Follow by Email

About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/09/14

ஜீவசமாதி

அட கொடுமையே?????????
சந்திரனுக்கும் செவ்வாயுக்கும் மனிதர்களை அனுப்ப ஆராய்ச்சி நடக்கும் இந்த காலத்தில் ....
என் கனவில் பார்வதியும் சிவனும் வந்து சொன்னார்கள்.தேதி குறித்து கொடுத்தார்கள் .........என்று ஒருத்தர் சொல்கிறார்.
அதற்கும் அவ்வளவு கூட்டம்.
இதில் தாங்கவே தாங்கவே வே வே வே முடியாத கொடுமை என்னவென்றால் அந்த ஆளின் அருகில் '' '' கலெக்டர் '' '' போலீஸ் ஆபீசர் ..ஒரு மருத்துவர் !!!!!!!!!!!
எனக்கு இதய துடிப்பே நின்று விட்டது.......
ஒரு கலெக்டர் என்பவர் இதை ஆமோதிக்கிறார் என்றால் ....
என்னடா கொடுமை இது  ?????????
இந்த ஆளை அரெஸ்ட் செய்து சிறையில் அடைப் தை விட்டு அவர் காலில் விழுவதும் ஆசி வாங்குவதும்
மீண்டும் கற்காலத்திற்கே போகிறோம்.
இதை ஊதி பெரிதாக்கும் மீடியாக்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
Religion starts where Science ends 
என்பார்கள்.
தெய்வ நம்பிக்கை right.RIGHT.
Can be accepted to an extent.
BUT
BUT
மூட நம்பிக்கையை வளர்த்து ,அதை வைத்து வியாபாரமாக்கி ,பிரபலம் அடைதல் எல்லாம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.
இப்படித்தான் 48 நாட்கள்,40 வருடங்கள் என்று ஒரு கதை பண்ணி பலரை சாகடித்தார்கள்.
தன்  மீது நம்பிக்கை இல்லாதவன் (தன்னம்பிக்கை ) இல்லாதவர்கள் இப்படி கும்பல் கும்பலாக ஓட வேண்டியதுதான்.
உடனே நான் நாத்திகவாதி என்று சண்டைக்கு வர வேண்டாம்.
I am '' SCIENTIFICALLY RELIGIOUS''
I am '' SCIENTIFICALLY RELIGIOUS''
I am '' SCIENTIFICALLY RELIGIOUS''
இந்து மதம் அறிவியல் சார்ந்தது.
இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ திரிபுகள்.புனை கதைகள்.மக்களை முட்டாளாக்கியவர்கள் .....போதும்.போதும்
கார்த்திக் அம்மா

2019/09/13

சுபஸ்ரீ

சுபஸ்ரீ விபத்து :
23 வயது .கார்த்திக்கிற்கும்  23 தான்.
எத்தனை ambitions .லட்சியங்கள் .கனவுகள் .சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு .
எல்லாம் ஒரே ஒருநொடியில்  சுக்கு நூறாக சிதறி போகிறது.
அந்த அப்பா அம்மா நிலைதான் சுத்த மோசம்.இனி உயிருள்ள வரை அந்த மகள் கண்ணில் இருந்து மறைய மாட்டாள்.
சாப்பிடுவோம்....ருசி என்ன என்று உணராமல் ....
தூங்குவோம் ...கனவிலாவது அந்த முகத்தை பார்க்க மாட்டோமா என்ற ஏக்கத்துடன் .....
முடிந்தது....வாழ்க்கையில் எல்லாம் முடிந்தது.
நான் அனுபவிக்கிறேனே ....
கார்த்திக் அம்மா

2019/08/26

August 26 ...2005

August  26 ...2005
என் வாழ்வில் வந்திருக்கவே  கூடாத நாள்.
என் அருமை கண்மணி கார்த்திக்கிற்கு விபத்து ஏற்பட்டு  என்னை விட்டு பிரிந்த நாள்....
என் வாழ்வில் வந்திருக்கவே கூடாத நாள்.
.....
தன் அம்மாவை தவிர இந்த உலகில் எதுவுமே தேவை இல்லை என்று வாழ்ந்த மகன்.
2002ல்
ஒரு பெரிய U .S கம்பெனியில் வேலை வந்தும் அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற மகன்.
(அவன் நண்பர்கள் என்னைத்தான் திட்டினர்.நீங்கள்தான் கார்த்தியின் எதிர் காலத்தை கெடுக்கிறீர்கள். எங்களுக்கு எல்லாம் மைக்ரோ சாஃப்ட்டில் வேலை கிடைக்காதா என்று ஏங்குகிறோம்.)
நான் கார்த்தியிடம் ''போய் வா கார்த்தி.'' என்றுதான் சொன்னேன்.உறுதியாக மறுத்து விட்டான்.அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற வைராக்கியம்.அது எவ்வளவு பெரிய வேலை ,எவ்வளவு பெரிய சம்பளம் என்றாலும் சரி அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற மகன்.
ஒரே அடியாக விட்டு விட்டு போய் விட்டான்.
எப்போதும் புலம்பல்.
அழுகைதானா
என்று குற்றம் சொல்பவர்களுக்கு ..
கார்த்தி போல் ஒரு மகன் கிடைக்க 100 கோடி ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அவன் அன்பு, அறிவு, அடக்கம் ...சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த அன்பு மகனை இழந்த நாள்.
ஒவ்வொரு நிமிடமும் அவன் நினைவால் தவிக்கும்
கார்த்திக் அம்மா 

2019/08/24

மத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே = கார்த்தி

கோபிநாத் மண்டே = கார்த்தி
எதற்கெடுத்தாலும் , எந்த நிகழ்வோ, செய்தியோ
மனம் என்னை அறியாமல் கார்த்தியுடன் சம்பத்தப் படுத்தி விடுகிறது.
இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்தார்   மத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே என்ற செய்தி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது .முதலில் இதை நம்பக் கூட முடியவில்லை.
அதே போல்தான் கார்த்தியும். வீட்டிலிருந்து 8.50 a .m க்கு அலுவலகத்திற்கு புறப்பட்டான். கூப்பிடு தூரம் என்பார்களே. 10 நிமிட தூரம்தான். வீட்டிலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்கள் கூட இல்லை.அலைபேசி அழைப்பு வந்தது.
விதி. விதி. விதி
வேறொன்றும் சொல்ல முடியாது.
கோபிநாத் மண்டேவின் கல்லீரல் சிதைந்தது என்று சொல்வதையே கார்த்திக்கிற்கும் சொன்னார்கள்.
இதயத் துடிப்பு நின்று விட்டது.அவரை பார்க்கும் போது எந்த காயமும் இல்லாமல் உறங்குவது போன்றுதான் இருக்கிறார்.கார்த்தியும் அப்படித்தான் இருந்தான்.
( ( (மோத்தி பாக் சாலையில் உள்ள சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்ததையும் மீறி தனது காரை இயக்கிய அவர் முண்டேவின் கார் மீது மோதினாரா என விசாரணை செய்து வருவதாக டெல்லி காவல்துறை இணை ஆணையரான எம்.கே.மீனா கூறியுள்ளார்.
முண்டேவின் கார் டிரைவரும் குர்வீந்தர் சிக்னலை மீறி தங்கள் கார் மீது மோதியதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே குர்வீந்தர் மீது அதிவேகமாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் முண்டேவின் கையில்  மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனையை அடையும் முன்பு அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முண்டே மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவரது கல்லீரல் சேதமடைந்து 2 லிட்டர் அளவுக்கு ரத்தம் போயுள்ளதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கார்கள் மோதியபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முண்டே இருக்கையின் மறுபுறம் வந்து விழுந்துள்ளார்இது எல்லாமே கார்த்தியின் விபத்தில் அச்சு அசலாக நடந்தது.) ) )
இதற்கப்புறம்தான் எல்லாமே.
அவர் என்பது '' அது '' என்றாகிவிடும்.
''பாடி'' வந்து விட்டதா? என்பார்கள்.
சுரீர் என்று உடல் முழுவதும் மின்சாரம் பாயும்.
வாய்விட்டு கூட கத்த முடியாது.
அப்புறமென்ன?
ஒரு நாள், 10 நாள்
உடன் இருப்பவர்கள் அவர் அவர் வேலையை பார்க்க சென்று விடுவர். யாரையும் குறை சொல்லவில்லை.
இது உலக நியதி.
அவர்கள் எல்லோரும் சென்ற பின்புதான் இழப்பின் தாக்கம் முழுமையாக தெரியும்.
அப்புறமென்ன?
வாழ்நாள் முழுவதும் ஊமை அழுகைதான்.
......     ........
என்ன வாழ்க்கை?
நிலையாமை.
ஒரு நிமிடம்.
ஒரே ஒரு நிமிடம்தான்.
வாழ்க்கை தலைகீழ்.
இந்த ஜூன்  3ம் தேதி 2005 ல் தான் சென்னையிலிருந்து  பெங்களூருக்கு புது வாழ்வு தொடங்க புறப்பட்டோம்  நானும் செந்திலும்.
கார்த்தியுடன் சேர்ந்து வாழப் போகிறோம் என்ற சந்தோஷத்தில்.
''பல்லாக்கு வாங்க போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக''
என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
விதியே,விளையாட்டில் எப்போதும் வெற்றி உனக்குத்தான்.
சோகத்துடன்,
கார்த்திக் அம்மா

2019/08/22

அற்புதமான நிலா

என் முழு நிலவு
இன்னும் மனம் 2005 லேயே இருக்கிறது.
தேறும் வழி தெரியவில்லை.
மகன் ஏக்கம் உயிரை கொல்கிறது  Still living in 2005.
Today is 21st aug.
I+KARTHIK+SENTHIL WERE IN KARUR.

