About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2023/09/18

சனாதனம்

 சனாதன தர்மம்.

இப்போது எல்லோரும் பேசும்  ஒரு வார்த்தை இதுதான்.

" ஜாதிகள் இருக்க வேண்டும் என்பதுதான் சனாதன தர்மத்தின் அடிப்படை கோட்பாடு என்று அறிய படுகிறது.

ஜாதிகள் ஏன் வந்தது?
ஜாதிகள் வேண்டுமா??

.....பழங் காலத்தில் மக்களை ஒரு ஒரு குழுவாக பிரித்து 

'நீ விவசாயம் செய்.

நீ வியாபாரம் செய்.

நீ தச்சு தொழில் செய்.

நீ தூய்மை பணி  செய் என்று நியதி வகுத்தனர்.

வழி வழியாக ,தலை முறை தலைமுறையாக இப்படியே நடக்க குழுக்களுக்கென தனி மொழி வழக்கு ,தனி சடங்குகள்,தனி உடைமுறை என வழக்கம் வந்து விட்டது.

அப்போதெல்லாம்' என்ன பிள்ளை வாள் சௌக்கியமா ?

கவுண்டர் நன்னா இருக்கேளா ?

ஆசாரியார் வீட்டில் போய் சுத்தி வாங்கி வா செட்டியார் வீட்டில் போய் நூல் வாங்கி வா " என்றுதான் சொல்வார்கள்.ஆனால் வார்த்தைகளில்தான் ஜாதி இருந்தது.இதயங்களில் இல்லை.மக்கள் மனித நேயத்தோடு இருந்தார்கள்.வெறுப்புணர்வு இல்லை.ஜாதி வெறி இல்லை.

அப்படி என்றால் ஜாதிக்குள்ளேயே ஏன் கல்யாணம்?

''ஒரு வேளாள பெண் ஒரு பிராமண குடும்பத்திற்குள் வருகிறாள்என வைத்துக் கொள்வோம்.மாட்டுப் பொன்னே ஆத்திலேந்து செத்த ஜலம் கொண்டு வா என்றவுடன் அந்த மருமகள் (தண்ணி இல்லாத )காவேரி ஆற்றிற்கு ஓடி ஜலம் எங்கே என்று தேடும்.

ஏன்னா செத்த இங்கே வரேளா என்று கணவனை மனைவி கூப்பிட்டவுடன் 'இதென்ன புருஷனை அண்ணா என்கிறாரே என்று குழம்பும்.

சரி.இன்னொரு வர்ண பெண் ஆசாரியார் வீட்டிற்கு போகிறது "சுத்தி எங்கம்மா ?"என்ற குரல் வந்தவுடன் அந்த பெண் வீட்டை சுத்தி சுத்தி வரும்.


நெசவு செட்டியார் பெண்வேளாண் குடும்பத்திற்குள்."கலப்பை எங்கே "என்றவுடன் எதையாவது கலந்து எடுத்து வரும்.

சேலம் மாவட்டத்தில் விவசாய நிலத்தை 'வயல் 'என்று சொல்ல மாட்டார்கள்.'காடு 'என்றுதான் சொல்வார்கள்.'நான் காட்டுக்கு போய் வரேன் 'என்று கணவன் சொன்னவுடன் 'காட்டில் புலி இருக்குமே' என்று அந்த பெண் பயப்படும்.

நான் ஒரு வீட்டிற்கு போயிருந்தேன்.'கோருங்க 'என்றார்  அந்த அம்மா.நான் பூ தான் கோர்க்க சொல்கிறார் என்று நினைத்து பூவை தேடினேன்.மெதுவாகத்தான் புரிந்தது.அவர் 'உட்காருங்க ' என்று சொன்னார் என்று.

உடையும் அப்படித்தான்.

ஒருவர் மடிசார்.

ஒருவர் முண்டு .

இந்த குழப்பங்கள் எல்லாம் வேண்டாமே என்றுதான் அந்தந்த ஜாதிக்குள் திருமணம் செய்தார்கள்.

ஜாதிகள் இருந்தால் இருந்து விட்டு போகட்டும்.ஆனால் 

''ஜாதீ தீ க்கள் வேண்டாம்.நான் பெரிய ஜாதி.நீ அடிமை ஜாதி.நீ கீழ் ஜாதி என்ற வன்மம் வேண்டாம்.சக மனிதனை இழிவு படுத்த வேண்டாம்.

என் தாத்தா 'ஊர் கவுண்டர்.'ஆனால் இத்தனை கொடுமைகளை நான் பார்த்ததில்லை.

மனித நேயத்தோடு இருப்போம்.மனிதனை மனிதன் நேசிப்போம்.'

அன்பால் வாழ்வோம்.

அன்புடன் வாழ்வோம்.

No comments: