு செய்யாதீர்கள்.
பெண்களே
பெண்ணுரிமை என்பது இதுதானா ?????????
சாதிக்க எத்தனையோ துறைகள் உள்ளன.
அங்கெல்லாம் சாதியுங்கள். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன.இப்போது எதற்கு இந்த புது பிரச்சினை?
இதை யார் கிளப்பியிருந்தாலும் எந்த நோக்கத்திற்காக ஆரம்பித்து இருந்தாலும்
வேண்டாம்.தவறு செய்யாதீர்கள்.
கார்த்திக் அம்மா

2018/10/16

மி டூ ME TOO .


போடு அடி .கர்நாடக பெண் ஒரு வங்கி மேலதிகாரியை போட்டு தாக்கும் காட்சி இது ..இது ..இதுதாங்க உண்மையான ME TOO .தைரியம் இருந்தா இப்படி போட்டு தாக்க வேண்டும்..இல்லை என்றால்  பேசவே கூடாது..18ம் நூற்றாண்டில் நடந்தது.அப்ப சோத்துக்கே வழி இல்லை.இப்ப பணக்காரி ஆயிட்டேன்.பிரபலம் ஆகிவிட்டேன்.இப்ப சொல்கிறேன்...??????????..இது ..இதுதாங்க உண்மையான ME TOO .தைரியம் இருந்தா இப்படி போட்டு தாக்க வேண்டும்..இல்லை என்றால்  பேசவே கூடாது..18ம் நூற்றாண்டில் நடந்தது.அப்ப சோத்துக்கே வழி இல்லை.இப்ப பணக்காரி ஆயிட்டேன்.பிரபலம் ஆகிவிட்டேன்.இப்ப சொல்கிறேன்.  



நானும் பல ஆண்களுடன் வேலை செய்தவள்தான்.பல பிரயாணங்களில் ஆண்கள் உரசிய அனுபவம் உண்டு.எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அபத்தம்.முடிந்தால் திருப்பி தாக்கு.அப்போதே.உடனே .அந்த இடத்திலேயே ...நான் கர்ஜிக்க ஆரம்பித்தால் துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓடி விடுவார்கள்.எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் சண்டை போட முடியாது.அது போன்ற இடங்களில் அவனை சட்டை செய்ய கூடாது.WHO CARES ....போடா வெண்ணை.உன்னால் நான் ஒரு துளியும் பாதிக்கப் படவில்லை என்ற தொனியில் திரும்பி பார்க்காமல் போய் கொண்டிருந்தால்  அதுவே அவனுக்கு பெரிய தண்டனை.....அத விட்டு இதனால் என் carrier என் முன்னேற்றம் போய் விடும் என்று நினைத்தால் அது பற்றி எப்போதும் பேசக் கூடாது.பாராட்டுக்கள் கர்நாடக பெண்ணே.  

2018/10/12

சங்கர் அகாடமி

சங்கர் அகாடமி யின்  சங்கர்.:
கோபம்.
கோபம்.
சங்கர் மீது எனக்கு அளவற்ற  கோபம்தான் வருகிறது.
இவ்வளவு பேரை உருவாக்கிய  ஒரு மாபெரும் மனிதர் அற்பமாக  குடும்ப பிரச்சினைக்காக  தற்கொலை செய்யலாமா?
என்னதான் பிரச்சினை இருக்கட்டுமே?
கணவனை  இழந்து இந்த மகனை உருவாக்க  அந்த தாய் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்க வேண்டும்.
இவரது பாட்டிதான் இவரை வளர்த்ததாக தெரிகிறது.
அந்த மூதாட்டியை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
இந்த இரு பெண்டிரும்  இவரை நம்பியே இருந்திருப்பர்.
இரு மகள்கள்.
அவர்களை நினைத்து பார்க்கவில்லையா இவர்?
இத்தனை மாணவர்களை ஊக்கப் படுத்தி சாதிக்க வைத்தவர் தன்  பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியவில்லையா?
இந்த குடும்ப பிரச்சினையை ஓரம் கட்டி விட்டு இன்னும் எத்தனையோ I .A .S மாணவர்களை  உருவாக்குவதில்  கவனம் செலுத்தியிருக்கலாம்.
என் கார்த்தி விபத்தில் மறைந்ததையே தாங்க முடியவில்லை.
இவர் தன தாய்க்கும் பாட்டிக்கும் மிக பெரிய துரோகம் செய்து விட்டார்.
தன் மாணவர்களுக்கும் துரோகம் செய்து விட்டார்.
சங்கர்,
கோபமான வருத்தத்துடன்
கார்த்திக் அம்மா

2018/09/27

கள்ள உறவு

கள்ள உறவு ...தகாத உறவு
நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை நான் விமர்சிக்கவில்லை.
நீதி மன்றமே கள்ள உறவு என்று சொல்லியிருக்கிறது.ஆண்  பெண் உறவு என்று சொல்லலாம்.
கலாச்சாரம்  என்று ஒன்றுமில்லை.
ஒரு வாழ்க்கை நெறி முறை.
ஒரு ஆணும் பெண்ணும் எப்போது தாய் தந்தை ஆகின்றனரோ அப்போது அனைத்து முறைகளும் மாறுபடுகிறது.
தாய் வேறு வழிகளில் ஈடுபாடு கொள்ளும்போது  அந்த குழந்தைகளை நினைத்து பாருங்கள்.
பசி என்று ஒரு குழந்தை அழும்போது ஓடி வருபவள் தாய்.
அதற்கான பணம் தர வேண்டியது தந்தை.
குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக  மாறும்போது  தீவிரவாதிகளும் குற்றவாளிகளும்  உருவாகிறார்கள்.
இத தடுத்து நல்ல குடிமகன்கள்  வேண்டும் என்றுதான் நம் பெரியவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொன்னார்கள்.
அதிலும் குழந்தைகளை பொறுத்தவரை  தாயின் பங்களிப்பு மிக மிக அதிகம்.
பெண்ணுக்கு உணர்ச்சிகள் இருக்கக் கூடாதா என்றால்
.....
ஆணுக்கும் சரி...
பெண்ணுக்கும் சரி ....சமூக நலன் கருதி ..கட்டுப் பாடுகள் தேவை.
நம் ஊரில் கணவன் மனைவிக்கு என தனி அறை  இல்லாத காரணமே பல குற்றங்களுக்கு காரணமாகிறது.
பல கற்பழிப்புகள் .....
தனி மனித சுதந்திரம்தான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்வீர்கள் என்றால் ...
தனி மனிதர்களாக மட்டும் இருங்கள்.
தாய் தந்தை ஆகாதீர்கள் .
நாய்கள் போல்,
விலங்குகள் போல்
எங்கு வேண்டு மென்றாலும்,
எப்போது வேண்டுமென்றாலும்
உறவு கொள்ளுங்கள்.