அன்று  பௌர்ணமி .
2005 Aug  20 ம் தேதி அன்று பௌர்ணமி.அன்று நான், கார்த்தி, செந்தில் மூவரும் Bangalore லிருந்து கரூர் நகருக்கு புறப்பட்டோம். கார்த்தியின்  நண்பருக்கு திருமணம். திங்கள்  அன்று திருமணம்..சனிக்கிழமை கிளம்பினோம்.இரவு 7 மணி.செந்தில் காரை ஓட்டி  வர நான் முன் சீட்டில் ..கார்த்தி பின் சீட்டில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.சாப்பிட்டு முடித்து கை கழுவ  கார் கதவை திறக்க நான் ''ஜாக்கிரதை கண்ணம்மா '' என்கிறேன்.'' ''ஆமாமாம்.பார்த்து ,பறந்து விடப் போகிறாய் ''  என்று (கார்த்தி ஒல்லியாய் இருப்பதை கேலி செய்து ) செந்தில் சொல்ல  பேச்சும்  சிரிப்புமாக வந்து கொண்டிருந்தோம்.அப்போது செந்தில் ''அம்மா இங்கு பாருங்கள். '' என்று முழு ,பிரகாசமான நிலவை காட்டினான். நான் ''இது என்ன பெரிய நிலா,  இதை விட அற்புதமான நிலா   பின் சீட்டில் இருக்கிறது.  என் கார்த்தி மகன் முகம்தான் என் பிரிய நிலா. அழகு நிலா '' என்று சொல்ல பின் சீட்டில் இருந்த கார்த்தி இரண்டு சீட்டிற்கு  நடுவில் தன முகத்தை நீட்ட அவனை கொஞ்சி உச்சி முகர்ந்து என் இரு கைகளில் அவன் முகத்தை ஏந்த , செந்தில் '' போதும் ,போதும் அம்மாவும்  மகனும் கொஞ்சியது '' என்று செல்லமாக கோபிக்க ....சேலம்  சென்று என் அம்மா வீட்டில் தங்கி ,எல்லோருடனும்  அவ்வளவு சந்தோஷமாக  இருந்து விட்டு கரூர் சென்றோம்.
அந்த 3 நாட்களும் எவ்வளவு சந்தோஷமான  நாட்கள்.
சினிமாவில் வருமே .ஒரு பெரிய குடும்பம் .சந்தோஷமான,  பாசமான  குடும்பம் பாட்டு  பாடி ஆடி முடிக்கும் போது  வில்லன்கள் வந்து அவர்களை நாசப் படுத்துவார்களே.
அதே போல்தான்  என் வாழ்விலும்  நடந்து விட்டது.
கடைசி, கடைசி என்று கார்த்தி தன் உறவினர்கள்,  நண்பர்கள் என அனைவருடனும் சந்தோஷமாக இருந்தான்.கரூரிலிருந்து  திரும்பும் போதும் சேலம் சென்று தன்  பாட்டி  தாத்தா  மாமன்கள்  என எல்லோரையும் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்து விட்டு bangalore  சென்றோம்.
என் வாழ்வின் கடைசி சந்தோஷமான நாட்கள்.
இன்றும் முழு நிலவை பார்க்க தைரியம் இல்லாமல் பைத்தியமாக இருக்கிறேன்.
கார்த்திக் +அம்மா
KALAKARTHIK

2019/08/19

பால் விலையேற்றம்

எனக்கு ஒன்று புரியவில்லை.
பால் விலை 6 ரூ அதிகம் என்றவுடன் இந்த கூச்சல் ,கூப்பாடு போடுகிற மக்களே ,  நேற்று 20 ரூ வாங்கிய சோப் இன்று 30 ரூ .எண்ணெய் ,பேஸ்ட் ,இன்னும் அத்தனை பொருட்களின் விலையும் அதிகம் அதிகம் அதிகரித்துள்ளது.
இதற்கெல்லாம் யாரும் கேள்வி கேட்பதே இல்லை.
ஒரு துணி கடையில் போனால் சாதாரண சுடிதார்,etc விலையை பார்த்தால் தலை சுற்றுகிறது.
இதையெல்லாம் வாங்காமலா இருக்கிறார்களா?
தங்கம் விலை விர்ர்ர் .ஆனால் வாங்காமலா இருக்கிறார்கள்.?மக்கள் எப்போது ஏழை ?????????
எப்போது பணக்காரர்கள்????????????
இதற்கெல்லாம் மேல் மீடியா .
அப்பாடா ,நாட்டில் பல குழப்பத்திற்கு காரணமே இவர்கள்தான் .
புகையை ஊதி ஊதி பெரு நெருப்பாக்கி குளிர் காய்கிறார்கள்.
.....
ஒன்று வேண்டுமானால் செய்யலாம்.
எல்லாம் இலவசமாக தருவது போல்
....பால் ,ணெய்,தயிர் எல்லாம் இலவசமாக கொடுக்கலாம்.
வரி கட்டத்தான் நாங்கள் இருக்கிறோமே.

2019/08/02

01 August 2005

01 August 2005
நாட்கள் ஓடுகின்றன. ஆனால் மனம் கார்த்தியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 01 August 2005  அன்று பள்ளியில் பணியில் சேர வேண்டிய நாள் என்பதால் நானும் கார்த்தியும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திறங்கினோம்.அவன் நண்பர் வீட்டிற்கு சென்று பைக் எடுத்துக் கொண்டு என்னை பள்ளியில் விட்டு விட்டு மகாலிபுரம் சென்றான்.

இது போல் சரித்திர ,வரலாறு சம்பந்தப்பட்ட இடங்கள் என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் மிகவும் ஆசை. வெறி என்று கூட சொல்லலாம்.

இரவு ரயிலில் புறப்பட்டு மீண்டும் பெங்களூர் சென்றோம்.
இன்னும் 25 நாட்கள்தான் அவனுடன் இருப்பேன் என்று தெரியாமல் சந்தோஷமாக ....போனேன்.
26ம் தேதி எல்லாம் முடிந்து போனது.

எவ்வளவோ ஆசைகளும் திட்டங்களும் மனதில் வைத்திருந்த அந்த மகன் இல்லாமல் நான் தவிக்கும் தவிப்பு..... கொடுமை. கொடுமை.
இன்று 01.08.2019.
எத்தனை வருடங்கள் ஓடினாலும் மனம் இன்னும் 2005 லியே இருக்கிறது .
மனம் ஓ என கத்திக் கொண்டே இருக்கிறது.
கதறிக் கொண்டே இருக்கிறது.
மகன் மீண்டும் வந்து விட மாட்டானா ?ஒவ்வொரு முறை காலிங் பெல் அடிக்கும் போதும் அது கார்த்தியாக இருக்கும் என்று மனம் பரிதவிக்கிறது.
என்ன சொல்ல?
தாள முடியா வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2019/07/31

காஃபி டே சித்தார்த்

அதிர்ச்சி அல்ல .எரிச்சல்தான் வருகிறது .எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் .எப்படிப் பட்ட சாதனை.
ஒரு நஷ்டம் ,ஒரு தோல்வி ,ஒரு கஷ்டம் வருமே.அப்படி இல்லாத வாழ்க்கை யாருக்கோதான் அமையும்.
வாழ்வில் வரும் கஷ்டங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்வதாக இருந்தால் நானெல்லாம் எத்தனை முறை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் .
கடனுக்காக
நோய்க்காக
கணவரின் மறைவிற்காக
இதற்கெல்லாம் சிகரம் வைத்த என் உயிர் மகன் கார்த்தியின் இழப்பிற்காக
......இன்னும் எத்தனை சோதனைகள்.
வேதனைகள்.
சித்தார்த்
இன்று தைரிய மகள் முத்துலட்சுமி தினம் .ஒரு தேவ தாசி குலத்தில் பிறந்து ,
நோயில் வாடி
தாயை இழந்து
படிப்பில் தடங்கல்
சக மாணவர்களின் எதிர்ப்பு
இதையெல்லாம் தாண்டி இந்தியாவின் முதல் மருத்துவர் ஆகி ,
சட்டசபையில் 'நீ உன் குலத் தொழில் செய் 'என்ற மற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு பதிலடி கொடுத்து
இன்று அடையாறு ஆல  மரம் போல் நிற்கும் கேன்சர் மருத்துவ மனையை நிறுவி .......
என்ன சித்தார்த்
இவ்வளவுதானா ??
கார்த்திக்
காஃபி டே கடைக்கு அடிமை.
ஒரு நாளுக்கு ஒரு டேஸ்ட் .ஒரு நாள் cool coffee .
ஒரு நாள் 4 அடுக்கு காஃபி .
ஒரு நாள் ராகி காஃபி .
நான் கார்த்தியை கிண்டல் செய்வேன் .
''இந்த ராகி மாவு நம் வீட்டிலேயே இருக்கிறது .நானே செய்து தருவேனே .இதற்கு எதற்கு 300 ரூபாய் ?''
அப்படி ஒரு 100 விதமான காஃபி தந்து சாதனை செய்த சித்தார்த்
இவ்வளவுதானா ?
பரிதாபம் வரவில்லை.
ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விட்ட சித்தார்த்
RIP .

2019/07/22

ஏமாற்றம்

ஏமாற்றம் .ஏமாற்றம் .
சந்திராயன் விண்ணில் பாயும் காட்சியை என் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்க்க முடியும்.
ஆனால்
மேகங்கள்.
HIGHLY HIGHLY  DISAPPOINTED .
ஆனாலும் டி .வி யில் பார்த்து மனதை தேற்றிக் கொண்டேன் .
KUDOS .என் பெரு மதிப்பிற்குரிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
கார்த்திக் அம்மா

2019/07/20

கிராம புற மாணவர்கள்

நீட்டும் மாணவர்களும் :
சத்தியமாக இது என் சுய புராணம் அல்ல ,நான் செய்ததை சொல்கிறேன்.சில பிரச்சினைகளுக்கு அது ஒரு தீர்வாக இருக்கலாம் என்பதால்.
சூர்யா பேசியது கொண்டாடப் படுகிறது.அது அவர் கருத்து.அது பற்றியல்ல என் பதிவு.
நான் கிராமத்தில் படித்தவள்.கிராமத்தில் வேலை செய்தவள்.
அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
என் மாணவர்கள் ஏழை மாணவர்கள்.(ஆனால் திறமையில் ,அறிவில் குறைந்தவர்கள் அல்ல)
தினமும் 8 கி.மீ நடந்து வந்து படித்தவர்கள்.
சில மாணவர்கள் காலையில் சந்தன மர  வீரப்பனுக்கு மலையில் சாப்பாடு கொடுத்து விட்டு ஓடி வருவார்கள் .
''ஏன் லேட்டாக வருகிறாய் ? ''
என்று கேட்டால் இந்த காரணத்தை சொல்வார்கள்.
ஒரு நாள் கத்தி விட்டேன்.
'' வீரப்பனிடம் சொல்லுங்கள்.டீச்சர் திட்டுகிறார்.படிப்புதான் முக்கியம் என்று சொல்லி அடிக்கிறார் '' ''
இப்படி எல்லாம் டிராமா போட்டு அந்த மாணவர்களை படிக்க வைத்தேன்.
''மாணவிகள் ''
மாணவிகள் நிலை இன்னும் மோசம்.கிராமத்தில் நிறைய தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும்.
விறகு பொருக்கி வர வேண்டும்.
சாப்பாடு கூட சரியாக இருக்காது.
நான் பார்த்தேன்.வீட்டிற்கு அனுப்பினால்தானே வேலை செய்ய வேண்டும்.
பள்ளி நேரம் முடிந்தவுடன் 5 மணி வரை சிறப்பு வகுப்பு எடுத்தேன்.
அத்தனை மாணவிகளையும் பள்ளி மைதானத்தில் உட்கார வைத்து படிக்க வைத்தேன்.
சனிக் கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை பள்ளியில் கோச்சிங் .அதன் பிறகு என் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவேன்.
மாலை 5 மணி வரை வகுப்பு.
எத்தனை மாணவிகள் பயன் அடைந்தனர்.இதற்கெல்லாம் காசு கிடையாது.
full free .பல சமயம் என் வீட்டில் உணவும் உண்டு.
WHY WHY ???????சுய புராணமா ??????அல்ல
இதுதான் தீர்வு.
இதுதான் தீர்வு .
இதுதான் தீர்வு.
படிக்க வையுங்கள்.
படிக்க வையுங்கள்.
படிக்க வையுங்கள்.
......
பணம் கொடுக்கிறேன்.
புத்தகம் கொடுக்கிறேன்.
பேனா , பென்சில் கொடுக்கிறேன் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது.
அவர்களுக்கு கோச்சிங் வேண்டும்.
எத்தனை I .T மக்கள் பின் தங்கிய பள்ளிகளுக்கு சென்று வகுப்பு எடுக்கிறார்கள் தெரியுமா?
அவர்கள் செய்வதுதான் உண்மையான சேவை.
SOLUTION :
அரசு கொடுக்கும் free coaching வருடம் முழுவதும் தரப் பட வேண்டும்.
கல்வி அமைச்சர் பல நல்ல விஷயங்களை செய்கிறார்.அவருக்கு பாராட்டுக்கள்.
எங்களை போன்றோரின் சேவையையும் பயன் படுத்தி கொள்ளலாம்.
படிக்க வையுங்கள்.
பிறரை குறை சொல்வது வேண்டாம்.நீட் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம்.
எங்களால் சாதிக்க முடியும் என்ற மாணவர்களுக்கு நிறைய பயிற்சி கொடுப்போம்.நாம் வல்லவர்கள் என்பதை நிரூபிப்போம் .
கார்த்திக் அம்மா

2019/06/20

துர்க்கை என் மகள்

1995 மேட்டூர் அணை நகரில் TNEB மின்வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தோம். அருகிலேயே சிவன் கோவில்.
என் அண்ணா கேலி செய்வார்.
''உனக்கு C /OF சிவன் கோவில் என்றுதான் கடிதம் எழுத வேண்டும் ''
அப்படி ஒரு பரம பக்தை.அந்த கோவிலில் இருந்த துர்க்கை சிலை கால் உடைந்து விட்டது.குருக்கள் கோவில் கட்ட சிரம பட்டார்.
என்ன  தோன்றியதோ, ''நான் கட்டுகிறேன் '' என்று சொல்லி விட்டேன்.
அவிநாசியில் சிலை செய்து எடுத்து வந்து கோவில் தண்ணீர் தொட்டியில் வைத்தோம்.
திருமணஞ்சேரி  சுவாமிநாத குருக்கள் வந்து பார்த்தவர்
''அய்யோ ,எதற்கு அம்மனை நீரில் வைத்தீர்கள் ? துர்க்கை எஜமானர் வீட்டில்தானே இருக்க வேண்டும்''  என்றார்.
எனக்கு குழப்பம் .
யார் அந்த எஜமானர் ???????
அவர் என்னை பார்த்து ''அம்மா ,இவள் உன் மகள் .உன் வீட்டில்தான் இருக்க வேண்டும் ''  என்றார்.
நாங்கள் சத்திரியர்கள். (வன்னியர்.)
அதிகம் அசைவம் சாப்பிடுவோம்.
எங்கள் வீட்டில் எப்படி ???????
வீடும் பெரிதல்ல .
ஆனால் அவர் உத்தரவு.
துர்க்கை மகள் வீட்டிற்கு வந்தாள் .6 மாதம்.
கார்த்தி ,  செந்தில் இருவரும்தான் தினசரி காலையும் மாலையும் விளக்கேற்றி   நிவேததனம்   (நெய்வேத்தியம் ) செய்தனர்.
6  மாதம் ....
இருவரும் 6 மாதமும் ஒரு function க்கும் செல்லவில்லை.6 மாதமும் ஊரை விட்டு வெளியே செல்லவில்லை.
6 மாதம் ஒரு முட்டை கூட வீட்டில் சமைக்கவில்லை.
கணவன் மனைவி உறவு எதுவும் இல்லை.அப்படி ஒரு புனிதமாக இருந்து கோவில் கட்டி முடித்து அற்புதமான கும்பாபிஷேகம் .
சுவாமிநாத குருக்கள் சொன்னார்.
''அம்மா, என் தந்தை 1000 கோவில் குடமுழுக்கு செய்ய ஆசைப் பட்டார்.ஆனால் முடியவில்லை.அந்த பொறுப்பை என்னிடம் தந்தார்.நான் செய்த குடமுழுக்கு களிலேயே இதுதான் இவ்வளவு சிறப்பாக நடந்தது.''
கார்த்தி, செந்திலிடம் சொன்னார்.
''டேய் ,இவள் உன் தங்கை .தங்கைக்கு கல்யாணம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் .சீர் வரிசை சிறப்பாக செய்ய வேண்டும் ''
3 நாட்கள் ஹோம குண்டம்.கண்ணை பறித்தது.
ஒரு அன்பர் போட்டோ எடுக்கலாம் என்கிறார்.
என் பதில் ''இல்லை வேண்டாம்.என்றாவது ஒரு நாளில் இந்த புகைப்படங்களை பார்த்து ஒரே ஒரு நொடி   நான்தான்  இந்த கோவிலை கட்டினேன் என்ற எண்ணமோ ,  கர்வமோ  வந்து விட கூடாது ''......
இன்று 21.06 ...இன்றுதான் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்த anniversary.
 மனம்  அழுகிறது.
கணவரையும் பறித்து,உயிரான கண்மகன் கார்த்தியையும் பறித்து ....இதுதான் என் பணிவிடைக்கு துர்க்கை கொடுத்த பரிசா ?
இன்றும் துர்க்கை ஜெகஜோதியாக இருக்கிறாள்.
தாயைத்தான் இருளில் தள்ளி விட்டாள் .
வாழ்க என் மகள்.
கார்த்திக் அம்மா

2019/06/12

அன்றும் இன்றும்

//அவரை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள். //
இந்த வார்த்தைகள் கிரேசி மோகனின் சகோதரர் பாலாஜி மன வேதனையுடன் உருக்கமாக வெளியிட்ட விடியோ வின் ஒரு பகுதி.
இந்த உலகம் மாறவே மாறாதா?
எதற்காக அவர் தன் அண்ணாவை கவனிக்காமல் விடுவார்?
மோகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தால் அவரின் நாடக  ட்ரூப்பிற்கு தெரியாமல் இருந்திருக்குமா?
அவர் எந்த டாக்டரிடமும் போனதாக யாருமே சொல்லவில்லை. 
அப்படி இருக்க அவரது குடும்பம் அவரை சரியாக கவனிக்கவில்லை என்று எப்படி  அப்பட்டமாக பழி சொல்வார்கள்? எவ்வளவு மன வேதனை ஏற்பட்டிருந்தால் அவர் இப்படி ஒரு விடியோ வெளியிட்டிருப்பார்?
....2000....
அன்று என் கணவருக்கு திடீரென உடல் நலம் மாறியது.
யாருமே எதிர்பார்க்காத அடி ...இடி.. 
ராஜ மருத்துவம்.
ஆனால் பலன் இல்லை.
......
அப்போதும் ஊரும் உறவும் இப்படித்தான் சொல்லியது.
நான் சரியாக கவனிக்கவில்லை.
மருத்துவர்கள் சரியாக கவனிக்கவில்லை.
.....எத்தனை குற்ற சாட்டுகள்?????????
எத்தனை மன வலி?????????? 
கணவரின் இழப்பு என்ற வேதனையை விட இந்த நெருப்பு அம்புகள் தந்த வேதனை....
சாரதா நம்பி ஆரூரான் ஒரு இடத்தில் இது பற்றி சொல்லியுள்ளார்.
அவருக்கும் அதே வேதனை.
...ஆக ....உலகம் மாறவில்லை.
WHAT A SADISTIC PLEASURE ...
ஆ ...
இவ்வளவு வெற்றியாளனா ???????????
ஆ 
விழுந்தானா ???????????
சிரி .சந்தோஷப்படு .என்பதுதான் உலகம்.
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா  


