போகி பண்டிகை என்றவுடன் பழையன கழிதல் என்று எது எது கையில் கிடைக்கிறதோ அதையெல்லாம் தீயில் போட்டு எரித்து ஊரே புகை மண்டலம்தான்.
உண்மையில் போகி யின் காரணம் என்ன?
அப்போது மண்பானைகள்,சட்டிகள்தான் சமையல் சாமான்கள் .அதன் வீரியம் ஒரு வருடம்தான்.அதே போல் முறங்கள். பாய்கள் ,இன்ன பிற பொருள்களும் வருட பொருள்கள்தான்.அந்த பொருள்களைத்தான் அப்புற படுத்துவார்கள்.
தங்க தட்டு,வெள்ளி டம்பளர் எல்லாம் எரித்தார்களா?
மிக மிக முக்கியமாக பழைய தானியங்கள் (நெல்,ராகி,பருப்பு )இவை எல்லாம் ஒரு வருடம்தான் சுவையுடன் இருக்கும்.
அதனால் அவைகளை சேமிப்பு கிடங்கில் இருந்தது வெளியே எடுத்து விட்டு அந்த இடத்தில் இயற்கை பூச்சி கொல்லிகளான வேப்ப இல்லை,பூலாப் பூ ,ஆவாரம் பூ இவற்றிற்கு ஒரு படுகை போல் போட்டு அதன் மேல் புது தானியத்தை கொட்டி வைப்பார்கள் .
அதே போல் காற்று மாசு பாட்டை கட்டு படுத்த இவைகளை வீட்டில் அங்கங்கே கட்டுவார்கள்.இது காப்பு கட்டு என்றானது.
அதே போல் தன நிலத்தில் விளைந்த காய்கறிகள் எல்லாவற்றையும் சேர்த்து பொங்கல் குழம்பு வைத்து புதுஅரிசியில் சமைத்து பொங்கி அன்று சாப்பிடுவார்கள்.Actually its a 'THANKS GIVING DAY ''
அடுத்த நாள்தான் இனிப்பு பொங்கல் .
3ம் நாள் தங்களுக்கென ஆண்டு முழுதும் உழைத்த கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாடுகளை அலங்கரித்து,நல்ல உணவு கொடுத்து அவைகளுடன் விளையாடுவார்கள்.
அதுவே பின்னாளில் மஞ்சு விரட்டு,எருதாட்டம் என்ற பல பெயர்களில் இன்று ஜல்லிக் கட்டாகி விட்டது..சிறு வயதில் என் தாத்தா வீட்டில்தான் இதெல்லாம் நடக்கும்.
களத்தில் பாத்தி கட்டி மாடுகளை அவிழ்த்து விடுவார்கள்.அதன் பாய்சசல் கொண்டு நிலத்தின் தன்மை, நீரோட்டம் என்பதை அளவிடுவார்கள்.
முளைப்பாரி கட்டி அந்த வருடம் எந்த பயிர் பயிரிட்டால் நல்ல விளைசல் தரும் என்பதை கணக்கிடுவார்கள்.
பொங்கல் பொங்கும் திசை,அளவு கொண்டு மண்ணின் தரத்தை நிரனயம் செய்வார்கள்.
என் தாத்தா கையில் ஒரு பேப்பருடன் உட்கார்ந்து எதையோ கணக்கிடுவார்.ஒரு வருடம் கூட அவர் விவசாயம் பொய்த்ததில்லை.
அந்த அளவிற்கு விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்தார்கள். அதுவே பொங்கல் பண்டிகை.
A Perfect planning .
1 comment:
அருமை...
இனிய பொங்கல் வாழ்த்துகள்...
Post a Comment