2018/09/11

கலைஞர் +கார்த்தி சிலை

செய்தி
 // //  கருணாநிதிக்கு.  சிலை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. இந்த சிலை இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது. அறிவாலயத்தில் ஏற்பாடு அறிவாலயத்தில் ஏற்பாடு இந்த சிலை அறிவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. அறிவாலயம் உள்ளே நுழைந்ததும் நடுவில் தற்போது அண்ணா சிலை இருக்கிறது. அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே கருணாநிதியின் சிலை வைக்கப்பட இருக்கிறது. இதற்காக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க வெண்கல சிலை முழுக்க முழுக்க வெண்கல சிலை இந்த சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இன்னும் இதில் சில கடைசி கட்ட பணிகள் மட்டும் செய்யப்பட்டு வருகிறது. யார் செய்கிறார் யார் செய்கிறார் இந்த சிலையை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிமைக்கிறார். இவர் இதற்கு முன்பே தலைவர்களுக்கு சிலை வடிவமைத்துக் கொடுத்தவர். சில கோவில் சிலைகளையும் வடிவமைத்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.// //

இது கார்த்தியின் சிலை.இதை செய்து தந்தவர் இந்த தீனதயாளன் அவர்தான்.fiber ல் செய்தது . வீட்டிற்கு வருபவர்கள் கார்த்திதான் நிற்கிறான் என்றே நினைத்து கொள்வர்.
சொலவதில் பெருமை இல்லை .
வேதனைதான்.
கார்த்திக் அம்மா

2018/09/10

8,12,20 சாலை

8 வழி சாலை
12 வழி சாலை
20 அடி  ரோடு
எவ்வளவ் வேண்டுமானாலும் போட்டு தூள் அடிங்க .நல்ல விஷயம்.ஏன் என்றால் பெட்ரோல் போட முடியாமல் மக்கள் நடந்துதான் போக வேணடும் .அதற்கு  இப்படியான பிரமாண்டமான சாலைகள் நிச்சயம் தேவை.
அரசை குறை சொன்னவர்களே ,இப்போது புரிகிறதா அரசு மக்களுக்காக நிறைய சிந்த்தித்து ,யோசனை செய்து  கருணை எண்ணத்துடன் செயல் படுகிறது என்பது .
sorry .Govt .

2018/09/06

அபிராமி+கண்ணடி

ஒரு பாட்டில் ஒரு பெண் கண்ணடிப்பது போன்ற காட்சி  இஸ்ரோ சாதனை போல் பேசப்பட்டது .
இப்போது பார் .
அபிராமி கண்ணடிக்கிறாள்.
சினிமாவில் இது போன்ற காட்சிகள் மக்களை எந்த எல்லை வரை கொண்டு விடுகிறது பாருங்கள்.
அந்த பாடலில் வகுப்பறையில்  கண்ணடிப்பது ,flying kiss கொடுப்பது பார்த்து எத்தனை வகுப்பறைகளில்  இந்த கொடுமை நடக்கிறதோ.
மாணவர்கள் படிப்பதை விட்டு இந்த சாதனைகளைத்தான் செய்வர்.
மீடியா வே  மக்களை கெடுக்காதே.

2018/09/04

கண்ணடி

அந்த காலத்தில் கண்ணடிப்பது என்பது ஓர் இழிவான கேவலமான செயலாக பார்க்கப்பட்டது .
இப்போது ஏதோ ஒரு பாடலில் ஒரு பெண் கண்ணடிப்பது  இமாலய சாதனையாக பேசப்படுகிறது .
நீதி மன்றத்தில் இதற்கு விளக்கம் சொல்லப் படுகிறது .
எல்லாம் சரிதான்.
ஆனால் ...
 வகுப்பறையில் கண்ணடிப்பது ,flying kiss கொடுப்பது எல்லாம் மிகப் பெரிய தவறான விஷயம் ...
அப்படின்ன  ஏன் யாரும் சொல்லவில்லை ????????
யாரும் கண்டிக்கவில்லை ???????????????
கார்த்திக் அம்மா