  

2019/06/10

தாம்பரம் விபத்து

இன்று தாம்பரம் பகுதியில் ஒரு சிகப்பு நிற கார் அசுர வேகத்தில் வந்து இரண்டு பைக்குகள் மேல் மோதி 4 பேர் தூக்கி வீசப்படுகின்றனர்.
இதுதான் கார்த்திக்கிற்கும்  நடந்தது.
பின்னால் வேகமாக வந்த கார் கார்த்தியின் பைக்கின் மேல் இடித்த வேகம்தான்....இன்று நான் மகனை இழந்து தவிக்க காரணம்.
யாரை நொந்து என்ன பயன்?
என் விதி.
அவ்வளவுதான்.
23 வயது மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறிகொடுத்து எரிமலையின் உச்சியில் எரிமலை குழம்பில் நின்று கொண்டிருக்கிறேன்.
கார்த்திக் அம்மா

2019/06/06

தப்பு.தப்பு.

.இந்த பெயர்களை எல்லாம் படிங்க, இவர்கள் தான் இனி உங்கள் பகுதியின்
EB Department AE,

1) Satya Kumar Behera
2) Pendyala Jothsna Praveena.P
3) Nimmalameher Santhosh
4) Suparna .M Das
5) Soni Kumari.S
6) Guru Prasad Reddy.V
7) Awin Gupta
8) Ramasubba Reddy.Poli
9) Nukala Vijayabhaskar.N
10) Mangala Bhargava Kumar.M
11) Nageswara Rao.Gonna
12) Geddamyugandhar.G
13) Aklavya Kumar.Nil
14) Vamsi Krishna.Yele
15) Prudhvi Raj.Saibaba
16) Deepak Kumar.Nill
17) Anil Kumar.Polisetty
18) Raghava Rao.B
19) Venkata Ramaiah.Midde
20) Senapti Naga Venkata Sai Phanindra
21) Neelam Siva.Sankar Reddy
22) Naga Venkata Vamshi Kumar.V
23) Wien.R
24) Ashutosa Kumar Trapathi.Na
25) Mangala Veera Sekhar
26) Shadab Usmani.Su
27) Sai Krishna.Chintha Ginjala
இதெல்லாம் பெரிய தப்பா தெரியுதுங்க.
நம் தமிழ் நாட்டில் படித்த பொறியாளர்கள் யாருமே தகுதியானவர்கள் இல்லையா?
இவர்கள் என்ன தேர்வு எழுதினார்கள்?
என்ன கட் ஆஃ ப் ?
யாரவது விவரம் சொல்லுங்களேன்.
கார்த்திக் அம்மா
பி .கு .
இது       (இந்த லிஸ்ட் )   ஒரு பிளாக்கில் வந்த பதிவு.அவர் அனுமதி பெறாமல் பயன்படுத்தினேன்.மன்னிக்கவும்.

2019/06/04

JUNE 3 2005

JUNE 3 2005
இது ஒரு மீள்பதிவு .காலம் ஓடுகிறது. மனம் மட்டும் 2005 லியே இருக்கிறது.அப்போது எழுதியது..
// //1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)// //

இது இன்று 03/06/2019
தம்பி செந்திலின் படிப்பு முடியும் வரைதான் நீங்கள் சென்னையில் இருக்க வேண்டும்.
அப்புறம் என்னுடன் இருக்க பெங்களூரு வந்து விட வேண்டும் என்று கார்த்தி அன்பு கட்டளை இட்டதால் பணி  மாறுதலுக்கு விண்ணப்பித்து விட்டு (கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் long leave ) என்று சொல்லி விட்டு வேளச்சேரியில்  இருந்து வீட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு பெங்களூரு கிளம்பி விட்டேன்.
இனி வாழ்நாள் முழுக்க பெங்களூருதான் என்பது திட்டம்.
எனக்கு பெங்களூரு பிடித்த நகரம் அல்ல 
சென்னை பிடிக்காத ஊரும் அல்ல .
மகன் இருக்கும் இடம் என் சொர்க்கபுரி. 
அவனுடன் சேர்ந்து வாழ்வது தலையாய இன்பம்.
அவ்வளவுதான்.
நான்+கார்த்தி+செந்தில் ...போதும்.
வேறு என்ன வேண்டும் ஒரு தாய்க்கு .
விதி இவ்வளவு கோரமாக விளையாடும் என்று தெரியவில்லை.
 போன வேகத்தில் திரும்ப வந்து விட்டேன்.ஆசையுடன் அழைத்துச் சென்ற மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறி  கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து நடைப் பிணமாக இருந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி ஒரு வேதனை தேவையா? மனம் கதறிக் கொண்டே இருக்கிறது.
அம்மா

யூ tube எரிச்சல்கள்

கல்வி அமைச்சர் திரும்ப திரும்ப சொல்கிறார் .
june  3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் ...
ஆனால் ஒரு யூ டியூப் பதிவில் ஒருவன் ஜூன் 10ம் தேதிதான் பள்ளிகள் திறப்பு என்று சொல்கிறான்.
இது ஒரு சேம்பிள்தான் .இது போல் எத்தனை டுபாக்கூர் பதிவுகள்.
இவர்களை தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
எந்த சட்டமும் இல்லையா?
சன் டி .வி க்கு ஆப்பு.மோடி சன் டி .வி.யை  முடக்கப் போகிறார்.
இப்படி ஒருத்தன்.
படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்களா ?
அதிலும் சிலர் பேசும் தமிழ் ....இது தமிழா என்று தலையில் அடித்துக் கொள்ள தோன்றுகிறது.
''நுப்பது'' (முப்பது )
பாவம் ..கலைனர் (கலைஞர் )
இப்படி ஒரு க்ரூப் .
எதற்கும் ஒரு வரைமுறை வேண்டும்.
வரைமுறைப் படுத்துங்கள்.

2019/05/29

ஆச்சரிய ஒற்றுமை.

ஆச்சரிய ஒற்றுமை.

நாங்குநேரி

நாங்குநேரி இடைத்தேர்தல் :
இந்த சிஸ்டம் மாற வேண்டும்.
இவர் எம் .எல்.ஏ வாக இருந்து கொண்டே எம்.பி தேர்தலில் ஏன் நிற்கிறார்?

இப்போது இன்னொரு தேர்தல்.அதற்கொரு செலவு.
நாங்கள் கட்டும்  வரிப் பணம் இப்படி வீணாகிறது.
இந்த தேர்தலுக்கான செலவை இவரிடம் இருந்து பெறலாம்.
அல்லது
முந்தைய தேர்தலில் இவருக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை எம்.எல்.ஏ ஆக ஆக்கலாம்.
....
அதே போல் ஒருவர் 2 தொகுதிகளில் நின்று இரண்டிலும் வெற்றி பெற்று ஒரு தொகுதியை ராஜினாமா செய்தால் அந்த தேர்தல் செலவையும் அவரே ஏற்க வேண்டும் என்று சட்டம் வர வேண்டும்.
கார்த்திக் அம்மா

2019/05/22

பெற்ற தாயே செய்யும் கொலை

//  சென்னை அம்பத்தூரில் மூன்றரை வயது மகனை பெற்ற தாயே தவறான நட்புக்காகக் கொலை செய்துள்ளார்.//
பெண் உரிமை வேண்டும் என்று போராடியவர்கள் இப்போது அதிர்ந்து போய் உள்ளனர்.
செய்திகளை பார்த்தால் ஒரு நாளைக்கு 4 கொலையாவது நடக்கிறது.
தோசை கரண்டியால் அடித்து 
குக்கர் மூடியால் அடித்து 
வெய்யிலில் நிற்க வைத்து 
கழுத்தை இறுக்கி 
என்று பல உத்திகள்.
கொலை செய்யப் படுவது குழந்தைகள்.
கொல்வது அம்மாக்கள்.
காரணம் 
கள்ள உறவு. 
என்ன '' '' உடல் பசி????????????'' '' 
'' என் உடம்பு '' 
என் உரிமை 
என்ற கூச்சல் .
கலிகாலம். 

2019/05/20

கார்த்திக் resume
S.Karthikeyan

ponniyinselvan@india.com

M35C, Mahalakshmi Colony,

Kamaraj Nagar, Thiruvanmiyur,

Chennai - 41.

Ph: +91-44-4424847

Personal Details

Date of Birth 15th June 1981
Mother's Name V.Kalavathy,M.A,M.Ed,M.Phil,M.B.A.
Marital Status Single

Academic Details

 • Matriculation Exams (Std. X) June 1996

Malco Vidhyalaya Matric. Hr. Sec School, Mettur Dam.
959/1100 - 87%

 • Higher Secondary Course (Std. XII) June 1998

Govt. Hr. Sec School, Mettur Dam.

1131/1200 - 93%


 • Bachelor of Engineering (Computer Science and Engg.) June 2002
Anna University, Chennai.
CGPA - 6.6

Software Skills

Programming languages : C, C++, C#, ASP.Net, VB.Net, Java, Visual Basic, Assembly, MatLab
Operating systems : Windows, Unix, DOS
Databases : FoxPro, Oracle, Developer 2000

Electives

  • C# and .Net Programming
  • Advanced Java Programming
  • Visual Programming
  • Mobile Computing
  • Unix Internals
  • Neural Networks
  • Digital Speech and Image Processing
  • Robotics

Academic projects

Travel Planner C#
The software provides the functionality for manipulation of maps generated using an allied Map Generation Program. The user can plan his travel based on time and distance constraints. The project is founded upon Dijkstra's Shortest Path Algorithm and Travelling Salesman Problem.

Signature Recogniser Matlab
The project uses a Stroke-based approach for recognition of the signatures, where the signatures are trained as a series of strokes in a chain-code format. The concept of Dynamic Programming is used in the matching of signatures.
Multilingual Keyboard Simulator 8086 Assembly
This project realises the advantages provided by the Unicode encoding standard and the inherent capabilities of the browsers to display multi-lingual content. This enables the creation of multi-lingual web-pages that does not require installation of any fonts or special software.

Network Carrom Board Java
This is the implementation of the classic game of Carrom-board that can be played over a network by two persons in real-time.

Fractal Mountain Generation C
This Graphics-project generates a random mountain-scape continuously for application in games like Flight Simulators. The project implements it using Fractal Curves for 2-D landscape and the report discusses the changes required for a 3-D implementation.

English - Tamil Transliterator Visual Basic
This software was developed using the concepts of Compiler Design - Parsing and Lexical Analysis to generate documents in Tamil using the conventional English keyboard.

Compiler for C-like language C, Lex, Yacc

Library Automation Oracle, Developer 2000
Digital Voting Machine DigitalResponsibilities Held

 • Secretary of Computer Society of Anna University for 2001-02.
 • Vice President of Computer Society of Anna University for 2000-01.
 • Administrator and Design Committee Head of the web-site of SCSE: cs.annauniv.edu
 • Authored part of C Text Book for Computer Society members.
 • Conducted the following events:
 • Technical Quiz at SPARKS 1998 for Chennai School Students
 • Technical Quiz at EUREKA 1999 for First Year Students
 • Technical Quiz at UNDEFINED 2000 – Annual Intra University Contest
 • Technical Quiz at UNDEFINED 2001 – Annual Intra University Contest
 • Technical Quiz at ABACUS 2001 – National Level Tech. Symposium
 • General Quiz at Agni 2001 – Intra University.
 • Technical Quiz at ABACUS 2002 - National Level Tech. Symposium
 • General Quiz at Techofes 2002 – Intercollege meet


Areas of Interest

 • Systems Programming
 • Rapid Application Development
 • Web Designing and Programming
 • Artificial Intelligence
 • R&D in any related field


Additional Information

 • Secured 23rd rank in the State in Entrance Examinations and an Overall Rank of 81.
 • Attended a certificate course on Oracle conducted by Anna University.
 • Worked on a paper titled 'Design of an A.I. Model for Military Warfare'.
 • Working on a paper titled 'Design of an A.I. Model for e-Governance'.
 • Articles in Cursor - bi-monthly Technical Magazine of Computer Society - Get Linked to HTML (HTML Tutorial), Weird Wild Web (Web Review).


Other Interests
Reading Novels, Visiting Historical Places, Travel and Strategy Games.

Prizes in National Level Technical Symposiums

Event

College

Prize

Software Presentation

REC, Trichy

II

Software Presentation

Hindustan College

II

Software Presentation

REC, Nagpur

Presented

Software Presentation

CIT, Coimbatore

Presented

Software Presentation

Annamalai University

Presented

Software Presentation

K.S.R.Tech, Tiruchengode

Presented

Paper Presentation

V.R.S.E.C, Villuppuram

II

Paper Presentation

NITS, Chennai

Presented

Technical Quiz

C.I.T, Coimbatore

I

Technical Quiz

NITS, Chennai

I

Technical Quiz

K.S.R.Tech, Tiruchengode

I

Technical Quiz

Stella Maris College

II

Technical Quiz

Madha Engineering College

I

Technical Quiz

Hindustan College of Engg.

II

Technical Quiz

V.R.S.E.C, Villuppuram

II

Programming/Debugging

Sri Venkateswara College

I

Programming/Debugging

V.R.S.E.C, Villuppuram

I

Programming/Debugging

St.Joseph's College

II

Programming/Debugging

NITS, Chennai

II

Programming/Debugging

Rajalakshmi Engg.

II

Programming/Debugging

Hindustan College of Engg.

II

Programming/Debugging

REC, Trichy

III

Technical Crossword

Bharat Inst. of Sci. & Tech.

I

Declaration


I hereby declare that all the information provided above is true to the best of my knowledge.

Yours truly,

(S.Karthikeyan)
 

2019/05/13

என் அம்மாஎன் தந்தையானவன்.
என் மகனானவன்
என் உயிரானவன்.
இந்த தாய்க்கு தாயானவன்.
என் அன்னையும் இவனே.
என் அம்மாவும் இவனே.
என்ன செய்து என் உயிர் மகன் கார்த்திக்கிற்கு நான் பட்ட அன்பு கடனை தீர்ப்பேன்?
என் உயிரை உருக்கி நெய்யாக்கி விளக்கேற்றி
என்னையே தீபமாக்குகிறேன்
இந்த தெய்வத் தாய்க்கு
என் அன்னையான கார்த்தி தெய்வமே உன்னை வணங்குகிறேன்
*****

இவர் என்னை பெற்ற அன்னை .இவரும் ஒரு சாதனையாளர்
பன்முக திறமை கொண்டவர் .ஒரு சிறந்த தலைமை ஆசிரியர்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்
இது ஒரு மீள் பதிவு.
நாட்கள் ஓடுகின்றன.கார்த்தி மறைந்து 14 வருடங்கள் ஓடி விட்டன.
விரக்தி,சோகம்,ஏக்கம் என மனம் வெம்பி ஊமையாய் அழுது கொண்டே இருக்கிறது .
என் அம்மா

2019/04/18

தேர்தல்

மின்னணு இயந்திரம் பழுதாக வாய்ப்பில்லை.சரியான முறையில் அந்த கனெக்சன் கொடுக்க தடுமாறிவிடுவர் சிலர்.அதனால் வரும் பிரச்சினைதான் .ஆனால் மின்னணு இயந்திரம் பழுது என்று சொல்கிறார்கள்.
தவறு.தவறு.தவறு.
.........
வாக்கு சாவடி அதிகாரிகள் யார் வந்தாலும் எழுந்து நிற்க கூடாது என்பது மரபு..ஆனால் இன்று காலையில் நான் பார்க்கிறேன்.பிரபலங்கள் வந்தவுடன் அத்தனை பேரும்  எழுந்து நிற்கிறார்கள்.
......
வரிசையில் நிற்கிறார்கள்.!!!!!!!!!!!!!!!!!.
NO COMMENTS ....

2019/03/23

2005 வரை கார்த்தியின்  posts .அதன் பின் நான் [கார்த்திக் அம்மா தொடர்கிறேன்.]இது ஒரு மீள் பதிவே
A travelogue in pics.[this is posted by KARTHIK ]கார்த்திக்கின் 2005 u.S பயணம்

6/17
.
Coffee with Boeing! Cafe by the airside at London Heathrow

6/18

Outside Indianapolis Speedway


Formation lap


Narain Karthikeyan


Fox reports on US GP debacle

6/25

San Antonio Sea World

6/26

SCSE2002 Texans Get-together. Herbert Jose (he is now Hose ;), Arun aka Koopi, Sibi and the honorary Texan


Jet Skiing in Lake Travis, Austin

7/2

With Vijay aka <%youknowwhat%> at College Station, TX in front of his department.


Live music at the live music capital of the world(read US). 6th Street, Austin

7/4

Independence Day, downtown Austin

7/6

Tubing in Lake Georgetown

7/8

Stranded in Cincinnati airport after the flight missed me. Was one of the only 4 people in the whole airport that night. Ironically, I was watching 'The Terminal' on my GMini.

7/9

Perumal, me and Vasanth @ Peru's apartment in Jersey City. The view out of his window in Manhattan.


Ellis Island Museum. Remember the place Will Smith takes Eva Mendes to, in Hitch?


Been There Seen That


BTST


BTST


Scene at a NewYork Times Square Subway Station


Caricature of a caricature. Times Square

7/10

At Sai's house in Washington DC.


Hope diamond at Smithsonian Museum of Natural History. This was supposedly stolen from the idol of Sita from some temple in India and hence carries a curse!


National Archives. Remember the place Nicholas Cage steals the US Constitution in National Treasure?


Nilaava thottathu yaaru? Intha Karthikeyan thaan! Piece of rock from the moon


No. This was not part of my trip. But this ruined my planned trip to London. I even got the British visa the day before the blasts. But my mom denied me visa to go to London. :( (That makes me a victim of a terrorist attack, doesn't it?)

2019/03/22

என் பதிவுகள் :hacking

கொஞ்சமே கொஞ்சம் தெரிந்து கொண்டு கார்த்தியின் பிளாக்கை தொடர்கிறேன்.
ஆனால் இன்று side bar ல் பார்த்தால் கார்த்திக் in U .S ல்என்று வருகிறது. இந்த  பதிவு கார்த்திக்கால் 2005ல் எழுதப் பட்டது.
நான் இந்த பதிவை மீள் பதவி செய்ய ஒரு 3 மாதங்களிற்கு முன் முயற்சித்த போது என்னவோ தவறாகி போட்டோக்கள் ஒளிந்து கொண்டன.
அதனால் அந்த பதிவை draft ல் வைத்து விட்டேன் .publish கொடுக்கவில்லை.
ஆனால் இப்போது பிளாக்கில் அந்த பதிவு வருகிறது.
கோபமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது.
என்னுடன் விளையாடுவது யார்?
தயவு செய்து இந்த விளையாட்டை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இது போல் ஏற்கனவே நடந்துள்ளது.
மனது வருத்தப் பட்டது.
இப்போது மறுபடியும் தொடரும் போது
மனம் மிக மிக வருத்தப் படுகிறது

இந்த போட்டோக்களை மறுபடியும் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை.
வேதனையுடன்
கார்த்திக் அம்மா

வாசுகி (மலையாள படம் )

எப்போதாவது அரிதிலும் அரிதாக டி .வி யில் சினிமா பார்ப்பதுண்டு.அப்படி இன்று பார்த்த படம் வாசுகி.
நயன்+மம்மூட்டி .என்ன ஒரு அற்புதமான படம்.
பொள்ளாச்சி விவகாரம்தான்.
ஒரு 50 பெண்கள் அரைகுறை ஆடையுடன் குலுங்கி குலுங்கி டான்ஸ் ஆடவில்லை.
ஹீரோ பஞ்ச் டயலாக் பேசவில்லை.
ஒரு கையால் 40 வில்லன்களை தூக்கி வீசவில்லை.
லண்டன்,அமெரிக்கா என்று வெளிநாடுகளில் எடுக்கவில்லை.
ஒரு அபார்ட்மெண்ட் .ஒரு குடும்பம்.
மனைவி மொட்டை மாடியில் கற்பழிக்கப் படுகிறாள்.
அந்த 3 பேரை பழி வாங்கும் கதை.
நான் செய்யாத தவறுக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?
தவறு செய்தவர்கள் ஜாலியாக இருக்கும் போது நான் கஷ்டப் படமாட்டேன்.என்று முடிவு செய்யும் மனைவி அந்த 3 பேரை ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் உதவியுடன் கொலை (அவர்களாகவே சாகிறார்கள்).
இதில் கிளைமேக்ஸ் என்னவென்றால் பெண் அதிகாரி போல் பேசி தன் மனைவியின் திட்டங்களை (கணவர்தான் திட்டம் வகுத்துக் கொடுக்கிறார்.)நிறைவேற்ற உதவி செய்கிறார்.இது அந்த மனைவிக்கு தெரிவதில்லை.
என்ன ஒரு பெருந்தன்மையான கணவர்.
கோப  பட்டு,உணர்ச்சி வசப்பட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல்,மனைவியை துரத்தாமல் ,டைவர்ஸ் என்றெல்லாம் போகாமல்,குடித்து விட்டு ஒரு சோ சோ க  பாட்டு பாடாமல் ,கண கச்சிதமாக காரியம் செய்கிறார்.
மிகவும் பிடித்தது.
இறுதியில் மனைவியுடன் இல்லற வாழ்க்கையையும் தொடர்கிறார்.
ஒரே ஒரு 1% நெருடல்.
மனைவி கணவனிடம் மறைப்பது.
இந்த பொள்ளாச்சி விவகாரம் பாருங்கள்.
கலைஞர் டி வி யில் பார்த்தேன்.நல்ல சமயத்தில் நல்ல படம்.

2019/03/15

காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):

காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):
காலன்   (எமன் ) வர முடியாது என்பது இதன் பொருள்.சத்தியவான் உயிரை பறிக்க வந்த எமனிடம் சாவித்திரி பேசிப் பேசியே அவனிடம் வரம் பெற்றுகணவனை காப்பாற்றுகிறாள் என்பது கதை.
 எத்தனை நாட்களுக்கு இந்த கதையையே  சொல்லப் போகிறார்கள்?
சத்தியவான்  சாவித்திரி கதையை த்தான் சொல்கிறேன்.
ஒரு கற்புக்கரசி கண்களுக்கு மட்டும் எமன்   தெரிவார் என்றும் அவருடன் பேச முடியும் என்பதாக நம்ப வைக்கப் படுகிறது.என் கேள்வி என்னவென்றால் ,சாவித்திரிக்கு பிறகு யாருமே கற்புக்கரசிகளே இல்லையா?
எத்தனை 100 ஆண்டுகள் ?
எத்தனை மனைவிகள்கணவனை இழந்துள்ளனர்?அவர்கள் கண்ணுக்கெல்லாம்  எமதர்மன் தெரியவில்லையா?அவர்களுக்கெல்லாம் எமன் வரும் போது வரம் கேட்க தெரியவில்லையா?
போதும். போதும்.காதில் பூ சுற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.
உண்மையாக இந்த பங்குனி மாத பிறப்பிற்கும் இந்த விரதத்திற்கும் என்ன உண்மை அறிவியல் காரணம் (அப்படி ஏதாவது இருந்தால் ) சொல்லுங்கள்.கணவன் இல்லாவிட்டால் நீ அவ்வளவுதான்.என்பது போன்ற எண்ணங்களை பெண்கள் மனதில் உருவேற்றி அடிமைப் படுத்திய கொடுமையை களைய வேண்டிய பெண்ணியம்தான் தேவை.பெண்ணால் தனியாக சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்..
காலன் அடையா நோன்பு என்பதுதான் திரிந்து காரடையான் நோன்பாக ஆகி விட்டது.
நாமும் பொருள் புரியாமலே பல பண்டிகைகளை கொண்டாடுகிறோம்.
 கார்த்திக் அம்மா
இந்த சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் அவசர பட்டு பெண்கள் மாட்டிக் கொண்டு கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்  என்றுதான் முந்தைய .  பதிவில் சொல்லியிருந்தேன்.
வேகநரி 
i never advocated '' ''' பெண்ணடிமைத்தனம்'' ''.நானும் கணவனை  இழந்த பின் வாழ்க்கையில் சாதித்தவள்தான். எத்தனையோ போராட்டங்களை கடந்து வெற்றி   பெற்றவள். 
கார்த்தியின் இழப்புதான் என் ஒரே தோல்வி.
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா  
 

2019/03/12

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சொல்லும் செய்தி :
ஒரு வீட்டிற்கு சென்று இருந்த போது நடந்த விஷயம்.
அந்த வீட்டின் கணவனும் மனைவியும் நன்கு படித்தவர்கள்.நல்ல வேலையில் இருந்தவர்கள்.
அவர்களுக்கு 3 வயது ஆண் மகன் .நான் உட்கார்ந்து இருந்த இருக்கைக்கு எதிரில் நின்ற அந்த சிறுவன் தன பிறப்புறுப்பை தொட்டு தொட்டு பெருமையுடன் காட்டுகிறான்.அதை நான் பிரமாதமான விஷயமாக பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவனிடம்.
அவன் அம்மா முகத்தை பார்த்தேன்.
அவரும் அப்படி ஒரு பூரிப்புடனும் பெருமையுடனும் என்னை பார்த்தார்.
அப்படி என்றால் 3 வயது சிறுவனுக்கு தான் ஒரு ஆண் ,தன உறுப்பு அவ்வளவு பெரிய விஷயம் என்ற அளவில் அந்த மெத்த படித்த பெற்றோர்களே அவன் மனதில் பதிய வைக்கிறார்கள் என்றால்
இந்த கொடுமையை என்ன சொல்வது?
அதனால் பணம்,பதவி படைத்த ஆண்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த மிருகங்கள் செய்த கொடுமை சமுதாயம் கொடுத்த தைரியம்.
ஒரு ஆண் பெண்ணை போக பொருளாக ,அனுபவிக்க படைக்கப் பட்ட ஒரு சாதனமாக பார்க்க பழக்கப் படுத்தப் படுகிறான்.
எனக்கு தெரிந்த ஒரு தாய் பற்றி சொல்கிறேன்.
அந்த தாயின் மருமகள் பிள்ளை பேறுக்கு தன் தாய் வீட்டிற்கு சென்று இருக்கிறாள்.
அந்த தாய் சொல்கிறாள்.''இவள் பிள்ளை பெற்று திரும்பி வர 6 மாதம் ஆகும்.அது வரை என் மகன் சும்மா இருப்பானா? அவனுக்கு இடைப்பட்ட காலத்திற்கு இன்னொரு பெண் வேண்டும் ''
இப்படி ஆண்மகன் என்பவன் காம களியாட்டத்தில் மூழ்க வேண்டும் என்று வளர்க்கப் படுகிறான்.
இந்த எண்ணம் மாறவே மாறாது.
பெண்ணியவாதிகள் சண்டைக்கு வர வேண்டாம்.நீங்கள் சொல்லும் பெண்ணுரிமை ,பெண்ணும் ஆணும் சமம் என்ற வாதமெல்லாம் அந்த பெண்ணின் கதறலில் காற்றில் பறக்கிறது.
ஏன் ,வாங்கடா ,எத்தனை பேர் வேண்டுமானாலும் வாங்க என்று அந்த பெண் சொல்லியிருக்கலாமே.
ஆண் போல அந்த நிகழ்வை ''அனுபவித்திருக்கலாமே.''.
ஆண் கை  வீசி நடக்கிறான் .பெண் கர்ப்பம் அடைகிறாள்.
கர்ப்பமே இல்லாவிட்டாலும் உதிர போக்கு, PCOD என மென்மேலும் பிரச்சினைகள் தொடர்கின்றன.
அதனால் பெண்களே ,சற்று எச்சரிக்கையாய் இருங்கள்.
அந்த காலத்தில் பெண்கள் அடிமைகளாக நடத்தப படவில்லை.அவர்களின் மெண்மையான மனசு,அதனினும் மென்மையான உடல் இவற்றை கருத்தில் கொண்டே அவர்களை போற்றி வளர்த்தனர்.அவர்கள் சுயம்வரம் என்ற சுதந்திரம் பெற்றிருந்தனர்.யாருக்கு தோன்றியதோ.பெண்ணுரிமை என்ற வார்த்தையில் பெண்களுக்கு கொடுமைகள்தான் அதிகமாகிவிட்டது.
கார்த்திக் அம்மா

2019/03/06

பாக்கு

ஒரு கடைக்கு 2 சிறுமிகள் வந்தனர்.4 அ 5 வயது இருக்கும்.2 அடி  உயரம் கூட இல்லை.ஒரு சிறுமி பூமர் கேட்டு வாங்கிக் கொண்டாள் .அடுத்த சிறுமி என்ன கேட்டிருப்பாள் ???????
can u guess ???????????
பாக்கு ...என்றாள்
நான் இதை கவனித்து விட்டதாலோ என்னவோ
கடை பெண்மணி
'' ''அதெல்லாம் கேட்க கூடாது '' ''  என்கிறார்.
கடையில் இல்லை என்று சொல்லவில்லை.
விஷயம் புரிந்து கொண்ட (ஹா ஹா ,இந்த மரமண்டைக்கு அதிசயமாக எப்போதாவது இப்படி புரிந்து விடும். )
அந்த குட்டிப் பெண்ணை கண்டபடி கத்தி விட்டேன்.
அது என்ன பயந்ததா ?
ஒரு முறைப்பு  , அப்படியே எரித்து விடுவது போல் என்னை பார்த்தது.
இதற்கு மேல் அடி  கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற பயத்தில் நகர்ந்து விட்டேன்.

