About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/12/31

Amused or Amazed ?

Believe or Bemoan ?
Regard or Regret ?
To Laugh or To Cry ?
Bhutto's Kingdom

Reading the news, that her 19 year old son will lead PPP , i was confused ,how to react ?

It is as if a 'prince ' inheriting the throne, the kingdom from his parent. Whose property is PPP ? It's heirdom goes by a will ? Bhutto leaving a will , stating that her 19 year old son will be the chief of the party.He is studying first year degree course and till he completes , her husband will rule the party. And this pantomime goes by the name Democracy.
oh, quite logical ?
but my 100 billion dollar question is 'Why shouldn't STALIN be made chief minister ? Till date i too had some objections about the leadership, passing the baton from son to father. But, Stalin , having worked in the party for more than 30 years and having under gone so many tortures and jaildom for party, can really claim the honour. His age too is suitable to become the C.M.
My surprise regarding the will is that the whole world accepted it without least criticism.
Can anyone assure that this '''' 19 '''' year knows the number of States [ if not anything else about it's history and other things ] in '' his '' country ?
RIDICULOUS ?
Sweetest karthikeyan



2007/12/22

Feminism

நீண்ட நாட்களாக இந்த விஷயத்தை பற்றி ஒரு பதிவு எழுதலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் ஓசை செல்லாவின் பதிவைப் படித்தவுடன் இதைப் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற வேகம் வந்தது.
லீனா மணிமேகலை தொடர்பான விவகாரம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதற்கு வெகு நாட்களுக்கு முன்பே இந்த உடை விஷயம் பற்றி நான் பேசியிருக்கிறேன். 1990 என்று நினைக்கிறேன். புதுமைவாதியென தன்னை பிரகடனப் படுத்திக் கொண்ட ஒரு பெரும் பேச்சாளர் பேசினார், ''பெண்கள் நீண்ட கூந்தல் வளர்க்கக் கூடாது. ஆண்களைப் போல் 'கிராப் ' வைத்துக் கொள்ள [ கொல்ல ] வேண்டும். புடவை கட்டக் கூடாது. பேன்ட் அணிய வேண்டும், கண்ணுக்கு மையிடக் கூடாது '' என்றெல்லாம் பேசினார்.
நானும் பெண்ணியவாதிதான். ஆனால், பழமையான, புராதன பெண்ணியம். புராணங்களில் எல்லாம் பார்த்தால், பெண்ணுக்கு தன் மணமகனைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அரசவைக்கு அரசனுடன் சரி இருக்கையில் அமர்ந்து என்று [இது பற்றி தனி பதிவு போடலாம் ].
இப்போது லீனா பற்றி நான் சொல்ல வந்தது என்ன என்பதை சொல்லி விடுகிறேன். இந்த சல்வார், சுடிதார், ஜீன்ஸ், சட்டை இதெல்லாம் மட்டுமே ஒரு பெண்ணை உயரிய சிந்தனை உள்ளவளாகவோ, ஆணுக்கு இணையானவளாகவோ ஆக்கிவிடவே முடியாது.சேலையில் என்ன குறை? அது comfortable. ஆக இல்லை. convenient. ஆக இல்லை..these are their argument.


இத்தாலியில் இருந்து வந்து இன்று இந்தியாவையே ஆண்டு கொண்டிருக்கும் அந்த பெண்மணி எவ்வளவு அழகாக, நேர்த்தியாக புடவை அணிந்து வருகிறார்கள் ? இந்த உடை விஷயத்தாலாயே அவர் மீது எனக்கு மதிப்பு கூடிப் போனது.
ஒரு மாவட்ட கலெக்டர், ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து M.P ஆகி இருக்கும் என இருவர் அடிக்கடி சுடிதாரில் வருகின்றனர். [ ஆகா, உடை அணிவது அவரவர் விருப்பம் என்று அவசரப்பட்டு குரல் கொடுக்க வேண்டாம்..உங்கள் வகுப்பு ஆசிரியை நீச்சலுடையில் வகுப்பிற்கு வருவதை கற்பனை செய்து பாருங்கள்? ஒத்துக் கொள்ள முடியுமா ? ]எந்த உடை எந்த பதவிக்கு, எந்த இடத்தில் என்பதுதான் கேள்வி.அதே கலெக்டர் ஒரு சினிமாவிற்கு போகும் போது சுடிதாரில் போகட்டும்.யார் வேண்டாம் என்கிறார்கள்? ஆனால் ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போது அவரை பார்த்தால், மதிக்க வேண்டும் என்று தோன்றுபவர்களுக்கு கூட ஒரு பின்னடைவு ஏற்படும். அந்த பெண் [ அந்த கலெக்டர் ] பின்னுக்கு தள்ளப் பட்டு மற்றவர்கள் அவையில் முந்தித் தெரிகிறார்கள். இந்திரா காந்தியோ, சோனியா காந்தியோ சாதிக்கவில்லையா ?

