why should we celebrate women 's day ?
SHOULD WE ?????????????
நாம் கொண்டாட வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல சரித்திரத்தை சற்று திரும்பி பார்க்க வேண்டும்.
ஆங்கிலேயர் வழக்க படி பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது.
அவர்கள் வேலைக்கு போக கூடாது.
சம்பாதிக்க கூடாது.
அவர்களுக்கு என்று தனி பெயர் கூட கிடையாது.
Mrs .henry
Mrs .david
பிள்ளை பெறுவது மட்டுமே அவள் வேலை.
10 குழந்தைகள் பிறந்தால் 8 இறந்து விடும்.
அதன் துக்கம் கருதி கருப்பு நிற உடையில்தான் பாதி காலத்தை கழிப்பர்.
அடுத்த குழந்தைக்கு ஸ்வெட்டர் பின்ன ஆரம்பித்தது விடுவர் .
இப்படித்தான் இருந்தது.மிக பெரிய போராட்டத்திற்கு பிறகே அந்த பெண்கள் ஒவ்வொரு உரிமையாக பெற தொடங்கினர் .
ஆனால் நம் நாட்டில் அப்படி அல்ல. புராண காலத்தில் இருந்தே பெண்களுக்கு சம உரிமை இருந்தது.தனக்கு வர போகும் கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை ( சுயம்வரம்) இருந்தது.காந்தர்வ கல்யாணம் என்ற வழக்கம் இருந்தது.
( இன்றைய living together ).
நெசவு ,உழவு,என வேலைகளில் சம பங்கு இருந்தது.
கணவனை இழந்தாலும் கம்பிரமாக வாழ்ந்தனர்.
பொட்டு அழிப்பது,வெள்ளை உடை என்பதெல்லாம் மிக மிக பிற்காலத்தில் வந்தது.என் பாட்டிகள் எல்லாம் நிற புடவைகள் ,நகைகள் போட்டுக் கொண்டு மங்களமாக இருந்தனர் .
வட நாட்டில் ஒரு குலத்தில் ,கணவனை இழந்த பெண்ணிற்கு பேரன் தாலி கட்டும் வழக்கம் உண்டு. ஏன் எனில் அவள் விதவை கோலத்திற்கு அர்த்தமில்லாமல் போய் அவள் சுமங்கலி போல் வாழவே.
அரசன் வரும்போது பட்டத்து அரசியும் உடன் வருவதே வழக்கம்.
இப்படி எல்லா விதத்திலும் பெண்களை சிறப்பாக போற்றிய நம் நாட்டிற்கு இந்த ஆங்கில நாட்டு பழக்கம் தேவையே இல்லை.
எதையும் ஆங்கில நாட்டை காப்பியடித்தே பழகி விட்டோம்.
எல்லா நாளும் மகளிர் நாளே.
வாழ்க அனைவரும் ,
1 comment:
அருமையாக சொன்னீர்கள்
Post a Comment