About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/07/17

தேங்கா சுடுற நோம்பி

 தேங்கா சுடுற நோம்பி::

இது என்ன கமல் பாஷை  மாதிரி இருக்கா ...இது எங்க சேலத்து மொழி.

நோன்பு என்பதுதான் '''நோம்பி'''  என்று ஆகி விட்டது.வாழ்க எம் சேலம் மக்கள்.

அது என்ன பண்டிகை என்றால் ஹி ஹீ ...எல்லா டி .வி சேனல்களும் சொல்லி விட்டன.தேங்காயில் அரிசி,வெல்லம் ,எள் ,கடலை அடைத்து நெருப்பில் சுட்டு சாமிக்கு ''படைத்து'' சாமியின் represntative ஆக நாமே சாப்பிட்டு விடுவது.

HERE COMES THE SCIENCE BEHIND IT :

என்ன விஷயம் என்றால் ,

ஆடி மாதம் புது புனல் (அதாங்க  தண்ணீர் ) காவிரியில் புது தண்ணீர் (ஒரு காலத்தில் கரை புரண்டு ஓடும் ...இப்போது சிலர் தயவு செய்தால் மட்டுமே )  .புது நீர் என்பதால் நோய் தாக்கம் அதிகம் இருக்கும்.

..அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்த வேண்டும்.

தேங்காய் பாலில் அந்த சக்தி அதிகம் .+எள் +etc .மக்களை இது நல்லது என்று அறிவியல் பேசினால் கேட்க மாட்டார்கள்.

அதனால் ''சாமி'' பேரை சொல்லி பண்டிகை ஆக்கி விட்டால் ,கேள்வி கேட்காமல் செய்வார்கள்.

இதனால் அனைவருக்கும் தெரிய படுத்துவது யாதெனில் இந்த மாதம் தேங்காய் அதிகம் பயன் படுத்துங்கள் .நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவை உண்ணுங்கள் .எளிதில் சீரணிக்கும் உணவை உண்ணுங்கள்.

(இதனால் பலர் இந்த மாதம் அசைவம் தவிர்ப்பர் ).

'' சொல்றத சொல்லிட்டேன் ''

பி .கு.

என் அப்பாவிற்கு ஆடி மாதம் என்றால் சந்தோசம்.ஏன்  என்றால்  சளி காய்சசல் என்று நோயாளிகள் எண்ணிக்கை என் அண்ணாவின் மருத்துவ மனைக்கு அதிகரிக்கும்.அண்ணாவின் வருமானம் அதிகரிக்கும் என்பது அவர் கணக்கு.

மற்றவரின் துன்பத்தில் இப்படி ஒரு கணக்கா என்று அவரிடம் கேட்டு விட்டால் எனக்கு திட்டு.

இன்னொரு பி .கு 

சேலம் விட்டு சென்னை வந்து 21 வருடங்கள் ஆகி விட்டது.சேலம் பாதி மறந்து விட்டது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தகவல்...