About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/07/17

தேங்கா சுடுற நோம்பி

 தேங்கா சுடுற நோம்பி::

இது என்ன கமல் பாஷை  மாதிரி இருக்கா ...இது எங்க சேலத்து மொழி.

நோன்பு என்பதுதான் '''நோம்பி'''  என்று ஆகி விட்டது.வாழ்க எம் சேலம் மக்கள்.

அது என்ன பண்டிகை என்றால் ஹி ஹீ ...எல்லா டி .வி சேனல்களும் சொல்லி விட்டன.தேங்காயில் அரிசி,வெல்லம் ,எள் ,கடலை அடைத்து நெருப்பில் சுட்டு சாமிக்கு ''படைத்து'' சாமியின் represntative ஆக நாமே சாப்பிட்டு விடுவது.

HERE COMES THE SCIENCE BEHIND IT :

என்ன விஷயம் என்றால் ,

ஆடி மாதம் புது புனல் (அதாங்க  தண்ணீர் ) காவிரியில் புது தண்ணீர் (ஒரு காலத்தில் கரை புரண்டு ஓடும் ...இப்போது சிலர் தயவு செய்தால் மட்டுமே )  .புது நீர் என்பதால் நோய் தாக்கம் அதிகம் இருக்கும்.

..அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்த வேண்டும்.

தேங்காய் பாலில் அந்த சக்தி அதிகம் .+எள் +etc .மக்களை இது நல்லது என்று அறிவியல் பேசினால் கேட்க மாட்டார்கள்.

அதனால் ''சாமி'' பேரை சொல்லி பண்டிகை ஆக்கி விட்டால் ,கேள்வி கேட்காமல் செய்வார்கள்.

இதனால் அனைவருக்கும் தெரிய படுத்துவது யாதெனில் இந்த மாதம் தேங்காய் அதிகம் பயன் படுத்துங்கள் .நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவை உண்ணுங்கள் .எளிதில் சீரணிக்கும் உணவை உண்ணுங்கள்.

(இதனால் பலர் இந்த மாதம் அசைவம் தவிர்ப்பர் ).

'' சொல்றத சொல்லிட்டேன் ''

பி .கு.

என் அப்பாவிற்கு ஆடி மாதம் என்றால் சந்தோசம்.ஏன்  என்றால்  சளி காய்சசல் என்று நோயாளிகள் எண்ணிக்கை என் அண்ணாவின் மருத்துவ மனைக்கு அதிகரிக்கும்.அண்ணாவின் வருமானம் அதிகரிக்கும் என்பது அவர் கணக்கு.

மற்றவரின் துன்பத்தில் இப்படி ஒரு கணக்கா என்று அவரிடம் கேட்டு விட்டால் எனக்கு திட்டு.

இன்னொரு பி .கு 

சேலம் விட்டு சென்னை வந்து 21 வருடங்கள் ஆகி விட்டது.சேலம் பாதி மறந்து விட்டது.

2021/07/14

காரும் வரியும்

இன்று ஒரு பெண்ணை பார்த்தேன்.வறுமை.வறுமை.ஏதாவது வேலை கொடுங்கள் என்று கேட்டது அந்த வறுமையின் திரு உருவம்.வேலை இல்லை என்று சொல்லி விட்டு ஒரு சிறு தொகையை கையில் கொடுத்தேன்.அந்த பணம் கிடைத்ததே என்று  மகிழ்ச்சி  இல்லை அந்த .வேலை  இல்லை என்ற வேதனைதான் . இப்படி மக்கள் உணவிற்காக தவிக்கும் வேளையில் 100 கோடி என்று சம்பளம் வாங்குவதாக சொல்லப் படும் பிரபலங்கள் செய்யும் தவறுகள் மனதை வேதனை படுத்துகிறது.

சச்சின் வாங்கிய காருக்கு வரி விலக்கு கொடுத்தது நியாயமா?

