தேனாறு
அப்போது நாங்கள் மேட்டூரில் இருந்தோம். என் கணவர் மேட்டூர் அணையில் ADE ஆக பணியாற்றி வந்தார்.
அணையின் மின் நிலையத்தில் பெரிய பெரிய தேன் கூடுகள் இருக்கும். அமாவாசை அன்று தேன் அழிப்பது என்பது பழக்கம். அமாவாசை அன்றுதான் தேன் கூடு நிறைந்திருக்கும். தீப் பந்தம் காட்டி, தேனீக்களை விரட்டிவிட்டு, தேன்கூடுகளை எடுத்து தேன் எடுப்பர். அமாவாசை காலையில், உதவியாள் வந்து '' அம்மா, தேன் கொண்டு வர பாத்திரம் கொடுங்கள் '' என்று கேட்டு வாங்கிப் போவார். அடுத்த நாள் காலை சுமார் 5 லிட்டர் அளவு தேனை கொண்டு வந்து தருவார். [ நம்புங்கள்..காதில் பூச் சுற்றவில்லை ].
அந்த தேனை வடிகட்டி , பால் பொங்க வைப்பது போல் பொங்க வைத்து, நன்கு ஆறிய பிறகு மீண்டும் என்று 3 முறை பொங்க வைத்து ஆற வைத்து பாட்டில்களில் ஊற்றி வைக்க வேண்டும்.
அந்த அந்த சீசனுக்கு தகுந்தாற்போல் , தேனின் சுவை மாறுபடும். சில சமயங்களில் முழுக்க இனிப்பு சுவை. சில சமயம் புளிப்பு சுவை.. வேப்பம்பூ பருவத்தில் லேசான கசப்புடன் இருக்கும்.
அப்படி ஒரு முறை தேனை அடுப்பில் வைத்துவிட்டு வேறு வேலையில் கவனமாகிவிட, தேன் பொங்கி வழிந்து சமையல் மேடை முழுவதும் தேன் வழிந்தோட , '' ஆகா, பாலாறு , தேனாறு ஓடுவது '' என்ற வழக்கு மொழி உண்மைதான் என்று தோன்றியது.
பி.கு.
அவ்வளவு தேனையும் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறீர்களா ? உற்றார் உறவினர் என ஆளுக்கொரு பாட்டில் பரோபகாரம்தான். [பாட்டில் தேடுவதுதான் பெரிய பிரச்சினை.]
கார்த்தியின் விடுதிக்கு ஒரு முறை கொடுத்தனுப்ப , விடுதியே அமர்க்களப்பட்டது தனிக் கதை
1 comment:
Oh! Ha-ha how sweet tasting different tasty honeys.
I don't know that honey should be boiled like milk. Good info
Post a Comment