அடுத்த வாதம், வண்டி ஓட்டுவதற்கு பேண்ட் , சுடிதார்தான் வசதியாக இருக்கிறது....எத்தனை பெண்கள் புடவை அணிந்து எவ்வளவு அழகாக வண்டி ஓட்டுகிறார்கள்.?
ஆண்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. 60 ஆனாலும், 80 ஆனாலும் ஆண்கள் ஆண்கள்தான். எப்பேர்ப் பட்ட நல்ல மனிதரும் [ ஆணும்] ஒரு வினாடி யேனும் தடுமாறுவதை நான் பார்த்துள்ளேன்..ஓசை செல்லாவின் பின்னூட்டத்தில் ஒருவர் எழுதியிருந்தார்..முழுக்க நிர்வாணமாக வந்து கணிணி முன் நின்றால் கூட மனம் சலனமடையாது, கவனிக்காதது போல் சென்று விடும் ஆண்களும் உள்ளனர். உண்மை. லட்சத்தில் ஒருவர். அதற்கு உண்மையிலேயே மிகப் பெரிய மன முதிர்ச்சி வேண்டும். [ என் கார்த்தியைப் போல். நூற்றுக்கு நூறு உண்மை. மிகைப் படுத்தல் அல்ல ]. இன்னொருவர் எழுதியிருந்தது போல், நம் பிரச்சினையே தனி அறைகள் இல்லா வீடு [ நன்றாக விரசமின்றி, இந்த விஷயத்தை பேசவும் எழுதவும் செய்கிறார்கள்.பாராட்ட வேண்டும். ] அதனால், இந்த அரைகுறை ஆடை, ஜன்னல் ரவிக்கை [எத்தனை பேர் என்று ஒரு கேள்வி..அய்யோ, எந்த காட்டில் இருக்கிறீர்கள் ] இவையெல்லாம் வேண்டாம். அறிவாலும் திறமையாலும் ஆணுக்கு இணையாவோம். யாரும் யாரையும் வெல்ல வேண்டாம். இது ஒன்றும் போர்க்களமல்ல. வாழ்க்கை. இணையாவோம். படைப்பின் பிரிவுகளில் இருக்கும் நியதியை ஏற்றுக் கொள்வோம்..பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் இருப்போம். உடலால் மட்டும். மற்றபடி அனைவரும் மனிதர்களேயென்ற சமத்துவம் மட்டும் நிலவட்டும
ha, such a long post.
How SMALL the CAKE is !!!!
Simplicity thy name is *********

2007/12/19

80 லட்சமும்**** 250 பவுன்களும்

அம்மாடியோவ்,
மலைப்பாக இருக்கிறது.. ஒரு வீட்டில், திருட்டு போய்விட்டது என்ற செய்தியை படித்தபோது வியப்புதான் முதலில்.....அப்புறம் சில கேள்விகள் மெதுவாக சன்னமான குரலில் என் காதில் கேட்டது போல் தோன்றியது.
கேள்வி [ 1 ]
ஒரு வீட்டில் 80 லட்ச ரூபாய்கள் எதற்கு? அவர்கள் சொல்கிறார்கள்..வீடு கட்ட வைத்திருந்த பணம்..அது வீடு கட்ட சேமித்த [ !!! ] பணமாகவே இருக்கட்டும். அதை வங்கியில் வைத்திருக்கலாமே. தேவைப் படுவோருக்கு காசோலையாகவே கொடுத்திருக்கலாமே?
கேள்வி [ 2 ]
வீடு கட்டுவதற்கு என்றாலும், ஒரே நாளில் 80 லட்ச ரூபாய் தேவைப் படுமா ?
கேள்வி [ 3 ]
250 பவுன் நகைகளை லாக்கரில் வைக்காமல் வீட்டில் வைத்திருந்ததேன்?
எனக்கு தோன்றிய இந்த கேள்விகள் நிச்சயம் இன்னும் சிலருக்கும், [அதாவது இந்த வருவாய்த் துறை ] தோன்றியிருக்கும்.
ஒரு பிரபலமான வசனம்தான் நினைவிற்கு வருகிறது [rich getting richer...poor getting poorer...]. எத்தனை பேரால், இந்த தொகையை வாழ் நாளில் கண்ணால் கூட பார்க்க முடியும்? யாரோ சொன்னார்கள்...இந்தியா ஏழை நாடென்று !!!!!!! உண்மையா?????????????
with luv and luv only,
karthikeyan
F ace it, you walk into a conversation and have no clue what everyone is talking about. The English language suddenly seems like something the Martians invented. It is time to whip out the urban dictionary and brush up on your lingo or you can just earjack (eavesdropping on a conversation you have no business hearing) a conversation between totally phat (another word for cool) youngsters.

