About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/10/30

புனீத் ராஜ்குமார்

 புனீத் ராஜ்குமார் :

எவ்வளவு பேர் இறுதி மரியாதை செலுத்துகிறார்கள்.

எவ்வளவு பேருடைய அன்பை சம்பாதித்து இருக்கிறார் .

எத்தனை அநாதை ஆசிரமங்கள் 

முதியோர் இல்லங்கள் 

எண்ணற்ற சேவைகள் .மலைப்பாக இருக்கிறது.

நடிகர்கள் என்றாலே ஒரு வித எதிர்மறை எண்ணத்தில் இருந்த நான் இவரின் சேவை லிஸ்ட்டை பார்த்து அசந்து விட்டேன்.

....

ஆனால் இவரின் ஜிம் உடற்பயிற்சி பார்த்து பயந்தே விட்டேன்.

என்ன மனிதர்.

தரையில் இருந்து 4 அடி உயரம் எழும்புகிறார்.தாவுகிறார்.குதிக்கிறார்.

ஐயோ .திகீர் என்றாகி விட்டது எனக்கு.அதிர்ந்தே விட்டேன்.

இவ்வளவு கடுமையான பயிற்சிகள் தேவையா?

..செந்திலின் நண்பன் வினோத்.L .K .G யில் இருந்து ஒன்றாக படித்தவர்கள்.

படித்து முடித்து நல்ல வேலை.அடுத்து என்ன பெண் பார்க்கும் படலம்தானே.சற்று குண்டு உடம்பு.

சில பெண்கள் மறுத்து விட்டன.

உடம்பை குறைக்கிறேன் என்று ஜிம்முக்கு போக ..அங்கு ஏதோ டயட் ..ஒரு நாள் மாலை நேரத்தில் வீடு திரும்பி இருக்கிறான்.நண்பர்கள் சேர்ந்து தங்கி இருந்தனர்.எனக்கு சோர்வாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறான்.நண்பர்கள் ரெஸ்ட் எடு என்றிருக்கிறார்.சிறிது நேரம் கழித்து நெஞ்சு வலிக்கிறது என்றிருக்கிறான்.

நண்பர்கள் பயந்து ஆட்டோவிற்கு தேட ,ஆம்புலன்ஸ் வராமல் போக ,மருத்துவமனைக்கு செல்வதற்குள்  எல்லாம் முடிந்து விட்டது.

அப்பா மேட்டூரில் இருந்து வந்து கதறி என்று வழக்கமான நடைமுறைகள்.

என் கேள்வி :

என்ன அழகு?

என்ன குண்டு ,ஒல்லி என்ற வார்த்தைகள்?

ஆரோக்கியம் முக்கியம்.

ஒரு காலத்தில் எனக்கு அநாமதேய கடிதங்கள் வரும்.

என்னுடைய 36 வது  வயதில் ஒரு கவிதை வந்தது.

..''  ''அக்கறை எடுத்து அலங்கரித்து கொண்டால் ,

ஆரணங்கு நீ என அறிவாயோ?''  ..எனக்கு தெரியும்.அது என் சக ஆசிரியை எழுதிய கவிதை.ஏனென்றால் எந்த காலத்திலும் என்னை அழகு படுத்தி கொள்ள ஆர்வம் காட்டியதில்லை.

என் மிக நெருங்கிய உறவினர் தன் மகனுக்கு என்னை திருமணம் செய்ய விரும்பியும் ''பெண் style ஆகவே இல்லை'' என்று சொன்னான்.

அழகு என்ன அழகு?

ஆயுள் வேண்டும்.

46 வயதில் இவர்.  இவரின் பாதி வயதில் KARTHI .  30 வயதில் வினோத். இன்னும் எத்தனை பேர்??

நெஞ்சம் சுய நினைவை இழந்து நிற்கிறது.

 

2021/10/24

எதை எழுதுவது

 நானும் ஏதாவது புதிய , சுவையான விஷயம் பற்றி எழுதலாம் என்று பார்க்கிறேன்.

ஆனால் 21 கிலோ தங்கம் ,500 கிலோ வெள்ளி என்ற ஊழல் செய்திகள்தான் டி .வி சேனல்களில் ஓடுகின்றன.

இல்லையேல் யார் யாருடன் ஓடி போனார்கள் ,கள்ள காதலால் மனைவி கணவனை கொலை செய்வது, நடு ரோடில் 6 பேர் சேர்ந்து ஒருவரை வெட்டி சாய்ப்பது போன்ற செய்திகள்தான்.

மக்கள் மக்களாகவே இல்லை.

ஏன் இந்த பேராசை ?

எதற்கு இந்த வெறி ?

பணத்தாசை 

பெண்ணாசை 

 குறுக்கு வழியில் வரும் அளவு கடந்த பணம் ,தவறான அதிகாரம் தரும் திமிர் ...எல்லாம் ..ஆர்தர் போன்ற இடங்களில் ...

அரசியல் வாதிகள் பற்றி சொல்லவே வேண்டாம் .

நாடு நாடாகவே இல்லை.