2018/08/26

ஆகஸ்ட் 26

August  26 ...2005
என் வாழ்வில் வந்திருக்கவே  கூடாத நாள்.
என் அருமை கண்மணி கார்த்திக்கிற்கு விபத்து ஏற்பட்டு  என்னை விட்டு பிரிந்த நாள்....
என் வாழ்வில் வந்திருக்கவே கூடாத நாள்.
.....
தன் அம்மாவை தவிர இந்த உலகில் எதுவுமே தேவை இல்லை என்று வாழ்ந்த மகன்.
2002ல்
ஒரு பெரிய U .S கம்பெனியில் வேலை வந்தும் அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற மகன்.
(அவன் நண்பர்கள் என்னைத்தான் திட்டினர்.நீங்கள்தான் கார்த்தியின் எதிர் காலத்தை கெடுக்கிறீர்கள். எங்களுக்கு எல்லாம் மைக்ரோ சாஃப்ட்டில் வேலை கிடைக்காதா என்று ஏங்குகிறோம்.)
நான் கார்த்தியிடம் ''போய் வா கார்த்தி.'' என்றுதான் சொன்னேன்.உறுதியாக மறுத்து விட்டான்.அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற வைராக்கியம்.அது எவ்வளவு பெரிய வேலை ,எவ்வளவு பெரிய சம்பளம் என்றாலும் சரி அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற மகன்.
ஒரே அடியாக விட்டு விட்டு போய் விட்டான்.
எப்போதும் புலம்பல்.
அழுகைதானா
என்று குற்றம் சொல்பவர்களுக்கு ..
கார்த்தி போல் ஒரு மகன் கிடைக்க 100 கோடி ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அவன் அன்பு, அறிவு, அடக்கம் ...சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த அன்பு மகனை இழந்த நாள்.
ஒவ்வொரு நிமிடமும் அவன் நினைவால் தவிக்கும்
கார்த்திக் அம்மா

2018/08/25

விளம்பரம்

பல விளம்பரங்கள் மொக்கையாக இருக்கின்றன.
சில கொடுமையாக இருக்கின்றன.
ஒரு சோப்பு விளம்பரத்தில் சில சிறுமிகள் ஒரு பெண் முகத்தில் அதிர்ஷ்டம் இருக்கிறது எனவும் அந்த முகத்தை பார்த்து விட்டு சென்றால் வெற்றிதான் எனவும் சொல்கிறது.
எப்படிப்பட்ட  மூட நம்பிக்கையை சிறுமிகளின் மனதில் விதைக்கின்றன .விதவைகள் எதிரில் வர கூடாது.
அவர்கள் முகத்தில் விழித்து சென்றால் போகும் காரியம் தோல்வி என்று ஏற்கனவே இருக்கும் மூட நம்பிக்கையை இது இன்னும் அதிகரிக்கிறது.சம்பந்தப் பட்ட சோப்பு கம்பெனி இந்த விளம்பரத்தை மாற்றுமா ?
ஹார்லிக்ஸ் :
இந்த விளம்பரத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
ஒரு சிறுமி டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடனும் ,உறுதியுடனும் படிக்கும் போது அம்மா ஊட்ட உணவாக ஹார்லிக்ஸ் தருவதாக உள்ளது.
அதிலும் ஒரு பெண் பிள்ளையை ஒரு லட்சிய பெண்ணாக காட்டுவது எவ்வளவு நல்ல விஷயம்.
பாராட்டுக்கள்.

சில விளம்பரங்கள் புரியவில்லை.
பீட்ஸாவிற்கு வருகிறதே.இரண்டு பெண்கள் .''I DOUBT HIM '' என்ன அர்த்தம்?
அதே போல்
அண்ணன்   தம்பி சாக்லெட் கேட்டு கடவுளிடம் வேண்டுதல் விளம்பரமும் புரியவில்லை.
என் அறிவு சொல்ல முடியாத அளவு..
யாராவது விளக்கம் சொல்லுங்களேன்.
கார்த்திக் அம்மா

2018/08/24

பாவி

பாவியின் வயிற்றில் பிறந்ததால்
பாதியில் போனாயோ?
உத்தமியின் வயிற்றில் உதித்திருந்தால்
உண்டென்று வாழ்ந்திருப்பாயோ?
பாவியெனக்கு உன்னை சுமக்கும்
பாக்கியம் கிடைத்ததால்
என் பாவமெல்லாம் நீங்கியதோ?
என் பாவத்தை நீ சுமந்ததால்
பரிதவித்து பரமனடி சேர்ந்தாயோ?
karthik amma 

2018/08/22

பெங்களூரில் நடைபெற்ற விசித்திர சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த அடியும் படாமல் குழந்தை ஒன்று உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்து
பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. பதைபதைக்கவைக்கும் இந்த வீடியோ தொடங்கும்போது இரு சக்கரவாகனத்தில் இருவர் மட்டும் பயணிப்பது தெரிகிறது. அவர்கள் சாலையின் இடது புறமாக வேகமாகச் செல்ல முயலும்போது எதிர்பாராதவிதமாக முன்னால் நின்றிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதுகின்றனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில்  வந்த தம்பதி தூக்கிவீசப்பட்டு சாலையில் உருண்டபடி செல்கின்றனர்.
kaarththikkirkum ippadiththaan nadanthathu.
கார்த்திக்கிற்கு இப்படித்தான் நடந்தது.
யாரோ செய்த தவறு.
ஆனால் இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டும் இவர்கள் தப்பிக்கின்றனர்.
என் கண்ணின் மணியோ ,என் தெய்வ மகன்  என் குழந்தை  தன்  பொன் உயிரை விட்டு விட்டானே.
 விதியே என் மகனுடனும்  என்னுடனும் இவ்வளவு கொடூரமாக விளையாட வேண்டுமா

2018/08/20

பௌர்ணமி .என் முழு நிலவு

என் முழு நிலவு
இன்னும் மனம் 2005 லேயே இருக்கிறது.
தேறும் வழி தெரியவில்லை.
மகன் ஏக்கம் உயிரை கொல்கிறது  Still living in 2005.
Today is 21st aug.
I+KARTHIK+SENTHIL WERE IN KARUR.