When Aaron Peckham, 25, a software engineer at Google founded www.urban dictionary.com, little did he know that it would become such an awesmazing (awesome and amazing) hit! Users write the online dictionary's definitions and everyday visitors send in an average of 1,700 definitions.

Urban Dictionary is your saviour when you are suffering from mental constipation (an inability to articulate one's thoughts or ideas, resulting in significant psychological distress and frustration). There's a word not only for everything but also for every situation here. Remember that pair of jeans you've saved for years, wistfully hoping to lose enough weight to get back into? That would be an item of hope couture. Or the time when you were voluntold, which is the unpleasant situation of being forcibly, assigned something. Get ready to hear something like this from your boss soon "Since none of you are going to volunteer, consider yourselves all voluntold. See you tomor row morning at 6 am!" Now how about giving a wi-fi (a wireless hi-fi without actual physical contact) to your homie (a close friend) who is staying away from your crib (home). The homie in question is someone who facebooked (added you as a friend or sent you a message on Facebook) you last night.

Then what about situations where you are at a party having awkward nonversations (a very uncomfortable pointless conversation). The best option for you then is to compunicate (when you communicate through instant messenger on separate computers even when you are staying in the same room) with your roommate.

How many of you still maintain the old-fashioned anablogs which are defined as the platform you write in made of crushed tree pulp and binding. It's a paper journal that is being referred to if you are still not getting the drift! And you should seriously consider taking some grooming lessons, if people persistently call you a hobosexual because it means you are someone who cares little about your appearance and ends up looking like Peter Jackson! Now we've successfully invented a whole new language. A huge w00t to that, which is a new expression of joy and excitement. So, the next time someone calls you a hobosexual, you can just say meh (a verbal shrug of indifference) and point out that the bluetool (someone who always pretentiously wears a Bluetooth earpiece) walking next to you is more offensive. Besides, you have no pregret (regret for something you're about to do) about the multislacking (slacking at several tasks simultaneously) life you're embarking on anyway.

courtesy:DC


EXTREMELY



true. often i feel i am an illiterate. at times i don't understand the head or tail of what's been said. i am unable to comprehend.my English is quite obsolete, outdated and rather sounds childish. as is said here, i need a translation of modeng [ ha, my own coinage of modern english ], into my classic lit English. i feel at home with Mrs. Browning, and such others.am i the only person who is not able to cope up with the changing times, or is there anybody to say 'yes' with me?

2007/12/16

தேனாறு

அப்போது நாங்கள் மேட்டூரில் இருந்தோம். என் கணவர் மேட்டூர் அணையில் ADE ஆக பணியாற்றி வந்தார்.

அணையின் மின் நிலையத்தில் பெரிய பெரிய தேன் கூடுகள் இருக்கும். அமாவாசை அன்று தேன் அழிப்பது என்பது பழக்கம். அமாவாசை அன்றுதான் தேன் கூடு நிறைந்திருக்கும். தீப் பந்தம் காட்டி, தேனீக்களை விரட்டிவிட்டு, தேன்கூடுகளை எடுத்து தேன் எடுப்பர். அமாவாசை காலையில், உதவியாள் வந்து '' அம்மா, தேன் கொண்டு வர பாத்திரம் கொடுங்கள் '' என்று கேட்டு வாங்கிப் போவார். அடுத்த நாள் காலை சுமார் 5 லிட்டர் அளவு தேனை கொண்டு வந்து தருவார். [ நம்புங்கள்..காதில் பூச் சுற்றவில்லை ].
அந்த தேனை வடிகட்டி , பால் பொங்க வைப்பது போல் பொங்க வைத்து, நன்கு ஆறிய பிறகு மீண்டும் என்று 3 முறை பொங்க வைத்து ஆற வைத்து பாட்டில்களில் ஊற்றி வைக்க வேண்டும்.

அந்த அந்த சீசனுக்கு தகுந்தாற்போல் , தேனின் சுவை மாறுபடும். சில சமயங்களில் முழுக்க இனிப்பு சுவை. சில சமயம் புளிப்பு சுவை.. வேப்பம்பூ பருவத்தில் லேசான கசப்புடன் இருக்கும்.

