நீண்ட நாட்களாக இந்த விஷயத்தை பற்றி ஒரு பதிவு எழுதலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் ஓசை செல்லாவின் பதிவைப் படித்தவுடன் இதைப் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற வேகம் வந்தது.
லீனா மணிமேகலை தொடர்பான விவகாரம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதற்கு வெகு நாட்களுக்கு முன்பே இந்த உடை விஷயம் பற்றி நான் பேசியிருக்கிறேன். 1990 என்று நினைக்கிறேன். புதுமைவாதியென தன்னை பிரகடனப் படுத்திக் கொண்ட ஒரு பெரும் பேச்சாளர் பேசினார், ''பெண்கள் நீண்ட கூந்தல் வளர்க்கக் கூடாது. ஆண்களைப் போல் 'கிராப் ' வைத்துக் கொள்ள [ கொல்ல ] வேண்டும். புடவை கட்டக் கூடாது. பேன்ட் அணிய வேண்டும், கண்ணுக்கு மையிடக் கூடாது '' என்றெல்லாம் பேசினார்.
நானும் பெண்ணியவாதிதான். ஆனால், பழமையான, புராதன பெண்ணியம். புராணங்களில் எல்லாம் பார்த்தால், பெண்ணுக்கு தன் மணமகனைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அரசவைக்கு அரசனுடன் சரி இருக்கையில் அமர்ந்து என்று [இது பற்றி தனி பதிவு போடலாம் ].
இப்போது லீனா பற்றி நான் சொல்ல வந்தது என்ன என்பதை சொல்லி விடுகிறேன். இந்த சல்வார், சுடிதார், ஜீன்ஸ், சட்டை இதெல்லாம் மட்டுமே ஒரு பெண்ணை உயரிய சிந்தனை உள்ளவளாகவோ, ஆணுக்கு இணையானவளாகவோ ஆக்கிவிடவே முடியாது.சேலையில் என்ன குறை? அது comfortable. ஆக இல்லை. convenient. ஆக இல்லை..these are their argument.
இத்தாலியில் இருந்து வந்து இன்று இந்தியாவையே ஆண்டு கொண்டிருக்கும் அந்த பெண்மணி எவ்வளவு அழகாக, நேர்த்தியாக புடவை அணிந்து வருகிறார்கள் ? இந்த உடை விஷயத்தாலாயே அவர் மீது எனக்கு மதிப்பு கூடிப் போனது.
ஒரு மாவட்ட கலெக்டர், ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து M.P ஆகி இருக்கும் என இருவர் அடிக்கடி சுடிதாரில் வருகின்றனர். [ ஆகா, உடை அணிவது அவரவர் விருப்பம் என்று அவசரப்பட்டு குரல் கொடுக்க வேண்டாம்..உங்கள் வகுப்பு ஆசிரியை நீச்சலுடையில் வகுப்பிற்கு வருவதை கற்பனை செய்து பாருங்கள்? ஒத்துக் கொள்ள முடியுமா ? ]எந்த உடை எந்த பதவிக்கு, எந்த இடத்தில் என்பதுதான் கேள்வி.அதே கலெக்டர் ஒரு சினிமாவிற்கு போகும் போது சுடிதாரில் போகட்டும்.யார் வேண்டாம் என்கிறார்கள்? ஆனால் ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போது அவரை பார்த்தால், மதிக்க வேண்டும் என்று தோன்றுபவர்களுக்கு கூட ஒரு பின்னடைவு ஏற்படும். அந்த பெண் [ அந்த கலெக்டர் ] பின்னுக்கு தள்ளப் பட்டு மற்றவர்கள் அவையில் முந்தித் தெரிகிறார்கள். இந்திரா காந்தியோ, சோனியா காந்தியோ சாதிக்கவில்லையா ?
அடுத்த வாதம், வண்டி ஓட்டுவதற்கு பேண்ட் , சுடிதார்தான் வசதியாக இருக்கிறது....எத்தனை பெண்கள் புடவை அணிந்து எவ்வளவு அழகாக வண்டி ஓட்டுகிறார்கள்.?
ஆண்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. 60 ஆனாலும், 80 ஆனாலும் ஆண்கள் ஆண்கள்தான். எப்பேர்ப் பட்ட நல்ல மனிதரும் [ ஆணும்] ஒரு வினாடி யேனும் தடுமாறுவதை நான் பார்த்துள்ளேன்..ஓசை செல்லாவின் பின்னூட்டத்தில் ஒருவர் எழுதியிருந்தார்..முழுக்க நிர்வாணமாக வந்து கணிணி முன் நின்றால் கூட மனம் சலனமடையாது, கவனிக்காதது போல் சென்று விடும் ஆண்களும் உள்ளனர். உண்மை. லட்சத்தில் ஒருவர். அதற்கு உண்மையிலேயே மிகப் பெரிய மன முதிர்ச்சி வேண்டும். [ என் கார்த்தியைப் போல். நூற்றுக்கு நூறு உண்மை. மிகைப் படுத்தல் அல்ல ]. இன்னொருவர் எழுதியிருந்தது போல், நம் பிரச்சினையே தனி அறைகள் இல்லா வீடு [ நன்றாக விரசமின்றி, இந்த விஷயத்தை பேசவும் எழுதவும் செய்கிறார்கள்.பாராட்ட வேண்டும். ] அதனால், இந்த அரைகுறை ஆடை, ஜன்னல் ரவிக்கை [எத்தனை பேர் என்று ஒரு கேள்வி..அய்யோ, எந்த காட்டில் இருக்கிறீர்கள் ] இவையெல்லாம் வேண்டாம். அறிவாலும் திறமையாலும் ஆணுக்கு இணையாவோம். யாரும் யாரையும் வெல்ல வேண்டாம். இது ஒன்றும் போர்க்களமல்ல. வாழ்க்கை. இணையாவோம். படைப்பின் பிரிவுகளில் இருக்கும் நியதியை ஏற்றுக் கொள்வோம்..பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் இருப்போம். உடலால் மட்டும். மற்றபடி அனைவரும் மனிதர்களேயென்ற சமத்துவம் மட்டும் நிலவட்டும
ha, such a long post.
3 comments:
I agree with you!
வாங்க ஆன்ட்டி, நிறைய எழுதுங்க, அப்படியெ எங்களுக்காகவும் எழுதுங்க அன்புடன் குட்டீஸ்
agree with you... some ppl are mistaking for women-equality..
Post a Comment