அன்று  பௌர்ணமி .
2005 Aug  20 ம் தேதி அன்று பௌர்ணமி.அன்று நான், கார்த்தி, செந்தில் மூவரும் Bangalore லிருந்து கரூர் நகருக்கு புறப்பட்டோம். கார்த்தியின்  நண்பருக்கு திருமணம். திங்கள்  அன்று திருமணம்..சனிக்கிழமை கிளம்பினோம்.இரவு 7 மணி.செந்தில் காரை ஓட்டி  வர நான் முன் சீட்டில் ..கார்த்தி பின் சீட்டில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.சாப்பிட்டு முடித்து கை கழுவ  கார் கதவை திறக்க நான் ''ஜாக்கிரதை கண்ணம்மா '' என்கிறேன்.'' ''ஆமாமாம்.பார்த்து ,பறந்து விடப் போகிறாய் ''  என்று (கார்த்தி ஒல்லியாய் இருப்பதை கேலி செய்து ) செந்தில் சொல்ல  பேச்சும்  சிரிப்புமாக வந்து கொண்டிருந்தோம்.அப்போது செந்தில் ''அம்மா இங்கு பாருங்கள். '' என்று முழு ,பிரகாசமான நிலவை காட்டினான். நான் ''இது என்ன பெரிய நிலா,  இதை விட அற்புதமான நிலா   பின் சீட்டில் இருக்கிறது.  என் கார்த்தி மகன் முகம்தான் என் பிரிய நிலா. அழகு நிலா '' என்று சொல்ல பின் சீட்டில் இருந்த கார்த்தி இரண்டு சீட்டிற்கு  நடுவில் தன முகத்தை நீட்ட அவனை கொஞ்சி உச்சி முகர்ந்து என் இரு கைகளில் அவன் முகத்தை ஏந்த , செந்தில் '' போதும் ,போதும் அம்மாவும்  மகனும் கொஞ்சியது '' என்று செல்லமாக கோபிக்க ....சேலம்  சென்று என் அம்மா வீட்டில் தங்கி ,எல்லோருடனும்  அவ்வளவு சந்தோஷமாக  இருந்து விட்டு கரூர் சென்றோம்.
அந்த 3 நாட்களும் எவ்வளவு சந்தோஷமான  நாட்கள்.
சினிமாவில் வருமே .ஒரு பெரிய குடும்பம் .சந்தோஷமான,  பாசமான  குடும்பம் பாட்டு  பாடி ஆடி முடிக்கும் போது  வில்லன்கள் வந்து அவர்களை நாசப் படுத்துவார்களே.
அதே போல்தான்  என் வாழ்விலும்  நடந்து விட்டது.
கடைசி, கடைசி என்று கார்த்தி தன் உறவினர்கள்,  நண்பர்கள் என அனைவருடனும் சந்தோஷமாக இருந்தான்.கரூரிலிருந்து  திரும்பும் போதும் சேலம் சென்று தன்  பாட்டி  தாத்தா  மாமன்கள்  என எல்லோரையும் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்து விட்டு bangalore  சென்றோம்.
என் வாழ்வின் கடைசி சந்தோஷமான நாட்கள்.
இன்றும் முழு நிலவை பார்க்க தைரியம் இல்லாமல் பைத்தியமாக இருக்கிறேன்.
கார்த்திக் +அம்மா
KALAKARTHIK

2018/08/18

வருண பகவானே

மனமே யோசிக்க கூட முடியாமல் நின்று விடுகிறது, கேரள மக்கள் படும் துன்பங்கள் சொல்ல முடியாது..உலகம் முழுதும் தண்ணீர்  தண்ணீர்.
இயற்கையே நீதான் தலைவர்.ஒத்துக் கொள்கிறோம்.
போதும் நிறுத்திக் கொள்  உன் லீலைகளை .
ஒரு அளவிற்கு மேல் துன்பம் தரக்  கூடாது.
மீண்டும் மக்கள் தம் சொந்த இடத்திற்கு திரும்பி வீடு கட்டி ,மின் வசதி வாங்கி கேஸ் ,அரிசி ,பருப்பு என எல்லாவற்றையும் பழைய நிலைக்கு வர ....நினைத்தாலே ஆயாசமாக இருக்கிறது.
பலரால் பண உதவி மட்டுமே செய்ய முடியும்.
ஆனால் இன்னும் பல உதவிகள் செய்ய வேண்டும்.
எப்படி?
அங்கே போவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று.உதவ முடியாத நிலை நினைத்து என் மேலேயே  எனக்கு கோபம் வருகிறது .
கையறு நிலை.
வேதனையுடன்
 கார்த்திக் அம்மா

2018/08/13

கார்த்திக் RESUME

karthik's resume கார்த்திக் RESUME
As everyone knows, it's customary to wear coat,tie etc for any interview.I had been to his hostel,where I used to see his friends all in a formal attire and full tense over the interview.But,definitely,karthik would sure to follow his own laws and rules.SO, karthik had challenged his friends that he would go in jeans and 'T' shirt and would win the interview.
He had always been successful throughout his life and need it be said that he won the challenge.
Elated he came and told me all about it.
Not only that, he went and asked the Lady who interviewed him, the reason for selecting him, even after violating the so called rules of wearing formal attire. Damn sure, she would have never expected such a different guy.
I wanted to know her answer.But karthik diverted me to another topic, without giving a proper reply.
It's a year later, i myself found the answer, while i was studying his resume.
Will any employer like to lose this student with a full packed resume.
here follows his resume.
[..I (karthik amma ) tried my level best to upload the format submitted by karthik..and as i could not , i type. ]
Name: s. karthikeyan

Mother's name:kalavathy M.A,M.ED,M.Phil,M.B.A
Date.of birth: 14.11.1981

Degree:B.E.Comp.sci and Engineering
Electives:*Neural computing
*Visual Programming
*Advanced Java Programming
*C#and Net programming
*Univ.internals
*Digital speech and Image processing
*Robotics
*Mobile Computing

PROJECT Details and Papers Presented:

*Recognition of Handwritten Tamil Text

****Digital Voting Machine*****

*Library Automation [ oracle ]
*Unicode Keyword [ Assembly ]
*Network Carrom [ java ]
*Map Viewer [ c # ]
*C compiler
*Froctal maitain [am i typing the correct spelling ? ] Generator
SOFTWARE PRESENTATION:
1.Carrom Board game [ VB ]
2.Multilingual Editor [VB ]
3.Travel Planner [ VB ]
4 Kala Game [ C ]
5.Quiz Site [Java ]

SPECIAL INTERESTS/RESPONSIBILITIES UNDERTAKEN

1.Secretary of computer society of Anna UNIVERSITY 2001-2002
2.Vice President of computer society of Anna Univ 2000-2001
3Conducted the following quizzes:
*Techo Fest 2002 Inter College Meet
*Agni 2001 Intra University
*aBacus 2000 National Level Tech Symposium
*undefined 2001 Intra univ
*Karoke
*EUREKA 2000 for First Years
*SPARKS 1998 for Chennai schools
*Dance Contest

ADDITIONAL INFORMATION

*Designed the Website: CS. ANNAUNIV.EDU
*Authored part of C- Course material for Computer Society
*Articles written in CURSOR magazine:
1.HTML Tutorial
2.Weird Wild Web-Website review
3.Quiz Corner
and what follows are the competitions he participated and the prizes:
Tech.Quiz:
College
Level
Year
Prize Won




Madha Eng.col
Hindustan.Eng
National Institute
VRS Coll
KSR
CIT
Stella Maris
Annamalai Uni
REC Trichy
.Sri.Venkateswara
.PSG.Tech
National level
"
National level
National level
National level
National level
National level
National level
National level
National level
2002
2002
2002
2002
2000
2001
2001
2001
2001
First
Second
First
Second
First
First
Second
.....
Finalist
Second
second









































PROGRAMMING CONTEST:
College
Level
Year
Prize Won
St.Joseph.En
---------------
VRS Engg
National.Inst "
REC
Rajalaxmi.Engg
REC Nagpur
Sri Venkateswara
National Level
--------------
National level
National level
national level
National level
National level
2000
2001
2002
2002
2001
2001
2000
2000
Finalist
Second
First
Second
Second
Second
Finalist


















































SOFTWARE PRESENTATION:
College Level Year Prize Won
REC Nagpur
Annamalai Uni
CIT Coimbatore
Hindustan Engg
REC Trichy
KSR Engg
National Level

National level
National level
National level
National level
2000

2000
2001
2001
2001
Finalist

Finalist
Second
Second
Finalist







PAPER PRESENTATION:
College Level Year Prize Won
VPS Engg
National Ins
National level
National level
2001
2002
Second
....












TECH CROSSWORD:
College Level Year Prize Won
Bharath Inst of Tech

2001 First






Dumb Cha.......:[i am unable to read what it is ]
College Level Year Prize Won
KSR.Engg
SRM Easwari Eng
Agni@Anna uni
National level
national level
Intra uni
2001
2001
2000
First
Second
First




தலை சுற்றுகிறதா ? இதெல்லாம் கல்லூரியில் மட்டுமே வாங்கியவை. பள்ளியில் , 'டெல்' கம்பெனியில் வாங்கியதெல்லாம் எழுத ஆரம்பித்தால் ????????????????..இப்போது புரிகிறதா ? நான் எப்படி பட்ட மகனை இழந்திருக்கிறேன் என்று ?
sooooo proud to have had such a son
and sooooooooooosad to lose him too.
karthik amma.. Yes, i feel proud to call myself as Karthik amma and not as kala....or as kalavathy
அன்புடன்
கலாகார்த்திக் 

2018/08/12

சமாதியில் பால்

சமாதியில் பால் :
அந்த காலத்தில் அடக்கம் செய்யப் பட்ட முறையே வேறு.அப்போது சந்தன பேழையோ ,கண்ணாடி  பெட்டியோ கிடையாது.
மண்ணில் அடக்கம் செய்தார்கள்.
உடல் பதப்பட உப்பு ,மலர்கள் போன்ற பொருட்கள் பயன் படுத்தப் பட்டன.
பால் ஊற்றுதலுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். என்ன என்று தெரியவில்லை.
ஆனால் இன்றைய முறைக்கு இது தேவை இல்லாத ஒன்று.
அப்படியே ஆனாலும் குடும்பத்தினர் மட்டுமே செய்ய வேண்டும்.

2018/08/08

ஆச்சரியம் ஆச்சரியம்

கலைஞரின் கண் :
...கிட்டத்  தட்ட  60 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் கண் பார்வை பிரச்சினை ஏற்பட்டது அவருக்கு.
...இப்போது அவர் ராஜாஜி அரங்கில் படுக்க வைக்கப் பட்டிருக்கிறார்....ஏதோ ஒரு வெளிச்சம் அவர் கண்ணில் பட்டு அந்த கண் பளீரிடுகிறது....
இந்த பார்வை+கண் பிரச்சினையின் காரணமோ என்னவோ அவர் கண்ணொளி வழங்கும் திட்டம் செயல் படுத்தினார்.
அதனால் இறந்த பிறகும் அவர் கண் ஒளிர்கிறதோ !!!!!!!!!!!!!!!
ஆச்சரியம்.