அப்படி ஒரு முறை தேனை அடுப்பில் வைத்துவிட்டு வேறு வேலையில் கவனமாகிவிட, தேன் பொங்கி வழிந்து சமையல் மேடை முழுவதும் தேன் வழிந்தோட , '' ஆகா, பாலாறு , தேனாறு ஓடுவது '' என்ற வழக்கு மொழி உண்மைதான் என்று தோன்றியது.

பி.கு.
அவ்வளவு தேனையும் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறீர்களா ? உற்றார் உறவினர் என ஆளுக்கொரு பாட்டில் பரோபகாரம்தான். [பாட்டில் தேடுவதுதான் பெரிய பிரச்சினை.]
கார்த்தியின் விடுதிக்கு ஒரு முறை கொடுத்தனுப்ப , விடுதியே அமர்க்களப்பட்டது தனிக் கதை
gun culture

a lot has to be said.the boy's father NOW regrets for having taught his son 'shooting'.
I am always against this practice. I blame the parents who are over enthusiastic. things are to be learnt at the correct age and in the correct manner.
one of my friends ,[ very good gentleman in all other aspects ], while driving will have his two year old son on his lap, give the stearing in the child's hand ,and will say, 'turn right',,turn left''''.
i am damn sure the child never understood 'left and right '.
and the vehicle will sway, and i have seen so many cursing this gentleman.
On Friday, two persons were killed by a BENZ .obviously, the driver is a 16 year old frolicking teenager who cannot understand the value of life. [ the worst part of the story is that his father trying to save his son by making someone else the scapegoat. ].
Why do we develop this fancy? mainly because of two things.
1] easy money and lots and lots of money.
2]the middle class phobia or syndrom : the middle class parents want their kids to enjoy what they could not.They want their kids to be the 'all knowing and all skillful '. Ofcorse, everyone has the right to aspire. I don't deny. but, check first ,whether your son and daughter are capable of doing it. Do not give them false hopes. Do not burden them just to satiate your inner hunger and inferiority complex.
Can you say for sure that a two year child has any road sense and road judgement ? Can it calculate and decide the vehicle 's size and speed before it overtakes ?
There are so many fields where a child can do feats.It can learn 100 languages, learn so many other things which are not risky and especially NOT AT THE COST OF OTHERS' LIVES.
with luv and luv only,
karthikeyan

there are two interesting things in this photo.
1]azhakiri's daughter brought to the stage.
2]as i had already pointed out in my earlier post, kanimozhi's son is often been projected with his grandpa...sure to become the youngest ever chief minister.
the billion dollar question is, how many will be in the race for this post from the same family?
blessed be Tamil Nadu.

2007/12/14

கோவை---வனத்துறை

கோவையில் 3 யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்..விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறை அதிகாரிகள்.
இந்த செய்தியை படித்ததும் ''வீரப்பன்''''' நினைவுதான் வந்தது. இத்தனை பேர் சேர்ந்து 3 யானைகளை விரட்ட முடியவில்லையே.
யானைக் கூட்டத்தையே அடக்கி ஆண்ட வீரப்பனின் அருமையும் 'திறமையும் '' இப்போதுதான் தெரிகிறது.
வனத் துறை அதிகாரிகளுக்கு ஓர் ஆலோசனை.
யாராவது ஒருவரை வீரப்பன் போல் வேடம் போட்டு கூட்டிக் கொண்டு போய் யானைகளை விரட்டலாம்.
அல்லது வீரப்பனுடைய குரலை யாராவது மிமிக்ரி செய்யலாம். யானைகள் வீரப்பனுக்கு மட்டுமே கட்டுப் பட்டு பழகி விட்டது போல்
தோன்றுகிறது. என்னே வீரப்பன் ராஜாங்கம் !!
பி.கு.
மிருகங்களை வதை செய்யக் கூடாது என்று ஒரு கும்பல் கிளம்புமே.
அவர்களை அழைத்து, கோவையின் மையப் பகுதியில் யானைகளுக்கு ஒரு ஏ.சி பங்களா கட்டித் தர சொல்லலாமே.
என்னத்தைச் சொல்ல ?
what to say ? Find a way to send them away.
கார்த்திகேயன்

2007/12/12

ராமரும் அனுமரும் கோர்ட்டுக்கு

இது ஜோக்கா? பரிகாசமா ? கிண்டலா ?
வேறு எங்காவது இது போல் நடந்துள்ளதா ?
ஒரு வழக்கு 20 வருடங்களாக நடக்கிறது. அதில், வழக்குக்கு சம்பந்தப்பட்ட இருவருக்கு
கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பியும் அவர்கள் வரவில்லையாதலால், செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கிறார்
ஒரு நீதிபதி. கோவிலில் சிலையாக இருக்கும் ராமரும் அனுமரும்தான் அவர்கள்.
சிலைகள் கோர்ட்டுக்கு வரும் என அந்த நீதிபதி உண்மையிலேயே நம்புகிறாரா ?
இல்லை நையாண்டி செய்கிறாரா ?
எப்படியிருந்தாலும், இது மிகவும் வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியதே.
இப்படிப் பட்ட கூத்துகள் தொடர்வது யாருக்கும் நல்லதல்ல.

