About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/09/30

+கார்த்தி+சிலை+மணிமண்டபம்
இது பெங்களூருவில்  கார்த்தியின் வீடு.
அதில் கார்த்தியின் சிலை.
வருபவர்கள் யாரோ நிற்கிறார் என்றே நினைத்துக் கொள்வர்.
இப்போது ஒரு மணிமண்டபத்திற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடக்கிறதே.
என் பொருளாதார நிலைக்கு நான் 2.5 லட்சம் செலவில் சிலை செய்தேன்.
அந்த வீட்டின் மதிப்பு 1.5 கோடி.
அந்த வீட்டை வாடகைக்கு விட்டால் குறைந்தது 25000 அல்லது 35000 கிடைக்கும்.
என் பொருளாதார நிலைக்கு அது பெரிய வருமானம்தான்.
ஆனால் வீட்டை விற்கவும் இல்லை.
வாடகைக்கும் விடவில்லை.
அந்த வீட்டை ஒரு கோவிலாக ,புனிதமாக வைத்துள்ளேன்.
கார்த்திக்கிற்கு விபத்து நடந்த அன்று வீடு எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது.
அவனுடைய bike ம்
சிலையும்
ஊஞ்சலும் மட்டும்தான் சேர்ந்துள்ளது.
(ஊஞ்சல் கார்த்தி , செந்தில் சிறுவர்களாக இருக்கும் போது வாங்கியது.)
மாதம் ஒரு முறை சென்னையில் இருந்து பெங்களூரு சென்று வருகிறேன்.
அங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும்.அதை நான் எவ்வளவு போற்றுகிறேன் என்று.
......    ......  ......
என் கார்த்தி தன்  23 வயதில் எத்தனை சாதனைகள்.
U .S ல் மிகப் பெரிய சம்பளத்தில் 2002 ம் வருடம் வேலை கிடைத்தும் இந்தியாவிற்குதான் உழைப்பேன் என்றவன்.
அவனுடைய resume  படித்து பாருங்கள்.
அவன் நாட்டிற்கு செய்த அளவு கூட ஒரு நடிகர் செய்யவில்லை.
அவரை பிடிக்கும் என்றால் என்னை  போல் சொந்த செலவில் செய்யுங்கள்.
அவருக்கு நீங்களே ஒரு மண்டபம் கட்டுங்கள்.
ஒரு 10000 பேரை அழைத்து திறப்பு விழா செய்யுங்கள்.
அதை விட்டு
அரசு செலவில் , அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று நிர்பந்திக்க என்ன உரிமை இருக்கிறது???
M .G .R  விழா பற்றியும் என் கேள்வி அதுதான்.
என் வரிப் பணத்தை என் அனுமதியில்லாமல் உங்கள் விருப்பத்திற்கு செலவு செய்ய உங்களுக்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது?கட்சி செலவில் செய்யுங்கள்.
என்னை முன்மாதிரியாக கொள்ளலாமே.கார்த்தியின் தம்பி செந்திலும் அந்த வீட்டை வாடகைக்கு கூட வீட கூடாது என்று உறுதியாக சொல்லி விட்டான்.அவனுக்கும் என் நன்றி.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2017/09/28

20000 கோடி ....இவர்களாவது ஏதோதோ தொழில் செய்தார்கள்.
ஆனால் எங்க ஊர்க்காரர் 40000 கோடி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
அடுத்த சந்ததிக்கு ஏதாவது மிச்சம்  மீதி இருக்குமா ???????????
......    ......   ......
ஒரு நடிகர் கலாசாரத்தை காப்பாற்றவே நடித்தார் என்று கூவுகிறார்கள்.
நான் விவரம் தெரிந்து சினிமா பார்த்த போது எப்போதும் சிகரெட்டும் மது கிண்ணமும் வைத்து கொண்டுதான் பார்த்திருக்கிறேன்.
அதோடு காதல் காட்ச்சிகளில் காம ரசம் சொட்டும்.
என்ன கலாசாரத்தை காப்பாற்றினார்.
.......   ......
எதை எழுதவும் பயமாக இருக்கிறது.
எதோ ஒல்லி சட்டம் குண்டு சட்டம் இருக்கிறதாமே .எதுக்கு வம்பு.
கார்த்தியை பற்றியே எழுதுகிறேனே .இந்த கிழம் புலம்பும் என்று சலித்து கொள்ளாமல் படியுங்களேன்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

2017/09/16

'' ''இன்னாம்மே பொறம்போக்கு 
யார்ந  நானா பொறம்போக்கு 
நீதா மொள்ளமாறி  முடுச்சவிக்கி 
இன்னொரு தபா பேசுன மாமியார் ஊட்டுக்குத்தான் போவ  கண்டுக்கினியா 
ஆங் 
நான் மாமியார் ஊட்டுக்கு போனா நீ மச்சான் ஊட்டுக்கு போவியா 
நான் இன்னாத்துக்கு போவேன் 
நீ ரெண்டு கொல பண்ணல 
அப்புடி போடு அருவாளை 
நீ மணல் திருடல 
உன் மச்சான் கொள்ள அடிக்கல 
உன் சம்பந்தி ஊழல் பண்ணல 
நீதாண்டா சாவடிச 
நீதாண்டா 
கம்மனாட்டி 
இன்னாடா பேச சொல்லவே மல பேயுது '' ''
ஹி ,ஹி 
வேற ஒண்ணுமில்லிங்கோ 
டி .வி பாத்துகிட்டே செத்த கண் அசந்துட்டனுங்கோ 
கண்ணா பின்னான்னு உளறி இருக்கணுங்க  ஊ ட்டுல இருக்கறவங்க பயந்து போய் மூஞ்சில தண்ணி அடிசாங்களா 
மலன்னு நெனச்சு முழுச்சுகிட்டனுங்க .
OOOO GGGOODD  ஓ கடவுளே
ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்வதும்
மட்ட மொழியில் பேசுவதும்
தாங்க முடியவில்லை.
கார்த்திக் அம்மா