2018/08/02

நம்பிக்கை போய்விட்டது

நம்பிக்கை போய்விட்டது
போயே விட்டது.
கோவில்???????????????
அண்ணா பல்கலை ???????????
எந்த கோவிலுக்கு போனாலும் அங்கு உண்மையான சிலை இல்லை என்ற வேதனை .கோவில் மேல் நம்பிக்கை போயே  போய் விட்டது.
ஒரு கோவிலில் மரகத சிலை இருந்தது.
அடுத்த முறை போகும்போது இல்லை.
வெறுத்து விட்டது.
அதுதான் அப்படி என்றால்....
அண்ணா பல்கலை....எத்தனையோ காலமாக நடக்கிறது .நன்கு படித்த மாணவன் குறைவான மதிப்பெண் வாங்குவதும் ,சுமாரான மாணவன் மிக சிறந்த மதிப்பெண் வாங்குவதும் நடப்பது (ஆதாரம் தர முடியாது என்பதால் )உண்மை இல்லை என்றாகி விடாது.
நேரடியாக பாதிக்கப் பட்டவர்களை நான் அறிவேன்.
ஆனால் அவர்களும் சாட்சி சொல்ல மாட்டார்கள்.
.....
அடுத்த இரு முக்கிய .....மேல் நம்பிக்கை போய் விட்டது.ஆனால் அவர்கள் யார் என்று சொல்ல முடியாது.பயம்.பயம்.
ஏதோ ..இப்படியும் வாழ வேண்டும் என்ற விதி இருக்கும் போது என்ன செய்ய முடியும்.
கார்த்திக் அம்மா

2018/08/01

அம்மா மகன்

01 August 2005
நாட்கள் ஓடுகின்றன. ஆனால் மனம் கார்த்தியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 01 August 2005  அன்று பள்ளியில் பணியில் சேர வேண்டிய நாள் என்பதால் நானும் கார்த்தியும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திறங்கினோம்.அவன் நண்பர் வீட்டிற்கு சென்று பைக் எடுத்துக் கொண்டு என்னை பள்ளியில் விட்டு விட்டு மகாலிபுரம் சென்றான்.

இது போல் சரித்திர ,வரலாறு சம்பந்தப்பட்ட இடங்கள் என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் மிகவும் ஆசை. வெறி என்று கூட சொல்லலாம்.

இரவு ரயிலில் புறப்பட்டு மீண்டும் பெங்களூர் சென்றோம்.
இன்னும் 25 நாட்கள்தான் அவனுடன் இருப்பேன் என்று தெரியாமல் சந்தோஷமாக ....போனேன்.
26ம் தேதி எல்லாம் முடிந்து போனது.

எவ்வளவோ ஆசைகளும் திட்டங்களும் மனதில் வைத்திருந்த அந்த மகன் இல்லாமல் நான் தவிக்கும் தவிப்பு..... கொடுமை. கொடுமை.
இன்று 01.08.2018.
எத்தனை வருடங்கள் ஓடினாலும் மனம் இன்னும் 2005 லியே இருக்கிறது .
மனம் ஓ என கத்திக் கொண்டே இருக்கிறது.
கதறிக் கொண்டே இருக்கிறது.
மகன் மீண்டும் வந்து விட மாட்டானா ?ஒவ்வொரு முறை காலிங் பெல் அடிக்கும் போதும் அது கார்த்தியாக இருக்கும் என்று மனம் பரிதவிக்கிறது.
என்ன சொல்ல?
தாள முடியா வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2018/07/22

மேட்டூர் அணை 16 கண் மதகு

மேட்டூர்  அணை  16 கண் மதகு
பொங்கி வரும் காவேரி .16 கண் மதகு திறக்கப் பட்டால் இப்படித்தான்  சீறி வரும் தண்ணீர் .
அது ஒரு இனிய காலம்.
கார்த்திக் அம்மா

2018/07/20

மேட்டூர் அணை

மேட்டூர் அணை +
தேங்காய் பால் :
பழசை மறந்து விடுங்கள் என்று எனக்கு அறிவுரை சொல்கிறார்கள்..
நானும் முயற்சி செய்கிறேன்.
ஆனால்
எல்லா சேனல்களிலும் மேட்டூர் அணைதான் .
என் கணவர் மேட்டூர் அணையின் AEE யாக இருந்தார்.
நேற்று கோலாகலமாக நடந்த விழாவை பார்த்த பொழுது மனம் மிகவும் சோகப்பட்டது.
அவர் இருந்திருந்தால் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்திருப்பார்.நேற்று பார்த்த அணையின் மேல் சாலையில் சில அதிகாரிகளின் கார்கள் மட்டுமே செல்லும்.அதில் இவருடையதும் ஒன்று.கவர்னர் வண்டி வந்தால் கூட பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் படும். ஆனால் இந்த காரின் ஹாரன் சத்தம் கேட்கும் முன்னே கேட் திறக்கப் படும்.
என் கணவர் சிவில் பொறியாளர் என்பதால் அணையின் பராமரிப்பு இவருக்கு.
85 கிலோ எடை அவருடையது.6 அடி உயரம்.
ஒரு முறை அணையில் விரிசல் வர ஆரம்பித்தது.
" " நீங்கள் அணையின் மேல் தொம் தொம்  என்று நடக்காதீர்கள் .அதனால்தான் அணை விரிசல் விடுகிறது "  "
என்று அவரை கலாய்த்த இன்பமான காலங்கள் அவை.
.......   .......
தேங்காய் பால் :
ஆடி மாதம் சேலம் மாவட்டம் களை கட்டி விடும்.எங்கு பார்த்தாலும் மாரியம்மன் பண்டிகைதான்.
தேங்காய் சுடும் நோம்பி ( நோன்பு என்பதுதான் நோம்பி என்றாகி விட்டது.)
என் இனிய சேலத்து மக்களே.!!!!!!!!!!!!!!!!
அந்த slang ...சொல்ல முடியாது.ச் ச் சும்மா கலக்கியடிக்கும்
என்னுடையது சுத்த தமிழ். அந்த கிராமத்து மக்களுக்கு என் தமிழ் புரியாது.
எனக்கு அவர்கள் பேசுவது புரியாது.(நானும் கிராமம்தான் .ஆனால் சுத்த தமிழ் பேசுவேன் )
ஒரு நாள் 8 வழி சாலை குறித்து தந்தி டி .வி யில் ஒரு சேலத்துக்காரர் பேசினார்.
பாவம் அசோகா .
தன் அழகிய கண்களை விரித்து விரித்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள படாத பாடு பட்டார் .
என் இனிய சேலத்து மக்களே.!!!!!!!!!!!!!!!!
தேங்காய் பால் விஷயத்திற்கு வருவோம்.ஹரிகேச நல்லூர் சொல்லிக் கொண்டிருந்தார்.இந்த ஆடி மாதம் புது புனல் நோய்களையும் கொண்டு வரும் அதற்கு நோய் எதிர்ப்பு கொடுக்க வல்லது தேங்காய் பால் என்று.
தேங்காயை உரசி மொழு மொழு என்று செய்து ஒரு கண்ணை துளையிட்டு பாதி தண்ணீரை எடுத்து விட்டு எள் +வெல்லம்+அரிசி+ ஏலக்காய் எல்லாம் அந்த கண் வழியாக தேங்காய்க்குள் போட்டு புரசை குச்சியால் கண்ணை மூடி நெருப்பில் சுட்டு ,பின் அதை உடைத்து சாப்பிட்டால் ...பெரிய இனிப்பு பலகாரம் அது.
ஆனால் பெரிய அறிவியல் சார்ந்த விஷயம்.உடலுக்கு வலிமையையும்,நோய் எதிர்ப்பு சக்தியும் தரும்.அதே போல் அம்மனுக்கு மஞ்சள் +வேப்பிலை கொணட தண்ணீர் ஊற்றுகிறோம் என்று சொல்லி ஊர் முழுக்க அந்த தண்ணீரை எல்லோர் மேலும் ஊற்றுவாரக்ள்.ஒரு ஹோலி பண்டிகைதான்.ஆனால் அவ்வளவும்  நோயிலிருந்து காக்க.
அந்த பழைய நினைவுகள்தான் என் ஊட்ட சத்து உணவு
கார்த்திக் அம்மா