2007/12/11

கார்த்தி என்னை விட்டு பிரிந்த அந்த மணித் துளியிலிருந்து ,''' நானும் இறந்து விட வேண்டும் , அவனுடன் சேர்ந்து விட வேண்டும் ''' என்ற தவிப்புடனும் துடிப்புடனும்
ஒவ்வொரு நிமிடங்களாக நகர்ந்தும் வாழ்க்கை ''ஓ ஓடிக்கொண்டுதான்'' இருக்கிறது.

எந்த செயல் நின்றுவிட்டது?
பசிக்கிறதோ ,, ருசிக்கிறதோ , புசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உண்பது , உடுப்பது , உறங்குவது ,, என்று எந்த செயல் நின்று விட்டது?
எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது..
ஆனால்,
எதிலும் ஒரு ஆர்வம் இல்லாமல், விருப்பம் இல்லாமல் ,
ஒரு விரக்தியுடன்
ஒரு மனக் கசப்புடன்,

கண்களில் நிரந்தரமாக நிற்கும் " " கண்ணீருடன் " "

2007/12/01

அசை போடுகிறேன்

Rain rain go away
Come again another day
This is mummy's washing day

இந்த rhyme எங்களுக்குதான் மிகவும் பொருந்தும். கார்த்தி, செந்தில் சிறுவர்களாக இருந்த போது [90 களில் ] சனிக்கிழமைதான் துணி துவைக்கும் நாள். ஒரு வாரத்து துணிகளையும் washing machine ல் போட்டு துவைத்து ,,
அலசுவதற்கு, மொட்டை மாடிக்கு சென்று விடுவோம். [ அப்போது, மின்வாரிய குடியிருப்பில் இருந்தோம். 3 அடுக்கு அபார்ட்மென்ட். .. மேட்டூர். .] வீடுகளுக்கான தண்ணீர் தொட்டி மொட்டை மாடியில். தண்ணீர் நிரம்பிய பிறகு வெளியேறும் நீரை அன்று மட்டும்
நிறுத்த மாட்டார் அதன் பொறுப்பாளர். அவருக்கு தெரியும், அன்று எங்களுக்கு தண்ணீர் தேவை என்று.]. துணி அலசுகிறோம் என்று ஒரு மணி நேரம் கூத்தடிப்போம். குற்றால அருவியில் குளிப்பது போல்தான். ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் அடித்துக் கொண்டு ஆட்டம், பாட்டம்தான். என் கணவர் இதில் எல்லாம் பங்கெடுக்க மாட்டார். அவருண்டு, அவருடைய செய்திதாள் , அல்லது office புத்தகம் என்று எதிலாவது மூழ்கியிருப்பார். நாங்கள் மூவரும் அவிழ்த்து விட்ட கழுதைகள்தான்.
இப்படிப்பட்ட ஒரு நாளிலே , நாங்கள் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த போது, கீழேயிருந்து,, அவருடைய அடிக்குரலில் 'கார்த்தி, கார்த்தி ' என்று கூப்பிட்டார். ஒரு 15 நிமிடம் கத்திய பிறகுதான், எங்களுக்கு கீழே போக வேண்டும் என்றே தோன்றியது.[fully drenched] கிழே இறங்கி வந்தால், வரவேற்பறையில், என்னுடைய பெரிய மைத்துனர்கள் இருவர், இன்னும் 4 பேர் அவருடைய உறவினர்கள் [சுத்தமான கிராமத்து மக்கள்] என்று 6 பேர் வரவேற்பறையை அடைத்து உட்கார்ந்திருந்தனர். எங்கள் கோலத்தை பார்த்து அவர்கள் முழிக்க, அவர்களை பார்த்து நாங்கள் முழிக்க ,,( ஒரு பெண் அதுவும் 2 மகன்களுக்கு தாய் இப்படி விளையாடுவதென்பது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம்}.
மகானுபாவன், என் கணவர் ஒரு 4 படி மேலே வந்து உறவினர்கள் வந்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கப் படாதோ ? என்னத்தைச் சொல்ல?