உக்ரைன் ஒரு புறம்.
இஸ்ரேல் ஒரு புறம்.
மணிப்பூர் ஒரு புறம்.
எங்கும் சண்டை.
நெருப்பு.
இடியும் கட்டிடங்கள்.
அலறும் மக்கள் .
கதறும் அம்மாக்கள்.
உயிர் இழக்கும் குழந்தைகள்.
உலகமே .எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?
அப்போதெல்லாம் போர் என்றால் ஊருக்கு வெளியே போர்க்களம் என்ற இடத்தில் சண்டை நடக்கும்.
1000 க் கணக்கான மனிதர்கள் ( வீரர்கள் ) என்று சொல்ல மாட்டேன்.உயிர் இழப்பார்கள்.
ஆனால் ஊரில் வயதானோர் ,பெண்டிர், குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
அதற்கு மேல் ஆபத்து என்றால் கோவிலுக்குள் சென்று விடுவார்கள்.அங்கு கோபுர கலசங்களில் தேவையான உணவு ,இருக்கும்.
அதற்கும் மேல்நிலைகளில் போர் கருவிகள் இருக்கும்.
இத்தனை பாதுகாப்பு அரண்களை மீறித்தான் மக்களை தொட முடியும்.
ஆ ஆ ஆ னா ல் ல் இன்று ஊர் மேல் குண்டு மழை .மக்கள் கொத்து கொத்தாக மடிகிறார்கள்.
டி .வி செய்திகளை பார்க்கும் போது மனம் செயலற்று நிற்கிறது.
குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடும் பெற்றோரை பார்க்கும் போது அந்த கொடுமை சொல்ல வார்த்தைகள் இல்லை.
இறுதியில் அவர்களுடைய பங்களாக்கள் ,நிலங்கள் ,fridge ,டி .வி யை யா தூக்கி கொண்டு ஓடுகிறார்கள் ???????????
எப்படியாவது தங்கள் குழந்தைகளை காப்பாற்றி விட வேண்டும் என்ற தவிப்போடு ஓடும் பெற்றோர்.
நிறுத்துங்கள் போரை.
குழந்தைகளை வாழ விடுங்கள்.
No comments:
Post a Comment