அவர் காசு வாங்காமல் விளையாட வில்லையே?.பணத்திற்காகவும் புகழுக்காகவும் விளையாடினார்.பணம் வேண்டாம் .நாட்டுக்கு நான் செய்யும் சேவை என்று சொல்லியிருந்தால் பாராட்டலாம் .வரி விலக்கு தரலாம்.

அதே போல் அவர் மகன் பயிற்சிக்கு சென்ற போது தனி வீடு எடுக்கும் அளவிற்கு வசதி இல்லை என்று சொல்லி அரசு விடுதியை 18 ரூ வாடகைக்கு அபகரித்தார்.அதை ஒரு ஏழை க்கு கொடுத்து இருக்கலாம்.

இப்போது நடிகர்கள்.தன் கடைக்கு வாடகை கட்ட முடியாது என்று ஒருவர்.

ஏழைகள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கு வாடகை தரவில்லை .

இப்போது இவர்.

அவர் வீட்டையும் கார்களையும் காட்டுகிறார்கள்.மலைப்பாக இருக்கிறது.150 கோடியில் வீடு கட்டிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.அதில் 10ல் ஒரு பங்கு கூட இல்லை இந்த வரி.

இவர் இந்த வரியை கட்டினால் பல பள்ளிகள் ,மருத்துவ மனைகள் ,சாலைகள் என்று எத்தனையோ செய்யலாம்.

1986ல் பணியில் சேர்ந்தேன்.2 வருடம் வரி கட்டவில்லை.NSC BONDS வாங்கினால் வரி கட்ட வேண்டாம் என்று வரி கட்ட விடாமல் செய்தார்கள்.......3வது  வருடம் சிங்கம் சிலிர்த்து கொண்டது.

வரி கட்டுவேன் என்று (ஒற்றை காலில் அல்ல )  2 காலிலும் நின்றேன்.அன்றிலிருந்து இன்று வரை தவறாமல் வரி கட்டுகிறேன்.

அதனினும் கொடுமை ...என்னுடன் பணி புரிந்தவர்களை மிரட்டி, உருட்டி,கெஞ்சி , கொஞ்சி எல்லோரையும் வரி கட்ட வைத்தேன்.

அப்போதெல்லாம் சம்பளம் மிகவும் கம்மி .ஆனாலும் சந்தோஷமாக வரி கட்டினோம்.5கோடி கார்,150 கோடி வீடு என்றெல்லாம் பார்க்கும் போது  ??????????.

இத்தனை கேள்விகள் கேட்ட நீதிபதிக்கு வணக்கங்கள்.

2021/07/12

poster, teaser

 ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் speaker கட்டி துண்டு சீட்டு கொடுத்து என்ன சினிமா என்று தெரிய படுத்துவார்கள்.

பெட்டி வந்துடுச்சு என்று உற்சாகமாக படம் பார்த்த காலம் போய் ,

டிஜிட்டல் vfx  என்று ஏதோ தோ வந்து விட்டது.

ஆனால் இந்த firstlook ,டீஸர்,போஸ்டர் ,மோஷன் போஸ்டர் என்ற அலப்பறைகள் எல்லை மீறி போகிறது.

update என்ற வார்த்தை உலகத்தையே ஆட்டி படைக்கிறது.

கொண்டாட்டம் ,வைரல் ,ட்ரெண்டிங் என்று 10 மில்லியன் பார்வை ,உலக சாதனை என்று இந்த வியாதி அதிசயமாக இருக்கிறது.

இப்படி ஒரு teaser வந்து விட்டதால் தங்க விலை குறைந்து விடும்.

கொரோனா ஓடியே போய்விடும்.மக்கள் அனைவருக்கும் எல்லா  கஷ்டங்களும் தீர்ந்து சொர்க்க வாழ்க்கை வாழ போகிறார்கள்.

இந்த பைத்தியக்கார வியாதிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.