2017/09/15

காலத்தின் கோலம்:
கொடுமைடா சாமி.
ஹெலிகாப்டர் புறப்பட்ட நேரத்தில் குனிய ஆரம்பித்தவர்கள் ,நிமிர மறந்து குனிந்தே இருந்தவர்கள் இன்று பேசும் பேச்சு .....
மாண்புமிகு, மேதகு,உயர்திரு ,நாட்டை காக்க வந்த சிங்கம் என்று இத்தனை அடைமொழிகளுடன் இன்றைய முதல்வரை சொல்கிறீர்கள்
சொல்லிக் கொள்ளுங்கள்.
ஆனால் ,
ஒரு பெண்மணியின் எதிரில் மூச்சு விட  கூட பயந்த நீங்கள் இன்று
'' செல்வி ஜெயலலிதா '' என்று கூட சொல்லாமல்
ஜெயலலிதா என்று சொல்லிப் பேசுவது எத்தனை கொடுமை.
அதிலும் ஒருவர் சொல்கிறார்.;;"அந்த பொம்பிளை""  என்று.
அந்த '' பொம்பிளையால்தான் '' '' நீங்கள் அனைவரும் எம்.எல்.ஏ ஆனீர்கள்  என்பதை மறக்க வேண்டாம் .
கிடைத்த வோட்டு அத்தனையும் ஜெ அவர்களுக்கு கிடைத்த வோட்டு.
பதவிக்காகவும் பணத்திற்காகவும் இப்படி மனசாட்சியை குழி தோண்டி புதைக்காதீர்கள்.

2017/09/10

எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
'' ''இது எப்போதும் சுய புராணம் பாடும்'' '' என்ற சலிப்பு வருமே என்று நினைத்து இந்த பதிவை தவிர்த்தேன்.
ஆனால் வந்த இரண்டு செய்திகள் என்னை எழுத வைக்கிறது.
M .B .B .S
நானும் டாக்டர் கனவில்தான் இருந்தேன்.எப்போதும் நான்தான் first rank .என் ஆசிரியைகள் எல்லோரும் '' கலா  டாக்டர் '' என்றே சொல்லிக் கொண்டிருப்பர்.
நான் படித்தது ஒரு கிராமம். தமிழ் மீடியம் .P .U படிப்பில் நல்ல மதிப்பெண்கள்.(திடீரென ஊர் மாற்றம் .விடுதி வாழ்க்கை.ஆங்கில வழி.என அனைத்து கடல்களையும் கடந்து ) distinction மதிப்பெண் எடுத்து தேர்வு பெற்றேன் .
ஆனால் அப்போது எந்த நுழைவு தேர்வும் கிடையாது.
நேர்முகம் மட்டும் .
25 மதிப்பெண்கள்.
100+25.
நான் 100 மார்க் என்றால் நேர்முக மதிப்பெண் சேர்ந்து தரம் நிர்ணயிக்கப் பட்டது.
என் தோழி 90 மார்க்.
நான் 95.
ஆனால் அவளுக்கு மருத்துவ சீட் கிடைத்தது.
நேர்முக மார்க்கை அவளுக்கு அதிகம் போட்டு அவளுடைய cutoff அதிகம்.
எனக்கு நேர்முக தேர்வில் கேட்கப் பட்ட கேள்வி
'' உனக்கு முறுக்கு பிடிக்குமா ...வடை பிடிக்குமா ?''
சிறுமி திகைத்தாள்.
பதில் சொல்ல பயந்தாள்.
நேற்று தமிழிசை ,கிருஷ்ணசாமி மகள்
எவ்வாறு M .B .B .S சீட் பெற்றனர் என்பதை டி .வி யில் சொன்னார்கள்.
மனம் வேதனை பட்டது.
இந்த 58 வயதிலும் நான் மெடிக்கல் எக்ஸாம் எழுத செல்வது போலவும் விடை தெரியாமல் அழுவது போலவும் கனவு வரும்.
நான் தற்கொலை செய்யலாமா என்று யோசித்தேன்.
அப்போது இருந்த முதல் அமைச்சர்தான் காரணம்.
ஆனால்
பி.எஸ் .சி கெமிஸ்டரியிலிருந்து  இலக்கியத்திற்கு மாறி படித்து ஒரு நல்ல ஆங்கில ஆசிரியை என்று பேரெடுத்து பல மாணவர்களை டாக்டர்களாகவும் எஞ்சினியர்களாகவும் வக்கீல்களாகவும் உருவாக்கினேன்.
அனிதா
YOU HAVE DONE A GREAT MISTAKE.(by going to grave.).
எத்தனை துறைகளில் சாதித்திருக்கலாம்.
யாரும் தற்கொலை முடிவை தேட வேண்டாம்.

2017/09/08

நீட் .:
எல்லோரும் பேசி பேசி முடித்து விட்டார்கள் .
என்னவோ தமிழ்நாட்டில் ஒரு மாணவருக்கு கூட மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்பது போல் கத்தி தீர்த்து விட்டார்கள்.
ஆனால் கீழே இருக்கும் பதிலை பதிலை பாருங்கள்


  ஆக யாருக்கோ அடி .பலத்த அடி .இதனால் எங்கோ எரிமலை வெடித்து யார் யாரோ பலியாகி போயினர்.
கார்த்திக் அம்மா