2019/02/24

கோரமங்களா ..கெளரி மங்களா

கோரமங்களா ..கெளரி மங்களா
ITS NOT Koramangala
Its GOWRIMANGALA
named after the Goddess GOWRI. meaning all prosperity .
But it has turned to be Koramankala  meaning rude,disfigured ,devilish.
I have asked so many to take this message to the Govt and change the name.
Its high time to change it so that more destructions can be avoided and prosperity and peace will prevail.
அது கோரமங்களா அல்ல.
கெளரி மங்களா .
ஒரு பெண் தெய்வத்தின் பெயர்.எல்லா வளங்களையும் மங்களத்தையும் தருபவள்.
காலப் போக்கில் அது மருவி கோரமங்களா  என ஆகி விட்டது என்பது என் அனுமானம்.
இந்த கோரமங்களா என்ற வார்த்தை என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.
கோரம் என்றால் குரூபம் ,அவலட்சணம்,கொடுமை என்ற அர்த்தங்கள் உண்டு.
நிறைய பேரிடம் இது பற்றி சொல்லி அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்து சொல்லுமாறு சொல்லி இருக்கிறேன்.
இப்போதாவது யாராவது இந்த முயற்சியை செய்யுங்கள்.
இந்த பெயர் மாற்றினால் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும் என்று நம்புகிறேன் .
கார்த்திக் அம்மா
 
.

2019/02/23

கார் தீ விபத்து

பெங்களூரு விமான  கண்காட்சி யில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 (அ ) குறைந்த பட்சம் 100 கார்கள் எரிந்து விட்டதான செய்தி வேதனை என்றால்
இன்னொரு விஷயத்தையும் கவனியுங்கள்.
அந்த காரில்தான் டிரைவிங் லைசென்ஸ் போன்ற பல ஆவணங்கள் இருந்திருக்கும்.
அவற்றை மீண்டும் பெறுவதற்கு அலையும் அலைச்சல் இருக்கிறதே அது இன்னும் பெரிய கொடுமை.
என்ன கிரக நேரமோ?
சமீபத்தில் நிறைய தீ விபத்துகள் .
நல்ல செய்திகள் மிகவும் அரிதாகிக் கொண்டிருக்கின்றன .
கார்த்திக் அம்மா

2019/02/15

My son என் மகன்

My son என் மகன்
எத்தனை இழப்புகள்..இன்று இரண்டு ஜவான்கள்.மனம் விரக்தியில்.
கார்த்திக் அம்மா

2019/02/12

சின்ன தம்பி

படைத்தவன் கொடுமைக்காரன்.
இந்த சின்ன தம்பிக்கு பேசும் திறன் இருந்தால் என்ன சொல்லுமோ ?
என் குடும்பம் வேண்டும் என்று கேட்குமோ?
எங்கள் வாழ்விடங்கள் எங்களுக்கே என்று சொல்லுமோ?
எங்களை வாழ விடுங்கள் என்று கதறுமோ?
எதை தேடி அலைகிறான் இவன்?
யாருக்கு புரிகிறது?
பாவமாக இருக்கிறது.
இறைவன் என்று ஒருவன் இருந்தால் இந்த அப்பாவியின் ஆசையை நிறைவேற்று.
வேண்டுதலுடன்
கார்த்திக் அம்மா

2019/01/26

திண்டுக்கல் தனபாலன்

நன்றி.நன்றி.
என்னருமை இளையவர் திண்டுக்கல் தனபாலன்.
இஸ்ரோ வீடியோ எடுக்கும் போது அதை போஸ்ட்டில் போடும் எண்ணம் இல்லை .ஆனால் அதை பார்த்த போது திடீரென அந்த எண்ணம் வந்தது.
வலையில் ஏதோ எழுத தெரியுமே அன்றி,மிக அதிக நுட்பங்கள் தெரியாது.
உதவிக்கு என்றவுடன் நினைவிற்கு வந்தவர் இந்த ''வலையுலக சித்தர் ''தான்.அவருக்கு போன் செய்தேன்.
என்ன அவசர வேலையில் இருந்தாரோ?
அவ்வளவு பொறுமையாக அன்பாக சொல்லிக் கொடுத்தார்.
எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.வாழ்க அந்த நல்லவர்.
..... ......
இன்று டெல்லியில் குடியரசு விழாவில் நம் தமிழ் நாடு ஊர்தி வந்தது.விவசாயிகள் கோவணத்துடன் ஏர் ஓட்டுவது போல் வந்தனர்.யார் இப்போது கோவணம் கட்டுகின்றனர்???? யார் ஏர் ஓட்டுகின்றனர்?
எல்லோரும் ட்ரேக்டர் தான் பயன்படுத்துகின்றனர்.
யாருக்கு வந்தது இந்த concept ?
கேவலம்.
.... .....
இஸ்ரோவிற்கு கண்டனம்:
11.40 க்கு விண்ணில் ஏவப்படும் என்று சொல்லி விட்டு 11.37 க்கே ஆரம்பித்து விட்டனர்.இன்னும் ஒரு 2 நிமிடம் லேட்டாக மொட்டை மாடிக்கு சென்று இருந்தால் ..அவ்வளவுதான்.

2019/01/25

wonderful.

wonderful

பார்த்தேன்..பார்த்தேன்

அற்புதம்.
அபாரம்.
Fabulous
இன்னும் என்ன என்னவோ சொல்லலாம்.
இஸ்ரோ வாழ்க அங்கு பணி புரியும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ஒரு நொடி பயந்து விட்டோம்.கண்ணில் இருந்து மறைந்த உடன் failure ஆகி விட்டதோ என்ற வருத்தத்தில் உறைந்து விட்டோம்.
வெற்றி என்றவுடன் நிம்மதி ஆயிற்று.
கார்த்திக் அம்மா

2019/01/23

ஓய்வூதியம்

சிரிக்கிறதா அழுகிறதா
தெரியல.
அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
ஓய்வூதியம் கேட்கிறார்கள்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்தான் கன்றாவியாக இருக்கிறது.
''58 வயதுக்கு அப்புறம் எங்கள் சாப்பாட்டிற்கு என்ன வழி ?நாங்கள் எப்படி பிழைப்பது ?
என்று ஒரு பெண் ஒரு டி .வி நேரலை நிகழ்ச்சியில் கேட்கிறார்.
ஒரே ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள் .
8 கோடி மக்கள் உள்ள தமிழ் நாட்டில் 10 லட்சம் பேர் மட்டும்தான் அரசு பணியாளர்கள்.
இவர்கள் மற்ற தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோரை பார்த்ததே இல்லையா ?
ஒரு ஸ்விக்கி நபர் எத்தனை தூரம் ஒரு நாளுக்கு பைக்கில் பறக்கிறார்.
கம்ப்யுட்டர் கம்பெனிகளில் வேலை செய்யும் இளைஞர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் கூட வேலை செய்கிறார்கள்.
இவர்களில்  யாருக்கு ஓய்வூதியம் இருக்கிறது?
இவர்களுக்கு 58 வருடம் என்ற பணி பாதுகாப்பு கூட கிடையாது.
இதே ஊழியர்கள் வேலையில் சேரும் போது ஓய்வூதியம் இல்லை என்ற நிபந்தனையை ஒத்துக் கொண்டுதானே சேர்ந்தார்கள்.
கொஞ்சம் மனசாட்சியுடன் ஒரே ஒரு நிமிடம் நீங்கள் செய்யும் வேலையின் அளவையும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோரின் வேலை அளவையும் கம்பேர் செய்து பாருங்கள்.
ஊதிய உயர்வை தவிர உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் திட்டங்களை என்றாவது கேட்டு இருக்கிறீர்களா .
அப்படியே தப்பி தவறி அரசு ஏதாவது செமினார் நடத்தினால் அந்த வகுப்புகளில் சின்சியராக கலந்து கொண்டு ஏதாவது கற்றுக் கொள்கிறீர்களா ?
எப்போது பார்த்தாலும்
சம்பளம் போதவில்லை.
சம்பளம் போதவில்லை.
இதே பாட்டு.
ஒரே ஒரு நாள் CBSE வகுப்பிற்கு சென்று பாடம் நடத்தும் சவாலை ஏற்கிறீர்களா ?
வெறுப்புடன்

பஜ்ஜி +சொஜ்ஜி

கார்த்தி,செந்திலுக்கு ஒரு 8,10 வயது இருக்கும்.ஒரு நாள் நான் அவர்களிடம் ''நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணக் கூடாது.நான் பெண் பார்க்கப் போய் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடனும் ''என்றேன்.
அதற்கு அந்த செல்லங்கள் தந்த பதில்:
'' ;; அம்மா பஜ்ஜி சொஜ்ஜி கடையில் வாங்கி கொடுத்து விடுகிறோம் .நாங்கள் லவ் பண்றோம்மா please  please ''
நாங்கள் மூவர் கூட்டணி.
என் கணவருக்கு இந்த வார்த்தை விளையாட்டுகள் எல்லாம் அலர்ஜி .கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.
என்னதான் IISC பெங்களூரில் படித்திருந்தாலும் பக்கா கிராமத்தான்.
அவரும் எங்களை கண்டு  கொள்ள மாட்டார்.
நாங்களும் எங்கள் ராஜ்ஜியத்தில்.
அது சரி ...
அது என்ன பஜ்ஜி+சொஜ்ஜி
பஜ்ஜி தெரியும்.
சொஜ்ஜி ???????
அது சூஜி ..ஹிந்தியில்
தமிழில் ரவை
கேசரி.
உடனடியாக செய்யக் கூடிய இனிப்பு என்பதால் கேசரி செய்தார்களோ என்னவோ.
சுஜி என்பதே சொஜ்ஜி என்று மாறியது.
அதே போல் ஒரு நாள் கார்த்தி செந்திலிடம் சொன்னான் :
''you are goodly bad ''
செந்திலின்உடனடி பதில் 
'' ''you are rightly wrong ''
இப்படி 
pun and fun ஆக சென்று கொண்டிருந்த வாழ்க்கை தலை கீழாக மாறி நான் ஊமையாக உலவும் கொடுமை.

