இன்று ஒரு பெண்ணை பார்த்தேன்.வறுமை.வறுமை.ஏதாவது வேலை கொடுங்கள் என்று கேட்டது அந்த வறுமையின் திரு உருவம்.வேலை இல்லை என்று சொல்லி விட்டு ஒரு சிறு தொகையை கையில் கொடுத்தேன்.அந்த பணம் கிடைத்ததே என்று மகிழ்ச்சி இல்லை அந்த .வேலை இல்லை என்ற வேதனைதான் . இப்படி மக்கள் உணவிற்காக தவிக்கும் வேளையில் 100 கோடி என்று சம்பளம் வாங்குவதாக சொல்லப் படும் பிரபலங்கள் செய்யும் தவறுகள் மனதை வேதனை படுத்துகிறது.
சச்சின் வாங்கிய காருக்கு வரி விலக்கு கொடுத்தது நியாயமா?
அவர் காசு வாங்காமல் விளையாட வில்லையே?.பணத்திற்காகவும் புகழுக்காகவும் விளையாடினார்.பணம் வேண்டாம் .நாட்டுக்கு நான் செய்யும் சேவை என்று சொல்லியிருந்தால் பாராட்டலாம் .வரி விலக்கு தரலாம்.
அதே போல் அவர் மகன் பயிற்சிக்கு சென்ற போது தனி வீடு எடுக்கும் அளவிற்கு வசதி இல்லை என்று சொல்லி அரசு விடுதியை 18 ரூ வாடகைக்கு அபகரித்தார்.அதை ஒரு ஏழை க்கு கொடுத்து இருக்கலாம்.
இப்போது நடிகர்கள்.தன் கடைக்கு வாடகை கட்ட முடியாது என்று ஒருவர்.
ஏழைகள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கு வாடகை தரவில்லை .
இப்போது இவர்.
அவர் வீட்டையும் கார்களையும் காட்டுகிறார்கள்.மலைப்பாக இருக்கிறது.150 கோடியில் வீடு கட்டிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.அதில் 10ல் ஒரு பங்கு கூட இல்லை இந்த வரி.
இவர் இந்த வரியை கட்டினால் பல பள்ளிகள் ,மருத்துவ மனைகள் ,சாலைகள் என்று எத்தனையோ செய்யலாம்.
1986ல் பணியில் சேர்ந்தேன்.2 வருடம் வரி கட்டவில்லை.NSC BONDS வாங்கினால் வரி கட்ட வேண்டாம் என்று வரி கட்ட விடாமல் செய்தார்கள்.......3வது வருடம் சிங்கம் சிலிர்த்து கொண்டது.
வரி கட்டுவேன் என்று (ஒற்றை காலில் அல்ல ) 2 காலிலும் நின்றேன்.அன்றிலிருந்து இன்று வரை தவறாமல் வரி கட்டுகிறேன்.
அதனினும் கொடுமை ...என்னுடன் பணி புரிந்தவர்களை மிரட்டி, உருட்டி,கெஞ்சி , கொஞ்சி எல்லோரையும் வரி கட்ட வைத்தேன்.
அப்போதெல்லாம் சம்பளம் மிகவும் கம்மி .ஆனாலும் சந்தோஷமாக வரி கட்டினோம்.5கோடி கார்,150 கோடி வீடு என்றெல்லாம் பார்க்கும் போது ??????????.
இத்தனை கேள்விகள் கேட்ட நீதிபதிக்கு வணக்கங்கள்.
1 comment:
ஆளுக்கு ஏற்ற நீதி...
Post a Comment