2018/07/18

ராகு +கேது

ராகு +கேது +ஜாதகம்.
ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை என்பவர் சிலர்.
ஆனால் ஜாதக பைத்தியமாக இருப்பவர் பலர்.
ஜோதிடம் மிகப் பெரிய அறிவியல்.
மிக மிக பெரிய அறிவியல்.
ITS A WONDERFUL SCIENCE .
கோள்களின் சதிராட்டம்.
சிறிது பொறுமை வேண்டும்.இதை படிக்கவும்..புரிந்து கொள்ளவும்.
360 degree என்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்த 360 degree யைத்தான் 30 முப்பது டிகிரியாக பிரித்து 12 மாதங்கள் என்கிறார்கள்.
அந்த 12 தான் ஜாதக கட்டங்கள்.
முதல் கட்டம் மேஷம் .அங்குதான் சூரியன் உச்சம் பெறுகிறார்.
அதுதான் சித்திரை .ஆக வருட பிறப்பு சித்திரை ஒன்றுதான்.
உச்சம் என்றால் முழு பலத்துடன் இருப்பது.
வெய்யில் காலம்.summer .
சூரியன் 7 குதிரை பூட்டிய தேரில் வருகிறார் என்பார்கள்.
அந்த 7 தான் 7 வர்ணங்கள்.
7 colours .
vibgyor
அத்துடன்
அல்ட்ரா வயலட் (ultra violet )புற  ஊதா 
infra red அக சிவப்பு
so nine planets = nine colours .
ஒவ்வொரு கோளுக்கும் ஒரு வண்ணம் .ஒரு தானியம்.ஒரு ரத்தினம்.
நவ தானியம்.
நவ ரத்தினம்.
இந்த 9 வண்ணங்களை தாண்டி NASA வும் எதையும் கண்டு பிடிக்கவில்லை.
நம் சித்தர்கள் எந்த டெலஸ்கோப் வைத்து பார்த்தார்கள்?
எப்படி ஆராய்ச்சி செய்தார்கள் ?
பெரிய மலைப்பான விஷயம்.ஆனால் ஏதோ செய்திருக்கிறார்கள்.
அப்போது கணிக்கிறார்கள் .இன்று சூரிய கிரகணம்.
இன்று பிறை வட கோடு உயர சுபிட்ச மழை வருஷிக்கும் என்று நாட்காட்டியில் போட்டிருக்கும்.
கவனித்து பார்த்தால் ஒரு இரு துளி மழையாவது அன்று பெய்யும்.
ஆனால் அன்று சந்திர பிறையின் வடக்கு நீண்டு வர வேண்டும்.
அப்போது கணித்தது இப்போதும் நடக்கிறது.
நம்பாதவர்களுக்கு ஒரு உதாரணம்.
இப்போது ஜாதக கட்டத்தில் கோள் சார படி (கோச்சார ம்  என்று சொல்கிறோமே ) அந்த கோள் எந்த கட்டத்தை சார்ந்து இருக்கிறதோ அதுவே கோள் சாரம் .
இப்போது செவ்வாய் எனும் கோள் சனி (சனிஸ்வரர் அல்ல சனாச்சாரியார் )கிரகத்தின் வீடான மகரத்தில் உச்சம் (மிக அதிக வலிமையுடன் )உள்ளது.நீங்களே பாருங்கள். உலகம் முழுவதும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி எங்கு பார்த்தாலும் தண்ணீர் .இதுதான் கோள்களின் சதிராட்டம்.
இது போல் வக்கிரம் எனும் சொல்.
ஒரு 3 பஸ்கள் ஒரு சாலையில் போய் கொண்டிருக்கின்றன.ஒரு பஸ் அடுத்த பஸ்ஸை ஓவர்டேக் செய்யும் போது இந்த பஸ் பின்னால் செல்கிறது.அதுவே வக்கிரம் .அதே பஸ் வேகம் எடுத்து ஒரு பஸ்ஸை முந்தி சென்றால் அதிசாரம்.
இதை எல்லாம் எப்படி கண்டு பிடித்தார்கள் நம் சித்தர்கள்?
ஆனால் அவர்கள் நமக்கு காட்டிய வழியை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம்.
அது போல்தான் செவ்வாய் தோஷம்.
பதிவு நீள்வதால் அது பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

2018/07/16

120 கோடி பணம்+100 கிலோ தங்கம்

அம்மாடியோவ்
போதுமா
என்னதான் செய்வார்கள்?
இவ்வளவு பணத்தை கண்ணால் பார்த்தால் மயக்கம் வந்து விடும்.
இவர்கள் ஒரு நிமிடம் யோசித்து பார்க்க வேண்டும்.
எம் .ஜி ஆர்
ஜெ அம்மையாருக்கு இல்லாத பணமா ????
எவ்வளவு பணம் இருந்து என்ன காப்பாற்றியது?
இன்னும் எத்தனை பேரை சொல்லலாம்.
ஆனாலும் ஏன் இந்த பேராசை?
ஒரு கிலோ தங்கம் என்றால் 124 பவுன் (சவரன் )
அப்படி என்றால்
100*124 =12400 பவுன் நகை.
ஒரு நாள் போட்ட நகையை  அடுத்த நாள் போட மாட்டார்களோ?
நியாயமாக சம்பாதித்தாலே கூட இவ்வளவு நகை தேவையில்லை.
அப்படியிருக்க இப்படி அநியாய வழியில் சம்பாதித்து  இப்படி அனுபவிக்க வேண்டுமா?
இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது அரசு.?
எனக்கு தினமும் ஒரு எஸ் .எம்.எஸ் + ஒரு மெய்ல் வருகிறது.
நான் கட்டிய துக்கிளியூண்டு வரிக்கு இவ்வளவு மிரட்டல்.
ஜூலை 31க்குள் படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன செய்கிறோம் பார் என்ற தொனியில் இருக்கிறது
இவர்களை என்ன செய்வார்கள்?
இது வரை ரெய்டு போனார்கள்.
அவர்களை என்ன செய்து விட்டார்கள்?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
நானும்தான்.
கார்த்திக் அம்மா

2018/07/14

என் தந்தை .கடைக்குட்டி சிங்கம்

என் தாத்தா 1880 ல் பிறந்திருக்க வேண்டும்.
ஒரு யூகம்தான்
அவரின் முதல் மனைவிக்கு இரு மகன்கள் பிறந்து இறந்து விடுகின்றனர்.என்ன காரணம் என்று தெரியவில்லை.தன்  கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தார்.
அவருக்கும் இரு பெண்பிள்ளைகள்.
அடுத்து தன் கணவருக்கு 3ம் திருமணம் !!!!!!!!!!!!!!செய்து வைத்தார் .
பாவம் ..
அந்த பாட்டிக்கும் இரு பெண் பிள்ளைகள்.
விட்டாரா என் பெரிய பாட்டி ? { பெரிய பிராட்டி என்பது  பெரிய பாட்டி என திரிந்து விட்டது என்பது என் யூகம் }
4ம் ...நான்காம் ...திருமணம் செய்து வைத்தார்.
அந்த பாட்டிக்கும் முதல் பிள்ளை பெண் பிள்ளை.
அடுத்து பிறந்த சிங்கம்தான் என் அப்பா .
கடைக்குட்டி சிங்கம் படம் பற்றி படித்தவுடன் [ படிப்பதுதான் .பார்ப்பது இல்லை] இந்த பழைய நினைவு வந்தது.என் அப்பாவிற்கும் 5 சகோதரிகள்.
5 அத்தைகளும் வாரிசுகளும் சம்பந்திகளும் என வீடு நிறைந்து இருக்கும்.அதை நினைத்தால் ...அந்த இனிமையான காலங்களை நினைத்தால் ஒரு ஏக்க பெருமூச்சுதான் வருகிறது.
கார்த்திக் அம்மா


2018/07/13

எமன் துரத்தினால்

எமன் துரத்தினால் தப்புவர் யாரோ ?????????
அது விதியோ
அல்லது யமனோ
காலமும் நேரமும் கெட்டால்
யமன் துரத்தினால் 
நாம் எவ்வளவு தூரம் ஓடினாலும்
மரணத்திலிருந்து தப்ப முடியாது.
கோவை மாணவி  லோகேஸ்வரி மாலையில் வீடு திரும்பி விடுவோம் என்று நினைத்துதானே காலையில் கல்லூரிக்கு புறப்பட்டிருப்பாள் .
விதி இரண்டாம் மாடிக்கு அழைத்து செல்கிறது.
எந்த பணம்
ஈடு செய்யும் இந்த இழப்பை.
நான் கதறிக் கொண்டிருக்கிறேனே  13 வருடங்களாய் .
நிற்காத கண்ணீருடன்.
இன்று போல் ஒரு வெள்ளி கிழமைதான் கார்த்தி காலை 8.50க்கு வீட்டை விட்டு கிளம்பினான்.
மதியம் என்ன சாப்பாடு செய்கிறீர்கள் என்று கேட்டு சென்றான்.
அவனுக்கு பிடித்த உணவு என்ன
எதை சமைக்கலாம் என்ற யோசனை முடிவாகும் முன்னே அவன் முடிந்து விட்டான்.
இழந்தவருக்கு மட்டுமே இழப்பின் வலி புரியும்.
உலகமே கூடி நின்று ஆறுதல் சொன்னாலும் தாயின் அழுகை அவள் கடைசி மூச்சு வரை.
கார்த்திக் அம்மா
என் அன்பு மகன் கார்த்திக் .