2019/01/22

அந்த பொம்பிள

அந்த பொம்பிள :
அட கொடுமையே%%%%%%%%%%%
ஒருவர் தொலை காட்சியில் பேசுகிறார்.
இந்த போராட்ட குழுவிடம் பேச ஒரு பெண் அதிகாரியை (அதிகாரிகளில் பெண் என்ன ஆண்  என்ன ) நியமித்துள்ளது அரசு.
சில மாதங்களுக்கு பின் அந்த ''பெண் அதிகாரி '' என்ன காரணத்திற்காகவோ அவர் விடுவிக்கப் பட்டுள்ளார்.
அதை பற்றி டி .வி யில் பேசுபவர் சொல்கிறார்.
'' '' ''அந்த பொம்பிள ஓடி போயிடுச்சி '' 
அதே கதைதான் மறைந்த முதல்வர் ஜெ விற்கும்.
அவரும் அந்த பொம்பிளை ஆகினார். 
கொடுமை. 

2019/01/12

நால்வர்

Four Dogs lol  lolling :
அத்தனை சேனல்களும் ஒரு மணி நேர நிகழ்ச்சி விவாத மேடை நடத்துகின்றன. அதில் ஒருவராவது மற்றவரை பேச விடாமல் நாய் கத்து பேய் கத்து கத்துகிறார்.
இப்போது சன் டி .வி 12ம் தேதி 8 மணி நிகழ்ச்சி பார்த்து கொண்டிருக்கிறேன்.அதில் ஒருவர் மற்ற எவரையும் பேசவே விடவில்லை.
என் கேள்வி :
ஏன் சம்பந்தப் பட்டவரின் மைக்கை off செய்ய முடியாதா?
அந்த நெறியாளர் எவ்வளவோ பொறுமையாக சொல்கிறார்.
ஆனால் அந்த நபர் கேட்கவேயில்லை.
அவரின் மைக்கை நிறுத்த டெக்னிகள் முறை எதுவும் இல்லையா?

2019/01/10

1000 ரூபாய்

1000 ரூபாய் :
தேவையா ????????
எங்கள் குடியிருப்பில் அனைவரும் மிகவும் பணக்காரர்கள்.
யாருக்கும் 100000 கம்மி வருமானம் இல்லை. DOMESTIC HELP (வீட்டு வேலை செய்யும் பெண்மணி )போய் வரிசையில் நின்று 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டார்....
என்ன செய்தார்கள்?????????
ஆஹா ..இலவசமாக வந்துதானே.
அன்று இரவே பிட்ஸா வாங்கி சாப்பிட்டு 1000 ரூபாயை செலவு செய்து விட்டனர்.
அவர்களின் இரவு  உணவின் விலை 1000/.
தேவையா???????????
சரி .
ஏழை (அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை.)1000 ரூபாய் the so called ''சுடி '' வாங்குவார்கள்..
மதுவுக்கு அடிமை போல் இலவசத்திற்கு அடிமையாக்கி அவர்களை போதை யிலேயே வைத்திருக்கும் கொடுமையை என்ன சொல்வது????

2019/01/08

10% இட ஒதுக்கீடு

10%   இட ஒதுக்கீடு
பிராமணர்கள் ,பட்டியல் இன  மக்கள் இருவரையும் ஒரே தட்டில்தான் வைத்திருந்தேன்.
சக மக்கள் ....என்ற தட்டில்.
ஆனால்
போன மாதம் என் வீட்டிற்கு ஒரு பிராமண பெண்மணி வந்திருந்தார்.
பேச்சின் நடுவே அவர் சொன்னார்  பாருங்கள் ஒரு விஷயம்.என் பக்கம் கையை நீட்டி :'' நாங்கள் 100 மார்க் ...நீங்கள் 20 மார்க் '' ''
அதாவது நான் ( அதாவது பிராமணர் அல்லாத நான் முட்டாள்.எனக்கு இட ஒதுக்கீடு  இருந்ததால்தான் படிப்பு,வேலை எல்லாம் )என்கிறாரே பார்க்கலாம்.
எப்படி இவர்களுக்கு இப்படி ஒரு superiority complex ??????????
நான் மட்டும் அல்ல .என்னுடன் படித்த பலரும் நல்ல மதிப்பெண்கள் பெற்றே முன்னேறினர்.
இப்போது cut off மதிப்பெண்கள் பாருங்கள்.
FC 99% என்றால்
MBC 97%
SC 95 % என்ற அளவில் தான் இருக்கிறது.
என்னவோ ''அவர்கள் ''அனைவரும் 100% வாங்கி இடம் கிடைக்காதது போலவும்,SC மாணவர்கள் 20% மதிப்பெண் மட்டுமே வாங்கி கல்லூரியில் இடம் பெற்றார்கள் என்பது போலவும் காலம் காலமாக கதை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்து கேட்டால் நாங்கள் வசதி இல்லாதவர்கள் .வேலை பார்த்துக் கொண்டே கஷ்டப் பட்டு படிக்கிறோம்.
என் வீட்டிற்கு பேப்பர் போடும் பையன் +2 படிக்கிறான்.தேர்வு அன்றும் பேப்பர் போட்டு விட்டு ஓடிப் போய் தேர்வு எழுதுகிறான்.
நான் வேலை பார்த்த போது கல்வி கட்டணம் கட்டாத மாணவர்களை நெருக்கினால்  அடுத்த நாள் வர மாட்டான். எங்கே அவன் என்று சக மாணவர்களை கேட்டால் டைடல் பார்க்கிற்கு கண்ணாடி துடைக்க,அல்லது பெயிண்ட் அடிக்க போயிருக்கிறான் என்று பதில் வரும்.
எதற்காக
தேர்வு கட்டணம் கட்ட.....
என் மாணவன் ஒருவன் (எனக்கு வேலை கிடைத்து விட்டது '')என்றான்.அட உனக்கெல்லாம் யார் வேலை கொடுத்தார்கள் என்று கலாய் த்தேன்.
அங்கு வந்தவர்களிலேயே நாங்கள்தான் நன்கு பதில் சொன்னோம்.அடுத்து அவன் சொன்னதை சொன்னால் தற்பெருமை பேசுவதே என் பழக்கம் என்று கமெண்ட் வரும் என்பதால் அதை விட்டு விடுவோம்.
ஆனால் ஜாதி மதம் மீறி மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள் என்பதே உண்மை.
எங்களுக்கு மட்டும்தான் அறிவு என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

2018/12/25

தலித் அனுமன்

தலித் அனுமன் :
WONDERFUL :
பிரமாதம்.
சாமிக்கும் ஜாதி,கட்சி கொண்டு வந்துட்டாங்க .
அனுமன் தலித்.
ராமன் சத்திரியன்.
சுடுகாட்டில் திரிவதாக சொல்லப் படும் சிவன் வெட்டியான்.
லட்சுமி செட்டியார்.
எங்களுக்கு மட்டுமே படிப்பும் அறிவும் என்று சொல்வதால் சரஸ்வதி பிராமின்.
இரு ஆண்களுக்கு GAY பிறந்ததால் அய்யப்பன் திருநங்கை.
கையில் கொடுவாளோடு இருப்பதால் முனியப்பன் வன்னியர்.படையில் கொடுவாளோடு செல்வதால் அப்படி சொன்னேன்.
.....இப்படி ஒரு காலம் வரும்.
அப்போது எந்த எந்த சாதியினர் எந்த எந்த கடவுளை கும்பிடலாம் என்ற சட்டம் வந்தாலும் வரலாம்.
......
நாட்டில் எத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன.
இதையெல்லாம் விட்டு விட்டார்கள்.
சாமிக்கு ஜாதி கண்டுபிடிக்கிறார்கள்.
காலம் கலிகாலம்.
ஆளுக்கொரு statement .யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.
ஒரே ஒரு கண்டிஷன் .ஒரு குறிப்பிட்ட தலைவர்களை பற்றி மட்டும் வாய் திறக்கக் கூடாது.
குண்டாஸ்தான்
பயமாய் இருக்கிறது.
கார்த்திக் அம்மா

2018/12/17

கார்த்தி சிலை

கலைஞரின் சிலை செய்த சிற்பி தீனதயாளன் அவர்தான் கார்த்தியின் இந்த சிலையும் செய்தார்.
பெருமை இல்லை.வேதனைதான்.
23 வயதில் சிலையாவது தவறு.
தாய்க்கு துன்பம் அளவிட முடியாதது.
கண்ணீருடன்
கார்த்திக் அம்மா