தேர்தல் குஷி :
ஆஹா .ஆரம்பித்து விட்டது தேர்தல் கோலாகலம்.
நேற்றே எங்கள் தெருவில் சாலை முழுதும் மின் விளக்குகள் ஜொலி ஜொலிக்க ஆட்டம் ,பாட்டு, என்று களை கட்டி விட்டது.வோட்டு போட்டு முடியும் வரை மக்களுக்கு கொண்டாட்டம்தான்.கூட்டத்திற்கு போக 500 -1000 வரை தருகிறார்களாம் .
+பிரியாணி +குவார்ட்டர் (எல்லோருக்கும் ...ஆண் .பெண் ) அனைவருக்கும் உண்டாம்.
ஏழை மக்கள் என்னும் இனம் தான் மிக பெரும் பயனடைகிறது .
தேர்தல் முடிவதற்குள் அவர்கள் நிலை உயர்ந்து விடும்.
அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையா ?
ரோடு ,மணல், கட்டிடம் .கஷ்டப்படாத காசு.
இதில் புலம்ப வேண்டியது யார் என்றால் ..சிறுக சிறுக மிச்சம் பிடித்து அதில் பெரிய தொகையை வருமான வரியாக கட்டும் என் போன்ற சீனியர் குடிமக்கள்தான்.
ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மனைவி (வீடுகளில் வேலை செய்பவர்) சொல்கிறார்/120 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு போக ''''என்னால் பஸ்ஸில் போக முடியாது.இடுப்பு வலிக்கும்.அதனால் என் சொந்த ஆட்டோவில்தான் போக போகிறேன்.''''
என்னுடைய வரிப்பணம் .
உனக்கு 6000+1000+பண்டிகை பரிசு பணம் .அதனால் நீ ரோல்ஸ் ராய் கார் கூட எடுத்து போலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ...எதிர்காலம் என்ன என்று அறியாமல்.அழிந்து வரும் இளைய சமுதாயம்.
அவ்வளவுதான்.
இப்போதைக்கு புலம்பலுக்கு இடைவெளி
கார்த்திக் அம்மா
No comments:
Post a Comment