மாஷா குளிர் பான விளம்பரத்தில் வரும் அமிதாப்பை பார்க்கும் போதெல்லாம் என் நினைவில் தோன்றும் காட்சி இது.
நாங்கள் மேட்டூரில் இருந்த போது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர்.அப்போது கோகோ ,போன்ற குளிர் பானங்கள் பாட்டிலில் வரும்.
உறவினர்கள் ,விருந்தாளிகள் யார் வந்தாலும் ஆளுக்கொரு பாட்டில் ஸ்டராவுடன் கொடுப்பது வழக்கம்.
அப்படி ஒரு முறை வந்தவர்களுக்கு கொடுக்கும் போது மாமனாருக்கும் ஒரு பாட்டில் கொடுத்தோம்.அதை அவர் அவ்வளவு ரசித்து குடித்தார்.விருந்தினர்கள் கிளம்ப bye சொல்லும்போதும் நின்று கொண்டே அந்த பாட்டிலோடே இருந்தார்.
எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
வயதானவர் என்றாலும் இப்படி ஆசை இருக்கும் என்று நினைக்கவே இல்லை.வீட்டில் குழந்தைகள் நினைத்த நேரத்தில் பிரிட்ஜை திறந்து எடுத்து குடிக்கும் போது பார்த்து கொண்டுதானே இருந்திருப்பார்.ஆசை இருந்திருக்கும்.அவரை கவனிக்க தவறி விட்டோம்.
அவருக்கு கொடுக்க கூடாது என்றில்லை.
தோன்றவில்லை.
அவருக்கு நல்ல உணவு தர வேண்டும். மருந்து சரியாக தர வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்த நான் ,இந்த விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறேன்.அமிதாப்பை பார்க்கும் போதெல்லாம் மாமனார் நினைவு வந்து குற்ற உணர்ச்சியும் வருகிறது.
அவராவது கேட்டிருக்கலாம்.கேட்க சங்கட பட்டிருக்கலாம்..
ஐயா என்னை மன்னித்து விடுங்கள்.
No comments:
Post a Comment