About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/01/31

என் தந்தையும் அப்படித்தான்:
//   இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பிற்கும் அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தலைமையாசிரியர் வீ.மனோகரன் தனது பள்ளியை சேர்ந்த  ஆசிரியர்கள் சரவணக்குமார், நீலகண்டன், செல்லத்துரை, செல்வகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் ஆகியோருடன், இரவு நேரங்களில் 10, 11, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் வீடுகளுக்கு சென்று,  இரவு நேரத்தில் படிக்கிறார்களா என கண்காணிப்பதுடன் அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுறை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். //   //
இந்த செய்தியை படித்தவுடன் என் தந்தை நினைவுதான் வந்தது.
அப்போது வறுமையில் இருந்த மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும்.
இலவச ஹாஸ்டல்.
என் தந்தை இரவில் இரு முறையாவது திடீர் என்று சென்று கண்காணிப்பார்.
அப்போது அந்த பள்ளி மிகவும் பிரபலம்.
அப்போதெல்லாம் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தனர் ஆசிரியர்கள்.
   இப்போது இப்படி ஆசிரியர்களை பார்ப்பது அரிதாகிறது.
வாழ்த்துக்கள் 
கார்த்திக் அம்மா

2018/01/14

ஆண்டாள் :
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.
நோயுடன் போராடும் மக்கள்.
வறுமையின் பிடியில் பலர்.
வேலையில்லா பிரச்சினை.
தண்ணீர் இல்லை.
விவசாயம் இல்லை. விளைச்சல் இல்லை.
எத்தனை கஷ்டங்கள் .
இதையெல்லாம் விட்டு விட்டு
உண்மையில் இருந்தாரா  இல்லையா என்பது கூட உறுதி படுத்த இயலாத ஒருவருக்கு என்ன ஆர்ப்பாட்டம்.
இந்த விஷயத்தில் காட்டும் தீவிரத்தில் 50% மக்களின் துயர் தீர்க்க செயல்பட முன்வரலாம்.
கார்த்திக் அம்மா

2018/01/09

நீயா .நானா :
ஜாதி :
இந்த வார    நீயா   நானாவில் குழந்தைகளை  மைய படுத்தி   நிகழ்ச்சி இருந்தது.
ஒரு குழந்தை ஜாதி என்றால் என்ன என்று கேட்டது.
a very simple answer .
who is a teacher?
a doctor?
a carpenter?
எந்த தொழிலை நாம் செய்கிறோம் என்பதே ஜாதி ஆகியது.இப்போது போல் அப்போது பள்ளி , கல்லூரிகள் கிடையாது.
அப்பா தனக்கு தெரிந்த தொழிலை மகனுக்கு சொல்லி கொடுத்தார்.அப்படியே அது குல  தொழில் ஆகியது.
அவர்கள் செய்யும் வேலையை வைத்து அந்த பெயரிலேயே சொல்ல ஆரம்பித்தனர்.  
தச்சு வேலை செய்தவர் ஆசாரி ஆனார்.
விவசாயம் (வேளாண் )செய்தவர்  வேளாளர் ஆனார்.
வாணிபம் செய்தவர் வாணிய  செட்டியார் ஆனார்.
எங்கள் ஊரில் 'மரமேறி ' என்ற ஜாதி உண்டு.
தென்னை மரம் , பனை மரம் ஏறி காய் பறிப்பது அவர்கள் வேலை.
மரம் ஏறுவதால் மரமேறி .
பறை எனும் கருவி அடித்து ஊருக்கு செய்தி சொன்னவர் பறையர்.
அவ்வளவுதான்.
D.N.A or Blood group எல்லாம் இல்லை.
நாட்கள் செல்ல செல்ல பிற வேண்டாத கருத்துக்கள் உள்ளே வந்தது.
இப்போது நீ எந்த union ? நான் எந்த union ?
இங்கு ஒரு ஜாதி உருவாகிறது. (அது ஜாதி என்று தெரியாமல் )
people flock together and form a group based on job or ideals .
நீ A.D.M.K வா ?
நான் D.M.K.
இப்போது கட்சியாக பிரிகிறார்கள்.
A.D.M.K குடும்பம் P.M.K சம்பந்தம் செய்கிறார்கள்.
அது பெரிய விஷயமாக பேசப் படுகிறது.
இங்கு ஜாதி பின்னுக்கு போய் கட்சி முன்னிலை படுகிறது.
நான் டீச்சர் ஜாதி.
ஒரு கூட்டத்தில் இன்னொரு டீச்சரை பார்த்தவுடன் எனக்கொரு நட்பு உணர்வு ஏற்படுகிறது.
ஒரு மருத்துவர் (doctor ) இன்னொரு டாக்டருடன் நட்பு  ஆகிறார் (மருத்துவர் என்றும் ஒரு ஜாதி உண்டு.)
அப்படித்தான் ஜாதி.
இதை அந்த சிறுமிக்கு விளக்க தெரியாமல் பெரியவர்கள்  தடுமாற அந்த குழந்தை மேதாவித் தனமாக முகத்தை வைத்துக் கொண்டது பார்க்க பரிதாபமாக இருந்தது.
வாஸ்து என்று அடுத்த வார்த்தை கேட்கப் பட்டது.
பதில் இல்லை.
அது பற்றி அடுத்த பதிவில்.
அன்புடன்
கார்த்திக் அம்மா


