நீட்டினால்தான் தற்கொலைகளா ??????????
நாங்கள் படித்த காலத்தில் மொத்தம் 875 m .b .b .s ஸீட்டுகள்தான்.என்னையும் டாக்டர்தான் என்ற எண்ணத்தில் ஊற வைத்து வளர்த்தார்கள்.
அப்போது எண்ட்ரன்ஸ் தேர்வு இல்லை.
என்னை விட குறைந்த மதிப்பெண் பெற்ற என் நண்பி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தால்.பணமும் கட்சியும் விளையாடியது.
அப்போது நீட் தேர்வு இருந்திருந்தால் நான் இன்று டாக்டராகத்தான் இருந்திருப்பேன்.
கார்த்திக்கிற்கு அண்ணா பல்கலை கிண்டியில் ஸீட் கிடைத்தற்கு எண்ட்ரன்ஸ்தான் காரணம்.
+2 மதிப்பெண் மட்டும் வைத்து ஸீட் தருவதில் ஒருபெரிய அபாயம் உண்டு.பல ஆசிரியர்களின் கோர முகம்.
பிராக்டிகல் மதிப்பெண் குறைப்பது.
ஒரு 4 மதிப்பெண் குறைத்தால் போதும். மாணவனின் கட் ஆப் படுபயங்கரமாக குறைந்து விடும்.
இன்றும் பொறியியல் கல்லூரிகளில் இது நடக்கிறது.
கிராமத்து மாணவர்கள் என்ற அலம்பல் ...கிராமத்து மாணவர்கள் எல்லாம் அரசு பள்ளிகளில் படிப்பதாக ஒரு கூவல்.
நிலத்தை விற்றாவது '' ''பெரிய பள்ளிகளில்'' ''தான் படிக்க வைக்கிறார்கள் கிராமத்தினர்.
அடுத்த கேள்வி.?
அப்படி உலக மகா பேர் பெற்ற பள்ளிகளில் படிக்கும் எத்தனை பேர் I .A .S ,,I .P .S ஆகி விட்டார்கள்?
சரி.இதை எல்லாம் படிக்காதவர்கள் வாழ்வில் வெற்றி பெறவே இல்லையா?
டாக்டர்,கலெக்டர் ஆனால்தான் அறிவாளியா?
8ம் க்ளாஸ் படித்தவர்கள் எத்தனையோ பேர் எத்தனை சாதனை புரிந்திருக்கிறார்கள் தெரியுமா?
மாநில முதல் மதிப்பெண் பெற்ற எத்தனையோ பேர் சாதாரண வேலையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வாழ்வில் வெற்றி பெற எத்தனையோ துறைகள் இருக்கின்றன.
இந்த மருத்துவ மாயையில் இருந்து விடுபடுங்கள்.
தற்கொலையை தவிருங்கள்.
பெற்றோர்களே பிள்ளைகளை வாழ விடுங்கள்
No comments:
Post a Comment