2018/01/06

news channels and breaking news and thundering music :
இப்போதெல்லாம் செய்தி சேனல்களில் செய்திகளை கேட்பதில்லை.
கீழே ஓடும் செய்திகளை படிக்கிறேன் .
ஏன் ?????????
ஒரு 5 நிமிடம் செய்தி வாசிக்கிறார்கள்.
அப்புறம் ஒரு 10 நிமிடம் விளம்பரங்கள்.
காதை  செவிடாக்கும் இரைச்சலான இசை???????
(இல்லை ...ஓசை )
அப்பறம் செய்தி வரும் என்றால்
ஒரு இடி மியூசிக் .என்னவென்றால் breaking news .என்னடாப்பா பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் போர் வந்து விட்டதா என்று அதிர்ந்து பார்த்தால்
தலைவர் குளித்து விட்டார்
தலைவர் காலை உணவு உண்டார்.
தலைவர் வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்.
சரி இது ஒரு 5 நிமிடம் இடித்தாயிற்று.
இனி செய்தி வரும் ???????
ஒங்க ஆசைக்கு என்று தமிழை கொலை செய்து
என் ரத்த கொதிப்பை ஏற்றி
வேண்டாண்டா சாமி.
நான் செய்தியே பார்க்கலை .
ஆளை விடுங்கடா சாமி என்று கதற விட்டு ......
டி .வி யை off  செய்து விட்டு மோட்டு வலையை பார்த்துக் கொண்டு கார்த்தி நினைவுகளில் மூழ்கி விடுகிறேன்.
கார்த்திக் அம்மா
பி .கு
ஒட்டு வீடுகளில்தான் மோட்டு வலை இருக்கும்.
அதனால் சுவரை வெறித்து பார்த்துக் கொண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

2018/01/04

வைரஸ் காய்ச்சல் :
10 நாட்கள்.
என்ன வலி.
அப்பா .பிரித்து மேய்ந்து விட்டது viral fever .தலையே தூக்க முடியவில்லை.உடல் வலிக்கு மாத்திரை சாப்பிட்டால் தலை சுற்றல்.
தலை சுற்றலுக்கு மாத்திரை சாப்பிட்டால்
வயிற்றுக்குள் நெருப்பு பந்தை போட்டது போல் வயிறு எரிச்சல்.
அதற்கு ஒரு மாத்திரை சாப்பிட்டால்
loose motion .
இன்னும் சரியாகவில்லை.
கார்த்தி வீட்டிற்கு முதல் தேதியானால் கிளம்பி விடும் நான் இன்னும் சென்னையில்.
விலா  எலும்பு உடைந்த போது கூட என்னுடைய பெங்களூரு கிரி வலத்தை நிறுத்தாத நான் இப்போது ,இன்றுதான் 04.01 mail பார்க்கிறேன்.
கஷ்டப் படவே பிறந்த ஜென்மம் நான்.